6.12.13

இளமை தோற்றத்தை தக்கவைத்துக்கும்14 உணவுகள்


உடல் ஆரோக்­கியம் மிகவும் முக்­கியம். ஏதோ உண்டோம் ஏதோ வாழ்ந்தோம் என்­றி­ருப்­பது வாழ்க்கை இல்லை. உண்ணும் உண­வி­லி­ருந்து உடுத்தும் ஆடை­யி­லி­ருந்து கவ­ன­மாக இருப்­பது அவ­சியம். அது­மட்­டு­மின்றி, ஆரோக்­கி­ய­மான உணவை எடுத்துக் கொள்­வதால், முதுமைத் தோற்­றத்தைத் தடுத்து ஆரோக்­கி­ய­மாக வாழ முடியும்.

உண்ணும் உணவை தேர்ந்­தெ­டுப்­பது என்­பது தேவை­யான ஒன்று. அன்­றாடம் நாம் உழைத்து சேமிப்­பது அனைத்தும் வயிற்­றுக்குத் தான். எனவே உண்ணும் உணவில் ஆரோக்­கி­ய­மான காய்­க­றி­களை சேர்த்து கொள்வது மிகவும் அவ­சியம்.

ஒவ்­வொரு காய்­க­றி­யிலும் ஒவ்­வொரு சத்து உள்­ளது. ஒரே ஒரு விற்­ற­மின் சத்து மட்டும் உட­லுக்கு போதாது. எல்லா வித சத்­துக்­களும் உட­லுக்கு அவ­சியம். அதில் விற்­றமின் `சி' கண்­ணிற்கு நல்­லது, ஓமேகா3 இத­யத்­திற்கு நல்­லது என ஒவ்­வொரு விற்­ற­மினும் ஒவ்­வொரு சக்­தியை உட­லுக்கு தந்து, மன­துக்கும், உட­லுக்கும் தேவை­யான பலத்தை அளிக்­கின்­றன.

எனவே அள­வான உணவை தேவை­யான சத்­துக்­க­ளுடன் எடுத்துக் கொண்­டாலே, ஆரோக்­கி­ய­மா­கவும், இள­மை­யுடனும் வாழ முடியும். குறிப்­பாக நோய் இல்­லாமல் இருந்­தாலே, இள­மை­யுடன் காட்­சி­ய­ளிக்க முடியும். சரி, இப்­போது உடலில் ஏற்­படும் நோய்­களைத் தடுத்து, முதுமைத் தோற்­றத்தைத் தடுக்கும் சில உண­வுகள் பற்றிப் பார்ப்­போமா!

1.அப்பிள்/திராட்சை /ஸ்ட்டோபெர்ரி

மேற்­கூ­றி­ய­வற்றில் கரையும் நார்ச்­சத்து இருப்­பதால், அவை இரத்­தத்தில் உள்ள சர்க்­க­ரையின் அளவைக் குறைக்­கி­ன்றன. மேலும் இந்த பழங்­களில் எலாஜிக் அமி­லங்கள் உள்­ளன. இவை புற்­றுநோய் வரு­வதை தடுக்­கின்­றன.

2.முட்­டைக்கோஸ்

முட்­டைக்கோஸ் பல வகை பிரிவுகளை கொண்டுள்ளது. அவற்றில் சில, முட்டைக்கோஸ், காலிஃ­பி­ளவர், ப்ராக் கோலி, பிரஸ்ஸல்ஸ் முளைகள் போன்­ற­வற்றில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்­ளது. மேலும் இந்த காய்­க­றி­களில் பீட்டா கரோட்டின் மற்றும் ஐஸோ­தி­யோ­ச­ய­னை­ட்கள் (குறிப்­பாக ப்ரோக்­கோ­லியில் காணப்­படும்) புற்­று­நோயை தடுக்­கின்­றது.

3.மிளகாய்/மிள­குத்தூள் :

மிளகாய் வயிற்றை சேதப்­ப­டுத்தும் என்று கரு­தப்­பட்­டது. ஆனால் இப்­போது நிபு­ணர்கள் மிள­காயில் இருக்கும் லேசான எரிச்சல் வயிற்றின் பாது­காப்­பிற்கு உத­வு­கின்­றது என்று கூறு­கின்­றனர். இந்த காரம் புண் மற்றும் செல் பாதிப்பை தடுக்க உதவும்.

மேலும் இவற்றில் விற்றமின் `சி' மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி தரும் ஒக்­ஸி­ஜ­னேற்­றங்கள் உள்­ளன. அதிலும் குடை­மி­ள­காயின் உள் இருக்கும் ஒரு வித காரம் தரும் பொருளில் ஒக்­ஸி­ஜ­னேற்றம் தரும் தன்மை உள்­ளது என்­பதால் இது உட­லுக்கு மிகவும் நல்­லது.

4.சிட்ரஸ் பழங்கள்

தோடம்பழம், எலு­மிச்சை, திராட்சை போன்ற சிட்ரஸ் நிறைந்த பழங்கள் புற்று­நோயைத் தடுக்க உதவும். இவற்றில் இருக்கும் விற்றமின் `சி', லிமொனின் போன்­றவை புற்­று­நோயை ஏற்­ப­டுத்தும் செல்­களை பாதித்து அந்நோய் தாக்­காமல் காக்­கின்­றன. மேலும் சரு­மத்தை பொலி­வோடு, இள­மை­யுடன் வைத்­துக்­கொள்­கி­றது.

