30.12.13

Veeram Exclusive Pics




















சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால், உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும்



சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால், உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம், ஆர்சனிக், துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது. இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ, மைக்ரேன் தலைவலி, மூளை பாதிப்பு, உடல்அசைவுகள், பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம். அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம். சி. எஃப். எல். பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? * உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும். அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது. பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படுத்தலாம். நொருங்கிக் கிடக்கும் கண்ணாடித் துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ளவும். * வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது. வேக்வம் உறிஞ்சப்பட்டால், அது உள்ளே ஒட்டிக்கொள்ளும். அதைத் திரும்ப உபயோகிக்கும் போது மெர்க்குரி துகள்கள் மற்ற அறைகளுக்கும் பரவி, மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும். * கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு சாதாரண துடைப்பத்தால் சுத்தப்படுத்தலாம். * உடைந்தத் துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டி பையில் சேகரித்து, 'சீல்' செய்யவும். சாதாரண குப்பைத் தொட்டியில் போடாமல், கார்ப்பரேஷன் 'ரீசைக்ளீங் பின்' னில் கொண்டு சேர்த்தால், அவர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி விடுவார்கள். முடிந்த வரையில் நண்பர்கள் அனைவரும் இந்த பதிவை அனைவருக்கும் பகிரவும்! 

காளானின் மருத்துவ குணம் !!! (மஷ்ரூம்')



மஷ்ரூம்' என்று அழைக்கப்படும் உணவு காளான்களின் மகத்துவம் என்ன என்பதை இப்போதுதான் இந்தியர்கள் உணரத் தொடங்கி இருக்கிறார்கள். அதன்தொடர்ச்சியாக, நகர்புறங்களில் உள்ள உணவகங்களில் இந்த காளான் உணவுகள் தாராளமாககிடைக்கின்றன. சிலர், காளான் வளர்ப்பை ஒரு தொழிலாகவே மேற்கொண்டு வருகிறார்கள்.காளான் மிகுந்த சுவையுள்ளதாகவும், மிகுந்த சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது.

இந்த உணவு காளானுக்கு, பெண்களின் மார்பக புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. காளானைப் போன்று கிரீன் டீ என்று அழைக்கப்படும் பச்சைத் தேயிலைக்கும் இந்த ஆற்றல் இருக்கிறதாம்.
காளான், கிரீன் டீ அடிக்கடி சாப்பிடும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் 90 சதவீதம் குறைகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.புற்றுநோயை உருவாக்கும் ஹார்மோனை தடுக்கும் அல்லது கட்டுப்படுத்தும் ஆற்றல் காளான்களுக்கு இருப்பதும் இந்த ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.சீனாவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் தொடர்ச்சியாக பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்களும் காளானை கையில் எடுத்துக்கொண்டு ஆராய்ச்சியில் குதித்து இருக்கிறார்கள்.

காளான் வகைகள்:

இந்தியாவில் 8 வகையான காளான்கள் உள்ளன. இவற்றுள் மொக்குக் காளான், சிப்பிக் காளான், வைக்கோல் காளான் என்ற மூன்று வகை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

காளான் மருத்துவ பயன்கள்:

காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.
காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.

இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது.

இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.

பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது.

இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.
மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.
காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.

மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.
தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது.மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.

கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.

காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.

குறிப்பு :

காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

இயற்கையாய் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும், சில விஷமற்றதாகவும் வளரும். விஷக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ண முடையதாகவும் இருக்கும்.

காளான் வளர்ப்பு சிறந்த வருவாய் ஈட்டித்தரும் எளிய தொழிலாக உள்ளது. இதனை பல இடங்களில் குடிசைத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். 

உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?

உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?


இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்றாக நானே இதை கூறுவேன். இந்த அதிசயத்தைப் பற்றி எழுதவே நான் பெருமையடைகிறேன். இந்த இடத்திற்கு சென்று பார்ப்பதையே என் வாழ்நாள் ஆசையாக கொண்டுள்ளேன். தினமும் என் கணினியை தொடங்கியவுடன் இதன் படங்களை பார்த்த மகிழ்ச்சியில் தான் அன்றைய வேலைகளே தொடங்குவேன்.

நானும் இந்த தொகுப்பபை எவ்வளவோ சுருக்கி சிறியதாக எழுதலாம் என்று தான் நினைதேன். ஆனால் குறைக்கப்படும் ஒவ்வொரு வரியும், இதன் ஒரு வருட உழைப்பை குறைத்து விடும். நீங்கள் உங்கள் நேரத்தை நிச்சயம் ஒதுக்கி இதை படிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் வெளியிடுகிறேன். ஆம் அது தான் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில்.

இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, "விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே "பெரியது "! இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள்! இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது.

இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு.இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது. பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது, அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது.

பின்னர் 1586 ஆம் ஆண்டு " António da Madalena " என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர் " is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார். பின்னர் Henri Mouhot' என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged." என்று குறிப்பிட்டுள்ளார். பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது.

இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக" பொறிக்கப்பட்டுள்ளது. இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம். ஆனால், இப்போதைய கால சூழ்நிலையில் இதை படிப்பதற்கே சிரமம் என்பதால், இதை இதோடு முடித்துக் கொள்கிறேன்.

கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே?! தேடல் தொடரும்..!!!

குறிப்பு : சூர்யவர்மன் மலாய் வழி வந்த மலாய் தமிழ் மன்னன் என்று ஒரு தரப்பும், அவர் க்ஹ்மேர் இன மன்னன் என மற்றொரு தரப்பும் கூறுகின்றது..எது எப்படியோ, இதை ஏற்ப்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பம் சார்ந்தது ! 

சித்தர்கள் வகுத்த மூச்சுக்கணக்கு

எண்ணும் எழுத்தும்
__________________
உடற்கூறு கணிதம்

சித்தர்கள் வகுத்த மூச்சுக்கணக்கு:



21600 மூச்சுக்காற்று..!

உயிரின் இயக்கமே மூச்சுக்காற்றின் இயக்கமாகும். மூச்சுக்காற்றின் இயக்கமே உயிரின் இயக்கமாகும். சித்தர்களின் கணக்குப்படி மனிதனின் மூச்சுக்காற்று நாள் ஒன்றுக்கு 21,600 முறை வந்து போவதாகும். சீவ தேகத்தில் இயங்குகின்ற உயிர்க்காற்று, உச்சுவாசம் (உட்செல்லுதல் 10800/நாள்), நிச்சுவாசம் (வெளியேறுதல் 10800/நாள்) சேர்ந்து ஒரு மூச்சாக விளங்குவது. இப்படி ஒரு தினத்தில் 21,600 மூச்சு நாம் விடுகின்றோம். இம் மூச்சு ஒவ்வொன்றிலும் ஆன்ம சக்திக் கலை (அ+உ = ய) பத்தும் கலந்து வெளிப்பட்டுக் கொண்டே உள்ளது. ஆகையால் நாளொன்றுக்கு வெளிப்படுவது, (21,600 X 10 )= 216000 ஆன்ம சக்திக் கலைகள்.

சரம் என்றால் மூச்சுள்ளது. அசரம் என்றால் மூச்சில்லாதது. இவையே சித்தர்கள் உலகை அழைப்பதற்குரிய வார்த்தையாக சராசரம் என்று கூறுகிறார்கள். இந்த உலகமே மூச்சை அடிப்படையாக வைத்தது என்பதற்காகவும், அது முட்டையின் வடிவத்தை ஒத்திருப்பது என்பதற்காகவும், அண்ட சராசரம்(அண்டம் என்றால் முட்டை என்று பொருள்) என்று அழைத்து வந்தனர்.

1நிமிடத்திற்கு 15 மூச்சும், 1 மணி நேரத்திற்கு 900 மூச்சும்; 1 நாளிற்கு 21,600 மூச்சும் ஓடுகின்றது. உயிர்மெய்யெழுத்துக்கள் 216 என்பது இந்த 21,600 மூச்சுக்களையே குறிக்கும் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600 மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள் 120 ஆண்டுகளாகும். ஆனால் உட்கார்ந்திருக்கும் போது 12மூச்சும், நடக்கும் போது 18 மூச்சும், ஒடும்போது 25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும,; உடலுறவின் போதும், கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன. இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது.

அருளொலி வீசும் ஆன்மா (அ+உ+ம்=) ஓம் என்றும் அதில் அவும் (8) உவும் (2) சேர்ந்து பத்தாக, ம் – ஆறாக உள்ளது. இதில் 10 நாதமாகவும் 6 விந்தாகவும் கூறப்படும். இதன் கலப்பு (10 X 6) = 60 நாத விந்து கலையாகவும் கூறப்படும்.

இது கொண்டு, ஆன்மானுபவ ஞானிகள், தினம் வெளிப்படுகின்ற 216000 ஆன்ம சக்திக் கலைகளை, 60 ஆகிய நாத விந்து ஆன்ம கலையாற் பகுத்து, காலக் கணக்கு கண்டுள்ளனர்.

