19.12.13

Vijay's Jilla Movie New Shooting Spot Sitills













 

Vijay's Jilla Audio Officially Launched today at GRT Hotels, First look Teaser on 25th [Video] [Jilla HQ Pics]



Vijay's Jilla Audio officially launched Today at the GRT Hotel in Chennai, CD's will hit the stores on 21st!

Jilla will hit the screens for Pongal. The movie, which also features Malayalam superstar Mohanlal and Kajal Aggarwal in the leads, will be clashing with Ajith Kumar's Veeram.
(story developing... ) 

Audio Launch Video

The first look teaser of Ilayathalapathy Vijay’s Jilla will be released on Christmas day – December 25.

The audio is being launched on Saturday – December 21, with songs to be first aired on Radio Mirchi

Jilla is in the final stages of post-production work. The producer RB Chowdary is trying to get the first copy ready by December 31.

The censor formalities will take place in first week of New Year , if film has to release on January 10.



பைசூல் மீதான வழக்கை வாபஸ் பெறுகிறேன் - நடிகை ராதா திடீர் பல்டி

தொழிலதிபர் பைசூல் மீது செக்ஸ் மோசடி மற்றும் பணமோசடி புகார் கொடுத்த ராதா, திடீரென அந்தப் புகாரை வாபஸ் பெறுவதாக மனு கொடுத்தார்.
இதனால் கடுப்பான போலீசார் இந்த மனுவை ஏற்க மறுத்து, விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பைசூல் மீதான வழக்கை வாபஸ் பெறுகிறேன் - நடிகை ராதா திடீர் பல்டி

சுந்தரா டிராவல்ஸ் உள்பட ஏராளமான தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ராதா. இவர் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார்.
சென்னை திருவல்லிகேணியை சேர்ந்த தொழிலதிபர் பைசூல் மீது நடிகை ராதா பரபரப்பு புகார் மனு கொடுத்தார்.தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி தொழிலதிபர் பைசூல் 6 ஆண்டுகள் தன்னோடு குடும்பம் நடத்தியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், ரூ.50 லட்சம் பணம் மற்றும் நகைகளை மோசடி செய்து விட்டதாகவும் புகார் மனுவில் நடிகை ராதா குறிப்பிட்டிருந்தார்.
அவரது புகார் மனு மீது வடபழனி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க தொழிலதிபர் பைசூல் 3 முறை முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். 3 முறையும் அவரது முன்ஜாமீன் மனுக்களை கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.
இந்த நிலையில் நடிகை ராதா தொழிலதிபர் பைசூலை கைது செய்ய வேண்டுமென்றும், அவரை சிறைக்கு அனுப்பாமல் விடமாட்டேன் என்றும் சவால் விட்டு தொடர்ந்து பேட்டிகள் கொடுத்து வந்தார்.
போலீஸ் அதிகாரிகள் மீதும் குறை கூறினார். பைசூலை கண்டிப்பாக கைது செய்ய வேண்டும் என்று கமிஷனர் அலுவலகத்துக்கும் வந்து மூன்று முறை நடிகை ராதா முறையிட்டார்.
திடீர் பல்டி
இந்த நிலையில் நேற்று இரவு நடிகை ராதா திடீரென்று வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். தொழிலதிபர் பைசூல் மீது கொடுத்துள்ள புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும், அவர் மீதான வழக்கை கைவிட்டு விடவேண்டும் என்றும் மனு எழுதி கொடுத்துவிட்டு அவசரமாக சென்றார்.
இது போலீசாருக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கிவிட்டது. இந்த மனுவை ஏற்பதற்கில்லை என்றும், இதை நீதிமன்றத்தில் போய் சொல்லுங்கள் என்று தெரிவித்தனர். அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் நடிகை ராதா காரில் ஏறி வேகமாக போய்விட்டார்.
பைசூலை கைது செய்ய தேடிவரும் நிலையில் நடிகை ராதா திடீரென்று புகாரை வாபஸ் வாங்குவதாக பல்டி அடித்திருப்பது குறித்து போலீசார் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.