5.பூண்டு மற்றும் வெங்­காயம்

பூண்டில் உள்ள அல்­லிசின், மோச­மான கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரைகி­ளி­ச­ரை­ட்­களை குறைத்து, இரத்­தத்தின் நல்ல கொழுப்புத் தன்­மையை அதி­கப்­ப­டுத்தி, உட­லுக்கு ஆரோக்­கியம் அளிக்­கின்­றது. இதனால் இவை இரத்த அழுத்­தத்தை குறைக்­கி­ன்றன. மேலும் இது அன்­டி­ப­யாடிக் பண்­பு­களை கொண்­டுள்­ளது. வெங்­காயம், வெங்­கா­யத்தாள், சின்ன வெங்­காயம் போன்­ற­வற்றில் ஆலியம் என்ற தன்மை உள்­ளது. இவை இதயம் மற்றும் கல்­லீ­ர­லுக்கு மிகவும் நல்­லது.

6.க்ரீன் தேநீர்

க்ரீன் தேநீரில் புற்­று­நோயை எதிர்க்கும் தன்மை உள்­ளது. மேலும் அன்­டி­ஒக்­ஸி­டன்ட்­டு­க­ளான பாலிஃ­பீ­னால்கள் புற்­று­நோயை தீர்க்க உத­வு­கின்­றது என்று கூறப்­ப­டு­கின்­றது. இது இத­யத்­திற்கும், கல்­லீ­ர­லுக்கும் மிகவும் நல்­லது.

7.கீரைகள்

பசலைக் கீரை, வெந்­த­யக்­கீரை, லெட்யூஸ், பார்ஸ்லி, செலரி போன்­ற­வற்றில் உள்ள பீட்டா கரோட்டின் உட­லுக்கு மிகவும் நல்­லது. இதில் கல்­சியம், இரும்பு, ஃபோலிக் அமிலம், விற்றமின் சி மற்றும் பல ஊட்­டச்­சத்­துக்கள் உள்­ளன.

8.ஓட்ஸ் :

இத­யத்­திற்கு ஓட்ஸ் மிகவும் நல்­லது. தினமும் ஒரு கப் ஓட்ஸ் எடுத்துக் கொண்டால், சக்­கரை அளவை கட்­டுப்­படுத்தி, இத­யத்தை சீராக வைத்துக் கொள்­ளலாம்.

கானாங்­கெ­ளுத்தி, சால்மன், சூரை, மத்தி, கடல் மீன், ஏரி, ட்ரௌட் போன்ற மீன்­களில் ஒமேகா3, கொழுப்பு அமி­லங்கள் உள்­ளன. இவை இரத்த உறைவைப் போக்கும். ஒமேகா3 கொழுப்பு அமி­லங்கள் நீரி­ழிவு, புற்றுநோய் மற்றும் கீல்­வாதம், சரும அழற்சி மற்றும் அல்­ச­ரேட்டிவ் கொலிட்டஸ் போன்ற அழற்சி ஏற்­படுத்தும் நோய்­களில் இருந்து நம்மை காக்கும்.

10.ஒலிவ்/ரேப்­சீட் எண்ணெய்

அதி­க­மாக எண்ணெய் எடுத்து கொள்­வது கெடுதல் தான். ஆனால் பதப்­ப­டுத்­தப்­பட்ட எண்ணெய் உட­லுக்கு மிகவும் நல்­லது. முக்­கி­ய­மாக மோனோ அன்­சாச்­சு­ரேட்டர் ரக எண்ணெய் மிகவும் நல்­லது. இது ஒலிவ் மற்றும் ரேப்­சீட் எண்­ணெயில் அதி­க­மாக உள்­ளது.

11.பப்­பாளி/கரட்

மஞ்சள் மற்றும் ஓரஞ்ச் நிற காய்­க­றி­க­ளான பூசணி, மாம்­பழம், சர்க்­க­ரை­வள்ளி கிழங்கு போன்­ற­வற்றை விட, பப்­பாளி மற்றும் கரட்டில் பீட்டா கரோட்டின் மற்றும் விற்றமின்கள் அதிகம் நிறைந்­துள்­ளன.

12.சோயா பொருட்கள்

சோயா பீன்ஸ், சோயா மாவு, சோயா பால் மற்றும் டோஃபு உண­வா­னது குறைந்த கொழுப்பு கொண்ட கல்­சியம் நிறைந்த உண­வாகும். ஜெனிஸ்டின் நிறைந்த சோயா தயா­ரிப்­புகள் புற்­று­நோயை எதிர்த்து போராடும் தன்மை வாய்ந்­தவை.

13.தக்­காளி

புற்­று­நோயை எதிர்க்கும் தன்மை கொண்­டது தக்­காளி. லைகோபைன் மற்றும் கரோட்­டி­னாய்ட் போன்­றவை புற்று நோயை எதிர்க்கும் தன்மை கொண்­டது. இதில் கௌமாரிக் மற்றும் கோல்­ரோ­ஜினிக் அமிலம் அதி­க­மாக இருப்­பதால், இது புற்­று­நோயை எதிர்க்­கின்­றது.

14.தயிர்

ஆய்வு ஒன்றில் பக்­டீ­ரியா அதிகம் உள்ள தயி­ரா­னது செரி­மா­னத்­திற்கு மிகவும் நல்­லது என்று கூறப்படுகின்றது. அது­மட்­டு­மின்றி, இதில் கல்­சியம் அதிக உள்­ளதால், இந்த உணவு ஒஸ்­டி­யோ­போ­ரோசிஸ் நோய்க்கு எதி­ராக பயன்­ப­டு­கின்­றது. எனவே மேற்கூறிய அனைத்தையும் உணவில் சேர்த்துக் கொண்டால், உடலில் நோய்கள் தாக்காமல், சருமமும் நன்கு இளமையுடனும், ஆரோக்கியத்துடனும் காணப்படும்.

No comments:

Post a Comment