17.12.13

Ajith’s Veeram and Vijay’s Jilla faces trouble from Mahesh Babu’s film

Ajith’s Veeram and Vijay’s Jilla

Ajith’s Veeram and Vijay’s Jilla could’ve easily been the choice for the theatre owners in Karnataka but not now since Mahesh Babu’s Nenokkadine is also set for release during the Pongal / Sankaranti time.

Prince Mahesh Babu's much awaited and most promising Telugu film 1 Nenokkadine, which is all set to hit the theatres for Sankranti i.e. January 2014, is said to affect the pre-release business of Tamil films Veeram and Jilla in Karnataka. The film is gearing up for a big release in the entire south. According to the distributors 1 Nenokkadine is being preferred over Ajith's Veeram and Vijay's Jilla.

Apparently the Mahesh Babu starrer has booked out all screens in Karnataka. The super stylish suspense thriller is directed by Sukumar. This mega budget flick is produced under the 14 Reels Entertainment banner. The film is gaining a lot of positive talk in the industry. Cine pundits are predicting that the film will easily fetch Rs. 70 crores in collections. Lets wait and see what magic it is going to create at the box office across south. 

Most of the multiplexes in Karnataka have been booked to screen Mahesh Babu’s film and hence both Vijay Jilla as well Ajith’s Veeram are finding it difficult to get the required screens. This has posed a problem for the filmmakers are they are contemplating on finding out a way to solve the problem.

Theater booking starts for Ajith's Veeram

Ajith's Veeram starts Theater booking


Ajith starrer Veeram is confirmed to hit the marquee for Pongal and the audio launch date has already been announced to be on December 20th, 2013.

And now the news is that the theatre booking for this mega budget movie has begun. Vendhar Movies, who have procured the distribution rights of Veeram for the Salem region, have started the theatre booking and have managed to get some major screens in the city. There is also a news that the famous Bombay Theatre in Tirunelveli has been booked for Veeram.

Veeram, an action thriller, is directed by Siruthai Siva and it is produced by Bharathi Reddy under the banner Vijaya Productions. Vetri is the cinematographer and Kasi Vishwanathan is the editor of the movie, which has Tamanna Bhatia in the female lead role.

‘Yennamo Nadakudhu’ Audio Launched

‘Yennamo Nadakudhu’ Audio Launched

‘Yennamo Nadakudhu’ starring Vijay Vasanth and Mahima in lead roles is produced by Vinod Kumar under the banner of Triple V Records. The film also stars Prabhu, Saranya, Rahman and many others in important characters.

Premgi Amaran composes music to this film that had the audio launch this morning at Kamala Cinemas in Chennai. Bharathiraja released the audio CD that was released by Bharathiraja. The audio launch was graced by the young league of revolutionary filmmakers liker Atlee, Nalan Kumarasamy, ‘Moodar Koodam’ fame Naveen, ‘Ethir Neechal’ Senthil, ‘Vidiyum Munn’ Balaji K Kumar and many others.

On this occasion, Bharathiraja said, “Tamil Cinema has witnessed an incredulous growth with the emergence of talented filmmakers and producers. They are coming up with a different approach and treatment. After watching ‘Moodar Koodam’, I was very much surprised to see is it this young guy, who made such an appealing film. I must admit that Nalan Kumarasamy has an unique method of storytelling and is bound to a special panache. Being such a young boy, Atlee has fascinated me a lot with his technical genius methods. Hats off to director Senthil and I’m proud that he has scaled great heights with his spellbinding directorial skills.”

Stepping on to the praise of Vijay Vasanth, Bharathiraja said, “I loved his performance in Nadodigal and there is another reason that makes me fond of him. Both of us have same dark skin complexion. This colour is the identity of Tamilian. Premgi Amaran has the musical blessing running through his veins. Saranya Ponvannan is a special blessing to this film and her dance sequence in this film has been done well. Her performance as a mother in each and every film is exquisitely fine.”

K.E. Gnanavel Raja, secretary of Tamil Film Producer Council stated that it’s not just the dance of hero and heroine, but Saranya Ponvannan song will make every mother to shake their legs out of rejoice.

Totting up the event was Premji Amaran’s jocular statement as he uttered, “I have composed music for many albums, but they were all low-budget projects, which didn’t earn me good fame. But I am happy that ‘Yennamo Nadakudhu’ is a big-budget one and will surely earn me a good name. I am elated to see that my image has been printed on audio CD cover. When I approached my uncle Maestro Ilayaraja, he said, “Are you playing spoof on me as I can see the dress and looks of mine there in you.” I gladly replied that the producers asked me to compose music like Ilayaraja and in turn I told, “I cannot definitely do it, but instead can give a pose like him.” The entire auditorium was spangled with irresistible laughter and it took a long time for the crowded laughter to settle down.

Simbu happy with Bro's work for Pandiraj

Simbu happy with Bro's work for Pandiraj

Simbu has said that the recording of the first song in the Pandiraj’s movie is currently on. Interestingly, the songs in this album are been composed by Kuralarasan, who is Simbu’s youngest brother.

Simbu has said that he his happy with the efforts put in by Kural and hoped that the songs will come out extremely well.

Yet to be titled, this film has Nayanthara playing the female lead and it is being produced by Simbu’s home banner. It may be mentioned here that this movie will mark Kural’s debut as music composer in Kollywood.

Sona insists Venkat Prabhu to direct Suriya

Sona insists Venkat Prabhu to direct Suriya

If reports are to be believed, Sona is insisting that Venkat Prabhu’s next with Suriya in the lead should be produced under her banner.

The actress had given an advance of 1.5 crores to director Venkat Prabhu when he was making Goa to direct a movie for her production house. However, Venkat Prabhu did not direct the movie as planned and also failed to return back the money.

With Venkat Prabhu not returning the money, Sona is now demanding that he either repay it before Biriyani’s release or direct the Suriya starrer for her banner. This issue may create problems for this upcoming venture, say sources.

'Ivan Vera Mathiri' First Weekend Box Office Collection Report

Vikram Prabhu's "Ivan Vera Mathiri" has earned approximately over ₹4 crore in two days at the Indian box office.

"Ivan Vera Mathiri" grossed ₹2.1 crore in its first day and fetched ₹2 crore on the second day at the box office. The film's two-day collections stand at ₹4.1 crore.

The action thriller film, which released on 13 December, received mostly positive reviews from critics. Expectations were high for the film as the debut flicks of both the actor ("Kumki") and director Saravanan ("Engeyum Eppodhum") were big hits.

"Ivan Vera Mathiri" had a solo big release worldwide with more than 500 screens. Details about its opening weekend collections are still not available.

It remains to be seen how the film fares during the weekdays. "Ivan Vera Mathiri" has just about four days to post decent figures at the box office as several films are gearing up for release from 20 December. This Friday Karthi's "Biriyani", Jiiva's "Endrendrum Punnagai" and Aamir Khan's "Dhoom 3" will hit screens in Tamil Nadu. There are also a handful of films releasing during the next week. 