ஆம் ஆத்மிக்கு கொபசெ ஆகிட்டாங்களா சமந்தாவும் சித்தார்த்தும்? - டோலிவுட் கிண்டல

அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக திடீரென கருத்து தெரிவித்துள்ள 
ஆம் ஆத்மிக்கு கொபசெ ஆகிட்டாங்களா சமந்தாவும் சித்தார்த்தும்? - டோலிவுட் கிண்டல்

நடிகர் விஷால் கூட சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்தப் பட்டியலில் நடிகை சமந்தாவும் இணைந்துள்ளார். 'ஆம் ஆத்மி' கட்சிக்கு ஆதரவாக ட்விட்டரில் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
"ஆம் ஆத்மி' கட்சி ஒரு இனிய தொடக்கம். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றம் டெல்லியில் இருந்து ஆரம்பாகி இருப்பது இன்னும் சிறப்பு," என்று கூறியுள்ளார்.
இவரது கருத்தை வரவேற்று சமந்தாவின் காதலர் சித்தார்த்தும் பதில் கருத்து வெளியிட்டார்.
ஆனால் ஆம் ஆத்மியோ, ஒரு சராசரி அரசியல் கட்சியைப் போலவே, வெற்றிக்குப் பிறகு தன்னைக் காட்டிக் கொண்டுள்ளது. அந்தக் கட்சியில் வென்றவர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன. கட்சிக்குள் குழப்பம் நிலவுவதாக வேறு அரவிந்த் கேஜ்ரிவால் ஒப்புக் கொண்டுள்ளார்.

இன்டர்நெட்டில் கசிந்த 'வீரம்' ஆடியோ: கலங்காத படக்குழு

வீரம் படத்தின் இசை இணையதளத்தில் கசிந்துள்ளது. இருப்பினும் அறிவித்தபடி இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், தமன்னா நடித்துள்ள வீரம் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடக்கிறது. இந்நிலையில் படத்தின் இசை இணையதளத்தில் கசிந்துவிட்டது. இருப்பினும் அறிவித்தபடி நாளை இசை வெளியீட்டு விழா நடக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
இன்டர்நெட்டில் கசிந்த 'வீரம்' ஆடியோ: கலங்காத படக்குழு

இது குறித்து வீரம் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சிறு கசிவுகளால் சமுத்திரம் காலியாகிவிடாது. வீரம் பட பாடல்களை கேட்க ஆவலுடன் காத்திருக்கும் அஜீத் ரசிகர்களுக்கு சில டிராக்குகள் கசிந்தது நம்பிக்கை இழந்துவிடச் செய்யாது. அறிவித்தபடி நாளை இசை வெளியீடு நடைபெறும்.
நாள் காலை 8 மணி முதல் ரேடியோ மிர்ச்சியில் வீரம் படம் பாடல்கள் ஒலிபரப்பப்படும். இசை குறித்து படத்தின் இயக்குனர் சிவாவும், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தும் ரேடியோவில் பேசுவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியுதவி விழாவில் திடீர் என்று ஜில்லா இசையை வெளியிட்ட விஜய்

நிதியுதவி விழாவில் திடீர் என்று ஜில்லா இசையை வெளியிட்ட விஜய்

நிகழ்ச்சி துவங்கியபோது ஜில்லா இயக்குனர் நேசன் மற்றும் இசையமைப்பாளர் இமான் ஆகியோர் அங்கு வரவில்லை. ஆனால் விஜய் மேடையில் ஏறியதும் நேசனும், இமானும் திடீர் என்று வந்து மேடையில் ஏறினர். விஜய் இசையை வெளியிட 5 தயாரிப்பாளர்கள் அதை பெற்றுக் கொண்டனர்.
21ம் தேதி இசை வெளியீடு என்று அறிவித்துவிட்டு இப்படி கமுக்கமாக வெளியிட்டதன் அவசியம் என்னவோ என்று தான் கோடம்பாக்கத்தில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

9-ம் எண் எனக்கு ராசி.. இதையெல்லாமா குறை சொல்வீங்க? - ஹன்சிகா

ஹோட்டல்களில் 9-ம் எண் கொண்ட அறையை புக் பண்ணச் சொல்வது உண்மைதான். இது எனக்கு ராசியான எண் என்பதால் அப்படிச் சொல்கிறேன், என்று விளக்கம் அளித்தார் 
9-ம் எண் எனக்கு ராசி.. இதையெல்லாமா குறை சொல்வீங்க? - ஹன்சிகா

குறிப்பாக எண்களில் அபார நம்பிக்கை. நடிகை ஹன்சிகாவுக்கு 9 - ம் நம்பர் மீது அபார நம்பிக்கை. வெளியூர் - உள்ளூர் படப்பிடிப்புகளுக்கு சென்று ஓட்டல்களில் தங்கும்போது 9-ம் நம்பர் அறையை கேட்டு வாங்குகிறார். அந்த அறை கிடைக்காவிட்டால் கூட்டு எண் ‘9' என வரும்படியான அறைகளில்தாம் தங்குகிறார்.

கோவையில் ஆரம்பத்தை விட அதிக தியேட்டர்களில் ஜில்லா?

