23.12.13

Post-attack, Shruti looks for a new accommodation in Mumbai



Following an attempted attack on her by an youth at her Bandra apartment, Bollywood’s Tamil heroineShruti Haasan is said to have launched a hunt for a brand new apartment in Mumbai.
Shruti, whose Bollywood market has been steady for close to two years now, hasn’t been staying with her mother Sarika and younger sister AksharaHaasan but has been staying alone at a Bandra apartment in Mumbai.
Shruti faced an unexpected attack by an youth on 19th November. She, however, managed to push him out of the house and lock the door from inside.
The youth, later traced and identified as Ashok by the police, was the same person who had visited the shooting spots of Shruti Haasan’s films in the past. He told police that he never came to attack Shruti Haasan and only wanted her help in securing the post of ‘spot boy’ for his younger brother. Shruti’s friends and relatives then advised her to change her residence.
Shruti, who plays the heroine in Welcome Back now, is presently in Dubai on a long shooting schedule for the film. Prior to leaving for Dubai, Feroze Nadiadwala, the producer of the film, had arranged for 24-hour protection to her by posting a couple of guys outside her residence. Shruti is now said to have alerted her real estate agent to look for a comfortable and suitable apartment in some other locality in Mumbai.

Aamir Khan’s Dhoom 3 Second Day Collection At Box Office


Aamir Khan’s Dhoom 3 has created a history at Box Office by collecting Rs 36 crores (Three Versions) at Box Office on the first day. It was followed by a stupendous collections on the following day too. The most interesting factor is that the Hindi film has done a rocking business at TN Box Office!
Tamil Nadu has never been a good market for Hindi films. It is only in the recent years, some of the Hindi flicks have done decent business. The movies starring Shahrukh KhanSalman Khan and Hrithik Roshan did decent business. Now, Aamir Khan’s Dhoom 3 has erased all those records, as it has written a new history at collection centres in Tamil-speaking state.
Trader reports say that Dhoom 3 raked in Rs 1.63 crores (Nett) from Tamil Nadu and Kerala Box Office. Sources say that from Tamil Nadu, it has earned more than Rs 50 lakhs on the first day.
This figure is big by any margin for a Hindi flick in the Southern state. A trader claims, “Aamir Khan’s movies did not get such reception in the past. His Ghajini and 3 Idiots had garnered decent response and his Taare Zameen Par did perform well at multiplexes.”
He adds, “His Dhoom 3 has turned out to be a superhit in Tamil Nadu too. The film was overwhelmingly welcomed by youths in the state,”

Punnagai Payanam 2013 Tamil Movie Mp3 Songs Free Download

Punnagai Payanam 2013 Tamil Movie Mp3 Songs Free Download

*****Songs are for promotional purpose only. Please buy original CD*****


Movie: Punnagai Payanam
Starring: UdayaKumar, Hansibha
Direction: Jayakrishna
Production: Jayakrishna
Music: Sathya Dev

LISTEN users : Left click On Play button
IE users Download: Right click and choose ‘Save Target As’
Firefox users Download: Right click and choose ‘Save Link As’



Sandiyar 2013 Tamil Movie Mp3 Songs Free Download

Sandiyar 2013 Tamil Movie Mp3 Songs Free Download

*****Songs are for promotional purpose only. Please buy original CD*****


Movie: Sandiyar
Cast: Jagan, Kayal, Nayakam
Music: Yathish Mahadev
Director: Choladhevan
Producer: S Shankar Prasad, KS Senthil Kumar

LISTEN users : Left click On Play button
IE users Download: Right click and choose ‘Save Target As’
Firefox users Download: Right click and choose ‘Save Link As’

Christmas Wishes In Tamil





அமெரிக்க தூதரக அதிகாரிகள் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைக்க வேண்டும்: இன்று காலக்கெடு முடிகிறது

விசா மோசடி செய்ததாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய துணை தூதர் தேவயானி கோப்ரகடே மிகவும் மோசமாக நடத்தப்பட்டதால்  தில்லியில் அமெரிக்க தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்தது.
மேலும் நாட்டில் உள்ள அனைத்து துணை தூதரகங்களிலும் உள்ள அமெரிக்க அதிகாரிகள் தங்கள் குடும்பத்தினருடன் அடையாள அட்டையை உடனடியாக ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது.
மத்திய அரசு அவர்களுக்கு வழங்கிய காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.

மேலூர் ஒருபோக சாகுபடிக்கு இன்று தண்ணீர் திறப்பு

மேலூரில் 5 மணிநேரம் நடைபெற்ற சாலைமறியலைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட விவசாயிகள் சங்கத்தினருடன் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊரகமாவட்ட காவல் கண்காணிப்பாளரும் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தை காரணமாக போராட்டங்களை விவசாயிகள் கைவிட்டனர்.
பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ராஜேஸ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கூறியதை விவசாயிகள் நிராகரித்தனர். இந்நிலையில், யாரிடமும் அவர்கள் எதுவும் கூறாமல் சென்றுவிட்டனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர். விவசாயிகள் விடுவிக்கப்பட்ட பின்னர், அடுத்தகட்ட போராட்டத்தை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்துகொண்டிருந்தனர். இந்நிலையில், மாவட்ட வருவாய்த்துறையினர் மாவட்ட எஸ்பி ஆகியோர் தொடர்ந்து விவசாயிகளிடம் பேசினர்.
திங்கள்கிழமை வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதிகூறியதையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். மேலும் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.

ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட் விண்ணில் ஏவுவது குறித்து டிச.27-இல் முடிவு: இஸ்ரோ தகவல்

ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட்டை விண்ணில் ஏவுவது குறித்து டிச.27-ஆம் தேதி நடைபெறும் திட்ட தயார்நிலை ஆய்வுக்குழு(எம்.ஆர்.ஆர்.)கூட்டத்தில் முடிவுசெய்யப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழக(இஸ்ரோ) செய்திதொடர்பாளர் தேவிபிரசாத் கார்னிக் தெரிவித்தார்.
இது குறித்துபெங்களூருவில் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி: ஆந்திரமாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து அடுத்தாண்டு ஜன.5-ஆம் தேதி ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம். ஆனால், ஜிஎஸ்எல்வி-டி5 ஏவுவதற்கு தயார்நிலையில் உள்ளதா என்பது குறித்துடிச.27-ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறும் இஸ்ரோவின் திட்ட தயார்நிலை ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட், தகவல் தொடர்பு விண்கலமான ஜிசாட்-14-ஐ பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தும். ராக்கெட்டின் 3 நிலைகளும் சரியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. ராக்கெட்டில் விண்கலத்தை பொருத்தும்பணி அடுத்தவாரத்தில் நடைபெறும். அனைத்துவகையான முன்னேற்பாடுகளும் டிச.26-ஆம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து டிச.27-இல் திட்ட தயார்நிலை ஆய்வுக்குழு கூட்டம்நடைபெறும். அக்கூட்டத்தில் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான தேதி, நேரம் ஆகியவை முடிவுசெய்யப்படும்.
கடந்த ஆக.19-ஆம் தேதி மாலை 4.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கு தயார்நிலையில் இருந்தபோது, ஏவுவதற்கு 2 மணி நேரம்முன்பு நடந்த கடைசிக்கட்ட சோதனையில் திரவ எரிப்பொருள் வைக்கப்பட்டிருந்த 2-ஆம் நிலையில் கசிவு ஏற்படுவது கண்டறியப்பட்டது. இதனால் ராக்கெட்டை ஏவும்பணி ரத்துசெய்யப்பட்டது. அதன்பிறகு எரிபொருளை அகற்றிவிட்டு, ராக்கெட் ஒருங்கிணைப்புக்கட்டடத்திற்கு ஜிஎஸ்எல்வி-டி5 கொண்டுசெல்லப்பட்டது.அஃப்னர்-7020 என்ற அலுமினியம் கலவைப்பொருளால் செய்யப்பட்ட எரிபொருள் தொட்டியில் விரிசல் ஏற்பட்டு, எரிபொருள் கசியும் என்ற காரணத்தால் அப்போதைக்கு திட்டம் கைவிடப்பது. ஆனால், தற்போது ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட்டில் புத்தம் புதிய எரிபொருள் தொட்டி இணைக்கப்பட்டுள்ளது. கடந்தமுறை 2-ஆவது நிலையில் பழைய எரிபொருள் தொட்டியை பயன்படுத்தியிருந்தோம் என்றார் அவர்.

தனித்து நின்றாலும் 40 தொகுதியிலும் திமுக வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சர் க. பொன்முடி.

மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளில் திமுக தனித்துப் போட்டியிட்டாலும் வெற்றி பெறும் என்றார் முன்னாள் அமைச்சர் க. பொன்முடி.
புதுவை மாநில திமுக சார்பில் பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் சிங்காரவேலர் திடலில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
புதுவை மாநில திமுக அமைப்பாளர் டாக்டர். எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சிவக்குமார், முன்னாள் எம்எல்ஏக்கள் சிவா, சுப்புராயன், ராஜாராமன், கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் முதல்வர் ஜானகிராமன் வரவேற்றார்.
விழுப்புரம் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி பேசியது:
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. அதிமுக அரசின் விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராசா, கனிமொழி கைது செய்யப்பட்டபோதே காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறித்திருக்க வேண்டும். ஆனால், மத்தியில் மதவாத கட்சிகள் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவும், ஈழத் தமிழர்களுக்காகவும் பொறுத்திருந்தோம். காலதாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்றாலும், நல்ல முடிவை கருணாநிதி எடுத்துள்ளார்.
இதன்மூலம் திமுக தொண்டர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் 4 முனைப் போட்டிதான் வரும். தனித்து நின்றாலும் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். மத்தியில் 3-வது அணி ஆட்சி அமைத்தாலும் கருணாநிதி கைகாட்டுபவரே பிரதமராக முடியும் என்றார் அவர்.
கூட்டத்தில் நந்தா சரவணன் எம்எல்ஏ, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் பழனிராஜா, முன்னாள் அமைச்சர் மணிமாறன், முன்னாள் எம்பி திருநாவுக்கரசு, முன்னாள் எம்எல்ஏக்கள் சோமசுந்தரம், சீத்தா, வேதநாயகம், கோமளா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

