28.12.13

நடிகை ரஞ்சிதாவுக்கு சன்யாச தீட்சை அளித்தார் நித்தியானந்தர்



நடிகை ரஞ்சிதாவுக்கு வெள்ளிக்கிழமை சன்யாச தீட்சை அளித்தார் நித்தியானந்தர்.
பெங்களூரு பிடதியில் அமைந்துள்ள நித்தியானந்த தியான பீடத்தின் பீடாதிபதி சுவாமி நித்தியானந்தரின் பிறந்த நாள் ஜனவரி 1-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை தியான பீடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகை ரஞ்சிதாவுக்கு சன்யாச தீட்சை அளித்தார் நித்தியானந்தர்.
அப்போது, "சன்யாசத்தை கடைப்பிடிப்பேன்' என்று நடிகை ரஞ்சிதா உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து, ரஞ்சிதாவுக்கு "மா ஆனந்தமயி' என்ற பெயர் சூட்டப்பட்டது. ரஞ்சிதாவுடன் மேலும் 40 பெண்களும் சன்யாசியாக தீட்சை பெற்றனர்.
பசவமார்க்க பீடாதிபதி எதிர்ப்பு: ரஞ்சிதாவுக்கு தீட்சை அளித்தது குறித்து பெங்களூரு பசவமார்க்க பீடத்தின் பீடாதிபதி மாதே மகாதேவி கூறியது:
நடிகை ரஞ்சிதாவுக்கு சன்யாச தீட்சை அளித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. நித்தியானந்தர்- ரஞ்சிதாவின் சர்ச்சை இன்னும் நினைவில் உள்ளது. இந்த நிலையில், தீட்சை எடுத்துக் கொள்வது எந்த வகையில் சாத்தியம்? சன்யாசியாக வாழ்வது எளிதல்ல.
சன்யாசிகளிடம் தியாகம், சேவை மனப்பான்மை இருக்க வேண்டும். எல்லா சுக போகங்களையும் அனுபவித்துவிட்டு சன்யாசியாக முடியாது என மாதே பசவகீதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

கராத்தே மாஸ்டராக நயன்தாரா


‘வேலாயுதம்’ வெற்றிக்குப் பிறகு ஜெயம் ராஜா தனது தம்பி ஜெயம் ரவியை வைத்து ஒரு படம் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இதில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஒரு ஹாக்கி வீரராம். அதுமட்டுமின்றி, படத்தில் நயன்தாராவுக்கு கராத்தே மாஸ்டர் வேடமாம்.
ஜெயம் ரவி-நயன்தாரா இருவரும் ஒரு கட்டத்தில் போலீஸ் அதிகாரிகளாகி, வில்லன்களின் சதித் திட்டங்களை எப்படி முறியடிக்கிறார்கள் என்பதை ஆக்ஷன் கலந்து சொல்கிறார்களாம். மேலும் படத்தில் நயன்தாராவுக்கு நாயகனுக்கு இணையான வேடம் என்பதால், ஆக்ஷன் காட்சிகளில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறாராம்.
விளையாட்டு வீரர் வேடம் ஒன்றும் ஜெயம் ரவிக்கு புதிதல்ல. ஏற்கெனவே, எம்.குமரன், தாஸ் உள்ளிட்ட படங்களில் விளையாட்டு வீரராக நடித்திருக்கிறார்.

மகேஷ்பாபுவின் அக்காவானார் நதியா!


‘ஆகடு’ படத்தில் மகேஷ் பாபுவின் அக்காவாக நதியா நடிக்க இருக்கிறாராம்.

தெலுங்கில் ஸ்ரீனு வைட்லா இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படம் ஆகடு. இந்தப் படத்தில் மகேஷ் பாபுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மகேஷ் பாபு-தமன்னா முதன் முறையாக இணையும் படம் இது. படத்திற்கான இசை தமன். மேலும் படத்தில் நதியாவும் நடிக்கிறார். அவர் மகேஷ்பாபுவின் அக்காவாக நடிக்க உள்ளாராம்.
மகேஷ்பாபு நடித்த ‘ஒக்கடு’, ‘அத்தடு’, ‘சைனிக்குடு’, ‘தூக்குடு’, சமீபத்தில் வெளியான ‘சீதம்மா வாகிட்லோ சிரிமல்லி செட்டு’ என டு-வில் முடிந்த படங்கள் அனைத்துமே சூப்பர்ஹிட். அந்த வகையில் மகேஷ்பாபு நடிக்கும் அடுத்த படத்திற்கும் ‘ஆகடு’ என பெயர் வைத்திருக்கிறார்கள். இதுவும் ‘டு’ செண்டிமெண்ட்டில் தான் அமைந்திருக்கிறது.
ஏற்கெனவே ஸ்ரீனு வைட்லா இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்த தூக்குடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது இதே வெற்றிக் கூட்டணி மீண்டும் கைகோர்த்திருப்பதால் ‘ஆகடு’ படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பே ஏற்பட்டிருக்கிறதாம். 

டிசம்பர் 31-ம் தேதி ஜில்லா டிரைலர் வெளிவருமா?


நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள படம் ஜில்லா. இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

கிறிஸ்துமஸ் நாளில் விஜய்யின் ஜில்லா பட டிரைலர் வெளியாகும் என அறிவித்திருந்தது சூப்பர் குட் நிறுவனம். ஆனால் அறிவித்தபடி டிரைலரை வெளியிடவில்லை அந்த நிறுவனம். இப்போது வரும் டிசம்பர் 31-ம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பொங்கலுக்கு முன்பே படம் வெளியாகவிருக்கும் நிலையில், இன்னும் படத்தின் டிரைலரே ரெடியாகவில்லையா என்ற கேள்வி எழ ஆரம்பித்துள்ளது.
முன்னதாக படத்தின் இசை வெளியீடும் இப்படிதான் நடந்தது. டிசம்பர் 21ம் தேதி இசை வெளியீடு என அறிவித்து அதற்கு முன்பாகவே வெளியிட்டு அதிர்ச்சி அளித்தனர். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்திற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார்.

ஏப்ரலில் நடிகை சமீரா ரெட்டிக்கு டும் டும் டும்!


இரண்டு வருட காதலரை மணமுடிக்க இருக்கிறார் நடிகை சமீரா ரெட்டி.

வாரணம் ஆயிரம், அசல், வேட்டை, வெடி, நடுநிசி நாய்கள் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சமீரா ரெட்டி. கடந்த 2வருடங்களுக்கு முன் சமீராவுக்கு, மோட்டார் பைக் நிறுவன அதிபர் அக்ஷய் வர்தேவுடன் பழக்கம் ஏற்பட்டதாம்.
இந்த பழக்கம் நட்பாக மாறி நாளடைவில் காதலாக மலர்ந்திருக்கிறது. பல இடங்களில் இருவரும் ஒன்றாக சுற்றியுள்ளனர். இருப்பினும் அவர்கள், தங்களது காதலை வெளிப்படுத்தாமல் ரகசியம் காத்து வந்தனர்.
இந்நிலையில் சமீரா, அக்ஷய் திருமண நிச்சயதார்த்தம் பாந்தராவில் உள்ள சமீராவின் வீட்டில் கடந்த வாரம் ரகசியமாக நடந்திருக்கிறது. இதில் பங்கேற்க நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்புவிடுக்கப்பட்டதாம். இது குறித்து சமீரா கூறுகையில், எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது உண்மைதான் என்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடக்க உள்ளது எனவும் கூறியுள்ளார்.

மான் கராத்தே படத்தில் பாக்ஸராக சிவகார்த்திகேயன்


மான் கராத்தே படத்தில் சிவகார்த்திகேயன் பாக்ஸராக நடிக்கிறாராம்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘மான் கராத்தே’. இந்தப் படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் முதன் முறையாக ஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். படத்தின் கதை மற்றும் திரைக்கதையை ஏ.ஆர்.முருகதாஸ் எழுத, இயக்கி வருகிறார் திருக்குமரன்.
இந்தப் படத்துல சிவகார்த்திகேயன் பீட்டர் என்ற கதாபாத்திரத்தில் பாக்ஸராக நடிக்கிறார். ஒரு சாராரண மனிதன் எப்படி பாக்ஸர் ஆகுறான்... இதுதான் படத்தின் கதை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றிருப்பதால், ‘மான் கராத்தே’ படத்தின் எல்லா ஏரியாக்களும் இப்போதே விலை பேசப்பட்டு நல்ல விலைக்கு விற்பனை ஆகியிருப்பதாக கூறப்படுகிறது! அதாவது ரூ.20 கோடிக்கு மேல் விலை போய்யுள்ளதாம்.
மேலும படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜனவரி 1-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஆடியோவை ஃபிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

ஆர்யாவுடன் டூயட் பாடும் டாப்ஸி!


