16.11.13

‘புறம்போக்கு’ தலைப்பு எங்களுக்குத்தான்: யுடிவி பிக்சர்ஸ் அறிவிப்பு

ஆர்யா-விஜய் சேதுபதி நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கவிருந்த படம் ‘புறம்போக்கு’. இந்த படத்தின் தலைப்பை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முன்பே பதிவு செய்துவிட்டதாக ஒளிப்பதிவாளர் நடராஜ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இதில் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம் என்ற முடிவில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இருந்தார். ஒருகட்டத்தில் இந்த தலைப்பை உதறித் தள்ளிவிட்டு வேறு தலைப்பை வைக்கவும் முடிவு செய்தார்.
இந்நிலையில், இந்த ‘புறம்போக்கு’ தலைப்பு தங்களுக்குத்தான் சொந்தம் என்று யுடிவி மோஷன் பிக்சர்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புறம்போக்கு’ தலைப்பு எங்களுக்குத்தான் சொந்தம் என்று தயாரிப்பாளர் சங்கமும், பிலிம் சேம்பரும் அனுமதி கடிதங்கள் கொடுத்துள்ளன. எனவே, இனிமேல் ‘புறம்போக்கு’ தலைப்பு எங்களுடையதுதான்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த படத்தை யுடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது. தலைப்பு பிரச்சினை முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியலையும் வெளியிடப் போகிறார்கள்.

No comments:

Post a Comment