புத்தாண்டு நள்ளிரவில் மதுக் கடை திறக்க அனுமதி

ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில், பெங்களூருவில்  வருகிற 31-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் ஜனவரி 1-ஆம் தேதி அதிகாலை ஒரு மணி வரை மதுக் கடைகளைத் திறக்க மாநகரக் காவல் ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் அனுமதி அளித்துள்ளார்.
இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, அன்று நள்ளிரவு மதுக் கடைகள், கேளிக்கை விடுதிகள் செயல்பட சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் கலால் துறையில் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
மதுபானம் பரிமாறாத உணவகங்கள், உணவு இல்லங்கள், தங்கும் விடுதிகள் கலால் துறையின் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டியதில்லை. எனினும், புத்தாண்டு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, பாடல்களை இசைப்பதால் பொதுமக்களுக்கு எவ்வித தொந்தரவும் ஏற்படக் கூடாது. அமைதிக்கு குந்தகம் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் கடுமையான பனிப் பொழிவு

கொடைக்கானலில் கடுமையான பனிப் பொழிவு நிலவி வருவதால் நீரோடைகளில் வரத்து குறைந்துள்ளது. குளிரால் இயல்பு வாழ்க்கை சற்று பாதிப்பு அடைந்துள்ளது.
 கொடைக்கானலில் டிசம்பர் மாதத்தில் பனிப் பொழிவு நிலவுவது வழக்கம். இந்தாண்டும் வழக்கத்திற்கு மாறாக கூடுதலாக பனிப் பொழிவு நிலவி வருகிறது.
காலை 8 மணி முதல் நல்ல வெயில் அடிக்கிறது. மாலை 5 மணி முதல் பனி தொடங்குகிறது. இரவு முதல் மறுநாள் காலை 8 மணி வரை பனிப் பொழிவு இருக்கிறது.
 ஏரிச்சாலை, பூங்கா பகுதி, வட்டக்கானல், அப்சர்வேட்டரி ஆகிய பகுதிகளில் உள்ள புல்வெளிகளில் பனி படர்ந்துள்ளது. பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பிரையண்ட் பூங்காவில் பூக்கள் கருகியுள்ளன.
சீசனுக்காக நடவு செய்யப்பட்டுள்ள நர்சரி நிழல் வலை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. நீரோடைப் பகுதிகளான வெள்ளிநீர் வீழ்ச்சி, பியர்சோழா அருவி, வட்டக்கானல் அருவி, செண்பகா அருவி ஆகியவற்றில் தண்ணீர் வெகுவாக குறைந்துள்ளது.  பனியில் நீர்ப்பனி, வரப்பனி, மூடுபனி என வகைகள் உள்ளன. தற்போது வரப்பனியின் தாக்கம் அதிகரித்திருப்பதால் இயல்பு வாழ்க்கை சற்று பாதிப்படைந்துள்ளது.

பழனி வனப் பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு

பழனி வனப் பகுதியில் புலிகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.
   பழனி வனப்பகுதி சுமார் 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது.  இங்கு, புலிகள் மட்டுமின்றி சிறுத்தை, யானை, காட்டெருமை, குரங்கு, மான் மற்றும் ஏராளமான பறவைகள், சிறு உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. தேசிய புலிகள் ஆணையத்தின் உத்தரவின்பேரில், பழனி வனப்பகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் 23 ஆம் தேதி வரை, புலிகள் கணக்கெடுக்கும் பணி நடத்தப்படுகிறது.
  இது குறித்து, ரேஞ்சர் கணேசன் தெரிவித்ததாவது:
பழனி வனப்பகுதி பாப்பம்பட்டி, ஆண்டிபட்டி, பாலசமுத்திரம் உள்ளிட்ட 11 பீட்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. புலி கணக்கெடுப்புப் பணிக்காக 22 வன அலுவலர்களோடு, 22 தன்னார்வலர்களும் சேர்ந்து 44 பேர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.   இவர்கள் 11 பீட்டுகளிலும் தலா 4 பேர் என பணிகளை மேற்கொள்கின்றனர். கணக்கெடுப்பின்போது, புலி மட்டுமின்றி மற்ற வனவிலங்குகளின் எண்ணிக்கையும் கணக்கிடப்படும். வனவிலங்குகளின் கால்தடம், எச்சம், மரங்களில் ஏற்படுத்தியுள்ள தடயங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான அம்சங்களைக் கொண்டு, அவற்றின் எண்ணிக்கை கணக்கிடப்படும் எனத் தெரித்தார்.
  பழனி வனப்பகுதியில் வேட்டை கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மான், காட்டுமாடு, யானை, குரங்கு உள்ளிட்டவை எண்ணிக்கையில் அதிகமாகியுள்ளது என்றார்.

