உடல் எடையைக் குறைக்க ஆயுர்வேத மருத்துவர் எஸ். சுவாமிநாதன் அளிக்கும் சிறிய குறிப்பு...
உடல் எடையைக் குறைக்க விரும்புவோர், சில விஷயங்களை தினம்தோறும் செய்து வர வேண்டும். காலையில் எழுந்ததும் மலம், சிறுநீர் கழித்த பிறகு பல் தேய்த்து வெறும் வயிறாக இருக்கும்போதே 2 ஸ்பூன் (10 மி.லி.) நெல்லிக்காய் சாறில், சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து 1/4 ஸ்பூன் (2.5 மி.லி.) தேனுடன் சாப்பிட்டுவிட்டு 1/2 -3/4 மணி நேரம் சுறுசுறுப்பாக நடக்கவும்.
காலை உணவாகக் கோதுமைக் கஞ்சி சாப்பிடவும். மதியம் புழுங்கலரிசி சாதத்தை சிறிய அளவில் சாம்பார், ரசம், மோர் என்று பிரித்துச் சாப்பிட்ட பிறகு, 1/2 கிளாஸ் (150 மி.லி.) சூடு ஆறிய தண்ணீரில், 1 ஸ்பூன் (5 மி.லி.) தேன் கலந்து பருகவும்.
மாலையில் 1 கிளாஸ் (300 மி.லி.) மோர் பருகவும். இரவில் கோதுமையினால் தயாரிக்கப்பட்ட ரொட்டியைச் சாப்பிடவும். பச்சைப் பயறு, பூண்டு வேக வைத்த கூட்டை ரொட்டிக்குத் தொட்டுக் கொள்ளப் பயன்படுத்தவும். அதன் பிறகு, மதியம் சாப்பிட்ட தேன் கலந்த தண்ணீர் போல அதே அளவில் மறுபடியும் சாப்பிடவும். புலால் உணவையும், எண்ணெய்ப் பொருட்களையும், பகல் தூக்கத்தையும் அறவே தவிர்க்கவும்.
No comments:
Post a Comment