கோவை நகரில் மட்டும் ஜில்லா படத்தை சுமார் 60 ஸ்கிரீன்களில் திரையிட அப்பகுதிக்கான வினியோக உரிமையை வாங்கிய காஸ்மோ பிலிம்ஸ் திட்டமிட்டுள்ளதாம்.
விஜய்யின் ஜில்லா பொங்கலுக்கு ரிலீஸாகிறது. படத்தின் வினியோக உரிமை இரண்டே நாட்களில் விற்றுத் தீர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் கோவை நகருக்கான வினியோக உரிமையை காஸ்மோ பிலிம்ஸ் வாங்கியது என்று ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.


இந்நிலையில் காஸ்மோ பிலிம்ஸ் ஜில்லா படத்தை கோவையில் சுமார் 60 ஸ்கிரீன்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாம். இதே காஸ்மோ பிலிம்ஸ் தான் ஆரம்பம் படத்தையும் கோவையில் வெளியிட்டது.
நேசன் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்துள்ள ஜில்லா படம் ஆரம்பம் படத்தை விட அதிக ஸ்கிரீன்களில் கோவையில் ரிலீஸாகவிருக்கிறது.


முகப்பு ஆம் ஆத்மிக்கு கொபசெ ஆகிட்டாங்களா சமந்தாவும் சித்தார்த்தும்? - டோலிவுட் கிண்டல்

அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக திடீரென கருத்து தெரிவித்துள்ள நடிகை

ஆம் ஆத்மிக்கு கொபசெ ஆகிட்டாங்களா சமந்தாவும் சித்தார்த்தும்? - டோலிவுட் கிண்டல்



நடிகர் விஷால் கூட சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்தப் பட்டியலில் நடிகை சமந்தாவும் இணைந்துள்ளார். 'ஆம் ஆத்மி' கட்சிக்கு ஆதரவாக ட்விட்டரில் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
"ஆம் ஆத்மி' கட்சி ஒரு இனிய தொடக்கம். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றம் டெல்லியில் இருந்து ஆரம்பாகி இருப்பது இன்னும் சிறப்பு," என்று கூறியுள்ளார்.
இவரது கருத்தை வரவேற்று சமந்தாவின் காதலர் சித்தார்த்தும் பதில் கருத்து வெளியிட்டார்.
ஆனால் ஆம் ஆத்மியோ, ஒரு சராசரி அரசியல் கட்சியைப் போலவே, வெற்றிக்குப் பிறகு தன்னைக் காட்டிக் கொண்டுள்ளது. அந்தக் கட்சியில் வென்றவர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன. கட்சிக்குள் குழப்பம் நிலவுவதாக வேறு அரவிந்த் கேஜ்ரிவால் ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து கறவை மாடுகளை வாங்க நேபாள அரசு முடிவு

இந்தியாவிலிருந்து கறவை மாடுகளை வாங்க நேபாள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து  இந்த வார இறுதியில் நடைபெறும் நேபாள-இந்திய அரசுகளின் செயலாளர் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
  நேபாள நாட்டில்  நாள்தோறும் 5 இலட்சம் லிட்டர் எடையுள்ள பால் பற்றாக்குறை நிலவுகிறது  எனவே இந்தியாவிலிருந்து 10 ஆயிரம் சிறந்த இனக் கறவை மாடுகளை வாங்குவது பற்றி ஆலோசித்து வருகிறது இது தொடர்பாக உடன்படிக்கை எற்பட்டால், நேபாளத்தில் பால் பொருட்களில் தன்னிறைவு முற்றிலும் நனவாக்கப்படும் என்றும் நேபாளத்தின் வணிக வினியோக அமைச்சின் செயலர் மாட்ஃஹப் பிரசாத் ரெக்மி கூறியுள்ளார்.

சர்வதேச விண்வெளி மையத்தில் கோளாறு: அவசர விண்வெளி பயணத்துக்கு நாசா உத்தரவு


அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா, அவசர விண்வெளி பயணத்துக்கு உத்தரவிட்டுள்ளது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் குளிரூட்டும் பகுதியில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு கடந்த வாரம் கண்டறியப்பட்டது.

இதை உடனடியாக சரி செய்ய வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளதை அடுத்து நாசா அவசர விண்வெளி பயணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து நாசா தெரிவித்துள்ளதாவது: இது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் கோளாறு இல்லை என்றாலும் உடனடியாக சரி செய்யப்படவேண்டியது அவசியம் எனவே இந்த பணியில் இரண்டு விண்வெளி வீரர்கள் ஈடுபட உள்ளனர்.
அவர்கள் மூன்று முறை விண்வெளி பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது. இதன்படி முதலாவது விண்வெளி பயணம் எதிர்வரும் சனிக்கிழமை தொடங்கும் என தெரிகிறது.