சமுதாயத்தைக் காப்பது இளைஞர்கள் கடமை : சீமான்

சாதி, மதத்தால் சீரழிந்து கிடக்கும் சமூகத்தைக் காக்கும் கடமை  இளைஞர்களுக்கு உள்ளது என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மகான் காயலாபாவாவின் 124-வது ஆண்டு சந்தனக்கூடு உரூஸ் விழாவை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற மதநல்லிணக்க, மனிதநேய மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவர் பேசியது:
தமிழர்களாகிய நாம் மனிதநேயம் காக்க, இனம் காக்க, உரிமைக்காகப் போராட அனுமதிகூட பெற முடியாத நிலையில் உரிமையிழந்து நிற்கின்றோம்.
 உலகத்தை நேசித்துக் கவிதைகள் பாடிய புலவர்கள் அனைவரும் நம் பாட்டன்கள்தான். யாரும் ஊரே யாவரும் கேளீர் என்று பொதுவுடைமை பற்றி அப்போதே பாடப்பட்டுள்ளது. 
மண்ணில் பிறக்கும் உயிர்கள் அனைத்தும் ஒன்றே. அவர்கள் செய்யும் தொழிலை வைத்து அவர்களை வேறுபடுத்திப் பார்ப்பது சரியல்ல.
மதங்கள் மனிதத்தை காக்க வேண்டுமே தவிர, அழிக்கக் கூடாது . அனைவரும் ஒரே இனம்தான். இதில் வேற்றுமை ஏதுமில்லை என முன்னோர் கூறியுள்ளனர். இதைத்தான் மார்க்சியம் பொதுவுடைமை என்கிறது. 
சமதர்ம சமூகம் அமைய வேண்டும் எனப் போராடினார் மார்க்ஸ். இதைத்தான் நம் முன்னோர் உலகம் சமநிலை பெற வேண்டும். அதில் உயர்வு, தாழ்வில்லை எனப் பாடியுள்ளனர். மதத்தினும் கொடிய சாதி ஒழிக்கப்பட வேண்டும்.
சீரழியும் சமுதாயத்தைக் காக்கும் பொறுப்பில் இளைஞராகிய நீங்கள் உள்ளீர்கள். பசியோடு இருப்பவனுக்கு உணவும், விதவைக்கு மறுவாழ்வும் கொடுக்காத மதத்தைத் தூக்கியெறிய விவேகானந்தர் குரல்கொடுத்தார் என்றார் சீமான்.
தமிழ் மாநில மதநல்லிணக்கப் பேரவை நிறுவனர் ஏ.எஸ்.எம். காஜாசெரீப் தலைமை வகித்தார். திருஞான சம்பந்தர் அறக்கட்டளைச் செயலர் டாக்டர் எம். ஜெய்லானி முன்னிலை வகித்தார். மாநாட்டைத் தொடக்கிவைத்து திருச்சி வேலுச்சாமி பேசினார். கேரள சினேகம் டிரஸ்ட் முதல்மடா சுவாமி சுனில்தாஸ்ஜி, ஆசியுரை வழங்கினார். ஏ.எஸ்.எம். ஜைனுத்தீன் நன்றி தெரிவித்தார்.

நகைப்பட்டறையில் ரூ.12 லட்சம் மதிப்பு தங்கம் திருட்டு

புது வண்ணாரப்பேட்டையில் உள்ள நகைப்பட்டறை ஒன்றில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அங்கு வேலை செய்த ஊழியர்கள் திருடி சென்றுள்ளனர்.
 அவர்களைப் பிடிக்க போலீஸ் தரப்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
 இது குறித்து போலீஸார் கூறியதாவது:-
 புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சைலேஷ் (34). தங்க நகை ஆசாரியான இவர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நகைப்பட்டறை ஒன்றை வைத்துள்ளார். இவரிடம் மேற்கு வங்கத்தை சேர்ந்த இரு நபர்கள் வேலை செய்து வந்தனர்.
 அவர்கள் இருவரிடம் கடந்த 2 நாள்களுக்கு முன்பு நகை செய்வதற்காக 440 கிராம் தங்கத்தை சைலேஷ் கொடுத்ததாகத் தெரிகிறது. நகைப்பட்டறையில் அவர்கள் பொறுப்பில் இருந்த அந்தத் தங்கத்தை எடுத்துக் கொண்டு சனிக்கிழமை காலை தேநீர் அருந்த செல்வதாகக் கூறி அவர்கள் வெளியே வந்துள்ளனர்.
 அதன் பிறகு அவர்கள் மீண்டும் வேலைக்கு வரவில்லையாம். இதனால் சந்தேகமடைந்த சைலேஷ் அவர்கள் இருப்பிடத்துக்கு சென்று பார்த்த போது அவர்களது உடைமைகள் எதுவும் இல்லை.
 இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருடு போன நகைகள் சுமார் ரூ.12 லட்சம் மதிப்புடையதாகும். அவர்களைப் பிடிக்க புதுவண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் பலவேசம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்க வேண்டிய தேவைகள் ஏதும் இல்லை: ஒபாமா



ஜெனிவாவில்  கடந்த மாதம்  ஈரான் நாட்டுடன்  6 நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்பட்டதை அடுத்து அணு சக்தி குறித்து ஒரு புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று அமெரிக்க அதிபர் ஒபாமா ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகள் ஏதும் விதிக்க வேண்டிய தேவைகள் இல்லை என  தெரிவித்துள்ளார்.
ஒபாமா இது குறித்து மேலும் கூறுகையில் ஈரான் ஜெனிவா ஒப்பந்ததை மீறினால் மறுபடியும் பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். ஈரான் தனது வாக்குறுதிகளை  நிறைவேற்ற சந்தர்ப்பம் அளித்துள்ள கால இடைவெளிக்குள் அதன் மீது புதிய தடைகளை விதிக்கும் படியான அழுத்தங்களை கொடுக்கவேண்டாம் என அமெரிக்க காங்கிரஸ்ஸில் அவர் விண்ணப்பித்துள்ளார்.

