13.11.13

அழகு குறிப்புகள்:'வெயில் காலம்': எண்ணெய் பசை சருமம் உஷார்!

Tips for oily skin this summer - Beauty Care and Tips in Tamil
வெயில் காலத்தில் வெளியில் போவதென்பது கடினமான ஒன்றாக தான் இருக்கும். உங்களுக்கு எண்ணெய் பசை சருமமாக இருந்தால் கொளுத்தும் வெயில் உங்கள் எண்ணெய் பசையை மேலும் அதிகரிக்கச் செய்து உங்கள் முக அழகை கெடுத்துவிடும்..
 
கவலையை விட்டுத் தள்ளுங்க.. எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க இதோ சில டிப்ஸ்
 
எண்ணெய் பசை நீங்க:
 
வெள்ளரிக்காயை, தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். வெள்ளரிச்சாற்றுடன், பால் பவுடர் கலந்து தடவினாலும், எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும் இதை தொடர்ந்து ஒரு மாத காலமாவது பின்பற்ற வேண்டும்.
 
தக்காளி பழத்தை நன்கு பிழிந்து சாறாக எடுத்து முகத்தில் தடவி காய்ந்த பின், கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன், வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழுவலாம்.
 
பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன், கேரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால், அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.எண்ணெய் பசை சருமத்தினர், அடிக்கடி குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவ வேண்டும். முகத்தை அலம்ப சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால், எண்ணெய் வழிவது குறைவதோடு, முகமும் பளபளப்பாக இருக்கும்.
 
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், எண்ணெய் வழிவது குறையும். வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, சந்தன தூள், பாதாம் பவுடர், தயிர், உருளைக்கிழங்கு சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அவற்றை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், எண்ணெய் வழிவது குறையும்.
 
சோளத்தை நன்கு பவுடர் செய்து, தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் எண்ணெய்ப் பசை நீங்கும். எண்ணெய்ப் பசை சருமத்தினர், வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும், சிறிது தயிர், கடலைமாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும்.
 
எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சை சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு அவற்றை நன்றாக கலக்கி, முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும். பப்பாளி கூழ், முல்தானி மட்டி, வேப்பிலை பொடி ஆகியவற்றை நன்றாக பசை போல் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மை குறையும்.
 
முகத்தில் எண்ணெய் பசை நீங்கி பொலிவு பெற மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் கொளுத்தும் வெயிலிலும் நீங்கள் அழகுராணிதான்!

அழகு குறிப்புகள்:கவலையளிக்கும் கரு வளையங்களா....?!


