24.12.13
வர்ற, 28ம் தேதி காஜல் தங்கச்சி நிஷாவுக்குத் திருமணம்.. !
மும்பை நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலுக்கும், கரண் வெலச்சாவுக்கும் டிசம்பர் 28ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.
இஷ்டம் தமிழ்ப் படத்தில் நடித்துவர் நிஷா. காஜல் அகர்வாலின் செல்லத் தங்கை. ஆனால் அக்கா காஜலுக்கு கை கொடுத்த தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகம் நிஷாவுக்கு சவுகரியமாக இல்லை.
தெலுங்கில் ஐந்து படங்களிலும், தமிழில் ஒரு படத்திலும் நடித்துள்ளார் நிஷா. தற்போது கரண் வெலச்சாவைத் திருமணம் செய்து லைப் லைனை மாற்றப் போகிறார்.
இவர்களது திருமணம் டிசம்பர் 28ம் தேதி மும்பையில் நடைபெறுகிறதாம். தங்கைக்குத் திருமணம் நடைபெறவுள்ளதால் காஜல்தான் பெரும் குஷியுடன் வளைய வளைய வருகிறாராம்.
திருமணத்திற்குப் பின்னாலும் நிஷா நடிப்பாராம்.. 'இஷ்டம்' இருப்பவர்கள் பார்த்து ரசிக்கலாம்...!
தெலுங்கில் ஐந்து படங்களிலும், தமிழில் ஒரு படத்திலும் நடித்துள்ளார் நிஷா. தற்போது கரண் வெலச்சாவைத் திருமணம் செய்து லைப் லைனை மாற்றப் போகிறார்.
இவர்களது திருமணம் டிசம்பர் 28ம் தேதி மும்பையில் நடைபெறுகிறதாம். தங்கைக்குத் திருமணம் நடைபெறவுள்ளதால் காஜல்தான் பெரும் குஷியுடன் வளைய வளைய வருகிறாராம்.
திருமணத்திற்குப் பின்னாலும் நிஷா நடிப்பாராம்.. 'இஷ்டம்' இருப்பவர்கள் பார்த்து ரசிக்கலாம்...!
இளையராஜா சுகவீனம்.. அப்பல்லோவில் தீவிரப் பரிசோதனை
நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இசைஞானி இளையராஜா இப்போது நார்மலாக உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இன்று காலை திடீர் நெஞ்சுவலி காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இளையராஜா. இது சினிமா உலகை மட்டுமல்ல, அவரது பல கோடி அபிமானிகளையும் அதிர வைத்தது.
இந்நிலையில், இளையராஜாவின் உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துமனை நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு நாம் விசாரித்தோம்.
இளையராஜாவுக்கு லேசான நெஞ்சுவலிதான் என்றும், இப்போது ஐசியுவில் நார்மலாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதயத் துடிப்பு கண்காணிக்கப்பட்டு, கொலஸ்ட்ரால் அளவு குறித்த சோதனைகள் அனைத்தும் முடிந்தபிறகு ஆஞ்சியோகிராம் செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.
அதுவரை இளையராஜா கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ தலைமை மருத்துவமனையிலேயே தங்கியிருப்பார்.
நடிகைகள் அனுஷ்கா, ப்ரணிதாவை நெருக்கியடித்த ரசிகர்கள்- தடியைச் சுழற்றிய போலீஸ்!
ஜவுளிக் கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகைகள் அனுஷ்கா மற்றும் ப்ரணிதாவை ரசிகர்கள் நெருக்கியடித்ததால், போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
நடிகைகள் இப்போதெல்லாம் ஷூட்டிங்கை விட அதிகம் காணப்படுவது ஜவுளிக்கடை, நகைக்கடை, கார் ஷோரூம் திறப்பு விழாக்களில்தான்.
இதற்காக கணிசமான சம்பளம் மற்றும் பரிசுகளைப் பெறுகிறார்கள்.
ஆந்திராவில் ராஜமுந்திரி மற்றும் காக்கிநாடாவில் புதிய ஜவுளிக் கடைகளை திறக்க அனுஷ்கா மற்றும் ப்ரணிதாவை அழைத்திருந்தனர். இருவரையும் காண அங்கு ஏராளமான ரசிகர்கள் கூடி நின்றார்கள்.
அனுஷ்கா, ப்ரணிதா காரில் வந்து இறங்கியதும் அவர்களை காண கூட்டத்தினர் முண்டியடித்தனர். தடுப்பு வளைவை தாண்டி இரு நடிகைகளையும் தொட்டுப் பார்க்க முனைந்தனர்.
விழா அமைப்பாளர்கள் கூட்டத்தினரை கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை. அனுஷ்கா, ப்ரணிதாவை ரசிகர்கள் நெருக்கியடித்தனர். உடனடியாக போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் லேசான தடியடி நடத்தி ரசிகர்களை விரட்டினார்கள்.
இதில் சில ரசிகர்களுக்கு லேசான காயமும் ஏற்பட்டது.
நலமாக உள்ளார் இளையராஜா!
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இன்று ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டது. அவரது இதயம் சீரான இயக்கத்துக்கு திரும்பியுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஓய்வெடுத்து வருகிறார்.
இசைஞானி இளையராஜா இன்று பிரசாத் ஸ்டுடியோவில் ரிகார்டிங் பணிகளில் இருந்தபோது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை தரப்பட்டு, சுவாசம் சீராக்கப்பட்டது. பின்னர் அவரது ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு போன்றவைகள் சோதிக்கப்பட்டன.
இதயக் குழாயில் இருந்த அடைப்பு காரணமாக அவருக்கு நெஞ்சடைப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது.
இப்போது அவரது இதயம் சீராக இயங்குவதாகவும், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஓய்வெடுப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்னும் இரு தினங்களில் வழக்கமான பணிகளுக்குத் திரும்புவார் இளையராஜா என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
புதிய சாதனை: மூன்று நாட்களில் ரூ 69.58 கோடி குவித்த தூம் 3!
ஆமீர்கான், அபிஷேக் பச்சன் நடித்த தூம் 3 படம் முதல் மூன்று தினங்களில் ரூ 69.58 கோடி வசூலித்துள்ளதாக யாஷ்ராஜ் பிலிம்ஸ் தெரிவித்துள்ளது.
யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆமீர்கான், கத்ரீனா கைப், அபிஷேக் பச்சன், உதய் சோப்ரா நடித்த படம் தூம் 3. இதில் ஆமீர்கான் வில்லனாக நடித்திருந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியானது இந்தப் படம்.
முதல் மூன்று நாள் வசூல் நிலவரம் இப்போது வெளியாகியுள்ளது.
படம் வெளியான முதல் நாளான வெள்ளிக்கிழமை மட்டும் இந்தப் படம் 36.22 கோடியை குவித்துள்ளது. இதுவரை வெளியான படங்களில் முதல் இவ்வளவு பெரிய தொகையைக் குவித்துள்ள படம் தூம் 3 தான்.
இதற்கு முன் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் ரூ 33.1 கோடியையும், க்ரிஷ் 35.91 கோடியையும் குவித்திருந்தன.
இந்த வசூலை முறியடித்துள்ளது தூம் 3. இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் தூம் 3 வெளியிடப்பட்டது. அனைத்து மொழிகளிலும் சேர்த்துதான் இந்த வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.
விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் தூம் 3 வசூல் மட்டும திருப்தியாகவே உள்ளதாகவும், இந்த வேகத்தில் வசூல் குவிந்தால் விரைவில் ரூ 300 கோடியை இந்தப் படம் வசூலித்துவிடும் என்றும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
முதல் மூன்று நாள் வசூல் நிலவரம் இப்போது வெளியாகியுள்ளது.
இதற்கு முன் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் ரூ 33.1 கோடியையும், க்ரிஷ் 35.91 கோடியையும் குவித்திருந்தன.
விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் தூம் 3 வசூல் மட்டும திருப்தியாகவே உள்ளதாகவும், இந்த வேகத்தில் வசூல் குவிந்தால் விரைவில் ரூ 300 கோடியை இந்தப் படம் வசூலித்துவிடும் என்றும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
திருநாள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜை செய்த நடிகர் விஜய்
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் நடிகர் விஜய் சாமி தரிசனம் செய்தார்.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உள்ளது சனீஸ்வர பகவான் கோவில். இந்த கோவிலில் நவகிரக சாந்திஹோமம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் கலந்து கொண்டார்.
சனீஸ்வரன் சன்னதியில் நடந்த ஹோமம் முடிந்ததும் சனீஸ்வரருக்கு தீப வழிபாடு நடைபெற்றது. அப்போது விஜய் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். அதன் பிறகு அவர் சிறப்பு பூஜை செய்தார். பூஜை முடிந்த உடன் அவர் தனது மனைவியுடன் காரில் சென்னைக்கு கிளம்பிவிட்டார்.
விஜய் நடித்துள்ள ஜில்லா படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ள நிலையில் அவர் சாமி தரிசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சச்சினுக்காக இன்னுமொரு பாட்டை அர்ப்பணித்த தனுஷ்!
சச்சினுக்காக மேலும் ஒரு பாடலை உருவாக்கிய தனுஷ், அதை அவர் முன்னிலையிலேயே சமர்ப்பித்தார்.
திரையுலக நட்சத்திரங்கள் பங்குபெறும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கின் (சிசிஎல்) நான்காம் சீசனை கடந்த வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார் சச்சின்.
மும்பை கிரான்ட் ஹயாத் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அவர் தனது மனைவியுடன் வந்திருந்தார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி, மராத்தி, போஜ்புரி, கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகில் இருந்து ஏராளமான திரையுலக நட்சத்திரங்களும் திரண்டிருந்தனர்.
தமிழ்த் திரையுலகிலிருந்து வந்திருந்த நடிகர் தனுஷ் சச்சினுக்காக ஒரு பாடலை சமர்ப்பித்தார். இதற்காக சச்சின் அவருக்கு நன்றி தெரிவித்தார்.
ஏற்கெனவே சச்சினுக்காக சச்சின் கீதம் என்ற வீடியோ பாடலையும் தனுஷ் உருவாக்கியது நினைவிருக்கலாம். இந்த நிகழ்ச்சியில் அதையும் நினைவு கூர்ந்தார்.
பால்கனியில் ரஜினியுடன் நிற்பது யார்?- இணையத்தைக் கலக்கும் அதிரடி கதை
ரஜினி ஜோக்ஸ் என்பது இப்போது மீடியாவில் தினசரி பலன்கள் மாதிரி நிரந்தரமாகிவிட்டது. அதாவது ரஜினியை உலகின் சக்திமிக்க மனிதராகச் சித்தரிக்கும் துணுக்குகள் இவை.
இதில் ரஜினி சித்தரிக்கப்படும் விதம் சிரிப்பை விட, அவரைப் பெருமைப்படுத்துவதாகவே இருக்கும்.
இப்போது அதிகமாக உலாவரும் ஒரு ரஜினி துணுக்கு இது.
ஒரு முறை அமிதாப் ரஜினியிடம் கேட்டார்... 'ரஜினி, உலகில் உங்களுக்குத் தெரியாத ஆளே கிடையாது என்கிறார்களே.. நிஜமா...'
'எல்லோரும் அப்படித்தான் சொல்றாங்க... சரி, ஏதாவதொரு ஒரு ஆள் பேர் சொல்லுங்க. எனக்குத் தெரிஞ்சவரான்னு பார்ப்போம்..."
அமிதாப் கொஞ்சம் கடுப்புடன், "டாம் க்ரூஸ்ஸைத் தெரியுமா?"
'ஓ! என் பழைய நண்பராயிற்றே. வாங்க நேர்லயே போய்ப் பார்க்கலாம்...' என்றார் ரஜினி.
இருவரும் ஹாலிவுட் சென்று, ஸ்டூடியோவில் டாம் க்ரூஸ் அறைக் கதவைத் தட்டினர்.
டாம் க்ரூஸ் உரக்கக் குரல் கொடுத்தார், 'தலைவா,வாங்க வாங்க. நீங்க வந்ததில் மிக மகிழ்ச்சி. நீங்களும் உங்கள் நண்பரும் என்னுடன் மதிய உணவு சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும்'.
அமிதாப் அசந்து போனார். ஆனாலும் சந்தேகம். 'அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவைத் தெரியுமா ரஜினி?' என்று
ரஜினி சொன்னார் "நன்றாகத் தெரியும்".
இருவரும் வெள்ளை மாளிகைக்குச் சென்றனர்.
ரஜினியைப் பார்த்த ஒபாமா சொன்னார், "என்ன ஒரு ஆச்சரியமான மகிழ்ச்சி. ஒரு கூட்டத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். வாங்க ,காஃபி சாப்பிடுவோம்; கூட்டம் கிடக்கட்டும் !"
அமிதாப் ஆடிப் போனார்.
இருந்தும் ஒப்புக் கொள்ள மனமில்லாமல் கேட்டார்.. "போப்பைத் தெரியுமா?"
ரஜினி சொன்னார்... "போப்பை நன்றாகத் தெரியும். பாபாஜி வழியில் தொடர்புண்டு," என்றார்.
இருவரும் வாடிகன் சென்றனர்.
போப்பைப் பார்க்கப் பெரிய கூட்டம் கூடியிருந்தது. ரஜினி சொன்னார். "அமிதாப்ஜி, இங்கு நின்றால் நான் வந்திருப்பது போப்புக்குத் தெரியாது. நான் காவலர்களிடம் சொல்லி விட்டு உள்ளே போய் போப்புடன் பால்கனியில் வந்து நிற்கிறேன், பாருங்கள்" என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.
சொன்னது போலவே கொஞ்ச நேரத்தில் போப்புடன் பால்கனியில் வந்து நின்று கையசைத்தார் ரஜினி. திரும்பி வந்து பார்த்தால் அமிதாப்புக்கு ஒரு சிறிய நெஞ்சு வலி வந்து சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது.
"என்ன ஆச்சு?" ரஜினி கேட்டார்.
அமிதாப் சொன்னார். "ஒப்புக்கிறேன் ரஜினி.. உலக சூப்பர் ஸ்டார் நீங்க. நீங்க போப்புடன் பால்கனி வரும் வரை ஒரு பிரச்சினையும் இல்லை. நீங்கள் இருவரும் பால்கனிக்கு வந்தபின் அருகில் நின்ற ஒரு வெள்ளைக்காரர் கேட்டார், "பால்கனியில் ரஜினியுடன் நிற்பது யார்?!"
3.20 கோடி நிலுவை வழக்குகளுக்குத் தீர்வு எப்போது?
