Pachai Kili MuthuCaram |
• Kadhal Konjam... |
• Karu Karu... |
• Un Siripinil... |
• Unakul Naane... |
• Theme Music... |
21.11.13
Pachai Kili MuthuCaram Ring Tones,
இயக்குநர் பாலசந்தருக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது
தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் இயக்குநர் கே.பாலசந்தருக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கி கெளரவிக்க இருக்கிறார்கள்.
கே.பாலசந்தருக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கி கெளரவிக்க இருக்கிறது ரைன் டிராப்ஸ் அமைப்பு.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த பல ஆண்டுகளாக சினிமா உலகில் அளப்பரிய பங்களிப்பை ஆற்றிவரும் இயக்குநர் கே பாலசந்தருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.
இவ்விருது வழங்கும் விழாவில் பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், திரையிசைப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் பழம்பெரும் நடிகை மனோரமா ஆகியோருடன் தமிழ் நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களான ஆர்.அஸ்வின், ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
இந்நிகழ்ச்சியில் 'மாற்றம் ஆவோம்', ( 2014) என்ற ஆண்டிற்கான காலண்டர் உலக எய்ட்ஸ் தினத்தில் வெளியிடப்படுகிறது. இந்த காலண்டரில் சாதனையாளர்களை பற்றிய தகவல்களும் சிறந்த சமூக கருத்துகளும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி நிதி குறித்த விவரங்களும் அடங்கியிருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது
.
.
பொடியனாக மாறும் ஜெய்
ஜெய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கு 'பொடியன்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
'ராஜா ராணி' படத்தில் ஜெய்யின் நடிப்பிற்கு பிறகு, அவருக்கு பல்வேறு வாய்ப்புகள் குவிகிறது. 'திருமணம் என்கிற நிக்கா', 'நவீன சரஸ்வதி சபதம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் ஜெய்.
'உதயம் NH4' என்ற படத்தினை இயக்கிய மணிமாறன் தனது அடுத்த படத்தின் நாயகனாக ஜெய்யை ஒப்பந்தம் செய்திருக்கிறார். ஜனவரியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
படத்திற்கு 'பொடியன்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். படத்தின் தலைப்பு குறித்து “சிறுவர்களைத் தான் பொடியன் என்று அழைப்பார்கள். ஆனால், இப்படத்தை பார்த்த பிறகு பொடியன் என்பதற்கான பொருளை அவர்கள் மாற்றிக் கொள்வார்கள். அதன் பிறகு சிறுவர்களை பொடியன் என்று யாரும் அழைக்க மாட்டார்கள்.” என்று இயக்குநர் மணிமாறன் தெரிவித்துள்ளார்.
அரசியல் பின்னணி கொண்ட கதைக்கு, 'பொடியன்' என்று தலைப்பிட்டு இருக்கிறார் மணிமாறன் என்பது குறிப்பிடத்தக்கது.
'கோலி சோடா' உருவான கதை!
'கோலி சோடா' படம் எப்படி உருவானது, நடிக்க நான்கு சிறுவர்களை எப்படி தேர்வு செய்தார், படத்திற்காக சிறுவர்களை எப்படி தேர்வு செய்தார் என்று விவரித்திருக்கிறார் இயக்குநர் விஜய் மில்டன்.
ப்ரியமுடன், ஆட்டோகிராப், காதல், வழக்கு எண் 18/9 படங்களின் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கியிருக்கும் படம் ’கோலி சோடா’.
'கோலி சோடா' படம் குறித்து இயக்குநர் விஜய் மில்டனிடம் கேட்ட போது, “ஒரு காலை நேரத்தில் கோயம்பேடு மார்கெட் போயிருந்தேன். யத்தேச்சையா கடைகளுக்கு மேலே இருந்த பரணைப் பார்த்தேன். அதில் வரிசையாக நூத்துகணக்கான இளைஞர்கள் தூங்கிட்டு இருந்தாங்க. அந்த ஃப்ரேம் எனக்கு ஆயிரம் கதைகள் சொல்லுச்சு. அவங்க யாரு, என்னன்னு விசாரிச்சப்போ கிடைச்ச லைன் தான் “கோலி சோடா”.
அவங்களுக்கு இந்த மார்க்கெட்டை தாண்டி வேறு எதுவும் தெரியாது. அவங்களுக்குன்னு எந்த அடையாளமும் கிடையாது. வயசு ஆயிருச்சுனா வாழ்க்கை அவ்வளவுதான். வயசானாலும் மார்க்கெட்டை விட்டு போக மாட்டாங்க. கஞ்சா விக்கிறது, டீக்கடை போடுறதுன்னு அங்கேயேதான் சுத்தி வருவாங்க.
இப்படிப்பட்ட நாலு பசங்க, நம்ம வாழ்க்கையும் இப்படியே போயிடுமோ, நமக்கான அடையாளம் என்ன?னு யோசிக்கும் போது கதை ஆரம்பிக்குது. இதனால நம்ம அடையாளத்துக்கு ஏதாவது பிரச்சனை வந்துடுமோ?னு ஏற்கனவே அடையாளத்தோட இருக்கிற கடை முதலாளிங்க யோசிக்கும் போது பிரச்சனை ஆரம்பிக்குது. இப்படி ரெண்டு வெவ்வேற எண்ணங்களோட மோதல் தான் “கோலி சோடா”.