The release of new films will reduce the screen count for past releases. The number of screens for "Ivan Vera Mathiri" is likely to come down from Friday onwards, which might affect the film's revenue.

"Ivan Vera Mathriri" is a slick action thriller with Vikram Prabhu playing a visual communication student on a job hunt. Newcomer Surabhi plays the female lead. The other cast members include Ganesh Venkatraman, Vamsi Krishna and Hariraj.

The film's story is about how a common man turns into a vigilante to fight against injustice.

எனக்கு மவுசு இன்னும் குறையலீங்கோ: பதறும் நடிகை

என் மார்க்கெட் அடியாகிவிட்டது என்று வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தளபதியின் லேட்டஸ்ட் நாயகி தெரிவித்துள்ளார்.
தளபதியின் மாவட்ட பட நாயகி கையில் புதிய படங்களே இல்லை. அண்மையில் அவர் நடிப்பில் வெளியான பியூட்டி கிங் படம் பப்படமாகிவிட்டது. படத்தில் வந்த ஹீரோவுக்கும், இவருக்கும் இடையே செம கெமிஸ்ட்ரி உண்டு. அது படத்தில் அருமையாக வேலை செய்யும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தையே அளித்தது.
இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கில் அம்மணியின் மார்க்கெட் படுத்துவிட்டதால் அவர் இந்தி படங்களில் நடிக்க நடையாய் நடக்கிறார் என்று கூறப்பட்டது. இது குறித்து அறிந்த நடிகையோ என் கையில் 3 தெலுங்கு படங்கள் உள்ளன. அதனால் தான் தமிழில் புதிய படங்களை ஒப்புக்கொள்ள முடியவில்லை. என் மார்க்கெட் அடியாகிவிட்டது என்று சொல்வதெல்லாம் வெறும் வதந்தி. அதை யாரும் நம்பிவிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
கையில் 3 தெலுங்கு படங்கள் உள்ளது என்று அவர் கூறுகிறார். ஆனால் டோலிவுட்டில் கேட்டால் 3 படங்கள் இருக்கிறது ஆனால் அவரை நடிக்க வைப்பது இன்னும் உறுதியாகவில்லை என்கின்றனர்.

நீலகிரியில் ஹெத்தையம்மன் பண்டிகை: நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

17 December 2013 07:38 AM IST
ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் தெரிவித்துள்ளது:
தமிழக அரசு உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தையம்மன் பண்டிகை கொண்டாடப்படும் நாளன்று உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளதற்கேற்ப, நாளை (புதன்கிழமை) நீலகிரி மாவட்டத்திலுள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
மாவட்டக் கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் மட்டும் அவசர அலுவல்களைக் கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். இதற்குப் பதிலாக 2014 ஜனவரி 4-ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக இருக்கும். இருப்பினும், உள்ளூர் விடுமுறை நாளான 18-ஆம் தேதி புதன்கிழமை 10 மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் மட்டும் வழக்கம்போல நடைபெறும்.

செம்பொன்விளை உயர் மின்னழுத்தப் பாதையில் பணிகள்: டிச. 18 இரவு சுழற்சி முறையில் மின்தடை

17 December 2013 07:47 AM IST
கன்னியாகுமரி மாவட்டம், செம்பொன்விளை துணை மின்நிலையத்திற்கு மின்னூட்டம் வழங்கும் உயர் மின்னழுத்தப் பாதையில் பணிகள் நடைபெறுவதையடுத்து புதன்கிழமை இரவு (டிச.18) சுழற்சி முறையில் மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து குமரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: செம்பொன்விளை துணை மின் நிலையத்திற்கு மின்னூட்டம் வழங்கும் உயர் மின்னழுத்த பாதையில் 110 கி.வோ. உயர் மின்னழுத்த கோபுரம் மாற்றும் பணிகள் டிசம்பர் 18ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி மாலை வரை நடைபெறுகிறது.
எனவே செம்பொன்விளை மற்றும் சேரமங்கலம் துணை மின்நிலையங்களில் இருந்து மின்னூட்டம் பெறும் திங்கள்சந்தை, கண்டன்விளை, இரணியல், தலக்குளம், சாஸ்தாங்கரை, குளச்சல், கோடிமுனை, சைமன்காலனி, கீழக்கரை, முக்காடு, பாளையம், சேனம்விளை, திக்கணங்கோடு, பாலப்பள்ளம், ஆலஞ்சி, ரீத்தாபுரம், வாணியக்குடி, படர்நிலம், வெள்ளிச்சந்தை, வடக்கன்பாகம், கடியப்பட்டிணம், மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு, வெட்டுமடை, கூட்டுமங்கலம், பெரியவிளை மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் டிசம்பர் 18ஆம் தேதி அன்று இரவு சுழற்சி முறையில் மின்தடை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜன. 8-ல் மீன் உணவு தயாரிப்பு குறித்த பயிற்சி முகாம்

தூத்துக்குடியில் மீன் உணவுகள் தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம் மற்றும் செயல்விளக்கம் ஜனவரி 8-ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மீன்வளக் கல்லூரி முதல்வர் சுகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லுரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வளர்ப்பு மீன்களின் உணவு மற்றும் மேலாண்மை பற்றிய பயிற்சி முகாம் ஜனவரி 8-ம் தேதி நடைபெறுகிறது.
தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இயங்கும் மீன் உணவு தரக்கண்காணிப்பு ஆய்வகம் அமைத்தல் என்ற ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் இந்த பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இந்த பயிற்ச்சியில் மீன்களுக்கான செயற்கை உணவு தயாரிப்பது மற்றும் உணவு மேலாண்மை பற்றிய விளக்கவுரைகளும், செயல் முறை விளக்கமும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பயிற்சி முகாமில் கெண்டை மீன் வளர்ப்போர், அலங்கார மீன் வளர்ப்போர், இறால் வளர்ப்போர் மற்றும் மீன்களுக்கான உணவு தயாரிப்பில் விருப்பமுள்ளவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
 பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஜனவரி 31-ம் தேதிக்குள் 9443002467 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டுத ங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவில் ஆராய்ச்சி: 2017ல் இன்னொரு விண்கலத்தை விண்ணிற்கு செலுத்த சீன திட்டம்

17 December 2013 08:01 AM IST
சீனாவின் முதல் விண்கலமான சாங் ஏ-3 சமீபத்தில் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. இந்த விண்கலம் 3 திட்டப்பணிகளையும் 3 வகையான அறிவியல் ஆய்வுகளையும் செய்யும் என கூறப்பட்டது.  இந்நிலையில் சீனா சாங் ஏ-5 என்ற இன்னொரு விண்கலத்தை 2017ம் ஆண்டில் விண்ணுக்கு அனுப்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சீனத் தேசியப் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பணியகத்தின் செய்தித்தொடர்பாளர் வூ ச்சி ஜியென் கூறுகையில் சாங் ஏ-5 விண்கலமானது சந்திரனில் ஆளில்லா நிலையில் தானாக மாதிரிகளை சேகரித்து பூமிக்கு அனுப்பும். தற்போது விண்கலத்தின் ஆய்வுப்பணிகள் துரிதமாக நடந்துவருகிறது. 2017ம் ஆண்டில் இப்பணி முடிந்து உரிய நேரத்தில் விண்ணில் செலுத்தப்படும் என தெரிவித்தார்.