நாட்டில் கடந்த 11 ஆண்டுகளில் விரைவு நீதிமன்றங்கள் மூலம் 32 லட்சம் வழக்குகள் பைசல் செய்யப்பட்டிருந்தாலும், தீர்வு காணப்படாமல் இன்னும் 3.20 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு நீதியை விரைந்து வழங்குவதற்காக 11-வது நிதிக் குழுவின் பரிந்துரையின் பேரில், 2000-வது ஆண்டிலிருந்து விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
இதற்காக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நேரடியாக நிதியை வழங்கி வந்தது. இந்த வகையில், 2000-2001 முதல் 2010-11-ஆம் நிதியாண்டு வரை மாநில அரசுகளுக்கு ரூ. 870 கோடியை மத்திய ஒதுக்கியிருந்தது. உத்தர பிரதேசத்திற்கு அதிகபட்சமாக ரூ.136 கோடி, பிகாருக்கு ரூ.93 கோடி ஒதுக்கப்பட்டது.
நாட்டில் உள்ள 1,192 விரைவு நீதிமன்றங்கள் மூலம் 2011, மார்ச் வரை மொத்தம் 32,92,785 வழக்குகள் பைசல் செய்யப்பட்டுள்ளன. 2012-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை கீழமை நீதிமன்றங்களில் 2.70 லட்சம் வழக்குகளும், பல்வேறு உயர் நீதிமன்றங்களில் 44 லட்சம் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
குஜராத் மாநிலத்தில்தான் 61 விரைவு நீதிமன்றங்கள் மூலம் அதிக அளவாக 4,32,296 வழக்குகள் பைசல் செய்யப்பட்டுள்ளன. உத்தர பிரதேசத்தில் 153 விரைவு நீதிமன்றங்கள் மூலம் 4,11,658 வழக்குகள், மகாராஷ்டிரத்தில் 51 விரைவு நீதிமன்றங்கள் மூலம் 3,81,619 வழக்குகள், மத்திய பிரதேசத்தில் 84 நீதிமன்றங்கள் மூலம் 3,17,363 வழக்குகள், தமிழகத்தில் 49 விரைவு நீதிமன்றங்கள் மூலம் 3,71,336 வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளன. பிகாரில் 179 விரைவு நீதிமன்றங்கள் மூலம் 2011, மார்ச் வரை 1,59,105 நிலுவை வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டன.
விரைவு நீதிமன்றத் திட்டம் நிறுத்தம்: 11 ஆண்டுகளுக்குப் பிறகு, விரைவு நீதிமன்றங்கள் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு 2011, மார்ச் 31-இல் நிறுத்தியது. எனினும், சில மாநில அரசுகள் தங்களது சொந்த நிதியின் மூலம் விரைவு நீதிமன்றங்களைத் தொடர்ந்தன.
இந்த வகையில், மொத்தம் 701 விரைவு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 2012 டிசம்பர் வரை பிகாரில் 183, மகாராஷ்டிரத்தில் 100 விரைவு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
பணியாளர் பற்றாக்குறை: இந் நிலையில், மாவட்ட நீதிமன்றங்களிலும், கீழமை நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டாலும், பணியாளர்கள் பற்றாக்குறையால் அவை சிரமத்தைச் சந்தித்து வருவதாக தில்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.என். திங்கரா கூறினார். நிலுவை வழக்குகளை விசாரித்து முடிக்க கூடுதலாக நீதிபதிகளை நியமிக்க அரசு நடடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
பணிச்சுமையும் காரணம்: மூத்த வழக்குரைஞர் சுஷீல் குமார் கூறுகையில், "வழக்குகளின் நிலுவை அதிகரிக்க அரசு வழக்குரைஞர்களின் பணிச் சுமையும் ஒரு காரணமாகும்.
ஆகவே, அரசு வழக்குரைஞர்களை கூடுதலாக நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சில சமயங்களில் ஒரே வழக்குரைஞர் இரண்டு, மூன்று வழக்குகளில் ஒரே சமயத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டிய நிலை உள்ளது' என்றார்.
விரைவு நீதிமன்றங்களுக்கு நிதி அளிப்பதை நிறுத்தும் அரசின் கொள்கையை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி உறுதி செய்தது.
அப்போது, கீழமை நீதித்துறையில் 10 சதவீதம் கூடுதல் பணிகளை உருவாக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
"சமூகத்தில் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், விளிம்புநிலை பிரிவினர் ஆகியோருக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக போதுமான எண்ணிக்கையில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்' என்று அமைச்சர் கபில் சிபல் அண்மையில் மக்களவையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தல்: பாஜக இன்று ஆலோசனை
மக்களவைத் தேர்தல் குறித்து தில்லியில் இன்று பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
இக்கூட்டத்தில், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், ஆட்சிமன்ற குழுவினர், அக்கட்சியின் மாநில தலைவர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியின் பிரசாரத்திற்கு மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்திருப்பதாக அக்கட்சி கருதுகிறது. எனவே ஏற்கெனவே திட்டமிட்டதை விட கூடுதலான இடங்களில் மோடி பிரசாரம் செய்வது குறித்தும், பாஜக தலைவர்கள் தினமும் 3 முதல் 4 பிரசார கூட்டங்களில் கலந்து கொள்வது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் வழங்கும் முகாம் இன்று தொடக்கம்
தருமபுரி மாவட்டத்தில் உள்ள மகளிர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் வழங்கும் சிறப்பு முகாம் இன்று(டிச.24-ஆம்) தொடங்குகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில் புதுவாழ்வு திட்டம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வங்கிகள் சார்பில் மகளிர் மற்றும் மாற்றுத்தினாளிகள் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில், வருகிற 24-ஆம் தேதி அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இந்த முகாம் நடைபெற உள்ளது. அதே போல, டிசம்பர் 26-இல் பாப்பிரெட்டிப்பட்டி, 27-இல் மொரப்பூர், 28-இல் பென்னாகரம், 30-இல் பாலக்கோடு மற்றும் 31-ஆம் தேதி நல்லம்பள்ளி ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இந்த கடன் வழங்கும் முகாம்கள் நடைபெற உள்ளது. எனவே, இந்த முகாம்களில் தகுதிவாய்ந்த சுய உதவிக்குழுக்கள் தங்களின் வங்கி சேமிப்பு புத்தகம், தீர்மானம் மற்றும் ரொக்கப்புத்தகம், பொதுப்பேரேடு, தணிக்கை அறிக்கை ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஜன.1 புதுவை அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்க வலியுறுத்தல்
புத்தாண்டு பிறப்பு நாளான ஜன.1-ம் தேதியை தமிழக அரசை போன்று புதுவை அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைத் துறை தலைவர் எல்.எஸ்.பி.சோழசிங்கராயர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது : ஒவ்வொரு ஆண்டின் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு நாள் எல்லா தரப்பினரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நாளாகும். புத்தாண்டு பிறப்பையொட்டி ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வதும், வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று வழிபடுவதும் என பல்வேறு நிகழ்ச்சிகளடங்கிய நாளாக கடைபிடிக்கின்றனர்.