‘தடையற தாக்க’ படத்தைத் தொடர்ந்து ஆர்யாவை வைத்து தான் அடுத்ததாக இயக்க இருக்கும் படத்திற்கு ‘மீகாமன்’ என பெயரிட்டுள்ளார் மகிழ்திருமேனி.

இந்தப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிப்பார் என்றுதான் முதலில் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இப்போது ஸ்ருதி ஹாசன் கிடையாதாம். அவருக்குப் பதிலாக டாப்ஸி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.
டாப்ஸி ஏற்கனவே 'ஆரம்பம்' படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். ‘நான் அவன் இல்லை’, ‘மாப்பிள்ளை’ உட்பட பல படங்களை தயாரித்த நேமிசந்த் ஜபக் நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்கிறது. ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகும் இந்தப்படத்திற்கு தமன் இசையமைக்க சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
கோவாவைச் சுற்றிய கதைக்களம் என்பதால் வட இந்திய நடிகர்கள் பலரும் நடிக்க இருக்கிறார்கள். விரைவில் இப்படக்குழு படப்பிடிப்புக்காக லண்டன் செல்லவிருக்கிறது.

இறுதிகட்டத்தில் காவியத் தலைவன் படப்பிடிப்பு


அரவான் திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் வசந்தபாலன் இயக்கி வரும் படம் “காவியத் தலைவன்”.

இப்படத்தில் சித்தார்த் நாயகனாகவும் வேதிகா நாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் பிருத்விராஜ், நாசர், அனைகா ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஏ.ஆர்.ரகுமானின் இசையில் ஏற்கெனவே 6 பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒய் நாட் ஸ்டுடியோஸ் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறது.
அந்தக் கால இசை நட்சத்திரங்கள் கே.பி. சுந்தராம்பாள், கிட்டப்பா  வாழ்க்கைப் பற்றிய படமாக இப்படம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. நேற்றுடன் படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாம்.
கிட்டத்தட்ட 90 சதவிகதப் படப்பிடிப்புகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் வருகிற ஏப்ரல் மாதத்தில் இப்படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியாகிறது நான் தான் பாலா இசை


“ நான் தான் பாலா” திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியாக உள்ளது. 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விவேக் மீண்டும் நாயகனாகியிருக்கும் படம் ’நான் தான் பாலா’. இதில் விவே அப்பாவி பிராமணர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ராசைய்யா என்ற படத்தை இயக்கிய கண்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
வெங்கட் கிரிஷ் இசையில் அமரர் வாலி மற்றும் நா.முத்துக்குமார் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். இந்தப் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு (டிசம்பர் 28) காலை ஒன்பது மணிக்கு, கமலா சினிமாஸில் நடைபெற உள்ளது.
விவேக்கின் ஹீரோ அவதாரம் இந்த முறை வெற்றி கோட்டை தொட்டு விடும் என்றே தெரிகிறது.

நேற்றைய தீர்ப்பு, நான் சமநிலையில் இருப்பவன் என்பதை உணர்த்தியுள்ளது: மோடி



குஜராத் கலவரத்தில் மோடிக்கு தொடர்பில்லை என்று அகமதாபாத் நடுவண் நீதிமன்றம் ஜாப்ரியின் மனுவை நேற்று தள்ளுபடி செய்தது.
இந்நிலையில்  குஜராத் கலவரம் குறித்து இதுவரை அதிகம் கருத்து தெரிவிக்கமால் இருந்து வந்த மோடி தற்போது தனது பிளாக்கில் கருத்து தெரிவித்துள்ளார்.
"சகோதர சகோதரிகளே, உண்மைதான் எப்போதும் வெல்லும் என்பது இயற்கையின் நியதி. வாய்மையே வெல்லும் என்பது நமது நீதித்துறையின் வாதம். என் மனதை பாதித்த விஷயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். கடந்த 2001 ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால்  இழப்பும், வருத்தமும் அதிகமாக இருந்தது. அந்த சூழலில் 5 மாதம் கழித்து 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் என்னை வெகுவாக பாதித்தது. அந்தகலவரம் எனக்கு கடும் அதிர்ச்சியளித்ததுடன் நிலைகுலையச்செய்தது.
நெருக்கமானவர்களை இழப்பதை யாராலும் ஏற்று கொள்ள முடியாது. எனது அன்புக்குரியவர்களை இழந்தேன், ஒன்றும் அறியாத அப்பாவிகள் உயிரிழந்தனர். ஏராளமானவர்கள் அனாதையாக நின்றனர். இந்த கலவரம் நடந்த போது எனது மனம் வேதனை அடைந்தது. எனது உள்ளம் மிக துயரப்பட்டது, பெரும் கவலையுற்றேன். எத்தனை வார்த்தைகள் கூறினாலும், இந்த உணர்வை தெரிவிக்க முடியாது.
நேற்றைய தீர்ப்பு, நான் சமநிலையில் இருப்பவன் என்பதை உணர்த்தியுள்ளது. எனது மனம் அமைதியடைந்துள்ளது இது சகோதரத்துவத்துக்கும், குஜராத் மக்களுக்கும் கிடைத்த வெற்றி. 12 ஆண்டுகள் எரிந்த தீ அணைக்கப்பட்டு விட்டது. நான் சாவுக்கு காரணமான குற்றவாளி என்று விமர்சிக்கப்பட்டேன். அதில் இருந்து விடுபட்டுள்ளேன்.
ஒரு நாட்டின் வளமான எதிர்காலத்திற்கு ஒருமைப்பாடு மட்டுமே அடித்தளமாக இருக்கும் என்பதை உணர்ந்து தான், எனது ஒவ்வொரு செயல்பாடுகளும் அமைகின்றன. அனைவரும் இணைந்து பணியாற்றுவதற்கு நான் அழைப்பு விடுக்கின்றேன். ஒவ்வொருவரின் முகத்திலும் மகிழ்ச்சியை உருவாக்குவோம்" இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.

151 திருட்டு வழக்குகளில் 143 பேர் கைது: ரூ.3.17 கோடி பொருள்கள் மீட்பு

மாநகர கிழக்கு மண்டல போலீஸôர் 151 திருட்டு வழக்குகளில் 143 பேரை கைது செய்து ரூ. 3.17 கோடி மதிப்புள்ள பொருள்களை பறிமுதல் செய்துள்ளார்.
பெங்களூரு மாநகர மத்திய மண்டல போலீஸார் மீட்கப்பட்ட ரூ.3.17 கோடி திருட்டு பொருள்களை அதன் உரிமையாளர்களுக்கு திருப்பிக்கொடுக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை சென்ரல் கல்லூரி ஞானஜோதி அரங்கத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் கலந்து கொண்ட போலீஸ் கமிஷனர் ராகவேந்திர அவுராத்கர், மீட்கப்பட்ட நகைகள் மற்றும் பொருள்களை பார்வையிட்டு, பறிமுதல் செய்யப்பட்ட திருட்டு பொருள்களை அதன் உரிமையாளர்களுக்கு வழங்கினர்.
பின்னர் போலீஸ் ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் பேசியது: மாநகர மத்திய மண்டல போலீஸôர் ரூ. 3.17 கோடி மதிப்புள்ள 161.5 கேரட் வைர நகை, 4 கிலோ 300 கிராம் எடையுள்ள தங்கநகைகள், 2 கிலோ 750 கிராம் வெள்ளிப் பொருள்கள், 55 இருசக்கர வாகனங்கள், 9 கார்கள், 1 ஆட்டோ, 183 செல்போன்கள், 45 கணினி, 25 மடிகணினி, 4 யானை தந்தம், ரூ. 6.3 லட்சம் ரொக்கப்பணத்தை மீட்டுள்ளனர். பொதுமக்களுக்கு தங்கள் உடமைகளை பாதுகாப்பாத்தில் கவன செலுத்த வேண்டும். சிறப்பாக செயல்பட்ட மத்திய மண்டல போலீஸôரை பாராட்டுகிறேன் என்றார் அவர்.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஒப்பந்த பணியாளர்கள் கைது