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் புலிகள் நடமாட்டம் அதிகரிப்பு

17 December 2013 08:15 AM IST
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் நடைபெற்ற புலிகள் கணக்கெடுப்பு பயிற்சி முகாமில், கொடைக்கானல் மலையில் புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
வத்தலகுண்டில் நடைபெற்ற முகாமிற்கு கொடைக்கானல் உதவி வனப்பாதுகாவலர் பார்த்திபன் தலைமை வகித்தார். திண்டுக்கல், கொடைக்கானல் வனக்கோட்ட மாவட்ட வனத்துறை அதிகாரி வெங்கடேஷ் முன்னிலை வகித்து பேசுகையில், தமிழகத்தில் உள்ள காடுகளில் 533 வகையான அபூர்வ தாவரங்கள் உள்ளன. யானைமலை அருகில் உள்ளதால் கொடைக்கானல், பழனி மலைத்தொடரில் அதிக அளவில் புலிகள் நடமாட்டம் உள்ளது.
    2006இல் புலிகள் பாதுகாப்பு ஆணையம் தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதும் உள்ள புலிகளின் எண்ணிக்கை 2010ஆம் ஆண்டில் 1875 ஆக உள்ளது. தற்போது இந்தியப் புலிகள் கணக்கெடுப்பு தொடங்க உள்ளது. இதில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேற்கு மலைத் தொடரில் புலிகள் நடமாட்டம் குறித்த கணக்கெடுப்பு தொடங்க உள்ளது. இந்த கணக்கெடுப்பில் வனத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் கல்லூரி மாணவ- மாணவியர் என 500 பேர் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்த கணக்கெடுப்பு 10 சதுர மீட்டராக வகுத்து, அதில் உள்ள புலிகளின் காலடி தடங்கள் கணக்கீடு செய்யப்படும்.
  கொடைக்கானலில் நீர் நிலைகள் அதிகம் உள்ள டைகர் சோலா மற்றும் பேரிஜம் பகுதியிலும் புலிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படும். கீழ்மலைகளான தாண்டிக்குடி செம்பரான்குளம் ஆகிய பகுதிகளிலும் கணக்கெடுப்பு தொடங்கும். கொடைக்கானலில் வன உயிரின சரணாலயம் அமைக்கப்பட உள்ளது. இதில் மேல்மலை, கீழ்மலையில் வனச்சரணாலயத்தில் எவ்வளவு உயிரினங்கள் உள்ளது என்ற கணக்கெடுப்பும்  நடத்தப்படும். தற்போது அகில இந்திய அளவில் கணக்கெடுப்பு ஒரே நேரத்தில் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி முகாமில் தடங்களை சேகரிப்பது மற்றும் நடமாட்டத்தை கேமிரா மூலம் கண்காணிக்கப்படும் என்றார்.
  முகாமில் வனத்துறை சரகர்கள் தேவதானபட்டி கருப்பையா, கொடைக்கானல் சக்திவேல், பேரிஜம் கணேஷ்ராஜ், வந்தரேவு விஜயக்குமார், பூம்பாறை சாவானுக்கான், பெரும்பாறை சேதுராமன், மன்னமனூர் விஜயக்குமார், கன்னிவாடி சுப்பையா, வத்தலகுண்டு கண்ணன், ஒட்டன்சத்திரம் பரதன், பழனி கணேசன் ஆகியோர் தலைமையில் வனத்துறை கண்காணிப்பாளர்கள் வனவர்கள் கலந்து கொண்டனர். மேலும் வேட்டை தடுப்பு பிரிவினரும் முகாமில் கலந்து கொண்டனர். இதில் கொடைக்கானல் அன்னை தெரசாள் பல்கலைக்கழக மாணவிகள் 40 பேர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பயிற்சி பெற்றவர்கள் குழுவாக புலிகள் பற்றிய விவரங்களை சேகரிக்க அடர்ந்த வனப்பகுதியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

தில்லியில் கடும் பனி மூட்டம்: விமானம், ரயில் சேவைகள் பாதிப்பு

17 December 2013 08:26 AM IST
புதுதில்லியில் இன்று கடும் பனி மூட்டம் நிலவுகிறது. இதனால் அங்கு சாலைப்போக்குவரத்து, ரயில் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 22 உள்நாட்டு விமானங்களும் 13 வெளி நாட்டு விமானங்களும் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 17 ரயில்கள் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தானுமாலைய சுவாமி திருக்கோவிலில் இன்று தேர் திருவிழா நடக்கிறது. இதையொட்டி அங்கு இன்று பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

எம்.பி. பதவியை கனிமொழி ராஜிநாமா செய்ய வேண்டும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்



கனிமொழி தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் திங்கள்கிழமை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியது: காங்கிரஸூடன் கூட்டணி இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்திருப்பது நிம்மதியாக இருக்கிறது. புத்தாண்டு பரிசு கொடுத்தது போல மகிழ்கிறோம்.
காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவில்தான் கனிமொழி எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டார்.
கனிமொழி தனது எம்பி பதவியை ராஜிநாமா செய்வார் என நம்புகிறேன். அப்படி கனிமொழி ராஜிநாமா செய்து விட்டால், சுயமரியாதையுள்ள முதல் தமிழர் கருணாநிதி என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
காங்கிரஸ் துரோகம் செய்ததாக வரலாற்றை மறந்து விட்டு கருணாநிதி பேசுகிறார். 2006-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மைனாரிட்டியாகத்தான் இருந்தது. காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவுடன்தான் திமுக ஆட்சி நடத்தியது.
இதை கருணாநிதி மறந்திருக்க மாட்டார். எனவே திமுகதான் காங்கிரஸூக்குத் துரோகம் செய்தது என்றார் அவர்.

கனிமொழிக்கு ஆதரவு கேட்டபோது காங்கிரஸின் துரோகம் தெரியவில்லையா? பி.எஸ்.ஞானதேசிகன்


கனிமொழிக்கு ஆதரவு கேட்டபோது, காங்கிரஸ் துரோகம் செய்தது என்று கருணாநிதிக்குத் தெரியாதா என்று காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் ஆவேசமாகக் கூறினார்.