அமெரிக்காவில் புயல்: 2 பேர் பலி



அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்குப் பகுதியில் பலத்த சூறாவளிக் காற்றுடன் புயல் வீசியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.
மேலும், சூறாவளிக் காற்றில் பல இடங்களில் கட்டடங்களின் மேற்கூரைகள் பிய்த்து எறியப்பட்டன. மரங்கள் முறிந்து மின் கம்பிகளின் மீது விழுந்தன. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றித் தவித்து வருகின்றனர்.
வடக்கு மிசிசிபி பகுதியில் நகரும் வீடு கவிழ்ந்ததில் ஒருவரும், தென்கிழக்கு மிசிசிபி பகுதியில் சாலையின் குறுக்கே கிடந்த மரத்தில் கார் மோதியதில் மற்றொருவரும் உயிரிழந்தனர்.
ஆர்கன்சாஸ் பகுதியில் வீசிய பலத்த சூறாவளிக் காற்றில் 5 பேர் காயமடைந்ததாகவும், 24-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூர் கலவரம்: தொழிலாளர்களுக்கு போலீஸார் அறிவுரை


சிங்கப்பூரில் நிகழ்ந்த கலவரம் தொடர்பாக இந்தியர்கள் உள்பட 200 வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு அந்நாட்டுப் போலீஸார் அறிவுரை வழங்கினர்.

குற்றவியல் புலனாய்வுத் துறை அலுவலகத்திற்கு வரவழைத்து எழுத்துப் பூர்வமாகவும், வாய்மொழியாகவும் பல்வேறு ஆலோசனைகளை தொழிலாளர்களுக்கு போலீஸார் வழங்கினர்.
"ஒரு குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறை சார்பில் இது போன்ற எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது வழக்கமானதுதான்.
மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடாமலும், காவல்துறை நடவடிக்கைக்கு ஆளாகாமலும் இருக்கவே இந்த ஏற்பாடு' என காவல்துறை ஆணையர் எங்க்ஜூ ஹீ தெரிவித்ததாக "தி ஸ்டிரெய்ட் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரில் இந்திய வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த "லிட்டில் இந்தியா' இந்தியா பகுதியில் கடந்த 8ஆம் தேதி நிகழ்ந்த பேருந்து விபத்தில் இந்திய இளைஞர் உயிரிழந்தார்.
இதையடுத்து கலவரம் வெடித்ததில், போலீஸார் மற்றும் அதிகாரிகள் காயமடைந்தனர். போலீஸ் வாகனம் சேதப்படுத்தப்பட்டது.
இது தொடர்பாக வங்கதேசத்தினர் 2 பேர், இந்தியர்கள் 31 பேர் கைது செய்யப்பட்டனர். 52 இந்தியர்கள் அந்நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். 200 பேரை போலீஸார் எச்சரிக்கை செய்து மீண்டும் பணியாற்ற அனுமதித்தனர்.
குற்றம்சாட்டப்பட்ட இந்தியர்களில் 28 பேர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

"மொசாம்பிக் விமான விபத்துக்கு பைலட்டின் சதியே காரணம்'

நமீபியாவில் நிகழ்ந்த விமான விபத்தை, அதன் பைலட் உள்நோக்கத்துடனேயே ஏற்படுத்தியதாக ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கிலிருந்து கடந்த மாதம் 29ஆம் தேதி அங்கோலாவுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் நமீபியாவின் வப்வாட்டா தேசியப் பூங்கா அருகே திடீரென விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 6 விமானப் பணியாளர்கள் உள்ளிட்ட 33 பேர் பலியாகினர். விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
இந்நிலையில், விமான கருப்புப் பெட்டியில் பதிவான தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆரம்பக் கட்ட விசாரணையில் பைலட் உள்நோக்கத்துடனேயே விபத்தை உண்டாக்கியது அம்பலமாகியுள்ளது.
இது குறித்து மொசாம்பிக் விமானப் போக்குவரத்து ஆணையத் தலைவர் ஜோயோ அப்ரியூ கூறியது:
அந்த விமானத்தை பைலட் சந்தோஷ் பெர்னாண்டஸ் கீழே இறக்குவதற்குக் கையாண்ட விதம் விபத்தை ஏற்படுத்தும் நோக்குடனேயே மேற்கொள்ளப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. இதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன என்று தெரியவில்லை. புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பைலட் சந்தோஷ் யாரையும் உள்ளே விடாமல் தனது அறையைப் பூட்டியதுடன், எச்சரிக்கை சமிக்ஞைகளையும் கவனத்தில் கொள்ளவில்லை. மேலும், விமானம் கீழ்நோக்கிச் சென்றபோது தரையில் மோதவிடாமல் அதனை தடுக்க சக பைலட்டை அனுமதிக்கவில்லை என்றார் அப்ரியூ.