காங்கிரஸால்தான் எங்களுக்கு பாதிப்பு: திமுக

கடந்த 2011ஆம் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் தான் திமுக பெரும் பாதிப்பை சந்தித்தது என அக்கட்சியின் புதுவை மாநில அமைப்பாளர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் திமுக ஆதரவில்தான் மத்தியில் ஆட்சியை நடத்தினர். கடந்த 2009ஆம் ஆண்டு தேர்தலிலும் காங்கிரஸ் ஆட்சி அமைய திமுக தான் உறுதுணையாக இருந்தது.
இலங்கை தமிழர் பிரச்னையில் மத்திய அரசு துரோகம் செய்ததால் தான் திமுக  மத்திய அரசை விட்டு வெளியில் வந்தது.
கடந்த 2006ஆம் ஆண்டு தமிழகத்தில் திமுக அரசில் பங்கேற்காமல் காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு தந்ததாக மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
அதேபோல் தான் புதுச்சேரியிலும் காங்கிரஸ் அரசில் திமுக இடம் பெறவில்லை. திமுக அமைச்சர்கள் இருந்திருந்தால் மக்களுக்கு சிறப்பாக சேவை புரிந்திருப்பர். கூட்டணி தர்மத்தை மதித்து செயல்பட்டதால் திமுக தான் பாதிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் நிர்வாகச் சீர்கேட்டால் தான் புதுவையில் 2011ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சியை இழந்தது. திமுகவினர் உழைப்பால் தான் காங்கிரஸ் 7 தொகுதிகளையாவது வெல்ல முடிந்தது.
மத்திய ரயில்வே துறையின் விரிவாக்கப் பணிகள் காரணமாக விடப்பட்ட ரயில்களை தாங்கள் சாதனையாக கூறி வருகின்றனர். புதுவை மாநிலம் நிதி நெருக்கடியில் உள்ளது. அதை தீர்க்க மத்திய அமைச்சர் நாராயணசாமி என்ன நடவடிக்கை எடுத்தார்?
ஏஎப்ஃடி ஆலையை புனரமைக்க ரூ.500 கோடி பெற்றுத் தருவேன் என நாராயணசாமி கூறினார். ஆனால் அது ஏட்டளவிலேயே உள்ளது.  காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் அரசுகளின் நிர்வாக சீர்கேட்டை பார்த்துள்ள மக்கள், விரைவில் திமுக ஆட்சியை எதிர்நோக்கி உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

விண்வெளி மையத்தில் கோளாறு; விரைவில் சரிசெய்யப்படும் என நாசா தகவல்


சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் குளிர்விக்கும் பகுதியில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்த கோளாறை சரிசெய்வதற்காக அமெரிக்காவைச்சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்கள்  இன்று அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் சனி, ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் விண்வெளி மையத்தில் பயிற்சி ஈடுபடவுள்ளனர். அப்போது கோளாறை சரிசெய்வார்கள் என்று அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

வெடிகுண்டு தாக்குதல் முயற்சி: பெண் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் வழிபாட்டுத்தலம் ஒன்றில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த முயன்றதாக ஒரு பெண்ணை போலீஸார் புதன்கிழமை சுட்டுக்கொன்றனர்.
அவருடன் மனித வெடிகுண்டாக வந்த மற்றொரு பெண்ணும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
அந்த இரண்டு பெண்களில், ஒருவரவது கணவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
3 பேர் சாவு: இதனிடையே, ராவல்பிண்டியிலுள்ள கேர்ரிசன் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் காவலர் ஒருவர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

தெற்கு சூடான் மோதலில் 500 பேர் பலி: ஐ.நா. அதிகாரி தகவல்

தெற்கு சூடானில் ராணுவத்துக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 400-500 பேர் பலியாகி இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் அதன் அதிகாரிகள் கூறியது:
ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு தெற்கு சூடான் தலைநகரிலிருந்து 400 முதல் 500 உடல்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன என்றனர்.
தெற்கு சூடான் அதிபர் சால்வா கீர் ஆதரவு படையினருக்கும், எதிர்ப்புக் குழுவினருக்கும் இடையே நடந்த சண்டையில் 800க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அமைதிப் படையின் தலைவர் ஹெர்வே லாட்சூஸ் கூறினார். ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் எழுந்துள்ள புதிய பிரச்னை குறித்து விவாதித்தபோது ஐ.நா.அதிகாரிகள் இத்தகவலை தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த பிரச்னையின் விளைவாக ஜூபா நகரைச் சுற்றியுள்ள 15,000 முதல் 20,000 பேர் அங்குள்ள ஐ.நா. முகாமில் தஞ்சம் கோரினர்.
அந்த மோதலில் பலியானோர் குறித்த தகவலை ஜூபா மருத்துவமனை வெளியிட்டது.
செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த புதிய மோதலினால் அந்த தகவலை ஐ.நா. உறுதி செய்யவில்லை என்றார் லாட்சூஸ்.
அப்போது, எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்த சரியான தகவல் இன்னும் கிடைக்கவில்லை என்றும், இது சிறிய சம்பவம் இல்லை என்றும் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் ஜெரார்டு அராட் தெரிவித்தார்.
முன்னாள் துணை அதிபர் ரீக் மாச்சரின் ஆதரவுப் படைகளே ஆட்சியைக் கவிழ்க்கும் இந்த சதிச் செயல் முயற்சியில் ஈடுபட்டதாக தெற்கு சூடான் அதிபர் சால்வா கீர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த மோதல் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 10 பேரை கைது செய்திருப்பதாகவும் ,ரீக் மாச்சரை தேடி வருவதாகவும் தெற்கு சூடான் அரசு தெரிவித்துள்ளது.