சென்னை சத்தியமூர்த்திபவனில் திங்கள்கிழமை ஞானதேசிகன் கூறியது: திமுகவின் பொதுக்குழுவில் காங்கிரஸூடன் இனி கூட்டணி இல்லை என்று கருணாநிதி அறிவித்துள்ளார். கருணாநிதியின் அறிவிப்பால், காங்கிரஸ் ஆதங்கப்படவோ, வருத்தப்படவோ இல்லை.
ஆனால் அலைக்கற்றை ஊழல் வழக்கில் சிக்க வைத்து, ராசாவையும், கனிமொழியையும் சிறையில் அடைத்து, துரோகம் செய்தனர் என்று காங்கிரஸ் மீது குற்றம் சுமத்தினர். அலைக்கற்றை வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் நடக்கிறது.
மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக விலகுவதற்கு முன்பு காங்கிரûஸச் சேர்ந்த 3 மத்திய அமைச்சர்கள் கருணாநிதியைச் சந்தித்து சமரசம் செய்ய முயற்சித்தனர். கருணாநிதி வைத்த கோரிக்கைகளை காங்கிரஸ் மேலிடத்தில் பேசிவிட்டு, கூறுவதாக தில்லி சென்றனர். ஆனால் காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பதற்கு முன்பே, கூட்டணியில் இருந்தும் அமைச்சரவையில் இருந்தும் திமுக விலகுவதாக கருணாநிதி அறிவித்தார். 
ஆனால் இப்போது திடீரென, காங்கிரஸூடன் கூட்டணி இல்லை என்று கருணாநிதி அறிவித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
அண்மையில் மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸின் ஆதரவைக் கேட்டார். அப்போது காங்கிரஸ் துரோகம் செய்தது என்று கருணாநிதிக்கு தெரியாதா?
ஏற்காடு தேர்தலில் காங்கிரஸ் ஆதரவை திமுக கேட்டது. அப்போது காங்கிரஸ் பழிவாங்கியது என்று தெரியாதா?
காங்கிரஸூக்கு தனித்து நிற்கும் பலம் உண்டு. கூட்டணி குறித்த முடிவை காங்கிரஸ் மேலிடம் பார்த்துக் கொள்ளும். புதிய கூட்டணி அமைந்த பிறகு அதை அறிவிப்போம் என்றார் ஞானதேசிகன்.
கூட்டணி முறிவு அறிவிப்பை வரவேற்கும் விதமாக சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸார் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

ஆறு மாதங்களில் மின்வெட்டு அறவே நீங்கும்: முதல்வர் ஜெயலலிதா உறுதி


மத்திய அரசின் அனல்மின் நிலையங்களால் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டு அடுத்த ஆறு மாதங்களில் அறவே நீங்கும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு வந்துள்ள 14-வது நிதிக் குழுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை உரையாற்றினார். அப்போது, மாநிலத்தின் மின்சார நிலைமை குறித்து பேசினார். அதன் விவரம்:
மாநிலத்தில் மின்சாரத் தட்டுப்பாட்டை தமிழக அரசு திறம்படச் சமாளித்து வருகிறது. மின்சார பற்றாக்குறைக்கு மாநில அரசு காரணமல்ல. கடந்த 1991 முதல் 1996-ஆம் ஆண்டு வரையிலான எனது முதல் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் மின்சாரம் உபரியாக இருந்தது. மின் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை.
2001 முதல் 2006-ஆம் ஆண்டு வரையில் இரண்டாவது முறையாக அதிமுக ஆட்சி நடைபெற்ற போதும், மின்சாரம் உபரியாகவே இருந்தது. எனது ஆட்சி முடியும் நிலையில் மாநிலத்தில் உபரியாக இருந்த மின்சாரம் மற்ற மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டு வருவாய் ஈட்டப்பட்டது.
இந்த நிலையில், மூன்றாவது முறையாக கடந்த 2011-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற போது, தமிழகத்தில் மின் தட்டுப்பாடு நிலவியது. இதற்குக் காரணம், கடந்த 2001 முதல் 2006-ஆம் ஆண்டு வரையிலான எனது ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட பல்வேறு மின் திட்டங்களை அதற்குப் பிறகு வந்த திமுக ஆட்சி கண்டு கொள்ளாமல் புறக்கணித்ததுதான்.
இதன் விளைவாக, 2007-ல் தொடங்கி மின் தட்டுப்பாடு படிப்படியாக அதிகரித்தது. 2011 ஆம் ஆண்டு மே மாதத்தில் மின் தட்டுப்பாட்டின் அளவு உயர்ந்திருந்தது.
மின்சார கொள்முதலில் கோளாறு: மின்சார கொள்முதலில் கடந்த திமுக அரசு மேற்கொண்ட தவறான நடைமுறையே இப்போது மின்சாரம் கொள்முதல் செய்ய முடியாத நிலைக்குக் காரணமாக அமைந்துள்ளது. நீண்ட கால அடிப்படையில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்யாமல் உள்நோக்கத்துடனேயே குறுகிய கால அடிப்படையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது.
நீண்ட கால அடிப்படையில் மின்சாரக் கொள்முதல் என்ற நடைமுறையைப் பின்பற்றி இருந்தால், வெளிமாநிலங்களில் குறிப்பாக குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து நமக்குத் தர தயாராக இருந்த 500 மெகாவாட் மின்சாரத்தை எளிதாக கொண்டு வருவதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் இருந்திருக்கும். ஆனால், குறுகிய கால அடிப்படையிலான ஒப்பந்த நடைமுறையை திமுக அரசு பின்பற்றியதால் இப்போது வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவு மின்சாரத்தைக் கொண்டு வர முடியவில்லை. பிற மாநிலங்களில் இருந்து வெறும் 100 முதல் 150 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே கொண்டு வர முடிகிறது.
புதிய திட்டங்களுக்கு அனுமதியில்லை: புதிய மின்சாரத் திட்டங்களுக்கும் மத்திய அரசு வேண்டுமென்றே அனுமதி தர மறுக்கிறது. எடுத்துக்காட்டாக, குந்தா மற்றும் சில்லஹல்லா மின் திட்டங்களைச் செயல்படுத்த தமிழக அரசு தயாராக இருந்தும் அதற்கான ஒப்புதலை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை.
மத்திய அரசின் அனல் மின் நிலையங்கள் முழு அளவில் செயல்படாத காரணத்தால் இப்போது மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மின் நிலையங்களும் முழு அளவில் மின்சார உற்பத்தியைச் செய்து வருகின்றன. எனவே, மின்தட்டுப்பாட்டை போக்குவதில் மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அடுத்த ஆறு மாதங்களுக்குள் தமிழகத்தில் மின்வெட்டு அறவே நீங்கும். மிகை மின் மாநிலமாக தமிழகம் விளங்கும் என்று உறுதி அளிக்கிறேன் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக இடம்பெற வேண்டும்: தமிழருவி மணியன்

பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக இடம்பெற வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறினார்.
சென்னையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:-
தில்லியில் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்தபோது மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாகத்தான் வைகோ பேசினார். பாஜக கூட்டணியில் இடம்பெறுவேன் என்று வைகோ உறுதியளித்துள்ளார்.
ஆனால் பாஜக கூட்டணியில் திமுக, அதிமுக இடம்பெறக்கூடாது என்று ராஜ்நாத் சிங்கிடம் அவர் கூறியது உண்மை.தமிழக பாஜகவில் உள்ள சிலர் வைகோ கூட்டணி தொடர்பாக பேசவில்லை என்று கூறுகின்றனர். மோடி அலை வீசும் நேரத்தில் பாஜகவினர் மூடிமூடியிட்டு பேசக்கூடாது. தமிழகத்தில் மொத்தம் 48 லட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் இளைஞர்கள், படித்தவர்கள். புதிய தலைமுறையினர் ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தையே விரும்புகின்றனர்.
அதனால் மோடிக்கு 8 சதவீத வாக்குகளும், பூரண மதுவிலக்கு கோரி நடைப்பயணம் சென்றதால் மதிமுகவுக்கு 8 சதவீத வாக்குகளும், தேமுதிகவுக்கு 8 சதவீத வாக்குகளும், பாமக 8 சதவீத வாக்குகளும் உள்ளன. மொத்தம் 32 சதவீத வாக்குகள் வருகின்றன.
இந்த வாக்குகள் வேறு கட்சிகளுக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை. அதனால் பாமகவும், தேமுதிகவுடன் கூட்டணி வைக்க வேண்டும். ராமதாûஸ கடந்த மாதம் சந்தித்துப் பேசினேன். அப்போது தனித்தே போட்டியிடப் போவதாகவும், ஆனால் பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடிக்கே ஆதரவு என்று கூறினார்.
அதன் பிறகு பாஜகவுடன் பாமகவுக்குக் கூட்டணி ஏற்பட்டதாகக் கூறுகின்றனர். ஆனால் எனக்கு அந்தத் தகவல் இல்லை. தேமுதிக தலைவர் விஜயகாந்தை இரண்டு முறை சந்தித்துப் பேசினேன். அதிமுகவுடன் பாஜக சென்றுவிட்டால் என்ன ஆவது என்று அவர் சந்தேகம் எழுப்பினார். இந்தச் சந்தேகத்துக்குப் பதில் அளிக்க வேண்டியது பாஜகதான் என்று அவரிடம் கூறினேன்.
ஒரு கூட்டணியில் இரண்டு பிரதமர் வேட்பாளருக்கு இடம் இல்லை என்று இல.கணேசன் கூறியுள்ளதால், இனி அதிமுக பாஜக கூட்டணி ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. அதன் பிறகு இரண்டாம் முறை விஜயகாந்த்தை சந்தித்தபோது, கூட்டணி அறிவிப்பை ஜனவரி மாதம் மாநாடு நடத்தி, மக்களின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக கூறினார். எனவே பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக இணையும் என்ற நம்பிக்கை உள்ளது. இணைய வேண்டும் என்றார் தமிழருவி மணியன்.

டிசம்பர் 21-இல் தென்சென்னையில் கருணாநிதி தலைமையில் பொதுக்கூட்டம்

திமுகவின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி டிசம்பர் 21-ஆம் தேதி தென்சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதி பேச உள்ளார்.
திமுக பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெற்றது. பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தத் தீர்மானங்களை விளக்கி டிசம்பர் 21-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. தென்சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதி பேசவுள்ளார்.
இடம் மற்றும் பேசுவோர் விவரம்:
தென்சென்னை - கருணாநிதி
காஞ்சிபுரம் - மு.க.ஸ்டாலின்
விழுப்புரம் - வி.பி.துரைசாமி
புதுக்கோட்டை - டி.ஆர்.பாலு
திருவண்ணாமலை - திருச்சி என்.சிவா
கடலூர் - ஆ.ராசா
தூத்துக்குடி - கனிமொழி
மதுரை மாநகர் - தயாநிதி மாறன்
புதுச்சேரி - பொன்முடி
தருமபுரி - எ.வ.வேலு.

விஜயகாந்த் வீடு அருகே சுற்றித் திரிந்தவர் கைது

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு அருகே சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
 இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
பெருங்குடியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரமேஷ்(35). இவர் தேமுதிக கொடியை உடலில் வரைந்து கொண்டு விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீடு அருகே திங்கள்கிழமை சுற்றிக் கொண்டிருந்தார். 
சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் போலீஸôருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் அந்த இடத்துக்கு விரைந்து சென்று ரமேஷை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தேமுதிக அனுதாபி என்பதும், பெருங்குடியில் உள்ள அவரது வீட்டை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி எனக் கூறி அதிகாரிகள் இடித்துள்ளனராம். இதனால், இந்த தகவலை விஜயகாந்திடம் கூறி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வைப்பதற்காக ரமேஷ் விருகம்பாக்கத்துக்கு வந்துள்ளார்.
விஜயகாந்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக உடலில் தேமுதிக கொடியை வரைந்து கொண்டு அவரது வீட்டை  வலம் வந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர்.

கூட்டணி முடிவில் கருணாநிதி உறுதியாக இருப்பாரா? பொன்.ராதாகிருஷ்ணன்



காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் திமுக தலைவர் கருணாநிதி உறுதியாக இருப்பாரா என்பது சந்தேகம் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தேவை என்றால் கூட்டணி வைத்துக் கொள்வதும், வேண்டாம் என்றால் முறித்துக் கொள்வதும் திமுகவின் நடைமுறை. அதுபோல்தான் இப்போதும் திமுக முடிவு எடுத்துள்ளது. கூட்டணியைப் பற்றி பாஜக கவலைப்படவில்லை. எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும், தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறுவது உறுதி. 4 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. திமுக எடுத்த முடிவுக்கு காங்கிரஸின் அந்தத் தோல்விகூட காரணமாக இருக்கலாம்.  கருணாநிதி தற்போது எடுத்து உள்ள முடிவில் உறுதியாக இருப்பாரா என்பது சந்தேகம். யாருடன் பாஜக கூட்டணி அமைக்கிறது என்பதை கட்சியின் மேலிடமே அறிவிக்கும் என்றார் அவர்.

மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதற்கான தடையை நீக்க வேண்டும்: ராமதாஸ்


