30.11.13

எம்ஜிஆர், சிவாஜிக்குப் பிறகு விஜய் சேதுபதிதான்! - கேயார்

நல்ல பார்மில் உள்ள ஒரு கலைஞனை காலி பண்ண வேண்டும் என்றால், அளவுக்கு மீறிப் புகழவேண்டும் என்பது சினிமாவில் ஒரு விதி!
இப்போது அப்படி ஒரு நிலைக்கு ஆளாகியிருப்பவர் விஜய் சேதுபதி. தானுண்டு தன் நடிப்புண்டு என்று உள்ள இந்த மனிதர், அழைக்கிற நிகழ்ச்சிகளுக்கு நோ சொல்லாமல் போய்விடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அட அவ்வளவு ஏன்.. ஒரு முறை தான் நடித்த படம் ஒன்றைப் பற்றிய அறிவிப்பைக் கண்டதும், அவர்கள் அழைக்காமலேயே இவர் போய் நின்றதும் உண்டு!
அப்படிப்பட்டவரின் தலையில் இப்போது பெரிய பெரிய ஐஸ் மலைகளாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள், சினிமாவில் ரிட்டயரானவர்கள் மற்றும் கிட்டத்தட்ட ரிட்டயர்மென்ட் ஸ்டேஜில் இருப்பவர்கள்.

எம்ஜிஆர், சிவாஜிக்குப் பிறகு விஜய் சேதுபதிதான்! - கேயார்

சில தினங்களுக்கு முன்பு சத்யம் சினிமாஸில் நடந்த ஒரு விழாவில், வரிசையாக மைக் பிடித்த அத்தனைபேரும் விஜய் சேதுபதி பற்றியே பேசிவிட்டு, விழா பற்றி பேசமறந்துவிட்டுப் போனார்கள்.
நேற்று நடந்த ஒருவிழாவில் இயக்குநர் கேயார் பேசியது, விஜய் சேதுபதியை மலை உச்சிக்கு லிப்டில் வைத்து தூக்கிக் கொண்டு போனதைப் போன்ற உணர்வைத் தந்தது (எப்போ உருட்டிவிடப் போகிறார்களோ!)...
கேயார் தன் பேச்சில், "எந்த தயாரிப்பாளரும் நஷ்டத்தையோ மன வருத்தத்தையோ கொள்ளும்படியான விஷயங்களில் நான் ஈடு பட மாட்டேன் என்று விஜய்சேதுபதி அளித்திருந்த பேட்டி பற்றி பலர் பேசினார்கள்.
ஏம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடையக் கூடாது என்று ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அவர்களுப் பிறகு விஜய் சேதுபதிதான் அது மாதிரி செயல்படுகிறார். மற்றவர்களும் இது மாதிரி செயல்பட்டால் நல்லது," என்றார்.

No comments:

Post a Comment