சட்டத்தை மீறாத வரை சிங்கப்பூரில் பணியாற்ற அனுமதி


சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டவர்கள், சட்டத்தை மீறாத வரை இங்கேயே தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவர் என்று வெளியுறவு மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகம் உத்தரவாதம் அளித்துள்ளார்.

சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த 8-ம் தேதி நடைபெற்ற கலவரம் தொடர்பாக 28 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கலவரம் தொடர்பாகவும், போலீஸாரின் உத்தரவுக்கு இணங்க மறுத்த காரணத்துக்காகவும் 52 இந்தியர்கள், வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர் ஆகியோரை சிங்கப்பூரை விட்டு வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிங்கப்பூரில் மீண்டும் பணியாற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தெற்கு ஆசியாவைச் சேர்ந்த 200 பேரை போலீஸார் எச்சரித்துள்ளனர். அவர்கள், சிங்கப்பூரில் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வெளிநாட்டைச் சேர்ந்த 450-க்கும் மேற்பட்டவர்கள் மத்தியில் கே.சண்முகம் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினார்.
அப்போது, லிட்டில் இந்தியா கலவரத்தில் தொடர்பு இல்லாதவர்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் இங்கு தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவர். சட்டத்தை மீறாத வரை இந்தியர்கள் உள்பட அனைத்து வெளிநாட்டவரும் இங்கு பணியாற்றலாம் என்று அவர் உத்தரவாதம் அளித்தார்.
காவல் நீட்டிப்பு: லிட்டில் இந்தியா கலவரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மூர்த்தி கபில்தேவ், சத்திய மூர்த்தி சிவராமன் ஆகிய 2 பேருக்கு ஒருவார காலம் போலீஸ் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

ரகசிய தொலைபேசி உரையாடல் பதிவுக்கு அமெரிக்க செனட் உறுப்பினர்கள் ஆதரவு

அமெரிக்க மக்களின் தொலைபேசி உரையாடல்களை ரகசியமாகப் பதிவு செய்வதற்கு ஆதரவாக செனட் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரகசியமாக தொலைபேசி உரையாடல்களைப் பதிவு செய்வது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று வாஷிங்டன் மாகாண நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இது, அந்நாட்டு அதிபர் ஒபாமாவின் நிர்வாகத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில், ரகசிய தொலைபேசி உரையாடல் பதிவுக்கு ஆதரவாக செனட் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து உளவு துறைக்கான செனட் குழுவின் தலைவர் டேனி ஃபெய்ன்ஸ்டெயின் கூறுகையில், "ரகசிய உரையாடல் பதிவு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானதா, இல்லையா என்பதை உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும்' என்று தெரிவித்தார்.
மற்றொரு உறுப்பினர் ஹாரி ரெய்டு கூறுகையில், இது குறித்து மக்களிடம் விவாதம் நடத்த வேண்டும். ரகசியமாகத் தகவல்களை சேகரிப்பதற்கு ஏற்றவாறு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்' என்று தெரிவித்தார்.

ஜெர்மனி: முதலாவது பாதுகாப்பு துறை பெண் அமைச்சர் பதவியேற்பு


ஜெர்மனியின் முதலாவது பாதுகாப்புத் துறை பெண் அமைச்சராக கிறிஸ்டியன் டெமோக்ராட்ஸ் கட்சியைச் சேர்ந்த உர்சுலா வோன் டெர் லெயன் பதவியேற்றுக் கொண்டார்.

ஜெர்மனியில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில் கிறிஸ்டியன் டெமோக்ராட்ஸ் கட்சியைச் சேர்ந்த ஏஞ்சலா மெர்கெல் அந்நாட்டின் பிரதமராக தொடர்ந்து 3வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் ஜெர்மனியின் முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சராக அதே கட்சியைச் சேர்ந்த உர்சுலா வோன் டெர் லெயன் செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
இதற்கு முன் இருந்த ஜெர்மன் அமைச்சரவையில் தொழிலாளர்கள் மற்றும் சமூக விவகாரங்கள் துறை அமைச்சராக உர்சுலா பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

விக்னேஸ்வரன் ராஜிநாமா செய்ய முடிவு?