மாட்டு வண்டிகளில் மணல் அள்ள விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் முழுவதும் உள்ள ஆறுகளில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதற்கு பொதுப்பணித் துறை தடை விதித்துள்ளது. இது அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
ஆறுகளில் மணல் அள்ள பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்து இருப்பதுதான் இதற்குக் காரணம் என்று பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு இறுதி வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பொதுப்பணித் துறையினரிடம் உரிமம் பெற்று, ஒரு வண்டி மணல் ரூ.60 என்ற விலையில் மாட்டு வண்டிகள் மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
சிறிய அளவில் வீடு கட்டுபவர்கள், வீடுகளில் மராமத்துப் பணிகளை மேற்கொள்பவர்களுக்கு குறைந்த அளவில் மணல் கிடைத்தாலே போதுமானது.
மேலும், இவர்களால் அதிக விலை கொடுத்து லாரிகளில் மணலை வாங்க முடியாது என்பதால், மாட்டு வண்டி மணலை வாங்கி வந்தனர்.
இதன்மூலம் இரு தரப்பினருமே பயனடைந்து வந்தனர்.
இந்த நிலையில் வண்டிகளில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டிருப்பதால், அதையே வாழ்வாதாரமாக கொண்டுள்ள பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்கள் பல மாதங்களாக கடுமையான வறுமையில் வாடுகின்றன.  அதனால் சிறிய அளவிலான கட்டுமானப் பணிகளும் தடைபட்டுள்ளன.
ஆறுகளில் மணல் அள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த ஆகஸ்ட் மாதம் தடை விதித்தது. ஆனாலும் உரிய துறைகளிடம் அனுமதி பெற்று மணல் அள்ளிக்கொள்ள பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தின் பல மாவட்டங்களில் லாரிகளில் ஆற்று மணலை அள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆணையால்தான் மாட்டுவண்டிகளில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுவது நம்பும்படியாக இல்லை.
அன்றாட பிழைப்புக்காக மாட்டு வண்டியில் மணல் அள்ளும் தொழிலாளர்களுக்கு தடை விதித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழகம் முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாட்டு வண்டிகளில் மணல் எடுத்து விற்பதை தொழிலாக கொண்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை அரசு பறிக்கக் கூடாது. மாட்டு வண்டிகளில் மணல் அள்ள பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்திருந்தால் அதையும் நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு: ரவி சுப்பிரமணியத்துக்கு ஜாமீன்

சென்னை, டிச. 16: ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ரவி சுப்பிரமணியத்துக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த விவரம்:
காஞ்சிபுரம் ஸ்ரீசங்கர மடத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கடந்த 2002-ஆம் ஆண்டு சென்னையில் தாக்கப்பட்டார். இது தொடர்பாக காஞ்சி ஸ்ரீ ஜயேந்திரர், ரவி சுப்பிரமணியன் உள்பட 12 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.  அவர்களில் ரவி சுப்பிரமணியன் அப்ரூவராக மாறினார். ஆனால், பின்னர் இவர் பிறழ் சாட்சியாக அறிவிக்கப்பட்டார். அதுபோல காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கிலும் கைது செய்யப்பட்ட ரவி சுப்பிரமணியன் அப்ரூவராக மாறினார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து புதுச்சேரி நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரவி சுப்பிரமணியன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி சி.டி.செல்வம், நீதிமன்ற விசாரணைகள் அனைத்திலும் தவறாமல் ஆஜராக வேண்டும், ரூ. 10,000 பிணைத் தொகை செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் ரவி சுப்பிரமணியத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

திமுக - மார்க்சிஸ்ட் கூட்டணிக்கு வாய்ப்பில்லை: ஜி.ராமகிருஷ்ணன்



மக்களவைத் தேர்தலில் திமுக ஆதரவு நிலைப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியுடன் மக்களவைத் தேர்தலில் கூட்டணி வைக்கப்போவதில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளதால் மார்க்சிஸ்ட் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்வி தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இந்த நிலையில் கூட்டணி வாய்ப்பு குறித்து "தினமணி' செய்தியாளரிடம் ஜி.ராமகிருஷ்ணன் திங்கள்கிழமை கூறியது: 
ஏற்காடு இடைத்தேர்தலின்போது திமுகவுக்கு ஆதரவு தர முடியாது என்று கூறியதற்கு என்னென்ன காரணங்கள் கூறினோமோ, அந்தக் காரணங்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன.
காங்கிரஸின் தவறான நவீன தாராளமய கொள்கைகள் அனைத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கு துணையாக இருந்தது திமுகதான்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம், புதிய பென்ஷன் திட்டங்கள், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி போன்றவற்றை செயல்படுத்துவதற்கு திமுக துணை போனது.  மத்திய அமைச்சரவையில் இருந்தும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்தும் விலகிய பிறகுதான் உணவு பாதுகாப்பு மசோதாவை அக்கட்சி ஆதரித்தது. எனவே காங்கிரஸ் செய்த தவறுகளில் இருந்து திமுகவைப் பிரித்துப் பார்க்க முடியாது.
2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கை காங்கிரஸின் தூண்டுதலின்பேரில்தான் சிபிஐ விரைவுபடுத்தியது என்ற வாதத்தையும் ஏற்க முடியாது. காங்கிரஸ் அரசு அமைதியாக இருந்த நேரத்தில், உச்சநீதிமன்றமே அலைக்கற்றை ஊழலைக் கையில் எடுத்துக் கொண்டு விரைவுபடுத்தியது. எனவே இதுபோன்ற காரணங்களால் திமுக ஆதரவு நிலைப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் ஜி.ராமகிருஷ்ணன்.

ஜனவரி 5-இல் சர்வதேச கடிதம் எழுதும் போட்டி: தபால் துறை அறிவிப்பு

சர்வதேச கடிதம் எழுதும் போட்டி வரும் ஜனவரி 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் டிசம்பர் 21-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என தபால் துறை அறிவித்துள்ளது.
மின்னஞ்சல், குறுஞ்செய்தி, இணையம் போன்ற தகவல் தொடர்பு வளர்ச்சிக் காரணமாக கடிதம் எழுதும் பழக்கம் மறைந்து வருகிறது.
இதைக் கருத்தில் கொண்டு கடிதம் எழுதும் பழக்கத்தை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் வகையில் உலக அளவில் கடிதம் எழுதும் போட்டியை தபால் துறை நடத்தி வருகிறது.
இதுகுறித்து தபால் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆண்டுதோறும் சர்வதேச தபால் சங்கத்தின் (மய்ண்ஸ்ங்ழ்ள்ஹப் டர்ள்ற்ஹப் மய்ண்ர்ய்) சார்பில் கடிதம் எழுதும் போட்டி நடைபெறுகிறது.
வரும் ஜனவரி 5-ஆம் தேதி 43-ஆவது உலக அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பத்துடன் 2 பாஸ்போர்ட் புகைப்படங்கள் இணைத்து அனுப்ப வேண்டும்.
முதற்கட்டமாக மாவட்ட அளவில் சென்னையைச் சேர்ந்த மாணவர்களுக்கு மேற்கு மாம்பலம் ஜூப்பிளி சாலையில் உள்ள அஞ்சுகம் மேல் நிலைப்பள்ளி, மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி நிர்வாகம், மாணவர்களுக்காக தங்கள் வளாகத்திலேயே போட்டியை நடத்த விரும்பினால், அந்தந்தப் பள்ளியிலேயே நடத்தலாம்.
கடிதம் எழுதும் போட்டியில் தேர்வாகும் மாணவர்கள் தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டு, சர்வதேச அளவில் இந்தியா சார்பாக போட்டியில் பங்கேற்கலாம்.
போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படும் என்றார் அவர்.
இசை எப்படி வாழ்க்கையைத் தொடுகிறது என்ற தலைப்பில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, உருது, அசாமி, பஞ்சாபி, நேபாளி போன்ற மொழிகளில் ( 8-ஆவது அட்டவணையில் குறிப்பிடப்பட்ட எந்த மொழிகளிலும் எழுதலாம் ) எழுதலாம்.
காலை 10 மணி முதல் 11 மணி வரை போட்டி நடைபெறும்.
இது குறித்து மேலும் விவரங்களுக்கு "துணை இயக்குநர், தலைமை தபால் அலுவலகம், சென்னை - 600002' என்ற முகவரியிலும்,"pmgccrtcagmail.com' என்ற இணைய தளத்திலோ அல்லது 28520048, 28520430, 28551774 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என தபால் துறை அறிவித்துள்ளது.