புதுச்சேரி அரசிதழல் 2014-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள் பட்டியலில் ஜன.1-ம் தேதி இடம்பெறவில்லை. தமிழக அரசு அந்நாளை பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. ஜன.1-ம் தேதியில் அவரவர் மதத்துக்குள்பட்ட வழிபாட்டுத் தலங்கள், குறிப்பாக வெளியூருக்கு செல்லக்கூடியவர்களும் ஏராளமானவர்கள் இருக்கின்றனர். பொதுவாகவே இந்த நாள் எல்லா தரப்பினரும் மகிழ்ச்சியாக இருக்கும் நாளாக இருக்கும்போது, அரசு அலுவலகங்கள் இயங்குவது, பள்ளிகள் இயங்குவது போன்றவை மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். எனவே இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து, புதுச்சேரி அரசு ஜன.1-ம் தேதி பொது விடுமுறை நாளாக அறிவிக்க முன்வரவேண்டும் என்றார்.
ஜன.1 புதுவை அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்க வலியுறுத்தல்
புத்தாண்டு பிறப்பு நாளான ஜன.1-ம் தேதியை தமிழக அரசை போன்று புதுவை அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைத் துறை தலைவர் எல்.எஸ்.பி.சோழசிங்கராயர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது : ஒவ்வொரு ஆண்டின் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு நாள் எல்லா தரப்பினரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நாளாகும். புத்தாண்டு பிறப்பையொட்டி ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வதும், வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று வழிபடுவதும் என பல்வேறு நிகழ்ச்சிகளடங்கிய நாளாக கடைபிடிக்கின்றனர்.
புதுச்சேரி அரசிதழல் 2014-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள் பட்டியலில் ஜன.1-ம் தேதி இடம்பெறவில்லை. தமிழக அரசு அந்நாளை பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. ஜன.1-ம் தேதியில் அவரவர் மதத்துக்குள்பட்ட வழிபாட்டுத் தலங்கள், குறிப்பாக வெளியூருக்கு செல்லக்கூடியவர்களும் ஏராளமானவர்கள் இருக்கின்றனர். பொதுவாகவே இந்த நாள் எல்லா தரப்பினரும் மகிழ்ச்சியாக இருக்கும் நாளாக இருக்கும்போது, அரசு அலுவலகங்கள் இயங்குவது, பள்ளிகள் இயங்குவது போன்றவை மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். எனவே இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து, புதுச்சேரி அரசு ஜன.1-ம் தேதி பொது விடுமுறை நாளாக அறிவிக்க முன்வரவேண்டும் என்றார்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்:தேவாலயங்களில் பாதுகாப்பு
கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு மதுரையில் உள்ள 48 தேவாலயங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 25-ம் தேதி (புதன்கிழமை) கிறிஸ்துமஸ் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மதுரையில் புதன் நள்ளிரவிலும், வியாழன் அதிகாலையிலும் தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.
கீழவெளிவீதியில் உள்ள தூயமரியன்னை தேவாலயம் உள்ளிட்டவற்றில் புதன் நள்ளிரவிலும், நரிமேடு சி.எஸ்.ஐ.தேவாலயம் உள்ளிட்டவற்றில் வியாழன் அதிகாலையிலும் சிறப்புப் பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன. இதையடுத்து புதன்கிழமை முதலே போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
13வயது கால்பந்து வீரர் மைதானத்தில் சாவு
இங்கிலாந்தில் உள்ள சாங்டன் ஆஸ்ட்ரோ நகரில் நேற்று 14வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் ஜமி ஸ்கின்னர் என்ற 13 வயது சிறுவன் உட்பட வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டி தீவிரமாக நடைபெற்றுவந்த நிலையில் மைதானத்தில் சுருண்டு விழுந்து ஜமி உயிரிழந்தார். இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த மரணம் மைதானத்தில் இருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஏ.கே. 47 துப்பாக்கி வடிவமைப்பாளர் மரணம்
ஏ.கே.47 ரக துப்பாக்கியை வடிவமைத்த மிகைல் கலஷ்னிகோவ் (94) திங்கள்கிழமை மரணம் அடைந்தார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக ரஷ்யாவின் உட்முர்ஷியா குடியரசுத் தலைநகர் இஷ்விஷ்க்கில் உள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் அவர் திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக உட்முர்ஷியா குடியரசின் செய்தித் தொடர்பாளர் விக்டர் சல்கோவ் தெரிவித்தார்.
கலஷ்னிகோவுக்கு முன்னாள் சோவியத் யூனியன் சார்பில் இருமுறை சோஷலிஸ தொழிலாளர்களின் தோழன் என்ற விருது வழங்கப்பட்டது.
ஏ.கே.47 என்பதன் விரிவாக்கம் அவ்தோமத் கலஷ்னிகோவா 47 என்பதாகும்.
1947 ஆம் ஆண்டில் இது கண்டுபிடிக்கப்பட்டதால் இதற்கு 47 என்று பெயரிடப்பட்டது.
இரண்டாம் உலகப்போரின்போது இந்த துப்பாக்கி ரஷ்யப்படையினருக்கு பெரும் முன்னேற்றத்தைக் கொடுத்தது. பின்னர் இது உலகெங்கும் பிரபலமாகிவிட்டது.
ஜனவரி 20, 21-இல் வேலைநிறுத்தம்: வங்கி ஊழியர் சங்கங்கள் எச்சரிக்கை
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 20ஆம் தேதி 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கப் போவதாக பொதுத்துறை வங்கி ஊழியர் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய மன்ற (யு.எஃப்.பி.யூ.) ஒருங்கிணைப்பாளர் வெங்கடாசலம் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: "ஹைதராபாதில் திங்கள்கிழமை நடைபெற்ற எங்கள் சங்க கூட்டத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து, இந்திய வங்கிகள் அமைப்பும் மத்திய அரசும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் தோல்வி ஏற்பட்டால், ஜனவரி 20ஆம் தேதி முதல் 48 மணிநேரம் (2 நாள்) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது' என்று கூறினார்.
வங்கி ஊழியர்களுக்கான தேசிய அமைப்பு (என்.ஒ.பி.டபிள்யூ) பொது செயலாளர் அஸ்வினி ராணா, இந்திய வங்கி ஊழியர்களுக்கான கூட்டமைப்பின் (பி.இ.எஃப்.ஐ.) பொதுச் செயலாளர் பிரதீப் பிஸ்வாஸ் ஆகியோரும் இதனையே தெரிவித்துள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய பிரதீப் பிஸ்வாஸ், வேலை நிறுத்தம் தொடர்பாக மத்திய அரசுக்கு இன்னும் ஓரிரு நாள்களில் நோட்டீஸ் அளிக்க இருப்பதாக கூறினார். பிரதமர், மத்திய நிதியமைச்சர், இந்திய வங்கிகள் அமைப்பு ஆகியவற்றிற்கு கோரிக்கை மனுக்களை அளிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தங்களது போராட்டத்தில் பொதுத் துறை, தனியார் துறை வங்கி ஊழியர்கள் 10 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்றும் பிரதீப் பிஸ்வாஸ் குறிப்பிட்டார்.
இதேகோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 18ஆம் தேதி வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டமில்லை: மல்லிகார்ஜுன கார்கே
ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டமில்லை என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
பெங்களூரு எலஹங்காவில் திங்கள்கிழமை ரயில் சக்கர தொழிற்சாலையை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
ரயில்களுக்கான எரிபொருள்களின் கட்டணம் உயர்ந்துள்ளதால், ரயில் கட்டணத்தை 6 மாதங்களுக்கு ஒரு முறை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இருப்பினும், தற்போது ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டமில்லை. கர்நாடக மாநிலம், குல்பர்காவில் ரயில்வே நிர்வாகம் அலுவலகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படும். யாதகிரியில் எல்.எச்.பி. நிறுவனத்துடன் இணைந்து ரூ. 750 கோடியில் ரயில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும். இதற்காக, கர்நாடக அரசு 150 ஏக்கர் நிலத்தை தர ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான பணிகள் பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
லடாக்கில் இருந்து வெளியேறினர் சீனப் படையினர்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு
லடாக் பகுதிக்குள் ஊடுருவி முகாமிட்டிருந்த சீனப் படையினர், இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு அங்கிருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியப் பகுதியான லடாக்கில் உள்ள சேப்ஜி என்னுமிடத்தில் கடந்த வாரம் சீனப் படையினர் 20 முதல் 22 பேர் வரை ஊடுருவி, கூடாரங்களை அமைத்து தங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் சீனப் படையினரின் அத்துமீறலை தொடர்ந்து சனிக்கிழமை இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் கொடி அணிவகுப்புக் கூட்டம் நடத்தினர். இந்தக் கூட்டத்திற்கு பிறகு, லடாக்கில் முகாம்களை அமைத்து தங்கியிருந்த சீனப் படையினர், அங்கிருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனுமதியின்றி ஊர்வலம்: 1600 பேர் மீது வழக்கு
விழுப்புரத்தில் போலீஸாரின் அனுமதியில்லாமல் ஊர்வலம் நடத்திய சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் கழகத்தைச் சேர்ந்த 1600 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மனித உரிமைகள் கழகத்தின் சர்வதேச அமைப்பு சார்பில் 13-வது தேசிய மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்றது. இதனையொட்டி விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து காந்தி சிலை வரை ஊர்வலம் நடைபெற்றது.
காவல்துறையின் அனுமதியில்லாமல் இந்த ஊர்வலம் நடைபெற்றதாக மனித உரிமைகள் கழகத்தின் தலைவர் சுரேஷ்கண்ணன், செயலர் ஜெயபாலன், தலைமை ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்பட 1300 ஆண்கள், 300 பெண்கள் மீது விழுப்புரம் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
அழுக்கான நோட்டுக்களை மாற்றிக்கொள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சிறப்பு ஏற்பாடு
ரூ. 10 முதல் 50 வரையிலான மிகவும் அழுக்கான ரூபாய் நோட்டுக்களை ஜனவரி மாதம் 10-ஆம் தேதி வரை மாற்றிக் கொள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மிகவும் அழுக்கான ரூ. 10, 20 மற்றும் ரூ.50 ஆகிய நோட்டுக்களை செüகார்பேட்டை, எசுபிளனேடு, நுங்கம்பாக்கம், கதீட்ரல், தேனாம்பேட்டை, மகாலிங்கபுரம், சாந்தோம், மயிலாப்பூர், சி மற்றும் ஐ மயிலாப்பூர், ரங்கராஜபுரம், ஆதம்பாக்கம், தியாகராய நகர், தலைமைச் செயலகம், வில்லிவாக்கம், மீனம்பாக்கம், பெரம்பூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, விருகம்பாக்கம், பெசன்ட்நகர், அடையாறு, மேற்கு மாம்பலம், சாலிகிராமம் மற்றும் கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைகளில் 2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ஆம் தேதி வரை மாற்றிக் கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ. 50 லட்சம் சாம்சங் செல்போன் போலி உதிரி பாகங்கள் பறிமுதல்: 14 பேர் கைது
சென்னை ரிச் தெருவில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள சாம்சங் செல்போன் போலி உதிரி பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை அண்ணா சாலை ரிச் தெருவில் சில கடைகளில் சாம்சங் செல்போன் நிறுவனத்தின் போலி உதிரி பாகங்கள் விற்கப்படுவதாக அந்த நிறுவனத்தினர், சி.பி.சி.ஐ.டி. திருட்டு சி.டி. தடுப்புப் பிரிவில் புகார் செய்தனர். அப் புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் சந்தேகத்துக்கு இடமான கடைகளில் திங்கள்கிழமை திடீர் சோதனை செய்தனர்.
இச் சோதனையில் அந்தக் கடைகளில் சாம்சங் செல்போன் நிறுவனத்தின் சார்ஜர், பேட்டரி,ஹேட்போன் உள்ளிட்ட போலி உதிரி பாகங்கள் விற்கப்படுவது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அந்த போலி உதிரிபாகங்களை பறிமுதல் செய்து, அந்தக் கடைகளின் உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் ஆகியோரை கைது செய்தனர். சோதனையின் முடிவில் ரூ. 50 லட்சம் மதிóப்புள்ள 12 ஆயிரம் சாம்சங் செல்போன் நிறுவனத்தின் போலி உதிரி பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது போலீஸார் அறிவுசார் சொத்து உரிமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னமராவதி அருகே மண்ணில் புதைந்து கிடந்த 15 சாமி சிலைகள் கண்டெடுப்பு
பொன்னமராவதி அருகே மண்ணில் புதைந்து கிடந்த 15 சாமி சிலைகள் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி வட்டம் ரெட்டியாபட்டி கிராமத்தை சார்ந்தவர் வெள்ளக்காளை.விவசாயியான இவர் திங்கள்கிழமை அன்று ஆடு மேய்க்கும்போது ஊரின் மேற்குப்பகுதியில் வரத்து வாரியில் மண்ணுக்குள் புதைந்து கிடந்த 15 சாமி சிலைகளை கண்டெடுத்துத்துள்ளார்.இத்தகவலை இவர் மூலங்குடி வட்டத்தை சார்ந்த கிராம நிர்வாக அலுவலர் ஐ.செய்யதலி பாத்திமாவிடம் கூறியதை அடுத்து அவரும் உதவியாளர்களும் ரெட்டியபட்டி சென்று வெள்ளக்காளை வீட்டில் இருந்த விநாயகர் சிலைகள் 3,பரமசிவன் சிலை 1,பெருமாள் சிலை 5,கருடாழ்வார் சிலை 1,அம்மன் சிலை 1,மீனாட்சி சிலை 1,அகல்விளக்கு பெண்சிலை 2,வராக மூர்த்தி 1 என 9.250 கிலோ எடை கொண்ட சிலைகளை கைபற்றி பொன்னமராவதி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்தியன் வங்கியில் கூடுதலாக 3,000 எழுத்தர்கள் நியமனம் தேவை: ஊழியர் சங்க மாநில மாநாட்டில் வலியுறுத்தல்
இந்தியன் வங்கிகளில் கூடுதலாக 3,000-ம் எழுத்தர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேசன்(தமிழ்நாடு) மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை துவங்கிய இம்மாநில மாநாட்டின் 2-வது நாளான திங்கள்கிழமை அகில இந்திய இந்தியன் வங்கி ஊழியர் சங்க உதவித்தலைவர் தபன்தாஸ் சிறப்புரையாற்றினார். இதைத் தொடர்ந்து நிர்வாகிகள் தீர்மானங்களை விளக்கிப் பேசினார்.பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
இந்தியன் வங்கியில் அதிகரித்து வரும் வேலைப்பளுவை சமாளிக்க உடனடியாக கூடுதலாக 3,000-ம் எழுத்தர்கள், 1000-ம் கடைநிலை ஊழியர்கள் மற்றும் துப்புரவாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.நிரந்தர பணிகளை வெளிஆட்கள் மூலம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும். வங்கி ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கைகள் குறித்து சங்கத்தினர் அழைத்து நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.