தேனி அரசு மருத்துவக்கல்லூரி தினக்கூலி பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தையடுத்து கைது செய்யப்பட்டனர்.
தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆரம்பித்த காலத்தில் சுகாதாரம்,அலுவலக பணிகள் என பல்வேறு பணிகளுக்கு சுமார் 204 பணியாளர்கள் நியமிக்கப்பட்டன.இதில் அவர்களுக்கு தினக்கூலி சம்பளமாக ரூ 33 நியமிக்கப்பட்டு,ஏழு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகின்றனர்.இவர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வந்தன.இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் இவர்களுக்கு வருகை பதிவேடு வழங்கப்படவில்லை.இதனால் இவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் சில கடந்த மாதம் ஒப்பந்த பணியாளர்கள் 204 பேரை பணிநீக்கம் செய்து உத்திரவிட்டது மருத்துவமனை நிர்வாகம்.இதனை கண்டித்து ஒப்பந்த பணி வழங்க வேண்டும் என்று கூறி போராட்டம் நடைபெற்றது.இதனையடுத்து தொழிலாளர்கள்,மருத்துவமனை நிர்வாகம் மற்றும் ஒப்பந்த தனியார் நிர்வகம் இனைந்து பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.ஆனால் எவ்வித பேச்சுவார்த்தை தற்போது வரை நடைபெறவில்லை.இதனால் தங்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று கூறி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு உண்ணாவிரத போராட்டத்தை வெள்ளிக்கிழமை காலையில் துவக்கினார்கள்.
இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,சிஜடியூ தொழிற்சங்கம் ஆகியவை ஆதரவு தெரிவித்தன.போராட்டம் துவங்கிய 2 மணி நேரத்திற்குள் பேராட்டத்திற்கு அனுமதி பெறவில்லை என கூறி போலீஸார் அனைவரையும் கைது செய்து க.விலக்கில் உள்ள மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.இப்போராட்டத்தில் ஒப்பந்த பணியாளர்கள் ஆண்கள் 58 பேரும்,பெண்கள் 28 பேரும்,கம்யூனிஸ்ட் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் 9 பேர் என மொத்தம் 87 பேர் கைது பங்கேற்றனர்.பின்னர் மாலையில் அனைவரையும் விடுதலை செய்தனர்.

தற்போதைய செய்திகள் சிதம்பரத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி முழுமை பெறாததால் பொதுமக்கள் அவதி

சிதம்பரம் வட்டத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி முழுமை பெறாததால், ஆதார் அட்டை பெற முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஆதார் அட்டை இருந்தால் கேஸ் இணைப்பிற்கு மானிய விலையில் சிலிண்டர் என கேஸ் ஏஜென்சிகள் அறிவித்துள்ளது. ஆதார் அட்டை பதிவு செய்யாதவர்களுக்கு மானிய விலையில் சிலிண்டர் கிடையாது என கேஸ் ஏஜென்சியினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சிதம்பரம் வட்டத்தில் ஆதார் அட்டை வழங்கும் பணி முழுமை பெறாமல் உள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஏனென்றால் கடந்த 6 மாதங்கள் முன்பு நகரில் வார்டு வாரியாகவும், கிராமங்கள் வாரியாகவும் குறிப்பிட்ட தேதிகளில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்றது. அன்றைய தினம் ஊரில் இல்லாதவர்கள் படம் எடுக்க முடியாமல் போனது. இதனால் சிதம்பரம் வட்டத்தில் 50 சதவீதத்திற்கு மேல் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்காமல் உள்ளனர்.
ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க கடலூர் மாவட்டத்தில் அனைத்து நகரங்களிலும் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு புகைப்படம் எடுக்கும் பணி முழுமை பெற்றுள்ளது. ஆனால் சிதம்பரம் வட்டத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க இதுவரை சிறப்பு முகாம்கள் அமைக்கப்படவில்லை. ஏற்கனவே புகைப்படம் எடுத்தவர்கள் பாதி பேருக்கு ஆதார் அட்டை வரவில்லை. உதாரணமாக ஒரு வீட்டிற்கு 5 பேர் என்றால், 2 பேருக்குதான் ஆதார் அட்டை தபாலில் வந்துள்ளது. மீதமுள்ளவர்களுக்கு வரவில்லை.
எனவே சிதம்பரம் வட்டத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க சிறப்பு முகாம்கள் அமைத்து மீதமுள்ளவர்கள் புகைப்படம் எடுத்து ஆதார் அட்டை பெற கடலூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆதர்ஷ் அறிக்கையை நிராகரித்த மகாராஷ்ட்ரா அரசின் முடிவு ஏற்புடையதல்ல: ராகுல்



புது தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில்காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்களுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  பேசிய அவர்
  இரண்டு முக்கிய விஷயங்கள் குறித்து இங்கு நாம் பேசவுள்ளோம் ஒன்று விலைவாசி உயர்வு. மற்றொன்று ஊழல் மற்றும் லோக்பால். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
காங்கிரஸ்.ஆளும் 12 மாநிலங்களின் வரும் 2014 பிப்ரவரியில்  லோக் ஆயுக்தா அமைக்கப்படும். ஊழலை எதிர்ப்பது பற்றி பேசுபவர்கள் நாடாளுமன்றத்தை முடக்குகிறார்கள். ஊழலை ஒழிக்க  கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
ஆதர்ஸ் அறிக்கையை நிராகரித்த மகாரஷ்ட்ரா அரசின் முடிவு ஏற்புடையதல்ல. ஆதர்ஷ்முறைகேட்டில் ஈடுபட்டவர்களை பாதுக்கும் பேச்சுக்கே இடமில்லை. மகாரஷ்ட்ரா அரசு ஆதர்ஸ் அறிக்கையை நிராகரித்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றார்.

அமெரிக்க கப்பல் ஊழியர்களின் ஜாமினுக்கு இடைக்கால தடை

அமெரிக்க கப்பல் ஊழியர்கள் 35 பேருக்கு வழங்கப்பட்ட இடைக்கால் ஜாமினுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜாமினை எதிர்த்து கியூ பிரிவு போலீஸாரின் மனு மீதான தீர்ப்பில் மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பத்ததது. மேலும் கியூ பிரிவு போலீஸாரின் மனு மீதான விசாரணைஜனவரி.3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

திமுகவில் இணைந்தார் இயக்குனர் டி. ராஜேந்தர்


சென்னையில் இன்று தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்த பேசிய லட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் டி. ராஜேந்தர்  தி.மு.க.,வில் இணைந்தார். பின்னர் செய்தியார்களிடம் பேசிய கருணாநிதி, டி. ராஜேந்தர் கட்சியில் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.

ஒப்பந்த அடிப்படையில் கார்களை வாடகைக்கு எடுத்து ரூ.8.50 லட்சம் மோசடி: ஒருவர் கைது

சென்னையைச் சேர்ந்தவரிடம் ஒப்பந்த அடிப்படையில் சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து ரூ.8.50 லட்சம் மோசடி செய்த ஒருவரை சிதம்பரம் நகர போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவரிடமிருந்து 4 கார்களை பறிமுதல் செய்தனர்.

சென்னை தி்ருவெற்றியூரைச் சேர்ந்த கண்ணன் (48). இவர் நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அகமது (42) என்பவரிடம் தனது 4 சொகுசு கார்களை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விட்டுள்ளார். கார்களை அகமது சிதம்பரம் பஸ்நிலைய ஸ்டேன்டில் நிறுத்தி வாடகைக்கு விட்டு வந்துள்ளார்.
ஆனால் கடந்த 3 மாதமாக அகமது வாடகை பாக்கி ரூ.8.50 லட்சத்தையும் கொடுக்கவில்லை. கார்களை திருப்பிக் கேட்டபோது கார்களையும் கொடுக்கவில்லை. பின்னர் இதுகுறித்து கண்ணன் சிதம்பரம் நகருக்கு வந்து விசாரித்த போது மேற்கொண்ட போது அகமது கார்களை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளது தெரியவந்தது.

இந்த மோசடி குறித்து கண்ணன் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு அகமதை கைது செய்து, 4 கார்களையும் பறிமுதல் செய்தார்.

மதுரை பல்கலை முதுநிலை பட்டப்படிப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

மதுரைக் காமராசர் பல்கலைக்கழக முதுநிலை பட்டப்படிப்பு (பருவமுறை) நவம்பர் 2013 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
எம்ஏ(இசை) (சிபி.சிஎஸ்), எம்ஏ(இந்திய கலாச்சாரம்)(சிபிசிஎஸ்), எம்ஏ தமிழ்(சிபிசிஎஸ்), எம்ஏ விலங்கியல்(சிபிசிஎஸ்), எம்எஸ்சி மைக்ரோபயாலஜி(சிபிசிஎஸ்), எம்எஸ்சி(சந்தைப்படுத்தும் உளவியல்) சிபிசிஎஸ், எம்எஸ்சி பயோ இன்ஜினியரிங்(சிபிசிஎஸ்), எம்எஸ்சி பயோடெக்னாலஜி(சிபிசிஎஸ்), எம்எஸ்சி இயற்பியல்(சிபிசிஎஸ்) ஆகிய பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.mkuniversity.org என்ற இணையத்தளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட பாடங்களுக்கு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் வரும்வரை காத்திராமல், அதற்குரிய விண்ணப்பங்களை இணையத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள் அதற்குரிய விண்ணப்பங்களை 8.1.2014 மாலை 5 மணிக்குள் தேர்வாணையர் அலுவலகத்தில் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
மறுமதிப்பீட்டுக் கட்டணத்தை கேட்பு வரைவோலையாக மட்டுமே அனுப்ப வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. செலுத்திய பணமும் திருப்பித் தரப்படமாட்டாது, என பல்கலைக்கழக தேர்வாணையர்(பொறுப்பு) மு.ராஜியக்கொடி தெரிவித்துள்ளார்.