தில்லியில் ஆட்சி அமைக்க பாஜக குதிரை பேரம் நடத்தாது: நிர்மலா சீதாராமன்


தில்லியில் ஆட்சி அமைப்பதற்காக பாஜக குதிரை பேரம் நடத்தாது என்று அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
இலங்கைத் தமிழர்களின் முக்கியமான பிரச்னைகளில்கூட மத்திய அரசால் திடமான முடிவு எடுக்க முடியவில்லை.
தமிழர்களின் மன உணர்வுகளை அறிந்து, அதன்படி செயல்பட மத்திய அரசு தவறிவிட்டது.
லோக்பால் மசோதாவைப் பொருத்தவரை தேர்வுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அம்சங்களை மத்திய அமைச்சரவைக்கு எடுத்துச் சென்று, அதில் திருத்தங்களைச் செய்து, நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இது நாடாளுமன்ற சட்டத்துக்கு எதிரானது. தில்லியில் பாஜக ஆட்சி அமைப்பதற்காக குதிரை பேரம் நடத்தாது.
பாஜகவுடன் திமுக கூட்டணி இல்லை என்று கூறியது தொடர்பாக நான் கருத்து கூற விரும்பவில்லை.
தமிழகத்தில் எந்தெந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது பற்றி மக்களின் கருத்துகளை அறிந்து, நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
தேசியச் செயலாளர் தமிழிசை செüந்தரராஜன், மாநிலச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தமிழகத்துக்கு ரூ. 41,408 கோடி மானியம் தேவை: நிதிக் குழுவிடம் ஜெயலலிதா கோரிக்கை


சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற 14-வது நிதிக் குழுவின் கூட்டத்தில் நிதிக்குழுத் தலைவர் டாக்டர் ஓய்.வி. ரெட்டிக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் முதல்வர் ஜெயலலிதா.

முக்கியத் துறைகளில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்களுக்காக ரூ.41 ஆயிரத்து 408 கோடியை மானியமாக தமிழகத்துக்கு வழங்கவேண்டும் என்று 14-வது நிதிக் குழுவிடம் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
உள்ளாட்சி, எரிசக்தி, காவல் போன்ற துறைகளில் செயல்படுத்தப்படும் முக்கியத்  திட்டங்களையும், அதற்குத் தேவைப்படும் மானியங்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.
ஒய்.வி.ரெட்டி தலைமையிலான 14-வது நிதிக்குழு தமிழகத்தில் முகாமிட்டுள்ளது. பல்வேறு துறைகளின் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகளுடன் அந்தக் குழு இரண்டு நாள்களில் ஆலோசனை நடத்துகிறது. முதல் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரை:
அரசியலமைப்புச் சட்டம் தோற்றுவிக்கப்பட்டு 63 ஆண்டுகள் ஆன நிலையில் இந்தியா இப்போது மிகவும் நம்பிக்கையான, ஜனநாயகத்தில் மிகவும் முதிர்ந்த நாடாகவும் திகழ்கிறது. ஆனாலும், பொருளாதார சவால்களை நாம் இன்றும் எதிர்கொண்டு வருகிறோம் என்பதில் சந்தேகமில்லை.
தாராளமய பொருளாதாரத்தால் மிகப்பெரிய தொழில்சார் நிறுவனங்கள் பெருகுவதற்கு வழிவகுத்துள்ளது. இதுபோன்ற தொழில் நிறுவனங்களுக்கு பொருளாதாரம் சார்ந்த கொள்கைகளை மத்திய அரசு வகுத்துக் கொடுக்கிறது. ஆனால், அந்த நிறுவனங்களுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பணிகளை மாநில அரசுகள் மேற்கொள்கின்றன.
குறிப்பாக, சட்டம்-ஒழுங்கை பேணுவதில் தொடங்கி உட்கட்டமைப்பு வசதிகள் வரை அனைத்தையும் மாநில அரசுகளே உருவாக்கிக் கொடுக்கின்றன. மிகப்பெரிய நிறுவனங்கள், மத்திய அரசு அளிக்கும் அனுமதியைமட்டும் நம்பி மாநிலங்களில் தொழில் தொடங்க முன்வருவதில்லை.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தரமான சாலைகள், மின்சாரம், மக்களின் கல்வியறிவு, உட்கட்டமைப்பு போன்ற வசதிகளை மனதில் கொண்டே தொழில் தொடங்குகின்றன.
முக்கிய வளர்ச்சித் திட்டங்கள்: ஏழை மக்களுக்கு பயனளிக்கும் பல சிறப்பான திட்டங்களை தமிழக அரசே நேரடியாகச் செயல்படுத்தி வருகிறது. பல சிறப்பான திட்டங்களை அளிப்பதில் தமிழக முன்னோடி மாநிலமாக விளங்குகிறது.
குறிப்பாக, சத்துணவுத் திட்டத்தை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். மேலும், முதியோர் ஓய்வூதியம், அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் மூலம் இலவச அரிசி போன்ற பல புதுமையான திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், தமிழகத்தின் நிர்வாகத் தரத்தை உயர்த்தவும் சில சிக்கல்களைத் தீர்க்கவும் மத்திய அரசு மானியங்களை வழங்கிட வேண்டும். அதன்படி, தரம் உயர்த்தப்பட்ட 14 திட்டங்களுக்கும், 10 புதிய திட்டங்களுக்குமாக மொத்தம் ரூ.41 ஆயிரத்து 408 கோடி நிதியை மானியமாக வழங்கிட வேண்டும். இதில் சில முக்கியத் திட்டங்களை கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
அவை: காவல் துறையில் நவீன வகை கருவிகளை வாங்குவதும், ஏற்கெனவே உள்ள தொழில்நுட்பங்களை தரம் உயர்த்துவதும் அவசியமாகும். மேலும், காவலர்களின் வீடுகள் அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு அருகிலேயே இருப்பது முக்கியம். இதற்காக புதிய திட்டங்களைச் செயல்படுத்த ரூ.3 ஆயிரத்து 825 கோடி மானியம் தேவை.
வீடுகள் கட்டும் திட்டம்: நாட்டில் நகரமயமாக்கல் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. ஏராளமான மக்கள் நகரத்துக்கு இடம்பெயர்வதும், நகரங்களில் வீடுகளின் விலை அதிகளவு இருப்பதும் குடிசைகள் பெருகுவதற்கு காரணமாகி விட்டன.
இந்தப் பிரச்னையைச் சமாளிக்க, தமிழகத்திலுள்ள 10 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக, ரூ.7 ஆயிரத்து 150 கோடி மானியம் தேவைப்படுகிறது.
மின்சாரம்: காற்றாலை மின்சார உற்பத்தியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இப்போது சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கென தனியாக கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முறை மூலம் தமிழகத்தில் 7 ஆயிரத்து 504 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அளவுடன் சூரிய ஒளி மூலம் உற்பத்தியாகும் மின்சாரமும் சேர்க்கப்படும் போது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவு மிகையாகும்.
ஆனால், இந்த மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அதிக செலவாகிறது. இதற்காக, நிதிக் குழுவின் உதவியை நாடுகிறோம். இந்தத் திட்டத்துக்காக ரூ.2 ஆயிரத்து 250 கோடியை மானியமாக வழங்க வேண்டும்.
தமிழகத்துக்கு அநீதி: பல்வேறு நிதிக் குழுக்கள் மூலமாக தமிழகத்துக்கு போதிய நிதி ஒதுக்கப்படாமல் எங்களுக்கு அநீதியே இழைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிதிக் குழு அதுபோன்று செய்யாமல் போதிய நிதியை வழங்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார் முதல்வர் ஜெயலலிதா.
இந்தக் கூட்டத்தில், நிதிக் குழுவின் உறுப்பினர்கள் சுஷ்மா நாத், கோவிந்த ராவ், தமிழக அமைச்சர்கள், நிதிக் குழுவின் செயலாளர் ஏ.என்.ஜா, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், நிதித் துறை செயலாளர் க.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