இலங்கையின் வடக்குமாகாண ஆளுநருடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடால் மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போருக்கு பிறகு தமிழர் பகுதியில் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல்வர் ராஜிநாமா செய்தால், ஜெனிவாவில் வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் இலங்கை அரசுக்கு நெருக்கடி ஏற்படும் என்பதால் விக்னேஸ்வரனை சமாதானப்படுத்தும் முயற்சியில் அதிபர் ராஜபட்ச ஈடுபட்டுள்ளார்.
வடக்கு மாகாண நிர்வாகத்தில் அப்பகுதியில் ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ நேரடியாக தலையிட்டு வருவதால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட விக்னேஸ்வரன் பொதுப் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் மனோ கணேசன், செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறுகையில், "வடக்கு மாகாண ஆளுநர் - முதல்வர் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபட்சவிடம் தொலைபேசியில் விளக்கி கூறினேன். இது தொடர்பாக விக்னேஸ்வரனுடன் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும், இதற்காக யாழ்பாணத்துக்கு வரவும் தயாராக உள்ளதாகவும் அவர் என்னிடம் தெரிவித்தார்' என்று மனோ கணேசன் கூறினார்.

தற்கொலைப்படை தாக்குதல்: 5 ராணுவ வீரர்கள் பலி

பாகிஸ்தானில் தற்கொலைப்படை பயங்கரவாதி புதன்கிழமை நிகழ்த்திய தாக்குதலில், ராணுவ வீரர்கள் 5 பேர் பலியானார்கள்.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான காஜர் போர்ட் அருகே உள்ள மிர் அலி தேசில் என்னுமிடத்தில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. அங்குள்ள ராணுவ சோதனைச் சாவடி மீது தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர், வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்துடன் வந்து மோதி தாக்குதல் நிகழ்த்தினார்.
இந்த பயங்கரத் தாக்குதலில், சோதனை சாவடியிலிருந்த ராணுவ வீரர்கள் 5 பேர் உடல்சிதறி பலியாகினர். மேலும் 34 பேர் படுகாயமடைந்தனர்.

தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம்


அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயானி மோசமான முறையில் கைது செய்யப்பட்டதற்கும்,ஆடைகளைக் களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் புதன்கிழமை இரவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஜான் கெர்ரி தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

துரதிருஷ்டவசமான இந்தச் சம்பவத்தால் இந்தியாவுடனான நெருங்கிய நட்புறவு பாதிப்படைந்துவிடக் கூடாது என்ற கவலையையும் கெர்ரி தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது. "தேவயானியைப்போல சம வயதுள்ள 2 பெண் குழந்தைகளுக்குத் தந்தையான ஜான் கெர்ரி, தேவயானி கைது விவகாரத்தைத் தொடர்ந்து இந்தியாவில் ஏற்பட்டுள்ள உணர்வுப்பூர்வமான வெளிப்பாடுகளை உணர்ந்துகொண்டுள்ளார். வெளிநாடுகளில் பணியாற்றும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளின் மதிப்பும் கண்ணியமும் காப்பாற்றப்பட வேண்டும் என்று நினைப்பதைப்போல், அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகளின் மதிப்பும் கண்ணியமும் காப்பாற்றப்பட வேண்டியது அவசியம் என்று தொலைபேசி உரையாடலின்போது கெர்ரி கூறினார்' என்று அந்தச் செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 24-இல் பெட்ரோல் பங்க்குகள் அடைப்பு


அபூர்வ சந்திரா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த வலியுறுத்தி வரும் டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் எம். ஹைதர் அலி அளித்த பேட்டி:
விற்பனை கமிஷனை உயர்த்துவது, ஊழியர்களுக்கு ஊதியம் நிர்ணயிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக மத்திய அரசு அபூர்வ சந்திரா கமிட்டியை நியமித்தது.
இந்தக் கமிட்டி தீவிர ஆலோசனைகள் மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டு கடந்த 2011 ஜனவரியில் தனது பரிந்துரைகளை சமர்ப்பித்தது. அதில் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப 6 மாதங்களுக்கு ஒரு முறை கமிஷன் தொகையை மாற்றியமைப்பது, பெட்ரோல் டீசல் ஆவியாதல் அளவை முறைப்படுத்துதல், ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பள விகிதத்தை வழங்க ஆவன செய்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன.
ஆனால், இந்தப் பரிந்துரைகளை அமல்படுத்தாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதுதொடர்பாக பல முறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை.
எனவே, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் டிசம்பர் 22, 23 தேதிகளில் பெட்ரோல் பங்க்குகளில் மின்விளக்குகளை அணைத்தும், டிசம்பர் 24-ம் தேதியன்று அனைத்து பங்க்குகளையும் மூடுவதற்கு அகில இந்திய பெட்ரோலிய வணிகர்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த அழைப்பை ஏற்று போராட்டத்தில் கலந்து கொள்வது என்று தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதன்படி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 4,400 பங்க்குகளும் டிசம்பர் 24-ம் தேதி இயங்காது. டிசம்பர் 22,23 தேதிகளில் அனைத்து பங்க்குகளிலும் மின்விளக்குகள் அணைக்கப்படும் என்றார்.