தாய்லாந்தில் மீண்டும் போராட்டம்

தாய்லாந்தில் அரசுக்கு எதிரான போராட்டம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கியது.
தாய்லாந்தில் ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் அரசுக்கு எதிராக கடந்த ஒரு மாதமாக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.
எதிர்க்கட்சி எம்.பிக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனர். இதையடுத்து நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த பிரதமர் யிங்லக் ஷினவத்ரா முன்வந்தார்.
இருப்பினும் பிரதமர் தனது பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், அந்நாட்டு மன்னரின் 86வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு போராட்டத்தை எதிர்க்கட்சிகள் ஒத்திவைத்தன.
மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ், ""மக்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதியான முறையில் அரசுடன் தீர்வு காண வேண்டும்''
என வலியுறுத்தினார்.
இதையடுத்து வரும் பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி தேர்தலை நடத்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
மேலும், தேசிய சீரமைப்புக்கான திட்டத்தை சனிக்கிழமை அறிவித்ததுடன் அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்கும்படி பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தன.
ஜனநாயகக் கட்சி காலவரையற்ற போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததன்பேரில், தலைநகர் பாங்காக்கில் ஆயிரக்கணக்கானோர் ஞாயிற்றுக்கிழமை திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போராட்டக் குழுத் தலைவர் தாங்க்ஸ்பான் கூறுகையில், ""இங்கு நடைபெறும் பேரணி அரசுக்கும், பிரதமருக்கும் நெருக்கடியை ஏற்படுத்தும்'' என்றார்.

"நேபாளத்திடமிருந்து மின்சாரம் வாங்க இந்தியா தயார்'


நீர் மின்சாரம் தயாரிப்பதற்கான வள ஆதாரங்களைக் கொண்டுள்ள நேபாளத்திடமிருந்து மின்சாரம் வாங்குவதற்கு இந்தியா தயாராக இருப்பதாக மத்திய மரபுசாரா எரிசக்தித்துறை அமைச்சர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில், அந்நாட்டில் இந்திய முதலீடுகளைக் கவர்வதற்காக நடைபெறும் வர்த்தகக் கண்காட்சியை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து அவர் பேசுகையில், ""இந்தியாவுக்கு மின்சாரத்தை விற்பனை செய்வதன் மூலம், இந்தியாவுடனான வர்த்தகப் பற்றாக்குறையை (ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாக இருப்பது) சரிக்கட்ட முடியும்.
இதனால் இரு நாடுகளும் பலனடைய முடியும்'' என்று தெரிவித்தார்.
தற்போது 705 மெகாவாட் நீர் மின் உற்பத்தித் திறன் கொண்ட நேபாளத்தில் 83 ஆயிரம் மெகாவாட் நீர் மின் உற்பத்தி செய்வதற்குரிய நீர் வள ஆதாரங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு: மாஜிஸ்திரேட் விசாரணை இன்று தொடக்கம்

இலங்கையில் எலும்புக் கூடுகளின் சிதிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக மாஜிஸ்திரேட் அளவிலான விசாரணை திங்கள்கிழமை தொடங்க உள்ளது.
இது குறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹானா கூறுகையில், "தேசிய குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் ஊழியர்கள் மன்னாரில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 6 மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அப்பகுதியில் மேலும் 4 மண்டை ஓடுகள் ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டன. இது குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை திங்கள்கிழமை தொடங்க உள்ளது' என்று தெரிவித்தார்.
இது குறித்து மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) கட்சி கூறுகையில், "கண்டறியப்பட்ட எலும்புக் கூடுகளின் சிதிலங்கள் எங்கள் கட்சியைச் சேர்ந்த தொண்டர்களுடையவை. அவர்கள், 1987-90-ம் ஆண்டுகளில் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் தொடர்பாக இந்தியா தலையிட்டதை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டு உயிரிழந்தனர்' என்று தெரிவித்தனர். இதேபோன்று, மாத்தளை மாவட்டத்தில் சுடுகாடு ஒன்று கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தெற்கு சூடான்: இந்திய வீரர்களுக்கு ஐ.நா. புகழாரம்

தெற்கு சூடானிலுள்ள ஐ.நா. முகாம் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலின்போது இந்திய அமைதிப்படையினர் வீரத்துடன் போராடியதால் அதிக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக ஐ.நா. சிறப்பு பிரதிநிதி ஹில்டோ ஜான்ஸான் புகழாரம் சூட்டியுள்ளார்.
தெற்கு சூடானின் ஜோங்லீ மாகாணம் அகோபோ நகரிலுள்ள ஐ.நா. முகாம் மீது சுமார் 2 ஆயிரம் கிளர்ச்சியாளர்கள் கடந்த வியாழக்கிழமை தாக்குதல் நடத்தினர்.
அப்போது நிகழ்ந்த சண்டையில் இந்தியாவைச் சேர்ந்த ஐ.நா. அமைதிப்படை வீரர்களான தர்மேஷ் சங்வான், குமார் பால் சிங் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மற்றொரு இந்திய வீரரான மண்டல் ஷாபுலுக்கு மார்பில் காயம் ஏற்பட்டது.