அதாவது 60 கலை ஒரு வினாடி என்றும், 60 விநாடி (60 X 60 = 3600 கலை) ஒரு நாழிகை ஆகவும், 60 நாழிகை (60 X 60 X 60 = 216000 கலை ஒரு நாளாகவும் விளங்குகின்றதாம்.

ஒரு நாளில் ஓடக்கூடிய மூச்சுக்களின் எண்ணிக்கை 21,600 என்று பார்த்தோம். சிதம்பரத்தில் உள்ள ஆனந்தமய கோசத்தில் தான், நடராஜர் நடனமிடும் சிற்சபை எனும் பொன்னம்பலம் அமைந்துள்ளது.இந்த சிற்சபைபை உடற்கூறு கணிதத்தின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றது. சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலத்தில் 64 கை மரங்கள் உள்ளன. இந்த 64ம் 64வகையான கலைகளாகும். பொன்னம்பலத்தின் 21600 தங்க ஓடுகள் உள்ளன. இவை ஒரு மனிதனின் ஒரு நாளுக்கான சராசரி மூச்சுக் காற்றுக்கான எண்ணிக்கை. 5 வெள்ளிப் படிகள் உள்ளன. இவை ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாயத்தினையும் (பஞ்ச பூதங்களையும்) குறிப்பன.இதையே விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல மதி என்றால் சந்திரன் 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும்.

வான்வெளி ஆராய்ச்சியின் அடிப்படைக் கல்வி என்னவென்றால் மூச்சே நேரம். இதுவே அனைத்து வேதங்களும், சித்தர்களும், ரிஷிகளும், மகான்களும் சொல்வதும்.

நாம் விடும் மூச்சானது உள்ளே வெளியே என்று இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது. காலச்சக்ரம் என்பது நாம் விடும் மூச்சைக் கொண்டும், நேரத்தைக் கொண்டும், வான்வெளியைக் கொண்டும் கணக்கிடப்படுவது.

10 வார்த்தைகளைக் கொண்ட அட்சரத்தை உச்சரிக்க நமக்கு ஒரு மூச்சை அதாவது நான்கு விநாடி செலவு செய்ய வேண்டியது இருக்கும்.

மூச்சின் கணக்கு:

1. ஒரு நாள் நாம் விடும் மூச்சு 21600 . இதில் நாளின் முதல் பாதியில் 10800 மறு பாதியில் 10800.
2. ஒரு மூச்சென்பது நான்கு விநாடிகள்.

நேரத்தின் கணக்கு:
1. 24 மணிநேரம் x 60 நிமிடங்கள் = 1440 நிமிடங்கள்
2. 1440 நிமிடங்கள்x 60 விநாடிகள்= 86400 விநாடிகள்; 86400/21600 = 4 விநாடிகள்= 1 மூச்சு
3. 1 கடிகை என்பது 24 நிமிடங்கள்= 1440 விநாடிகள் (=360 மூச்சுக்கள் )

சித்தர் வான்வெளியின் நேரக் கணக்கு:
1. ஒரு சதுர்யுகம் = 1 கல்ப வருடம்/1000
2. 10 வார்த்தைகளைக் கொண்ட அட்சரம் = 1 மூச்சு (மூச்சு = 4 விநாடிகள்) 360 மூச்சுக்கள் = 1 கடிகை (=24 நிமிடங்கள்)
3. 60 கடிகைகள் = 1 நாள்
4. 1 சதுர்யுகம் = 4320000 சூரிய வருடங்கள்


ஒரு யுகம் நான்காக பிரிக்கப்பட்டுள்ளது:

1. கிரேதா யுகம் = 1728000 சூரிய வருடங்கள்

2. திரேதா யுகம் = 1296000 சூரிய வருடங்கள்

3. துவாபர யுகம் = 864000 சூரிய வருடங்கள்

4. கலி யுகம் = 432000 சூரிய வருடங்கள்

நந்தனார் கீர்த்தனையில் 'எட்டும் இரண்டமறியாத மூடன்' என்கிறார். 8 என்பது 'அ' காரமாக தமிழ் எழுத்துக்களில் குறிக்கப்படுகிறது. இரண்டு என்பது 'உ' காரமாக தமிழ் எழுத்துக்களில் குறிக்கப்படுகிறது. இதையே அகார உகாரம் என்று கூறுகின்றார்கள். 8*2=16 அங்குலம் ஓடும் சந்திரகலையை குறிக்கிறது.

'எண்ணும் எழுத்தும் கண்ணெனத்
தகும்'

தகவல் - இணையம்