பசங்க படத்துல நடிச்ச பசங்க இப்ப வளர்ந்திருப்பாங்க. அவங்களையே நடிக்க வெச்சேன். அந்த நாலு போரையும் ஊர்ல இருந்து வரவழைச்சி டெஸ்ட் ஷூட் எடுத்தோம். சனி,ஞாயிறுகள்ல கோயம்பேடு மார்க்கெட்ல காலையில் இருந்து ஈவினிங் வரை சுத்த விட்டு அதையும் ஷூட் பண்ணினோம். மார்க்கெட்ல சுத்தின அழுக்கு, நாற்றம் அத்தனையும் அவங்களுக்கு அத்துப்படி ஆகிருச்சு. மூட்டை தூக்கி உடம்பு இருகிருமே! அதுக்காக ஷூட்டிங்கைத் தள்ளி வெச்சு நாலு பேரையும் ஜிம்முக்கு அனுப்பினோம். அரும்பு மீசைக்காக ஏகப்பட்ட ட்ரீட்மென்ட். நான் நினைச்ச மாதிரி அவங்க உருமாறி வந்த பின்னாடி தான் ஷூட்டிங்க்கு கிளம்பினோம்” என்று கூறினார்.
நடிகர் கிருஷ்ணாவிற்கு திருமணம்
நடிகர் கிருஷ்ணாவிற்கும் கோவையை சேர்ந்த கைவல்யாவுக்கும் திருமணம் நடைபெறவிருக்கிறது.
'கற்றது களவு', 'அலிபாபா', 'கழுகு' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கிருஷ்ணா. இவர் பிரபல தயாரிப்பாளர் சேகரின் இரண்டாவது மகனும், முன்னணி இயக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பியும் ஆவார்.
தற்போது 'வானவராயன் வல்லவராயன்', 'விழித்திரு' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிவாகியுள்ளது.
கிருஷ்ணாவுக்கும், கோவையைச் சேர்ந்த ரங்கநாதன் - வாசுகி தம்பதியரின் மகள் கைவல்யாவுக்கும் திருமணம் முடிவாகியிருக்கிறது. கைவல்யா சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இன்று கோவையில் திருமண நிச்சயத்தார்த்தம் நடைபெற இருக்கிறது.
2014 பிப்ரவரி 6ம் தேதி கோவையில் திருமணம் நடைபெற இருக்கிறது. திருமண வரவேற்பு சென்னையில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.
மீண்டும் இணையும் சிம்பு - நயன்தாரா!
சிம்பு - பாண்டிராஜ் படத்திற்கு நயன்தாராவை நாயகியாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் படத்திற்கு, நாயகியாக யாரையும் ஒப்பந்தம் செய்யாமல் படப்பிடிப்பு நடத்தி வந்தார்கள். விரைவில் நாயகி ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று அறிவித்தார்கள்.
சிம்பு - பாண்டிராஜ் படத்தினை, சிம்பு தயாரிக்க, அவரின் தம்பி குறளரசன் இசையமைத்து வருகிறார். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்ய, ப்ரவீன் எடிட்டராக பணியாற்றி வருகிறார்.
இப்படத்தின் நாயகியாக தற்போது நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
'வல்லவன்' படப்பிடிப்பின் போது சிம்பு - நயன்தாரா இருவருமே காதலித்து வந்தார்கள். அதற்கு பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். பின்னர் சிம்புவோ, “நயன்தாராவுடன் இணைந்து நடிப்பது பற்றி எனக்கு கவலையில்லை. கதைக்கு தேவைப்பட்டால் நடிப்பேன்” என்று பேட்டியளித்தார்.
இந்நிலையில், சிம்பு - நயன்தாரா இருவருமே மீண்டும் நண்பர்களானார்கள். தற்போது மீண்டும் சிம்பு - நயன்தாரா இருவரும் சேர்ந்து நடிக்க தீர்மானித்திருப்பது தமிழ் திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
சிம்பு படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார் என்ற தகவலை இயக்குநர் பாண்டிராஜ், தனது ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளார்.
1200 திரையரங்குகளில் 'இரண்டாம் உலகம்'
செல்வராகவன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் 'இரண்டாம் உலகம்' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஆர்யா, அனுஷ்கா நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'இரண்டாம் உலகம்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.வி.பி சினிமாஸ் இப்படத்தினை தயாரித்திருக்கிறது.
மது - ரம்யா ரெண்டு பேரும் இந்த பூமியில் அழகான காதலர்கள். அவர்கள் இருவரும் இன்னொரு உலகில் மருவன் - வர்ணா என்கிற பெயரில் இரண்டு பாத்திரங்களாக சந்திக்கிறார்கள். அவர்கள் எப்படி அந்த இரண்டு பாத்திரங்களாக சந்திக்கிறார்கள், அந்த உலகத்துக்கு எப்படி போனார்கள், அவர்களின் அனுபவம் எப்படி இருந்தது என்பதுதான் 'இரண்டாம் உலகம்' படத்தில் செல்வராகவன் சொல்லவரும் கதை.
ஆர்யா நடிப்பில், 'ராஜா ராணி', 'ஆரம்பம்' ஆகிய படங்களுக்குப் பிறகு, 'இரண்டாம் உலகம்' வெளிவர இருப்பதால் இப்படத்திற்கு முன்பு வெளியான ஆர்யா படங்களுக்கு இல்லாதளவிற்கு எதிர்பார்ப்பு கிடைத்திருக்கிறது.
நாயகி அனுஷ்கா என்பதால், தெலுங்கிலும் ஒரே சமயத்தில் 'வர்ணா' என்ற பெயரில் வெளியிட இருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு என இரண்டிலும் சேர்த்து சுமார் 1200 திரையரங்குகளில் இப்படம் வெளிவரவிருக்கிறது.
1200 தியேட்டர், மிகப்பெரிய எதிர்பார்ப்பு என்பதால் படக்குழு எப்படியும் இரண்டு வாரத்தில் கல்லா கட்டிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறது.
Subscribe to:
Posts (Atom)