பழனி உண்டியல் காணிக்கை :14 நாள் வசூல் ரூ. ஒரு கோடியே 32 இலட்சத்தை தாண்டியது


பழனி மலைக்கோயிலில் உண்டியல்கள் கடந்த 14 நாட்களில் நிறைந்ததைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை திறந்து எண்ணப்பட்டது. இதில் பக்தர்களின் காணிக்கை வரவு ரூ. ஒரு கோடியே32 இலட்சத்தை தாண்டியது.

    பழனி மலைக்கோயிலில் உண்டியல்கள் கடந்த 14 நாட்களில் நிரம்பியதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்கப்பணம் வரவு ரூபாய் ஒரு கோடியே 32 லட்சத்து 03 ஆயிரத்து 547 கிடைத்தது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான காசுகள், தாலி, செயின், வேல், உருவங்களும், வெள்ளியால் ஆன வேல், உருவம், நெற்றிப்பட்டை, கொடை, கொலுசுகள், பார் வெள்ளி, சுவாமி உருவம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
 தங்கம் 400 கிராமும், வெள்ளி 6 ஆயிரத்து 650 கிராமும் கிடைத்தன.  மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 1,142 ம் வரப்பெற்றன. இவை தவிர ஏராளமான பக்தர்கள் பித்தளை பாத்திரங்கள், பட்டுப் புடவைகள்,  பரிவட்டங்கள், நவதானியங்கள், ரிஸ்ட் வாட்சுகள், ஏலக்காய் மாலைகளை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
வெள்ளியிலான பூமாலை, வீடு, காவடி, பால்காவடி, கற்கள் பதிக்கப்பட்ட வேல், குத்துவிளக்கு ஆகியன சிறப்பு வேலைப்பாடுகளுடன் இருந்தன. உண்டியல் எண்ணிக்கையின் போது பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, மதுரை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கருணாநிதி, முதுநிலை கணக்கியல் அலுவலர் பழனிச்சாமி, ஆய்வாளர் உமா, மேலாளர் ரவி மற்றும்  பலர் பங்கேற்றனர். உண்டியல் எண்ணிக்கையில் திருக்கோயில் பணியாளர்கள், கல்லூரி மாணவிகள், பழனி இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் பணியாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர். 

சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க சதி திட்டமா?

சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க சதி திட்டப்படுகிறதா என்பது எனக்கு தெரியாது என்று காங்கிரஸ் மாநிலத்தலைவர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
இது குறித்துபெங்களூருவில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையாவை நீக்குவதற்கு சதி திட்டம் தீட்டப்படுகிறதா என்பது குறித்து எனது கவனத்திற்கு எதுவும் வரவில்லை. எனவே, அது குறித்துஎனக்கு தெரியாது.
சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எவ்வித தொந்தரவும் இல்லை. அரசும் நல்லாட்சி நடத்திவருகிறது. மக்களுக்கு அளித்தவாக்குறுதிகளை நிறைவேற்றிவருகிறது. மேலும் பல வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கில் அரசு செயல்பட்டுவருகிறது. எனவே, முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக யாரும் பேசக்கூடாது.
எடியூரப்பா, பாஜகவில் மீண்டும் சேருவதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. பாஜகவில் எடியூரப்பா சேருவதால், காங்கிரஸ் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. வாரியம் மற்றும் கழகங்களுக்கு தலைவர்கள் நியமிப்பது குறித்துவிரைவில் முடிவெடுப்போம் என்றார் அவர்.

2வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்தியா 334 ரன்களுக்கு ஆட்டமிழப்பு: தென் ஆப்பிரிக்கா 36\0


இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் இறுதிகிரிக்கெட் டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெற்றுவருகிறது.. டாஸ் வென்று ஆடத்தொடங்கிய இந்திய அணி  நேற்றைய ஆட்ட நேர இறுதியில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 334 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.. இந்திய அணியில் அதிகபட்சமாக முரளி விஜய் 97 ரன்களும், புஜாரா 70 ரன்களும், ரகானே 51 ரன்களும், கோஹ்லி 46 ரன்களும்,  எடுத்தனர்.
தென் ஆப்ரிக்கா அணியில் சிறப்பாக பந்து வீசிய ஸ்டெயின் 6 விக்கெட்களையும். மோர்கெல் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடத்தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணி சற்று முன்பு விக்கெட் இழப்பின்றி 36 ரன்களுடன் ஆடி வருகிறது

ஆள்மாறாட்டம் செய்து ரூ. 3 கோடி சொத்து அபகரிப்பு: வழக்கறிஞர் உள்பட 3 பேர் கைது

சென்னையில் ஆள் மாறாட்டம் செய்து ரூ.3. கோடி சொத்தை அபகரித்ததாக வழக்கறிஞர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
 இது குறித்து போலீஸ் தரப்பிóல் கூறப்பட்டதாவது:
 சூளைமேடு கான் தெருவைச் சேர்ந்த நடனமணிபாலு மனைவி லலிதா என் லலிதாயோகேஷ்வரி. இவர் கடந்த 5-9-2010 முதல் காணவில்லை. இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகினன்றனர். இந்நிலையில் கடந்த 30-8-2010 அன்று கோடம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லலிதா பதிலாக வேறு பெண்ணை காட்டி சுமார் 3 கோடி மதிப்புள்ள சொத்து அபகரிக்கப்பட்டுள்ளதாக லலிதாவின் சகோதரர் வெங்கட்ராமன் சி.பி.சி.ஐ.டி. போலீஸாரிடம் புகார் செய்தார்.
 அந்தப் புகாரில் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. துணை காவலர் கண்காணிóப்பாளர் எம். பிரபாகரன் மற்றும் போலீஸார் விசாரணை செய்தனர். எழும்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் லலிதாபோல ஆள் மாறாட்டம் செய்து, போலி ஆவணம் தயாரித்து, மோசடி செய்து நிலத்தை அபகரித்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர்.
 அவரின் மோசடிக்கு உடந்தையாக இருந்த ஜெ.சுரேஷ் ஜெகதீசன், என்.ஆர்.கலைராஜன் ஆகிய இருவரையும் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். அதேவேளையில் வழக்கறிஞர் சரவணனிடம் கடந்த 2010ம் ஆண்டு லலிதா காணாமல் போனது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

"விவசாயக் கடனுதவிக்கு வங்கிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்

கர்நாடகத்தில் விவசாயக் கடனுதவி அளிக்க வங்கிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று, அந்த மாநில அரசுத் தலைமைச் செயலாளர் கெளசிக் முகர்ஜி கேட்டுக் கொண்டார்.
பெங்களூரு விதான செüதாவில் நபார்டு வங்கி சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியது:
மாநிலத்தில் விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாநில அரசு மானியங்கள் வழங்கி வருகிறது. விவசாயம் வளர்ச்சி பெற, தேசிய வங்கிகள் விவசாயிகளுக்கு பயிர்க் கடன்களை வழங்க வேண்டும்.
வங்கிகள் தங்களது மொத்த கடனில் 40 சதத்தை விவசாயத்திற்கு வழங்க வேண்டும். இதுவரை மாநிலத்தில் 37.42 சதம் கடன் விவசாயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
தேசிய வங்கிகள் விவசாயக் கடனுதவிக்கான விதிகளை தளர்த்த வேண்டும் என்றார் அவர். கருத்தரங்கில் கூடுதல் முதன்மை செயலாளர் வி.உமேஷ், நபார்டு வங்கியின் தலைமை  பொது மேலாளர் சிந்தாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சி அமைக்கும்

மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சி அமைக்கும் என்று, அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
பெங்களூருவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக மாநில செயற்குழுக் கூட்டத்தைத்  தொடக்கிவைத்து அவர் பேசியது:
கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக தோல்வி அடைந்ததை நினைத்து வருந்திக் கொண்டிருக்கத் தேவையில்லை. மக்களவைத் தேர்தல் பணியில் பாஜகவினர் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும்.
வருகிற மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும்.
இந்தியா முழுவதும் பாஜகவுக்கு ஆதரவான அலை வீசுகிறது. மக்களவைத் தேர்தலில் 272 இடங்களைக் கைப்பற்றுவது பாஜகவின் இலக்கு.
ஆனால், அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைக்  கவனித்தால், 300 இடங்களில் பாஜக வெல்வது உறுதி. நல்ல நிர்வாகம், வளர்ச்சியை  மையப்படுத்தி மக்களவைத் தேர்தல் பிரசாரம் நடைபெறும்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செயல்படுத்திய திட்டங்களை  மக்களிடம் பிரசாரம் செய்வோம். மக்களவைத் தேர்தலில் ஜாதி, மதத்தின் அடிப்படையில் பாஜகவைப் பிளவுபடுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ்தான் மதவாதக் கட்சி.
குஜராத்தில் பெண் உளவுப் பார்த்த விவகாரம் குறித்து விசாரிக்க மத்திய அரசு,  விசாரணைக் குழுவை அமைத்துள்ளது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார் ராஜ்நாத் சிங்.கூட்டத்தில் கர்நாடக மாநிலத் தலைவர் பிரஹலாத் ஜோஷி, கட்சி மேலிடப் பார்வையாளர் தவார்சந்த் கெலாட், அனந்த்குமார் எம்.பி., முன்னாள் முதல்வர்கள் சதானந்த கெüடா, ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்வர்கள் ஆர்.அசோக், கே.எஸ்.ஈஸ்வரப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எடியூரப்பா பாஜகவில் இணைவதால் காங்கிரஸுக்கு பாதிப்பில்லை

கர்நாடக ஜனதா கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா பாஜகவில் மீண்டும் இணைவதால் காங்கிரஸýக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது என்று, அந்த மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூருவில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எந்தவித தொந்தரவும் இல்லை. அரசும் நல்லாட்சி நடத்தி வருகிறது. மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது.
மேலும் பல வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது.
எனவே, முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக யாரும் பேசக் கூடாது.
எடியூரப்பா பாஜகவில் மீண்டும் இணைவதால் காங்கிரஸýக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. வாரியம், கழகங்களுக்குத் தலைவர்கள் நியமிப்பது குறித்து விரைவில் முடிவெடுப்போம் என்றார் அவர்.

இன்று ஜவகர்லால் நேரு பிறந்த நாள் விழா

பெங்களூருவில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்த நாள் விழா, காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் தின விழா சனிக்கிழமை (டிச.28) கொண்டாடப்படுகிறது.
பெங்களூரு மகாலட்சுமி லேஅவுட்டில் உள்ள கமலம்மா விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (டிச.28) காலை 10 மணியளவில் நடைபெறும் இந்த விழாவில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, தேசிய பொதுச் செயலாளர்கள் திக்விஜய் சிங், செல்லக்குமார், மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர், மூத்த தலைவர் என்.எல். நரேந்திரபாபு உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

முந்தைய பாஜக ஆட்சியில் நடைபெற்ற தவறுகளால்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது: மாநிலத் தலைவர் பிரஹலாத் ஜோஷி

கர்நாடகத்தில் முந்தைய பாஜக ஆட்சியில் நடைபெற்ற தவறுகளால்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளதாக, அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.
பெங்களூருவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் அவர் பேசியது:
கர்நாடகத்தில் முந்தைய பாஜக ஆட்சியில் நடந்த சில தவறுகளால், அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது. பாஜகவின் தவறுகள், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க காரணமாகிவிட்டது.
முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெறும் காங்கிரஸ் அரசுக்கு ஆட்சி நடத்த தெரியவில்லை. புதிய திட்டங்களை அறிவிப்பதும், அதற்கு எதிர்ப்பு உருவாகும் போது,  அதை திரும்பப் பெறுவதே காங்கிரஸ் அரசின் போக்காக உள்ளது.
மாநில அரசின் நிதி நிலைமை சரியில்லாமல் இருப்பதற்கு முந்தைய பாஜக ஆட்சியே காரணம் என்று முதல்வர் சித்தராமையா கூறியது கண்டிக்கத்தக்கது. முந்தைய பாஜக ஆட்சியில் மாநிலத்தின் நிதி நிலை சிறப்பாக இருந்தது.
காங்கிரஸ் அரசின் மோசமான நிதி நிர்வாகத்தை மறைப்பதற்காக பாஜக மீது பழிபோடுகிறார் சித்தராமையா. மாநிலத்தின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார் அவர்.

மூன்று ஆண்டு மருத்துவப் படிப்பு விரைவில் தொடக்கம்

கிராமங்களில் மருத்துவர்கள் பணி செய்வதற்கு வசதியாக மூன்று ஆண்டு மருத்துவப் பட்டப் படிப்பைத் தொடங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் தெரிவித்தார்.
பெங்களூரு விகாஸ் செüதாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில சுகாதாரத் துறையின் வளர்ச்சிப் பணிகளின் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கிராமப் பகுதிகளுக்கு பணி செய்ய பெரும்பாலான மருத்துவர்கள் மறுப்புத் தெரிவிக்கின்றனர். இதனால், கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு அவசர காலத்தில் உரிய சிசிச்சை கிடைப்பதில்லை.
இதைத் தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகள்   கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, மூன்று ஆண்டு மருத்துவப் பட்டப் படிப்பைத் தொடங்குவது குறித்து பரிசீலித்து, விரைவில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கிராமங்களில் வசிப்பவர்கள் நகரங்களுக்கு குடியேறுவதற்கு முக்கியக் காரணமாக இருப்பது மருத்துவம் சார்ந்த பிரச்னைகளே. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கிராமங்களில் மருத்துவச் சேவைகளை அதிகரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாநிலங்களுக்கு மருத்துவச் சேவைகளுக்காக ரூ. 1.10 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகம் மருத்துவச் சேவையில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறது. பேறு காலத்தில், குழந்தைகள் இறப்பைத் தடுப்பதில் கர்நாடகம் 2-ஆம் இடத்தில் உள்ளது.
தாய்கள் இறப்பைத் தடுப்பதில் 5 மாநிலங்களில் ஒன்றாக கர்நாடக உள்ளது. 25 படுக்கைகள் கொண்ட மகப்பேறு மருத்துவமனைகளைத் தொடங்க மாநில அரசு அனுமதி கோரியுள்ளது. அதற்கு அனுமதி வழங்கப்படும்.
அனைத்து மக்களுக்கும் சிகிச்சை பெறும் வகையில் மாநில அரசு ராஜீவ் காந்தி சுகாதாரத்  திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. சுகாதாரத் துறையில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் கர்நாடகத்திற்கு கூடுதல் நிதி வழங்கப்படும் என்றார் குலாம்நபி ஆசாத்.

தமிழ்ச் சங்கத்தில் இன்று சிறப்புச் சொற்பொழிவு

பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் க.சுப்ரமணியனார் அறக்கட்டளை சார்பில் சனிக்கிழமை (டிச.28) சிறப்புச் சொற்பொழிவு நடைபெறுகிறது.
இதுகுறித்து பெங்களூரு தமிழ்ச் சங்கம் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்ச் சங்க நிறுவனர்களில் ஒருவரான புலவர் க.சுப்ரமணியனார் அறக்கட்டளை சார்பில் பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் அரங்கில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சிறப்பு சொற்பொழிவு நடைபெறுகிறது.
"மாவீரன் கர்ணன் மோட்சம்' என்ற தலைப்பில் வேலூரைச் சேர்ந்த ஜெயபாலன் பேசுகிறார். கல்லூரி முன்னாள் முதல்வர் எழில், சங்கத் தலைவர் கோ.தாமோதரன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்வர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ச் சங்கத்தில் இன்று சிறப்புச் சொற்பொழிவு

பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் க.சுப்ரமணியனார் அறக்கட்டளை சார்பில் சனிக்கிழமை (டிச.28) சிறப்புச் சொற்பொழிவு நடைபெறுகிறது.
இதுகுறித்து பெங்களூரு தமிழ்ச் சங்கம் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்ச் சங்க நிறுவனர்களில் ஒருவரான புலவர் க.சுப்ரமணியனார் அறக்கட்டளை சார்பில் பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் அரங்கில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சிறப்பு சொற்பொழிவு நடைபெறுகிறது.
"மாவீரன் கர்ணன் மோட்சம்' என்ற தலைப்பில் வேலூரைச் சேர்ந்த ஜெயபாலன் பேசுகிறார். கல்லூரி முன்னாள் முதல்வர் எழில், சங்கத் தலைவர் கோ.தாமோதரன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்வர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ச் சங்கத்தில் இன்று சிறப்புச் சொற்பொழிவு

பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் க.சுப்ரமணியனார் அறக்கட்டளை சார்பில் சனிக்கிழமை (டிச.28) சிறப்புச் சொற்பொழிவு நடைபெறுகிறது.
இதுகுறித்து பெங்களூரு தமிழ்ச் சங்கம் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்ச் சங்க நிறுவனர்களில் ஒருவரான புலவர் க.சுப்ரமணியனார் அறக்கட்டளை சார்பில் பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் அரங்கில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சிறப்பு சொற்பொழிவு நடைபெறுகிறது.
"மாவீரன் கர்ணன் மோட்சம்' என்ற தலைப்பில் வேலூரைச் சேர்ந்த ஜெயபாலன் பேசுகிறார். கல்லூரி முன்னாள் முதல்வர் எழில், சங்கத் தலைவர் கோ.தாமோதரன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்வர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றார் சுயேச்சை எம்.பி.

மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சுயேச்சை மக்களவை உறுப்பினர் ஓம் பிரகாஷ் யாதவ் வெள்ளிக்கிழமை வாபஸ் பெற்றார்.
அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், விலைவாசி உயர்வு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் போன்ற காரணங்களால் ஆதரவை வாபஸ் பெற்றதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் கடிதம் அளித்ததாக, தில்லியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் ஓம் பிரகாஷ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். கடிதத்தின் நகல் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் பெண் ஒருவர் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ள நிலையில், அதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று ஓம் பிரகாஷ் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக பாஜகவுக்கு ஆதரவாகப் பேசிவரும் ஓம் பிரகாஷ், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை "சக்தி வாய்ந்த தலைவர்' என்றும், தற்போதைய காலகட்டத்தில் இதுபோன்ற தைரியமான தலைவர்தான் நாட்டுக்குத் தேவை என்றும் புகழ்ந்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. பாஜக மூத்த தலைவர் ஒருவருடன் ஓம் பிரகாஷ் நெருக்கமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்பெயின் பெண் பலாத்காரம்: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

மகாராஷ்டிர மாநிலத்தில் ஸ்பெயினைச் சேர்ந்த பெண் இசைக் கலைஞர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மும்பையின் புற நகரான பாந்த்ரா பகுதியில் வசித்து வந்த அந்தப் பெண்ணை முகமது பதுஷா அன்சாரி என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான வழக்கு மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்த நீதிபதி ஷாலினி பன்சால்கர் ஜோஸி, குற்றவாளி முகமது பதுஷா அன்சாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

மோடி மீது அவதூறு பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக


""குஜராத் கலவரத்துக்காக முதல்வர் நரேந்திர மோடி மீது அவதூறு பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று பாஜக கோரியுள்ளது.

இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவடேகர் வெள்ளிக்கிழமை கூறியது:
மோடி மீது 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவதூறுப் பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக அவரிடமும் நாட்டிடமும் காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும். குஜராத் கலவர வழக்கில் மோடி நிரபராதி என்பதை நீதிமன்றத் தீர்ப்பு நிரூபித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் அவசரநிலைக் கால மனப்பான்மை அதற்கே பாதகமாக மாறும் என்றார் பிரகாஷ் ஜாவ்டேகர். இதனிடையே, பிகாரைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் சுஷில்குமார் மோடி இவ்விவகாரம் குறித்து பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ""குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அளித்த நற்சான்றிதழை ஆமதாபாத் பெருநகர நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இது, மோடியின் பெயரைக் கூறி பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதீஷ்குமார் போன்ற போலி மதச்சார்பின்மை தலைவர்களின் முகத்தில் விழுந்த அறையாகும்'' என்றார்.

கெலாட் அரசு மீதான டெண்டர் முறைகேடு புகார்: விசாரணை நடத்த சமாஜவாதி வலியுறுத்தல்

ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் ஆட்சியில் பொதுப்பணித் துறையில் முறைகேடாக அதிக தொகைக்கு டெண்டர் வழங்கப்பட்டது குறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சமாஜவாதி கட்சி வலியுறுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநில முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தேர்தல் நிதி திரட்டுவதற்காக சில ஒப்பந்ததாரர்களுக்கு 1,629 ஒப்பந்தங்கள் கூடுதல் தொகைக்கு டெண்டர்கள் வழங்கப்பட்டதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து சமாஜவாதி கட்சியின் மாநில துணைத் தலைவர் அனில் சிங் ஷெகாவத், ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
அவசர அவசரமாக வெளியிடப்பட்ட அந்த டெண்டர் கோரிக்கை வழக்கமான தொகையைவிட அதிகமாக இருந்தது மட்டுமின்றி, சில குறிப்பிட்ட நிறுவனங்கள் ஆதாயம் பெறும் வகையில் சிறப்பு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
சுமார் ரூ.20,000 கோடிக்கான அந்த டெண்டர் நடைமுறைகள் முழுவதும் தேர்தல் நிதி திரட்டுவதற்காகவே முந்தைய அரசால் மெற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கிறோம்.
தற்போது ராஜஸ்தானில் பதவி ஏற்றுள்ள பாஜக அரசு, முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கடைசி ஆறு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட டெண்டர் தொடர்பான முடிவுகள் குறித்து ஆய்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளதை வரவேற்கிறோம்.
அந்த டெண்டர் நடைமுறையில் உள்ள முறைகேடுகள் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என்றும் அனில் சிங் ஷெகாவத் வலியுறுத்திக் கூறினார்

"ஆம் ஆத்மி' அரசு இன்று பதவியேற்பு



தில்லியின் ஏழாவது முதல்வராக அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை பதவியேற்கிறார். அவரது தலைமையிலான "ஆத் ஆத்மி' அரசின் புதிய அமைச்சரவையும் பொறுப்பேற்கவுள்ளது. அவர்களுக்கு தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார். ராம்லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் கேஜரிவாலின் அரசு பொறுப்பேற்கவுள்ளது.
இளம் அமைச்சரவை: ராம்லீலா மைதானத்தில் சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறவுள்ளது. அரவிந்த் கேஜரிவால் முதல்வராகவும், அவருடன் ராக்கி பிர்லா (26), சௌரவ் பரத்வாஜ் (34), சோம்நாத் பார்தி (39), சத்யேந்திர குமார் ஜெயின் (49), கிரீஷ் சோனி (49), மணீஷ் சிசோடியா (41) ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்கவுள்ளனர்.
இதில் குறிப்பிடத்தக்க வகையில், ராக்கி பிர்லா மிகவும் இளம் அமைச்சராகவும் மணீஷ் சிúஸாடியா அதிகபட்ச வயது கொண்டவராகவும் அமைச்சர்களாக பொறுப்பேற்கவுள்ளனர். அந்த வகையில் இது தில்லி அரசியல் வரலாற்றில் இளம் வயதினரைக் கொண்ட முதலாவது அமைச்சரவையாக விளங்கவுள்ளது.
மெட்ரோ ரயிலில் பயணம்: தில்லி முதல்வராக பொறுப்பேற்கவுள்ள அரவிந்த் கேஜரிவால், எவ்வித பகட்டும் இல்லாமல் எளிமையான முறையில் பணியாற்றப் போவதாகக் கூறியுள்ளார். அதன் முன்னோட்டமாக, தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அவர் உத்தரப் பிரதேச மாநிலம், கௌஷாம்பியில் உள்ள தனது இல்லத்தில் இருந்து ராம்லீலா மைதானத்துக்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்யவுள்ளார். அவரைப் பின்பற்றி அமைச்சர்களாக பதவியேற்கவுள்ள ஆறு பேரும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து ராம்லீலா மைதானத்துக்கு வர முடிவு செய்துள்ளனர்.
காங்கிரஸ் ஆதரவுடன் சிறுபான்மை பலம் கொண்ட ஆம் ஆத்மி கட்சி தலைமையில் தில்லியில் ஆட்சி அமைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஒப்புதல் தெரிவித்தார். அதன் பிறகு ராம்லீலா மைதானத்தில் சனிக்கிழமை பதவி ஏற்பு விழாவுக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
எளிமையான ஏற்பாடு: லட்சக்கணக்கான மக்கள் பார்வையிடும் வகையில் மைதானத்தில் ஏற்பாடுகளும் விழா மேடையும் அமைக்கப்பட்டன. அனைத்து ஏற்பாடுகளும் மிகவும் எளிமையாக நடத்தப்படுவதை ஆம் ஆத்மி கட்சி உறுதிப்படுத்தியது. புதிய அரசின் பதவியேற்பு விழாவுக்கு வழக்கமாக வழங்கப்படும் "விவிஐபி', "விஐபி' அனுமதி அட்டைகள் இம் முறை விநியோகிக்கப்படவில்லை. எல்லோருக்கும் வாய்மொழியாகவே ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
பதவியேற்பு விழாவையொட்டி, ராம்லீலா மைதானத்துக்கு தில்லி மெட்ரோ ரயில், பேருந்துகள் மூலம் பெருந்திரளாக மக்கள் வருவார்கள் என்பதால் ராம்லீலா மைதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 2,000 ஆயிரம் போலீஸார் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹசாரே, கிரண் பேடி புறக்கணிப்பு: ஆம் ஆத்மி கட்சி தொடங்குவதற்கு முன்பு சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே நடத்திய "ஊழலுக்கு எதிரான இந்தியா' என்ற இயக்கத்தில் அரவிந்த் கேஜரிவால் இருந்தார்.
ஆனால், அவர் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த போது அதை அண்ணா ஹசாரேவும், அவரது ஆதரவாளரான முன்னாள் ஐபிஎஸ் பெண் அதிகாரி கிரண் பேடியும் எதிர்த்தனர். இந் நிலையில், தில்லி தேர்தலில் அரவிந்த் கேஜரிவால் வெற்றி பெற்றதும் அவருக்கு ஹசாரே வாழ்த்துத் தெரிவித்தார்.
இதையடுத்து, தனது பதவியேற்பு விழாவுக்கு வரும்படி அண்ணா ஹசாரேவுக்கும், கிரண் பேடிக்கும் அரவிந்த் கேஜரிவால் அழைப்பு விடுத்தார். ஆனால், முறைப்படி தங்களை யாரும் அழைக்கவில்லை எனக் கூறி இருவரும் பதவியேற்பு விழாவைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