நிறைவேறியது லோக்பால்

 மக்களவையில் புதன்கிழமை லோக்பால் மசோதா மீது காரசார விவாதம் நடத்தும் சுஷ்மா ஸ்வராஜ் (பாஜக), முலாயம் சிங் (சமாஜவாதி), ராகுல் காந்தி (காங்கிரஸ்).

மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட லோக்பால் - லோக் ஆயுக்த மசோதா மக்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. முக்கிய எதிர்க்கட்சியான பாஜக, இடதுசாரிக் கட்சிகள் ஆகியவை இந்த மசோதாவை ஆதரித்ததையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் இம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

மக்களவை அதன் தலைவர் மீரா குமார் தலைமையில் புதன்கிழமை காலையில் தொடங்கியது. அப்போது, மாநிலங்களவையில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட லோக்பால் - லோக் ஆயுக்த மசோதாவை மக்களவைச் செயலர் பால்சேகர் தாக்கல் செய்தார். இதையடுத்து, நண்பகல் 12 மணிக்கு அவை கூடியதும் லோக்பால் மசோதா மீதான விவாதத்தை மத்திய சட்டத் துறை அமைச்சர் கபில் சிபல் தொடங்கி வைத்துப் பேசியதாவது:
"2011-ஆம் ஆண்டு டிசம்பரில் லோக்பால் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அம் மசோதா தேர்வுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தேர்வுக் குழு வழங்கிய சில பரிந்துரைகள் சேர்க்கப்பட்டு திருத்தங்களுடன் கூடிய மசோதா மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அம் மசோதா தற்போது மக்களவையின் ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்படுகிறது' என்றார்.
மேலும் 6 மசோதாக்கள்: அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விவாதத்தில் பங்கேற்றுப் பேசியதாவது:
"ஊழலை ஒழிக்க லோக்பால் சட்டத்தால் மட்டுமே முடியாது. ஊழலுக்கு எதிரான முழுமையான கோட்பாடுகளை நாம் வகுக்க வேண்டும். அதற்கான அடித்தளத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைத்துள்ளது. ஊழல் எதிர்ப்பு தொடர்புடைய 8 சட்ட மசோதாக்களை கொண்டு வர அரசு உத்தேசித்தது. அதில் தகவல் அறியும் உரிமைச் சட்டம், லோக்பால் சட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், ஊழல் எதிர்ப்பு சட்டத்திருத்த மசோதா; சரக்கு மற்றும் சேவைகள் உரிய நேரத்தில் குடிமக்களுக்கு கிடைக்கவும், குறைகளைக் கேட்கவும் வகை செய்யும் மசோதா; பொது கொள்முதல் மசோதா; பன்னாட்டுப் பரிவர்த்தனையின் போது லஞ்சம் வாங்கும் வெளிநாட்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் மசோதா; நீதித் துறை தரம் மற்றும் பொறுப்புணர்வு மசோதா; ஊழல்வாதிகள் பற்றி தகவல் கொடுப்போரைப் பாதுகாக்கும் மசோதா ஆகிய 6 முக்கிய மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. அவற்றை நிறைவேற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாள்களை நீட்டிக்கத் தயங்கக் கூடாது' என்றார்.
பெருமை கொள்ளக் கூடாது: எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் பேசுகையில், "நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் எந்த முக்கிய அலுவலும் இந்த அவையில் மேற்கொள்ளப்படவில்லை. ஆறுதல் அளிக்கும் வகையில், லோக்பால் சட்ட மசோதாவையாவது நம்மால் நிறைவேற்ற முடிகிறதே என எண்ணிப் பெருமை கொள்ள வேண்டும். இம் மசோதாவை நிறைவேற்றி விட்டோம் என காங்கிரஸ் உரிமை கொள்ளக் கூடாது. அந்தப் பெருமை நாட்டு மக்களையும், ஊழலுக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய அந்த வயதான மனிதரையுமே (அண்ணா ஹசாரே) சாரும்' என்றார்.
ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் பேசுகையில் "லோக்பால் சட்டத்தால் அரசின் செயல்பாடு ஸ்தம்பிக்கும் அச்சம் உள்ளது. இது தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும். என்றாலும், மசோதாவை எங்கள் கட்சி ஆதரிக்கிறது' என்றார்.
