மேற்குவங்க மாநிலம் காரக்பூரிலுள்ள ஐஐடி கல்வி நிறுவனத்துக்கு, அதன் முன்னாள் மாணவியும், அமெரிக்கவாழ் இந்தியப் பெண் தொழிலதிபருமான ரூமா ஆசாரியா டேசர்க்கார் ரூ.6.21 கோடி நிதியுதவி வழங்கினார்.
இம்மாதம் 5ஆம் தேதி முதல் 8 தேதி வரை அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில், "ஐஐடி-2013 உலக கருத்தரங்கு' நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் தனது கணவருடன் கலந்துகொண்ட, பெண் தொழிலதிபர் ரூமா ஆசாரியா டேசர்க்கார், காரக்பூர் ஐஐடியில் பெட்ரோலிய பொறியியல் பிரிவைத் தொடங்க ரூ.6.21 கோடியை நிதியுதவியாக வழங்கினார்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம் ஹுஸ்டன் நகரிலுள்ள, கெட்டி ஆயில் அண்டு டெக்ஸாகோ உள்ளிட்ட எண்ணெய்-எரிவாயு தொழிற்சாலைகளில் ரூமா ஆசாரியா டேசர்க்கார் பணியாற்றி வந்தார். தற்போது, கட்டுமான மற்றும் சுற்றுப்புறச்சூழல் அறிவியல் சம்பந்தமான நிறுவனத்தை தொடங்கி 50 பேருக்கு அவர் வேலை வழங்கி வருகிறார்.
No comments:
Post a Comment