அரசுப் பணம் விரயம்: திருப்பிச் செலுத்திய துணை முதல்வர்


அரசு சார்பில் தனக்கு ஒதுக்கப்பட்ட பங்களா சீரமைப்புப் பணிக்கு கூடுதலாக செலவிட்டதாக புகார் எழுந்த நிலையில், ரூ. 27 லட்சத்தை மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் திருப்பிச் செலுத்தியுள்ளார்.

அரசு சார்பில் அந்த மாநில அமைச்சர்களுக்கு கொடுக்கப்பட்ட பங்களாவுக்கு கடந்த ஆண்டு செய்த செலவு விவரங்களை மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த அனில் கல்காலி என்பவர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார்.
அதில், அமைச்சர்களின் பங்களா சீரமைப்புப் பணி மற்றும் உள்நாட்டு விமானப் பயணத்திற்காக ரூ. 14 கோடி செலவு செய்துள்ளதாக தெரிய வந்தது.
அமைச்சர்களின் பங்களா சீரமைப்புப் பணிக்காகப் அரசு பணம் வீணடிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதையடுத்து மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜீத் பவார், தனக்கு தெற்கு மும்பையில் ஒதுக்கப்பட்ட தேவ்கிரி பங்களாவின் சீரமைப்புப் பணிக்கு கூடுதலாக செலவான ரூ. 27 லட்சத்தை பொதுப்பணித் துறைக்கு வெள்ளிக்கிழமை திருப்பிச் செலுத்தினார் என்று அவரது அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

10 தமிழக அதிகாரிகளுக்கு ஐஏஎஸ் அந்தஸ்து: பிரணாப் உத்தரவு


தமிழகத்தைச் சேர்ந்த 10 அதிகாரிகளுக்கு ஐஏஎஸ் (இந்திய ஆட்சிப் பணி) அந்தஸ்து வழங்கி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்ட அரசாணை:
இந்திய ஆட்சிப் பணிக்கு காலியாக உள்ள இடங்களை நிரப்ப மாநில அரசுப் பணியில் உள்ள அதிகாரிகள் தேர்வு செய்யப்படும் நடைமுறையின்படி, தமிழக அரசுப் பணியில் உள்ள தகுதி வாய்ந்த 10 அதிகாரிகளை 2012-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்வுப் பட்டியலில் சேர்த்து அவர்களுக்கு "தமிழ்நாடு பிரிவு' ஒதுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
ஐஏஎஸ் அந்தஸ்து பெறும் அதிகாரிகள்: எஸ். மலர்விழி, எஸ். சுரேஷ் குமார், எஸ். பழனிசாமி, டாக்டர் எஸ். பிரபாகரன், எம். லக்ஷ்மி, ஆர். கஜலக்ஷ்மி, கே.எஸ். கந்தசாமி, எஸ். கணேஷ், சி. கதிரவன், எஃப்.இன்னொசென்ட் திவ்யா.
மேற்கண்ட அரசாணையை அரசிதழில் வெளியிட தமிழக அரசின் தலைமைச் செயலரை மத்திய பணியாளர், பயிற்சித் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: சல்மான் குர்ஷித் உறுதி


தில்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை வெள்ளிக்கிழமை சந்தித்த தமிழக மீனவர்கள். உடன் திமுக எம்பிக்கள் டி.ஆர். பாலு, ஏ.கே.எஸ். விஜயன்.

"இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 200-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.
இது தொடர்பாக தில்லியில் தன்னைச் சந்தித்த தமிழகத்தின் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், புதுச்சேரியின் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் பிரதிநிதிகளிடம் அவர் இந்த உறுதியை அளித்தார்.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், அத் துறை உயரதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்து வலியுறுத்துவதற்காக புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ந. கௌதமன், ஆ. சேகர், மு. முத்து, மு. முருகன், கோ. மனோகரன், ரா. தக்ஷிணாமூர்த்தி, செ. சுரேஷ், செ.ஆறுமுகம், க. செந்தில் ஆகியோர் வியாழக்கிழமை இரவு தில்லி வந்தனர்.
அவர்களை நாடாளுமன்றத் திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு, நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோர் வெள்ளிக்கிழமை மாலை சல்மான் குர்ஷித்திடம் அழைத்துச் சென்றனர். அப்போது, இலங்கைக் கடற்படையின் நடவடிக்கையால் தமிழக மீனவர்களின் நிலை கேள்விக்குரியாகியுள்ளது என்றும், கடலில் மீன் பிடிக்கவே அச்சப்படுவதாகவும் மீனவர்கள் கூறி வேதனை தெரிவித்தனர். இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் பகுதி மீனவர்களை தாமதமின்றி விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இச் சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் டி.ஆர். பாலு கூறுகையில், "கடந்த மூன்று மாதங்களாக இலங்கை சிறையில் 200-க்கும் மேற்பட்ட தமிழக, புதுச்சேரி மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குச் சொந்தமான 77 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீனவர்களை விடுவிக்கவும், படகுகளை மீட்கவும், நீடித்து வரும் இலங்கைக் கடற்படையின் அட்டூழியத்தை முடிவுக்குக் கொண்டு வரவும் நிரந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று சல்மான் குர்ஷித்திடம் கேட்டுக் கொண்டோம்' என்றார்.
நடவடிக்கைக்கு குர்ஷித் உறுதி: இதைத் தொடர்ந்து, சல்மான் குர்ஷித் கூறியது: "இந்திய-இலங்கை மீனவர்கள் இடையிலான பிரச்னையை அவர்களின் வாழ்வாதாரம், மனிதாபிமானம் என்ற கோணத்தில் அணுக வேண்டும். சம்பந்தப்பட்ட இரு நாட்டு மீனவர்களும் தங்களுக்குள்ளாகப் பேசி ஒரு தீர்வுக்கு வந்தால்தான், இப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும். கடந்த காலங்களிலும் இரு தரப்பு மீனவர்கள் பேசியுள்ளனர். இடையில் நின்றுபோன அப் பேச்சுவார்த்தை நடவடிக்கை மீண்டும் தொடங்க தற்போது இரு தரப்பும் ஆர்வம் காட்டி வருகின்றன. தமிழக அரசு உள்பட அனைவரும் இரு நாட்டு மீனவர்கள் சந்திப்பு நடைபெற ஒத்துழைக்கின்றனர்.
இது அரசியல் கடந்து நிலவும் மனிதாபிமான பிரச்னையாகும். எனது நிலையில், இலங்கை வெளியுறவு அமைச்சருடன் பேசி ஜனவரியில் இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தை நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை மீனவர்கள் இந்தியாவிலும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். எனவே, பரஸ்பரம் இரு தரப்பு மீனவர்களையும் விடுவிக்கும் வாய்ப்புகளையும் மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.
இது தமிழக மீனவர்கள் என்று இல்லாமல் இந்திய மீனவர்கள் என்ற கோணத்தில் அணுகப்பட வேண்டிய பிரச்னை. அந்த வகையில், இந்தியக் குடிமக்களை இலங்கை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. அதற்கான உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார் சல்மான் குர்ஷித். இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தமிழக ஊடவியலாளர் தமிழ் பிரபாகரனை விடுவிப்பது குறித்து கேட்டதற்கு, "சில நேரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் இலங்கையில் நடந்துவிடுகிறது.
இந்த விஷயத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்' என்றார் சல்மான் குர்ஷித்.