பணியின்போது இறக்கும் ஊழியர்களின் குடும்ப வாரிசுகளுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். ஜனவரி 20,21 தேதிகளில் வங்கி ஊழியர்களுக்கான 10-வது ஊழிய ஒப்பந்தந்தத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட 28தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.வங்கித்துறை சீர்திருத்தங்களைக் கண்டித்தும், அகில இந்திய அளவில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்கும் வேலை நிறுத்தத்தை இன்று(டிசம்பர்23) வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவை வெற்றிகரமாக நிறைவேற்ற சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ரூ. 31 கோடியில் புதிய குடிநீர் திட்டங்கள் திறப்பு
தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் புதிய குடிநீர் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:
விழுப்புரம் நகராட்சி குடிநீர் அபிவிருத்தித் திட்டம் ரூ.9.55 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு நபருக்கு 90 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். இதனால், 95 ஆயிரத்து 439 பேர் பயனடைவர். மேலும், ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடலில் ரூ.70 லட்சத்திலும், திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரத்தில் ரூ.24.90 லட்சத்திலும், திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூரில் ரூ.1.85 கோடியிலும், காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்குளத்தூரில் ரூ.97.50 லட்சத்திலும், வேலூர் மாவட்டம் வாலாஜாவில் ரூ.99.72 லட்சத்திலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.16.70 கோடி மதிப்பிலும் அமைக்கப்பட்டுள்ள குடிநீர்த் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, தலைமைச்செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மதச்சார்பற்ற சக்திகளுடன் கூட்டணி அமைப்போம்: ஜி.கே. வாசன்
மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம் என, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் வட்டார கிறிஸ்தவ இயக்கத்தின் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
இந்தியாவில் மத்தியில் மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி செய்த ஒரே கட்சி காங்கிரஸ்தான். 100 வருட பாரம்பரியம் கொண்ட இக்கட்சிக்கு நாட்டின் அத்தனைக் கிராமங்களிலும் கிளைகள் உள்ளன.
வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம் உள்பட மத்தியில் தேச ஒருமைப்பாட்டை காக்கும் மதச்சார்பற்ற கூட்டணி அமைத்து, கடந்த 2004 மற்றும் 2009 பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்றதுபோல் வெற்றி பெறுவோம். மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களால் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளும் பயனடைந்துள்ளன. இதனை பிரசார வியூகமாகப் பயன்படுத்துவோம்.
இந்தியா இலங்கைக்கு இடையில் நிலவும் பிரச்னைகள் நிரந்தரமாக தீரும் வரை, இந்திய ராணுவம், இலங்கை ராணுவத்துக்குப் பயிற்சி அளிக்கக் கூடாது. இதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் என்றார்.
சிங்கப்பூர் சிறையிலுள்ள புதுகை இளைஞரை விடுவிக்கக் கோரி மனு
சிங்கப்பூரில் அண்மையில் நடந்த கலவரத்தால் சிறைவைக்கப்பட்டுள்ள புதுக்கோட்டையைச் சேர்ந்த சந்திரசேகரை விடுதலை செய்யக் கோரி, அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டம், தந்தாணி அருகே கருமேனிஓடை கிராமத்தைச் சேர்ந்த க. ஜானகி அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:
கடந்த 2011 -ம் ஆண்டில் எனது மகன் சந்திரசேகர் (36) சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்று அங்குள்ள யோங்செங் என்ற நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தான்.
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற பேருந்து விபத்தில் புதுகையைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஏற்பட்ட கலவரத்தால் பலரும் அந்நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர். அங்கு கலவரம் நடந்தபிறகு மூன்று நாள்கள் வரை என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சந்திரசேகர் பேசி வந்தான். அப்போது கலவரம் நடந்த இடத்தில் அவன் இல்லை எனவும், அந்த சமயத்தில் வேறு ஒரு பகுதியில் உறவினர்களுடன் உணவருந்திக் கொண்டிருந்ததாகவும், பயப்பட வேண்டாம் எனவும் தகவல் தெரிவித்தான். அதை எனது உறவினர்களிடமும் உறுதி செய்தேன். ஆனால், கடந்த பல நாள்களாக எனது மகனிடமிருந்து எந்தவிதத் தகவலும் இல்லை. அவன் என்ன ஆனான், எங்கு இருக்கிறான் என்ற வேதனையில் நான் தவித்து வருகிறேன்.
இந்நிலையில், எனது மகன் சந்திரசேகரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக இந்தியத் தூதரகம் மூலம் எனக்கு தகவல் கிடைத்தது. எவ்வித குற்றச் செயலிலும் ஈடுபடாத எனது மகனை விசாரணைக்காக சிங்கப்பூர் போலீஸார் அழைத்துச் சென்றது பயத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவரை இழந்து தவித்து வரும் எனக்கு, ஆதரவாக இருந்து வந்த எனது மகனை சிங்கப்பூர் சிறையிலிருந்து விடுவிக்க மத்திய அரசின் மூலம் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திமுகவில்தான் உள்ளேன்: மு.க.அழகிரி
திமுகவில் இருந்து விலகவில்லை. தொடர்ந்து கட்சி பணி ஆற்றுவேன் என்று அக் கட்சியின் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி கூறினார்.
திமுகவின் பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மு.க.அழகிரி பங்கேற்காததுடன், அவரின் மதுரை ஆதரவாளர்களும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் மு.க.அழகிரி திங்கள்கிழமை அளித்த பேட்டி:
கேள்வி: பொதுக்குழுவில் நீங்கள் பங்கேற்கவில்லையே?
பதில்: பொதுக்குழுவில் கலந்து கொள்வதும், கலந்து கொள்ளாமலிருப்பதும் என் விருப்பம்.
கே: காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று திமுகவின் பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதே?
ப: பொதுக்குழுவின் முடிவு தொடர்பாக கருத்து கூற விரும்பவில்லை. அதேசமயம் பொதுக்குழுவின் முடிவை ஏற்கிறேன்.
கே: பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்ட அறிவிப்பில் உங்கள் பெயர் இடம்பெறவில்லையே?
ப: என் பெயர் பேச்சாளர்கள் பட்டியலில் இல்லை. அதனால் என் பெயர் அறிவிக்கப்படவில்லை. இது ஒன்
றும் பெரிய செய்தி இல்லை. வழக்கமான ஒன்றுதான்.
கே: திமுகவில்தான் உள்ளீர்களா?
ப: திமுகவில்தான் உள்ளேன். தொடர்ந்து கட்சி பணியாற்றுவேன் என்று அவர் கூறினார்.
