19.11.13

ரஜினியுடன் மோத முண்டா தட்டும் அஜீத் விஜய்!

பொதுவாக ரஜினி படங்கள் ரிலீசாகும்போது, அதற்கு ஒரு வாரம் முன்பும் இரண்டு மூன்று வாரங்கள் கழித்தும் வேறு படங்களை யாரும் வெளியிடுவதில்லை. இது கடந்த சில ஆண்டுகளாகவே தொடரும் வழக்கம். கடைசியாக ரஜினி படம் வந்தபோது, அதனுடன் மோதியவை கமலின் மும்பை எக்ஸ்பிரசும் விஜய்யின் சச்சினும். இரண்டுமே தோல்வியைத் தழுவின. சந்திரமுகி சரித்திரம் படைத்தது. அதன் பிறகு அவரது எந்தப் படத்தோடும் மோத வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் வரவில்லை. காரணம், ரஜினியின் சிவாஜியிலிருந்துதான் ஒரே நேரத்தில் அதிக அரங்குகளில் படத்தை வெளியிட்டு, தயாரிப்பாளர் போட்ட பணத்தை குறுகிய காலத்தில் எடுக்கும் முறை அறிமுகமானது. ரஜினி போன்ற உலகளாவிய ரசிகர்களைக் கொண்ட ஹீரோக்களின் படங்கள் சோலோவாகக் களமிறங்குவதுதான் திருட்டு விசிடி பிரச்சினையிலிருந்து படத்தைக் காக்கும் என தயாரிப்பாளர்களும் இந்த சிஸ்டத்தை ஆதரித்தனர். இந்த நிலையில், ரஜினியின் புதுப் படம் கோச்சடையான் பொங்கலுக்கு வெளியாவதாக அதன் தயாரிப்பாளர் முரளி மனோகர் அறிவிதச்தார். எனவே வீரம், ஜில்லா போன்ற படங்கள் சில வாரங்கள் கழித்து வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ரஜினியின் படம் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட பிறகும், தனது வீரம் படத்தை அதே நாளில் களமிறக்கப் போவதாக அஜீத்தும் அவரது தயாரிப்பாளரும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஜில்லா படத்தையும் பொங்கல் அன்றே, அதுவும் கோச்சடையான் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட ஜனவரி 10-ம் தேதியே வெளியிடப் போவதாக அதன் தயாரிப்பாளர் மகன் ரமேஷ் அறிவித்துள்ளார். சந்திரமுகி செய்த சாதனையை கோச்சடையான் படைக்குமா... பார்க்கலாம்! உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.

No comments:

Post a Comment