26.11.13

மீண்டும் ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் அஜீத்!


பில்லா-2வை முடித்த பிறகு ஆரம்பம் படத்துக்காக தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் அஜீத். அதற்காக டயட்ஸ், உடற்பயிற்சி என்று சில மாதங்களாக ஈடுபட்டு உடல் எடையை குறைத்துக்கொண்ட பின்னரே ஆரம்பம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
ஆனால், அதன்பிறகு நடிக்க கமிட்டான வீரம் படத்தில் வில்லேஜ் கெட்டப் என்பதால் உடல் எடையை குறைக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. வேஷ்டி சட்டை காஸ்டியூமே அப்படம் முழுக்க பயன்படுத்தியிருப்பதால், சில மாதங்களாக உடற்பயிற்சியில் அதிகமாக ஈடுபடவில்லையாம் அஜீத். இதனால் தற்போது கணிசமான அளவு உடல் எடை அதிகரித்துள்ளதாம்.
அதனால், அடுத்து கெளதம்மேனன் படத்தில் நடிக்கயிருக்கும் அஜீத், அப்படத்துக்காக மீண்டும் தனது உடம்பை பழைய நிலைக்கு கொண்டு வருகிறாராம்.
பிப்ரவரியில் அப்படம் தொடங்கயிருப்பதால், அதற்குள்ளாக தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தினமும் அதிகபட்சம் 4 மணி நேரத்தை ஜிம்மிலேயே கழித்து வருகிறாராம் அஜீத். நகரத்து கதையில் உருவாகும் அப்படத்தில் டீசர்ட் அணிந்தே படம் முழுக்க நடிக்கயிருக்கிறாராம் தல.

No comments:

Post a Comment