ரூ.441 கோடியில் 10,867 புதிய குடியிருப்புகள்: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்
தமிழகத்தில் ரூ.441.50 கோடியில் 10 ஆயிரத்து 867 புதிய குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி முறை மூலம் இந்தக் கட்டடங்களை அவர் திறந்தார். இது குறித்து, திங்கள்கிழமை அரசு வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தின் நகர்ப்புறக் குடிசைப் பகுதிகளில் வாழும் குடும்பங்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த பல்வேறு வீட்டுவசதி, குடிசைப்பகுதி மேம்பாடு மற்றும் மறுகுடியமர்வு திட்டப்பணிகளை குடிசை மாற்றுவாரியம் செயல்படுத்தி வருகிறது. இந்த வாரியத்தின் பணிகள் முதலில் சென்னையிலும், பின்னர் தமிழகத்திலுள்ள இதர நகரங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
10 ஆயிரத்து 867 குடியிருப்புகள்: சென்னை எழில்நகர் ஒக்கியம் துரைப்பாக்கத்தில் ரூ.228.60 கோடியில் 6 ஆயிரம் குடியிருப்புகள், ஒக்கியம் துரைப்பாக்கத்தில் ரூ.106.11 கோடியில் 2 ஆயிரத்து 48 குடியிருப்புகள், நொச்சி நகரில் ரூ.45.39 கோடியில் 628 குடியிருப்புகள், கோவை மாவட்டம் அம்மன்குளத்தில் ரூ.23.44 கோடியில் 792 குடியிருப்புகள், புதுக்கோட்டை மச்சுவாடியில் ரூ.2.60 கோடியில் 96 குடியிருப்புகள், சந்தைப்பேட்டையில் ரூ.2.54 கோடியில் 84 குடியிருப்புகள், திருநெல்வேலி வ.உ.சி. நகரில் ரூ.5.54 கோடியில் 207 குடியிருப்புகள், தூத்துக்குடி துரைசிங் நகரில் ரூ.2.15 கோடியில் 78 குடியிருப்புகள், நாமக்கல்லில் ரூ.9.46 கோடியில் 342 குடியிருப்புகள், ஓசூரில் ரூ.5.10 கோடியில் 192 குடியிருப்புகள், சேலம் மாவட்டம் எருமாபாளையத்தில் 10.57 கோடியில் 400 குடியிருப்புகள் என மொத்தம் ரூ.441.50 கோடியில் கட்டப்பட்டுள்ள 10 ஆயிரத்து 867 குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
சிறப்பு வசதிகள்: இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் ஒவ்வொன்றும் 270 முதல் 357 சதுர அடி கொண்ட பரப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் குடியிருப்பு ஒவ்வொன்றிலும் ஒரு படுக்கை அறை, சமையலறையுடன் கூடிய ஒரு பல்நோக்கு அறை, குளியலறை, கழிப்பறை ஆகிய வசதிகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், தேவைக்கேற்ப சில இடங்களில் நூலகம், சிறு கடைகள், ரேஷன் கடைகள், ஆழ்துளை குழாய் கிணறு மற்றும் பூங்கா ஆகிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குடியிருப்புகள் சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், நீர்வழி கால்வாய் பகுதிகளில் வாழும் குடும்பங்களுக்கும், மீனவ குடும்பங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், வீட்டுவசதித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இலங்கை சிறையில் வாடும் மீனவர்கள் மீட்கப்படுவர்: மீனவ சங்கப் பிரதிநிதிகளிடம் முதல்வர் உறுதி
இலங்கை சிறைகளில் வாடும் 210 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மீனவ சங்கப் பிரதிநிதிகளிடம் முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளார்.
நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மீனவ சங்கங்களைச் சேர்ந்த 12 பிரதிநிதிகள், தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினர். சுமார் 20 நிமிஷங்கள் வரை நடைபெற்ற இந்த சந்திப்புக்குப் பிறகு, மீனவ பிரதிநிதிகள் அளித்த பேட்டி:
வீரமுத்து (அக்கரைப்பேட்டை): இலங்கை படையினர் பிடித்துச் சென்ற 72 விசைப் படகுகள் மற்றும் 210 மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசிடம் கூறி நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் தெரிவித்தார். இலங்கை மீனவர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையை அமைத்துக் கொடுக்கவும் விரைவில் ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.
உண்ணாவிரதத்தை முடிப்போம்: மீனவர்களை விடுவிக்க நடந்து வரும் உண்ணாவிரதத்தை முடிப்பது பற்றி அனைவரிடமும் கலந்து ஆலோசனை செய்து முடிவெடுப்போம். பிரச்னையைத் தவிர்ப்பதற்கு, இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் மீன் படிப்பதற்கான கால வரையறையை நிர்ணயிக்கவேண்டும்.
ஜேசு ராஜா (தமிழக கடலோர விசைப்படகு மீனவர்கள் சங்கம்-ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர்): பாரம்பரிய இடத்தில் பிரச்னையின்றி மீன் பிடிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தினோம். இலங்கைச் சிறையில் இருந்து மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.
முதல்வருடனான சந்திப்பின்போது, மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
கரும்புக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் தேவை: ஜி.ராமகிருஷ்ணன்
கரும்புக்கு கட்டுப்படியான விலை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
கரும்புக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழக கரும்பு விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
கடந்த ஆண்டு மத்திய அரசு நிர்ணயித்தபடி ரூ.1,700-ம், தமிழக அரசின் பரிந்துரை விலை ரூ.650-ம் சேர்த்து டன்னுக்கு மொத்தமாக ரூ.2,350-ஐ விவசாயிகள் பெற்றனர். இந்த ஆண்டு மத்திய அரசு டன் ஒன்றுக்கு ரூ.400 உயர்த்தியுள்ளது. இதனைச் சேர்த்தால் இந்த ஆண்டு கரும்புக்கு டன்னுக்கு ரூ.2,750 கிடைக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு டன்னுக்கு ரூ. 2,650 என நிர்ணயித்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசின் பரிந்துரை விலையாக இருந்த ரூ. 650-ல் ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது. இது கரும்பு விவசாயிகளை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட இடுபொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், பரிந்துரை விலையில் ரூ. 100 குறைக்கப்பட்டிருப்பது எவ்விதத்திலும் நியாயமில்லை.
எனவே தமிழக அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்து பரிந்துரை விலையை உயர்த்தி கரும்புக்கு கட்டுப்படியான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் காங்கிரஸை அசைக்க முடியாது: ஞானதேசிகன்
யார் எதிர்த்தாலும்,யார் வெறுத்தாலும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை அசைக்க முடியாது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் கூறினார்.
சத்தியமூர்த்தி பவனில் திங்கள்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அவர் பேசியது:
நாடு முழுவதும் சிறுபான்மை மத மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பது காங்கிரஸ் மட்டுமே.
ஒருநாள் அழைப்பில் இந்தளவு மக்கள் திரண்டிருப்பதைப் பார்க்கும்போது காங்கிரஸின் வலிமை புரிகிறது. மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் அவை அனைத்தும் அன்பையும், சமாதானத்தையுமே போதிக்கின்றன.
கோபம் கொள்ளாமல் பொறுமையாகவும் அன்போடும் நடந்து கொள்ள வேண்டும் என்பது இயேசு கிறிஸ்துவின் போதனைகளில் முக்கியமானது. இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ தமிழக காங்கிரஸ் தலைவரான எனக்குப் பொருந்தும். இப்பதவிக்கு வருவதற்கு முன்பு முகம் சிவக்கும் அளவுக்கு கோபம் வரும். இப்போது என்னைப்போல பொறுமைசாலியை யாரும் பார்க்க முடியாது. அந்தளவுக்கு கட்சியின் தலைவர் பதவி பக்குவப்படுத்தியுள்ளது.
நான் என்ற கொள்கையில் எனக்கு நம்பிக்கையில்லை. நாம் என்பதே உடன்பாடு. அதனால் தான் காங்கிரஸ் தலைவரானதும் அனைத்துத் தரப்பினரையும் அன்போடு அரவணைத்துச் செல்கிறேன். அதனை இந்த விழாவில் வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சி.