அவரைத் தொடர்ந்து, பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் லோக்பால் திருத்த மசோதா தொடர்பான தங்கள் கருத்துகளை அறிக்கையாக அவையில் தாக்கல் செய்தனர். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் லோக்பால் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து, இனி இம் மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக நாடாளுமன்றச் செயலகம் அனுப்பி வைக்கும். அதைத் தொடர்ந்து, மசோதா நிறைவேற்றப்பட்ட ஆவணத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டதும் அது தொடர்பான ஆணை மத்திய அரசிதழில் வெளியிடப்படும். அந் நாளில் இருந்து லோக்பால் மசோதாவுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து கிடைக்கும். அதன் அமலாக்க நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கும்.
சிறப்பம்சங்கள்
* மத்தியில் லோக்பால், மாநிலங்களில் லோக் ஆயுக்த அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
* லோக்பால் அமைப்பில் ஒரு தலைவர், அதிகபட்சமாக 8 உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள்.
* அதில், 50 சதவீதம் பேர் நீதித்துறையை சார்ந்தவர்களும், மீதமுள்ளவர்கள் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோர் இடம் பெறுவர்.
* உறுப்பினர்களை தேர்வுக் குழுவினர் தேர்ந்தெடுப்பார்கள்.
* பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்படும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர், 4 சட்ட நிபுணர்கள் (குடியரசுத் தலைவர் பரிந்துரைக்கும்) ஆகியோர் தேர்வுக் குழுவில் இடம் பெறுவார்கள்.
* பிரதமர் உள்பட அரசு உயரதிகாரிகளையும் விசாரணைக்கு உள்படுத்தும் அதிகாரம் படைத்தது லோக்பால்.
* லோக்பால் சட்டம் அமலாக்கப்பட்ட ஓராண்டுக்குள் மாநில அரசுகள் லோக் ஆயுக்த அமைக்க சட்டம் கொண்டுவர வேண்டும்.
* ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரின் சொத்துகளை வழக்கு விசாரணையின் போதே முடக்கவும் அதிகாரம் உள்ளது.
* ஊழல் வழக்குகளின் ஆரம்பகட்ட விசாரணை, விசாரணை அமைப்பின் விசாரணை, நீதிமன்றத்தின் விசாரணை ஆகியவற்றுக்கான கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
* வெளிநாடுகளில் இருந்து ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமாக நன்கொடை பெறுவது தொடர்பான வழக்குகளையும் லோக்பால் விசாரிக்கும்.
* நேர்மையான அதிகாரிகளுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
* சிபிஐ உள்ளிட்ட அனைத்து விசாரணை அமைப்புகளை கண்காணிக்கவும், உத்தரவிடவும் லோக்பாலுக்கு அதிகாரம் உள்ளது.
* பிரதமர் தலைமையிலான தேர்வுக் குழு சிபிஐ இயக்குநரை தேர்வு செய்து பரிந்துரைக்கும்.
* லோக்பால் அனுமதியின்றி வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகளை மாற்றம் செய்ய இயலாது.
* மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் பரிந்துரைக்கும் நபர் சிபிஐ வழக்கு விசாரணை இயக்குநராக நியமிக்கப்படுவார்.
* சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும் அதிகாரம் உள்ளது.

சமாஜவாதி வெளிநடப்பு

லோக்பால் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சமாஜவாதி, சிவசேனை கட்சி உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
லோக்பால் மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், "லோக்பால் சட்டம் நாட்டுக்கு மிகவும் பேராபத்தை விளைவிக்கும். அதை மத்திய அரசு நிறைவேற்றாமல் அனைத்து நடவடிக்கைகளையும் திரும்பப் பெற வேண்டும்' எனக் குரல் கொடுத்தார். எதிர்க்கட்சி வரிசையில் இருந்த அத்வானியை நோக்கி "இந்த மசோதாவை உங்கள் கட்சி ஆதரித்தால் அது வரலாற்றில் கரும்புள்ளி ஆகக் கருதப்படும்' என்று முலாயம் சிங் கூறினார்.
இதையடுத்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சிவசேனை கட்சி உறுப்பினர்களும் லோக்பால் மசோதாவை எதிர்த்து அமளியில் ஈடுபட்டனர். பின்னர் சமாஜ்வாதி, சிவசேனை ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.