Beauty gives confidence - Beauty Care and Tips in Tamil
அன்பும், அமைதியும் குடிகொண்ட மனதில் முகம் தானாகவே அழகாகும். தீபத்தின் சுடர் போல பெண்களின் முகம் பிரகாசமடையும். இயற்கையாகவே பெண்கள் அழகுதான். அழகுக்கு மேலும் அழகு சேர்க்க சில டிப்ஸ்:
ஆள்பாதி ஆடைபாதி என்பார்கள் பெண்களின் அழகில் ஆடையின் பங்கு முக்கியமானது. ஆடை அணிவது முதலில் வசதிக்காகக்தான். உடலை கவ்விப் பிடிக்கும் ஆடைகளை தவிர்ப்பது நல்லது. அதேசமயத்தில் ரிலாக்ஸ்டாக இருக்கிறது என்று ஓவராக தொளதொளவும் வேண்டாம். கச்சிதமாக இருப்பதே அழகு.
கம்பீர அழகு
வேலைக்கு போகும் பெண்களுக்கு புடவை கம்பீரமாக இருந்தாலும், இன்றைய சூழலில் அதை எப்போதுமே கட்ட முடியாது. சுடிதார், சல்வார் கமீஸ் போன்ற ஆடைகளே சவுகர்யமானது. உடல் உழைப்பு அதிகம் தேவைப்படுகிற வேலை என்றாலும் ஜீன்ஸ் சவுகர்யம், வெளியூர் அல்லது உல்லாசப் பயணத்துக்கு ஜீன்ஸ் எப்போதும் வசதிதான். பணியிடத்தில் இடுப்பு அல்லது பின்புறம் முழுமையாக தெரியும் வகையிலான குட்டை டாப்ஸை தவிர்ப்பது நல்லது.
பொறுப்புள்ள பணியில் இருப்பவர்கள் ஓரளவு டல் கலரில் பேன்ட்டும் அதே துணியில் முக்கால் கை சட்டையும் அணியும்போது அசத்தலாக தோற்றமளிக்கும். கேஷுவல் உடைகளை பொறுத்தவரை இது பெண்களுக்கானது, இது ஆண்களுக்கானது என்ற வித்தியாசம் மறைந்து வருவதால் எதெல்லாம் உடலுக்கும் வேலைக்கும் சவுகர்யமாக இருக்கிறதோ அதையெல்லாம் அணிய பழகிக்கொள்ள வேண்டும்.
கவலை ரேகை வேண்டாம்
மனதில் தாழ்வு மனப்பான்மை, அலட்சியம், தற்பெருமை ஆகியவை கூடாது. இதனால், முகத்தில் கவலை ரேகைகள் படரும், நம் எண்ணத்திலும், செயல்களிலும் கவனம் செலுத்த வேண்டும். அமைதியான மனமும், அதை வெளிக்காட்டும் முகமும் வேண்டும்.!
மன அமைதியுடன் இருந்தால் முகம் பொலிவடையும் இதற்கு தியானம் மிகச் சிறந்தது. சரியான தூக்கம் தேவை. தினமும் குறைந்தபட்சம் 6 மணி நேரம் நித்திரைகொள்ளுதல் நல்லது. இல்லாவிட்டால் கண்களின் அடியில் கருவளையம் விழும். இதனால் முகத்தில் ஒருவித முதிர்ச்சி தெரியும். அதேபோல் கண்கள் சோர்ந்து காணப்பட்டாலே பாதி அழகு குறைந்த மாதிரிதான்.!
சத்தான உணவு தேவை
காலையில் சீக்கிரம் எழுந்து லேசான உடற்பயிற்சி. பிறகு அரை டம்ளர் லெமன் ஜூஸ். இதனால் உங்களுக்கு பசி ஏற்படும். பின்னர், நன்றாக குளித்துவிட்டு, பச்சைக் காய்கறிகள் மற்றும் பழ வகைகள் சேர்ந்த உணவு, அவசரமாக சாப்பிட வேண்டாம். விருப்பமானதை மெதுவாக சாப்பிடவும்.!
ஒரு நாளைக்கு கிட்டதட்ட 2 லிட்டர் தண்ணியாவது குடிக்க வேண்டும். இதனால் தேவையற்ற கழிவுகள் உடலிருந்து வெளியேறும்.! முக்கியமாக உடலில் எடை அதிகமாவதை தவிர்த்தல் நல்லது. நீச்சல். ஸ்கிப்பிங், சைக்கிள் சவாரி, நடை பயிற்சி போன்றவை இயற்கையாக பெண்களின் பின்னழகை கூட்டும்.!கட்டமைப்பான உடல்
பெண்களின் மார்பளவும், இடுப்பளவும் ஒன்றாக இருக்க வேண்டும். இடையளவு அதைவிட 25 செ.மீ. குறைவாக இருக்க வேண்டும். வயிற்றில் மடிப்பே விழக்கூடாது. இடையை விட தொடைகள் 12செ.மீ குறைவாக இருக்க வேண்டும். ஒரு பெண்ணுக்கு அழகான தோற்றம் தரும் கட்டமைப்பு இது. உடலமைப்பு இப்படி இருந்தால்தான் அழகாக இருக்கும் என்று வரையறை எதுவும் இல்லை.
உயரமோ, குட்டையோ எப்படி இருந்தாலும், அதற்கேற்ப நமது உறுப்புகள் சரியாக இருந்தால் அழகுதான்!.
கூந்தலில் சிக்கல் விழுகிறது என்ற பயத்தில் பலர் வாரம் ஒருமுறை தலை குளிப்பதைக்கூட தவிர்க்கின்றனர். தலையை குனிந்தபடி கூந்தலை முன்னால் போட்டு கைவிரல்களால் கோதி அழுத்தி நன்றாக அலசி சுத்தம் செய்யவேண்டும். அழுக்கு எளிதில் நீங்குவதுடன், சிக்கு விழாது. முகத்திற்கும் பொலிவு கூடும். எனவே வெயில் காலங்களில் வாரத்திற்கு மூன்று தடவையாவது தலைக்கு குளித்தால் நல்லது.
ஆண்களுக்கும் அழகு
பெண்களைப் போலவே ஆண்களும் அழகியல் கொள்ள வேண்டும். ஏனெனில் பெண்களை விட ஆண்களே அதிகம் வெளியில் செல்கின்றனர். ஆடைகளில் காட்டும் அக்கறையை முகத்தை அழகுபடுத்த காட்டுவதில்லை.
வேலை நிமித்தமாக வெளியில் சுற்றும் ஆண்களின் முகம் எளிதில் கருத்துவிடும். அவர்கள் ஐஸ் கட்டியை துணியில் கட்டி முகத்திற்கு ஒத்தடம் தர முகம் பொலிவடையும்.
வெளியில் அலைவதனால் தலைமுடி உதிர்வதை தடுக்க நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து தலைக்கு தேய்த்து வர முடி உதிர்வது தடுக்கப்படும்.
சிகரெட் குடித்து உதடு கருமையாக இருப்பவர்கள் மாதுளைச் சாறு, புதினா இலையை உதட்டில் தடவி வர உதடு செந்நிறமாகும்.

தஞ்சையில் பழ. நெடுமாறன் கைது

தஞ்சாவூரில்  அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்பட்டது எதிர்த்து போராடிய உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் கைது செய்யப்பட்டார்.

முள்ளிவாய்க்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்பட்டதை கண்டித்து பழ. நெடுமாறன் போராட்டத்தில் ஈடுபட்டார். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பழ. நெடுமாறன் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூரில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவர் மற்றும் பூங்கா ஆகியவை நெடுஞ்சாலைத் துறை இடத்தில் இருப்பதாகக் கூறி, புதன்கிழமை காலை இடிக்கப்பட்டது. அந்த இடத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் இந்த இடம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது என்று குறிப்பிட்டு ஒரு அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டது. பின்னர் போலீஸார் அந்த இடத்தில் இருந்து அகன்றுவிட்டனர். இதனிடையே, அந்தப் பலகையை ஒரு சிலர் இடித்து அகற்றி, கம்பிகளைப் போட்டுள்ளனர். இது குறித்து அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, சுமார் 50 பேரைக் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக பழ.நெடுமாறனும் கைது செய்யப்பட்டுள்ளார்.