ஒரு கன்னத்தில் அறைந்தால் மற்றொரு கன்னத்தையும் காட்டு என்றார் இயேசு. என்னை யாராவது ஒரு கன்னத்தில் அறைந்தால் அவர்களுக்கு மறு கன்னத்தையும் காட்டுவேன். கன்னத்தை மட்டுமல்ல, முதுகையும் காட்டத் தயாராக இருக்கிறேன்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கென்று தனி பலம் உள்ளது. அது 2014-ஆம் ஆண்டு தேர்தலில் வெளிப்படும். யார் எதிர்த்தாலும், யார் வெறுத்தாலும் தமிழகத்தில் காங்கிரஸை அசைக்க முடியாது என்றார் ஞானதேசிகன்.
கட்சியின் மூத்த தலைவர் குமரிஅனந்தன், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்: சுதர்சன நாச்சியப்பன்
இந்திய-இலங்கை மீனவர் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை இணையமைச்சர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் மீனவர்கள் பிரச்னைக்கு மத்திய அரசு முக்கியத்துவமளித்து வருகிறது. இலங்கை மீனவர்கள் 203 பேர் இந்தியாவின் பல்வேறு பகுதியில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
திரிகோணமலையிலும் மற்ற சிறைகளிலும் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களுக்கு உதவ கொழும்பிலுள்ள துணைத் தூதரக அதிகாரிகள் யாழ்ப்பாணத்துக்கும், திரிகோணமலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு தமிழக மீனவர்களைப் பாதுகாப்பதற்கும் உணவு மற்றும் தேவையான மருந்து போன்றவை கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இரண்டு தரப்பு மீனவர்களையும் சென்னையில் அழைத்து பேச்சுவார்த்தையைத் தொடங்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழக அதிகாரிகளை மத்திய அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும்போது வரவில்லை. இதனால் தமிழக அரசின் நிலைப்பாடு பற்றி மத்திய அரசு புரிந்து கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது.
எனவே, உடனடியாக தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு நாள் குறிக்க வேண்டும். அதற்கு மத்திய அரசு உதவிசெய்யத் தயாராக இருக்கிறது. இதனை கால தாமதம் செய்யாமல் டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்துக்குள் பேச்சுவார்த்தைக்கான இடத்தையும், நேரத்தையும் குறிப்பிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.
மக்களவைத் தேர்தல் கூட்டணியை தேசிய தலைமை முடிவு செய்யும். அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள பொறுப்பாளர்கள், எங்களை அணுகும் கட்சிகள் குறித்து மத்திய தலைமைக்கு தெரிவித்துக் கொண்டே இருக்கிறோம்.
ஜெயந்தி நடராஜன் மூத்த அமைச்சராக இருந்தவர். தேர்தலுக்காக கட்சிப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ளவே பதவியிலிருந்து விலகியிருக்கிறார் என்றார் சுதர்சன நாச்சியப்பன்.
பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு: ஜெயலலிதா
கொள்முதல் விலை உயர்த்தப்பட்டாலும், பால் விற்பனை விலை உயர்த்தப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஆவின் நிறுவனத்துக்கு வழங்கப்படும் பாலின் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையைப் பரிசீலிக்கும் வகையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம்*- உள்ளிட்டோரும், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு: பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம் ஆகியவற்றின் விலை, பணியாளர்களின் சம்பளம், கறவை மாடுகளின் விலை மற்றும் மருத்துவச் செலவு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, அண்டை மாநில கூட்டுறவு பால் சங்கங்களும், தனியார் பால் நிறுவனங்களும் பாலின் விலையையும், கொள்முதல் விலையையும் உயர்த்தியுள்ளன.
இந்தச் சூழ்நிலையில், தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தைக் கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர உத்தரவிட்டுள்ளேன்.
உயர்வு எவ்வளவு? பசும் பாலுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 ஆகவும், எருமைப் பாலுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இந்த விலை உயர்வு வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். இதையடுத்து பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.20-லிருந்து ரூ.23 ஆகவும், எருமைப்பால் விலை லிட்டருக்கு ரூ.28-லிருந்து ரூ.31 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இந்த உயர்வால் தமிழகத்தில் கூட்டுறவு அமைப்பின் கீழுள்ள சுமார் 22.50 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் அடைவார்கள்.
பால் விற்பனை விலை உயராது: இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.273.75 கோடி அளவுக்கு பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவார்கள். கொள்முதல் விலை உயர்த்தப்பட்டாலும், நுகர்வோர் நலனைக் கருத்தில் கொண்டு பால் விற்பனை விலை உயர்த்தப்பட மாட்டாது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
ரூ.1 கோடி மோசடி: போலீஸ் கமிஷனரிடம் டி.ராஜேந்தர் புகார்
தன்னிடம் ரூ.1 கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்திரன் திங்கள்கிழமை புகார் அளித்தார்.
காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்த அவர், குறள் டி.வி. கிரியேஷன் நிறுவனம் சார்பில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஆர்.எஸ்.நல்லசிவத்திடம் புகார் மனு அளித்தார்.
பின்னர் அந்த மனு தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
எனது மகன் சிலம்பரசன் பாடி, தயாரித்துள்ள "லவ் ஆன்த்தம்' (கஞயஉ அசபஏஉங) என்ற இசை ஆல்பத்துக்காக அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகர் ஏகானை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தோம்.
இது தொடர்பாக ஏகானை பாட வைப்பதற்காக, தமிழகத்தைச் சேர்ந்த ராம்ஜி சோமா, கனடாவைச் சேர்ந்த தல்வீர்ந்தர்பாத் என்ற டெர்ரி பாத் ஆகிய இருவரையும் சந்தித்தோம்.
பின்னர் எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டோம். அதன்படி, பாடகர் ஏகானை ஆல்பத்தில் பாட அழைத்து வர வேண்டும், அவரை அழைத்து வர முடியாவிட்டால் நாங்கள் கொடுக்கும் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என ஒப்பந்ததம் செய்து கையெழுத்திட்டோம்.
இதற்காக அவர்கள் கேட்ட பணத்தை நான், டெபாசிட் செய்தோம். ஆனால் ஏகான், இசைப் பதிவுக்கு வரவில்லை.
எங்களிடம் பணத்தை
வாங்கிய டெர்ரி பாத்திடமும், ராம்ஜி சோமாவிடமும் ஏகான் வராமல் இருப்பது குறித்து கேட்டதற்கு சரியான பதில் அளிக்கவில்லை. மேலும் நான் கொடுத்த ரூ.1 கோடி பணத்தையும் அவர்கள் திருப்பித் தராமல் இழுத்தடித்தனர்.
இதனால் ஏகானை நேரடியாகவே தொடர்பு கொண்டு, அவரை எங்களது இசை ஆல்பத்தில் பாட வைத்தோம். இதன் பின்னரே டெர்ரி பாத்தும்,ராம்ஜியும் மோசடி நபர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து பணத்தைத் திருப்பிக் கேட்டு அனுப்பிய வழக்குரைஞர் நோட்டீûஸயும் அவர்கள் பெறாமல், திருப்பி அனுப்பியுள்ளனர்.
எனவே அவர்கள் இருவர் மீதும் போலீஸார் நடவடிக்கை எடுத்து, பணத்தைத் திருப்பித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் டி.ராஜேந்தர்.
Subscribe to:
Posts (Atom)