ஐ.நா.வுக்கான இந்திய அதிகாரியானார் தேவயானி: தூதருக்கு இணையான அந்தஸ்து


அமெரிக்க சட்டத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில் தேவயானி கோப்ரகடேவை ஐ.நா.வுக்கான இந்திய அதிகாரியாக அதிகாரப்பூர்வமாக இந்தியா அறிவித்துள்ளது. மேலும், தூதரக அதிகாரிக்கு வழங்கப்படுவது போன்று தேவயானிக்கு சிறப்புரிமைகள் மற்றும் சட்ட விலக்கு அளிக்க வேண்டும் என்றும் ஐ.நா. சபைக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

விசா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள தேவயானி கோப்ரகடேவை அமெரிக்கச் சட்டத்திலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
இதன் ஒருபகுதியாக, ஐ.நா.வுக்கான இந்திய தூதர் அசோக் முகர்ஜி, ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூனுக்கு, தேவயானி விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தேவயானி கோப்ரகடே, ஐ.நா. சபைக்கான இந்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு தூதரக அதிகாரிகளுக்கான சிறப்புரிமைகள் மற்றும் அமெரிக்கச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐ.நா. சபையின் துணை பொதுச் செயலாளர் ஜேன் லியாசனையும் அசோக் முகர்ஜி நேரில் சந்தித்து, தேவயானி கோப்ரகடே விவகாரம் தொடர்பான இந்தியாவின் கோரிக்கையை வலியுறுத்தினார்.
இந்தியாவின் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அசோக் முகர்ஜி அளித்த பேட்டியில், தேவயானிக்கு சட்ட விலக்கு அளிப்பது தொடர்பான கோப்புகளை அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு ஐ.நா. சபை அனுப்பி வைத்திருப்பதாகவும், இனிமேல் இந்த விவகாரம் ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா இடையிலானது என்றும் கூறினார்.

ஊழல், வளர்ச்சி விகிதம் குறித்த கருத்து: எதிர்க்கட்சியில் இருக்கிறாரா ராகுல்?


ஊழல் அதிகரித்துள்ளது மற்றும் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்திருப்பது தொடர்பாக சமீபத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கருத்து வெளியிட்டார். அதனையடுத்து, எதிர்கட்சியில் இருந்து வந்த தலைவராகவே ராகுலை பார்க்க தோன்றுகின்றது என்று பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.

இது குறித்து ஹைதராபாதில் அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவரது பேச்சு எதிர்கட்சியில் ராகுல் காந்தி இருப்பது போலவே அமைந்தது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது கட்சியே மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகிறது. அதற்கு முன்பாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தக் கட்சியே ஆட்சி புரிந்தது என்பதையும் நினைத்துப் பார்க்க ராகுல் மறந்துவிட்டார். மேலும், காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் ஊழல் அதிகரித்துள்ளதற்கும், நாட்டின் வளர்ச்சி குறைந்து இருப்பதற்கும் அந்தக் கட்சியே பொறுப்பேற்க வேண்டும்.
நாட்டில் வளர்ச்சி இல்லாமல் வறுமையை ஒழிக்க முடியாது என்று ராகுல் பேசியுள்ளார்.
இதுபோன்ற நிலைமை நாட்டில் ஏற்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சிதான் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார் வெங்கய்ய நாயுடு.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றாமல் இருப்பது,லோக்பால் மசோதாவை 6 ஆண்டுகள் தாமதப்படுத்தியது, பெண்கள் மீதான கொடுமைகள், அரசியல் காரணங்களுக்காக சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுவது, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் தற்கொலை, இந்திய ரூபாயின் வீழ்ச்சி, பொருளாதாரச் சரிவு, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் துரோகம் செய்தது மற்றும் அடுத்தடுத்த ஊழல் உள்ளிட்டவை பற்றியும் ராகுல் காந்தி பேசுவாரா? என்றும் வெங்கய்ய நாயுடு கேள்வி எழுப்பினார்.

ஊழல் பற்றிப் பேச காங்கிரஸூக்கு தகுதியில்லை

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில் உரையாற்றும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி.

ஊழல் பற்றிப் பேச காங்கிரஸூக்கு தகுதியில்லை என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். ஊழலில் திளைத்தவர்கள் இன்று ஊழல் மலிந்துவிட்டதாகக் கூறுவது வியப்பாக உள்ளது என்றும் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