லோக்பால் மசோதா இன்று நிறைவேற்றம்?

அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் கமல்நாத்.

லோக்பால் மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி கூட்டியிருந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பாஜக, இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்டவை மசோதாவை நிறைவேற்ற ஆதரவு தருவதாகக் கூறின. இதையடுத்து, லோக்பால் மசோதா, மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோக்பால் மசோதாவை நடப்புக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. மாநிலங்களவையில் இந்த மசோதா கடும் அமளிக்கு இடையே கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இம் மசோதாவுக்கு சமாஜவாதி கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் மசோதா மீது விவாதம் நடைபெறவில்லை.
மாநிலங்களவையில் கூச்சலுக்கும் மத்தியில்கூட மசோதாவை விவாதமின்றி நிறைவேற்ற ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று பாஜக ஆதரவு தெரிவித்திருந்தது. மாநிலங்களவையில் திங்கள்கிழமை இம் மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், மத்திய அமைச்சர் சிஸ்ராம் ஓலா ஞாயிற்றுக்கிழமை காலமானதால் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவை அலுவல் திங்கள்கிழமை நாள் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, மசோதாவை அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் சுமுகமாக நிறைவேற்றும் விதமாக மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டியிருந்தார்.
இதில், மாநிலங்களவை உறுப்பினர்கள் அருண் ஜேட்லி (பாஜக),
நரேஷ் குஜ்ரால் (சிரோமணி அகாலி தளம்), சஞ்சய் ரௌத் (சிவசேனை), வி. மைத்ரேயன் (அதிமுக), டெரிக் ஓ பிரேயன் (திரிணமூல் காங்கிரஸ்), என்.கே. சிங் (ஐக்கிய ஜனதா தளம்), சீதாரம் யெச்சூரி (சிபிஎம்), டி.ராஜா (சிபிஐ), ரகுவம்ச பிரசாத் சிங் (ஆர்ஜேடி) ஆகியோர் கலந்து கொண்டனர். எனினும், கூட்டத்தில் சமாஜவாதி கட்சி கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது.
லோக்பால் மசோதாவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் பங்கேற்கவில்லை. அதேபோன்று, திமுகவும் இக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. தில்லியில் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டமும் அதேநேரத்தில் நடைபெற்றதால் பங்கேற்க முடியாமல் போனதாக பகுஜன் சமாஜ் கட்சித்  தலைவர்கள் பிறகு தெரிவித்தனர்.
முன்னதாக, இக் கூட்டத்தில் பங்கேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் லோக்பால் மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற சம்மதம் தெரிவித்ததாகவும், லோக்பால் மசோதா தொடர்பாக பாஜக முன்வைத்த கோரிக்கையை ஏற்பதாக அரசு சம்மதம் தெரிவித்ததாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் கோபால் யாதவ் கூறுகையில், "இந்த மசோதாவை நிறைவேற்ற எங்கள் கட்சி எதிர்ப்புத் தெரிவிக்கும். எங்களது நிலைப்பாட்டில்  நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்த மசோதா நடைமுறைக்கு வந்தால் அமைச்சரோ, உயர் அதிகாரியோ எந்தக் கோப்பிலும் கையெழுத்திட இயலாது. ஒட்டுமொத்த முடிவு எடுக்கும் நடைமுறையே ஸ்தம்பித்துவிடும்' என்றார்.
 பாஜக தலைவர் பிரகாஷ் ஜாவடேகர் கூறுகையில், "மசோதாவை நிறைவேற்றும் விஷயத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது. கடந்த 9 ஆண்டுகளாக மத்திய அரசை ஆதரித்து வரும் சமாஜவாதி கட்சியை மசோதாவை நிறைவேற்ற ஒத்துழைக்க வைப்பதில் ஆளும் காங்கிரஸ் கட்சி எவ்வித ஆர்வமும் காட்டவில்லை. காங்கிரஸூக்குத் தேவைப்படும் நேரத்தில் ஆதரவு வாக்களிக்க முன்வரும் இதுபோன்ற கட்சிகள் மகளிர் இடஒதுக்கீடு, லோக்பால் மசோதா என்று வரும் போது மட்டும் எதிர்ப்பது ஏன்? மத்திய அரசின் நோக்கம் தெளிவற்றதாக இருப்பதையே இது காட்டுகிறது' என்று குற்றம்சாட்டினார்.
"சமாஜவாதி கட்சியுடன் பேசுவோம்'   அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கமல்நாத் கூறியதாவது:
சமாஜவாதி கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளன.
இதனால், மாநிலங்களவையில் இடையூறு மேற்கொள்ளாமல் இருக்க சமாஜவாதி கட்சியை சம்மதிக்க வைக்க தொடர்ந்து முயற்சி செய்வோம். செவ்வாய்க்கிழமை இந்த மசோதா நிறைவேற்றப்படும். லோக்பால், லோக் ஆயுக்த மசோதா 2011-இன் திருத்தப்பட்ட பதிப்பில் சேர்க்கப்படாத நாடாளுமன்ற நிலைக் குழுவின் இரு பரிந்துரைகள் குறித்தும் கவனத்தில் கொள்ளப்படும். சில கட்சிகளின் வேண்டுகோளின்படி, செவ்வாய்க்கிழமை அவை நடவடிக்கையின் போது அவைக் காவலர்கள் அழைக்கப்பட மாட்டார்கள்' என்றார் கமல்நாத்.