"ஜனவரி 20-இல் பேச்சுவார்த்தை'
இந்திய-இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தை அடுத்த ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியதாக புதுச்சேரியில் உள்ள தேசிய மீனவர் பேரவை பொதுச் செயலர் எம். இளங்கோ தெரிவித்தார்.
தமிழக-புதுச்சேர் மீனவர்களை விடுவிக்கக் கோரி இளங்கோவும், காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் மணிசங்கர் ஐயரும் சல்மான் குர்ஷித்தை வெள்ளிக்கிழமை மாலையில் சந்தித்தனர்.
அப்போது, "கடல் தாண்டி வந்ததாகக் கைது செய்யப்பட்டு இந்திய-இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இரு நாட்டு மீனவர்களையும் பரஸ்பரம் விடுவிக்க இந்தியாவும் இலங்கையும் திட்டமிட்டுள்ளன. அதன்படி, ஜனவரி 20-ஆம் தேதி இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தை நடைபெற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என சல்மான் குர்ஷித் கூறினார்' என்று இளங்கோ பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நடுங்கும் குளிரில் வடமாநிலங்கள்


இந்தியாவின் வடமாநிலங்களில் கடுங்குளிர் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப்பகுதியான லடாக்கில் உள்ள கார்கிலில் மைனஸ் 15.7 டிகிரி குளிர் பதிவாகியுள்ளது. அதன் அருகே உள்ள லே பகுதியில் மைனஸ் 14.8 டிகிரி குளிர் வீசியது.
ஜம்மு காஷ்மீர் மாநில கோடைகாலத் தலைநகரான ஸ்ரீநகரில் மைனஸ் 0.6 டிகிரியாகவும், பஹல்காம் மலைப்பகுதியில் மைனஸ் 9.6 டிகிரியாகவும் குளிர் பதிவாகியுள்ளது. குல்மார்க் பகுதியில் மைனஸ் 8.6 டிகிரி குளிர் நிலவியது.
காஷ்மீர் பள்ளத்தாக்கின் நுழைவுவாயிலான காஸிகுண்ட்டில் மைனஸ் 0.2 டிகிரி குளிர் வீசியது. தெற்கு காஷ்மீரிலுள்ள கோகெர்னாக் பகுதியில் மைனஸ் 3 டிகிரி குளிர் பதிவானது. வடக்கு காஷ்மீரிலுள்ள குப்வாரா பகுதியில் மைனஸ் 3.4 டிகிரி குளிர் வீசியது.
ராஜஸ்தானிலும் கடும்குளிர் வீசியது. சுரு பகுதியில் 0.9 டிகிரியாகவும், ஸ்ரீகங்காநகர் பகுதியில் 2.5 டிகிரியாகவும் குளிர் பதிவானது.
அந்த மாநிலத்தின் ஜெய்சால்மரில் 4.6 டிகிரியும், பிலானியில் 7.5 டிகிரியும், பார்மரில் 9 டிகிரியும், சித்தூர்கரில் 10.7 டிகிரியும், கோட்டாவில் 12 டிகிரியும், ஜெய்பூரில் 12.2 டிகிரியும், அஜ்மீரில் 12.3 டிகிரியும் தட்பவெப்பநிலை பதிவானது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள ஆதம்பூர் பகுதியில் மைனஸ் 1.2 டிகிரி குளிர் நிலவியது. சண்டீகரில் 3.8 டிகிரியும், ஹரியாணா மாநிலத்தின் ஹிலார் நகரத்தில் 1.7 டிகிரியும், அம்பாலாவில் 5 டிகிரியும், நர்நவுல் பகுதியில் 3.9 டிகிரியும் பிவானியில் 5.4 டிகிரியும் குளிர் பதிவானது.

அமெரிக்க விசாவுக்கு மோடி விண்ணப்பிக்க வேண்டாம்



குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு விசா தர முடியாது என அமெரிக்கா தொடர்ந்து மறுப்பது அதன் பக்குவமற்றத் தன்மையைக் காட்டுவதாக குற்றம் சாட்டியுள்ள பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி, அமெரிக்க விசாவுக்கு மோடி விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும் யோசனை தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு, 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் மோடி குற்றமற்றவர் என்று கூறி அவரை விடுவித்தது. இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆமதாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாஷிங்டனில் வியாழக்கிழமை கூறும்போது, ""மோடிக்கு விசா வழங்கும் கொள்கையில் தற்போதும் எந்தவித மாற்றமும் இல்லை'' என்று தெரிவித்தார்.
ஏற்கெனவே கடந்த 2005 ஆம் ஆண்டு மோடிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்து விட்டது.
இந்நிலையில் புது தில்லியில் அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடி மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாதததால் விடுவிக்கப்பட்டார்.
அவருக்கு விசா தர முடியாது என்று அமெரிக்கா தொடர்ந்து கூறுவது அதன் பக்குவமற்ற தன்மையைத்தான் காட்டுகிறது.
மேலும் அமெரிக்காவின் இந்தப் போக்கு இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதுபோல் உள்ளது.
மோடி விண்ணப்பிக்க வேண்டாம்: எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால், அமெரிக்க விசாவுக்கு மோடி விண்ணப்பிக்கத் தேவையில்லை. 2005-இல் விசா மறுக்கப்பட்ட பிறகு அவர் அமெரிக்காவிடம் விசா கேட்டு மீண்டும் விண்ணப்பிக்கவில்லை. இந்த விசா விவகாரத்தில் தொடர்ந்து தவறான பிரசாரம் செய்பவர்கள் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
சில நாடுகள் கட்டப்பஞ்சாயத்து முறையில் மோடியை குற்றவாளி என்று வெளிப்படையாக அறிவிக்க முடிவு செய்துள்ளன.
நம் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவர வழக்கு தொடர்பாக மோடியிடம் தீவிரமாக விசாரித்தது போல், வேறு எந்தத் தலைவரிடமும் விசாரணை நடத்தியதில்லை என்று அருண் ஜேட்லி கூறினார்.குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு விசா தர முடியாது என அமெரிக்கா தொடர்ந்து மறுப்பது அதன் பக்குவமற்றத் தன்மையைக் காட்டுவதாக குற்றம் சாட்டியுள்ள பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி, அமெரிக்க விசாவுக்கு மோடி விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும் யோசனை தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு, 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் மோடி குற்றமற்றவர் என்று கூறி அவரை விடுவித்தது. இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆமதாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாஷிங்டனில் வியாழக்கிழமை கூறும்போது, ""மோடிக்கு விசா வழங்கும் கொள்கையில் தற்போதும் எந்தவித மாற்றமும் இல்லை'' என்று தெரிவித்தார்.
ஏற்கெனவே கடந்த 2005 ஆம் ஆண்டு மோடிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்து விட்டது.
இந்நிலையில் புது தில்லியில் அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடி மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாதததால் விடுவிக்கப்பட்டார்.
அவருக்கு விசா தர முடியாது என்று அமெரிக்கா தொடர்ந்து கூறுவது அதன் பக்குவமற்ற தன்மையைத்தான் காட்டுகிறது.
மேலும் அமெரிக்காவின் இந்தப் போக்கு இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதுபோல் உள்ளது.
மோடி விண்ணப்பிக்க வேண்டாம்: எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால், அமெரிக்க விசாவுக்கு மோடி விண்ணப்பிக்கத் தேவையில்லை. 2005-இல் விசா மறுக்கப்பட்ட பிறகு அவர் அமெரிக்காவிடம் விசா கேட்டு மீண்டும் விண்ணப்பிக்கவில்லை. இந்த விசா விவகாரத்தில் தொடர்ந்து தவறான பிரசாரம் செய்பவர்கள் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
சில நாடுகள் கட்டப்பஞ்சாயத்து முறையில் மோடியை குற்றவாளி என்று வெளிப்படையாக அறிவிக்க முடிவு செய்துள்ளன.
நம் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவர வழக்கு தொடர்பாக மோடியிடம் தீவிரமாக விசாரித்தது போல், வேறு எந்தத் தலைவரிடமும் விசாரணை நடத்தியதில்லை என்று அருண் ஜேட்லி கூறினார்.