மும்பையில் பாஜக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை பெயர் குறிப்பிடாமல் கடுமையாக தாக்கிப் பேசினார். அவர் மேலும் பேசியதாவது:
காங்கிரஸ் கட்சியின் பெரிய தலைவர் ஒருவரது பேச்சை நான் நேற்று கேட்டேன். அவர் ஊழலுக்கு எதிராகப் பேசினார். அவரின் துணிச்சலைப் பாருங்கள். (ராகுல் காந்தியை அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டார்.) காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஊழல் செய்துகொண்டே நாட்டில் ஊழல் மலிந்துவிட்டதாகப் பேசிவருகின்றனர். இப்படிப் பேச அவர்களுக்கு எப்படி மனம் வந்தது? ஊழல் செய்வதும், பின்னர் அப்பாவி போல முகம் காட்டி ஊழலுக்கு எதிராகப் பேசுவதும் அவர்களுக்கு கைவந்தகலை.
ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு ஊழல் குறித்து விசாரித்த நீதிபதிகள் குழு, இந்த ஊழலில் அமைச்சர்களுக்குத் தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஒருபுறம், ஊழலில் ஈடுபட்டவர்களைக் காப்பாற்ற மகாராஷ்டிர அரசு முடிவு செய்கிறது. மறுபுறம், காங்கிரஸ் தலைவர் ஒருவர் தில்லியில் ஊழல் பற்றி உபதேசம் செய்கிறார்.
காங்கிரஸ் பேசுவது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் இருக்கிறது. காங்கிரஸ் தலைவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அனைத்து விஷயங்களும் அவர்களின் உத்தரவுப்படியே நடக்கின்றன. ஆனாலும் அவர்கள் உரையாற்றும் போது வேறு ஏதோ ஒரு அரசு சார்பிலோ அல்லது வேறு நாட்டின் சார்பிலோ பேசுகிறார்களோ என்று நினைக்கத் தோன்றும்.
காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கி அரசியலுக்காக பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டுவருகிறது. இது அவர்களின் குணம் போலும். ஒருவேளை இதை அவர்கள் பிரிட்டிஷாரிடம் இருந்து கற்றுக் கொண்டார்களோ என்னவோ?
சர்தார் படேல், ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்க பாடுபட்டார். ஆனால் காங்கிரஸ் கட்சியோ சகோதரர்களுக்குள் பகைமையை மூட்டி மொழிவாரி மாநிலங்களை உருவாக்கியது.
வாக்கு வங்கி அரசியலில் இருந்து இந்தியாவை விடுவித்து அதை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வரை இப்போது நாம் சந்திக்கும் பிரச்னைகள் தீராது. பிரச்னைகளுக்கு நமது வரலாறோ அல்லது புவியியலோ காரணமல்ல; காங்கிரஸ் ஆளும் அரசுகள்தான் காரணம். ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக "வெள்ளையனே வெளியேறு' என்ற அறைகூவலை முதலில் விடுத்தது மும்பை நகரம்தான். இப்போது அதே நகரில் இருந்து "காங்கிரஸ் இல்லாத இந்தியா' என்ற குரல் வெளிப்பட வேண்டும்.
2014 மக்களவைத் தேர்தலில் நாட்டின் ஒற்றுமை, வளர்ச்சிக்காக வாக்கு கேட்க வேண்டுமே தவிர கட்சியின் பெயரில் வாக்கு கேட்கக் கூடாது என்பதுதான் எங்களின் விருப்பம்.
பரம்பரை ஆட்சி, ஊழல், பணவீக்கம், மோசமான நிர்வாகம் இவற்றிலிருந்து நாட்டை விடுவித்து, ஒற்றுமையைப் பேணவேண்டும் என்பதே எங்கள் விருப்பமாகும்.
சிறுபான்மையின வாதமும், மதவாதமும் காங்கிரஸின் பாரம்பரியமாகும். நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மை சமூகமாக விளங்கும் 90 மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்த மன்மோகன் சிங் அரசு, அங்கு அவர்களின் நலவாழ்வுக்கான பெரிய திட்டங்களையும் நிதி ஒதுக்கீட்டையும் அறிவித்தது. இதைப் பற்றி ஊடகங்களும் பெரிதாக எழுதின.
ஆனால், இந்த மாவட்டங்களில் சிறுபான்மையினருக்கான நலவாழ்வுக்காக எவ்வளவு செலவானது என்று சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, கடந்த மூன்று ஆண்டுகளில் இத்திட்டங்களுக்காக ஒரே ஒரு ரூபாய் கூட செலவழிக்கப்படவில்லை என்று அரசு பதிலளித்தது. காங்கிரஸின் வாக்கு வங்கி அரசியலுக்கு இது மிகச் சிறந்த உதாரணம்.
நாட்டை கொள்ளையடிப்பவர்கள் தங்கள் கறுப்புப் பணத்தை ஸ்விஸ் வங்கியில் டெபாசிட் செய்கின்றனர். இது குழந்தைக்குக் கூட தெரியும். இந்தப் பணத்தை மீட்டு வந்து ஏழைகளுக்காகச் செலவழிக்க வேண்டும்.
"வெளிநாட்டு வங்கிகளில் பாஜக தலைவர்கள் யாருக்கும் பணம் இல்லை' என்று அத்வானியின் தலைமையில் அனைத்து பாஜக எம்.பி.க்களும் எழுத்துமூலம் தெரிவித்தனர். கறுப்புப் பணம் தொடர்பாக ஒரு சட்டத்தை இயற்றி, ஒரு குழுவை அமைத்து, 3 ஆண்டுகளில் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து ஏழைகளுக்குத் தர முடியுமா? என்று காங்கிரஸிடம் சவால் விடுகிறேன்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் நான் பேசுவது மக்களைச் சென்றடையக் கூடாது என்பதற்காக மும்பையின் சில பகுதிகளில் கேபிள் டிவி இருட்டடிப்பு செய்யப்படுவதை காங்கிரஸ் உறுதிப்படுத்திக் கொண்டதாக நகர பாஜக தலைவர் ஆஷி ஷேலார் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் நண்பர்களுக்கு ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். கேபிள் இருட்டடிப்பால் டிவி திரையில் மோடி இல்லாமல் போகலாம். ஆனால் நாட்டு மக்களின் இதயங்களில் மோடி இடம்பெற்றுள்ளார்.
மோசமான ஆட்சிதான் நாட்டின் மிகப் பெரிய பிரச்னை. இது நீரிழிவு நோய் போன்றது. மற்ற நோய்களுக்கும் இதுவே மூலகாரணம் ஆகிறது. மோசமான ஆட்சி என்னும் நோய்க்கு தீர்வுகாண வேண்டுமானால் மாற்றம் தேவை. அந்த மாற்றத்தை கொண்டுவர மக்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் மோடி.