4.1.14

சகாயம் மேஜிக்.. இந்திய வரலாற்றில் முதல் முறையாக 2 தேசிய விருது பெற்ற கோ- ஆப்டெக்ஸ்!

Photo: சகாயம் மேஜிக்.. இந்திய வரலாற்றில் முதல் முறையாக 2 தேசிய விருது பெற்ற கோ- ஆப்டெக்ஸ்!

நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் மூலம் , இந்திய வரலாற்றில் முதல் முறையாக தேசிய விருதை தமிழகத்தின் கோ - ஆப்டெக்ஸ் பெற்றுள்ளது. கைத்தறி உற்பத்தி மற்றும் கைத்தறித் துறையில் மகத்தான பங்களிப்பிற்காக முதல் முறையாக இரண்டு தேசிய விருதுகளை கோ - ஆப்டெக்ஸ் பெற்றுள்ளது.

ஆசியாவிலேயே மிகப் பெரிய கூட்டுறவு நிறுவனம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தான். 1256 கூட்டுறவு சங்கங்களைக் கொண்ட மிகப் பெரிய நிறுவனம் ஆகும். கோ ஆப்டெக்ஸ்க்கு நாடு முழுக்க 200 இடங்களில் ஷோரூம்கள் உள்ளது. கடந்த பல வருடமாக கோ - ஆப்டெக்ஸ் நஷ்டத்தில் இயங்கி வந்தது. இந்த நிலையில், கோ - ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராக சகாயம் பொறுப்பேற்றார்.இன் பிறகு, கைத்தறி சேலை மற்றும் துணிகளை தயாரிப்பதில் புதுமைகளைப் புகுத்தினார். இதனால், கடந்த ஆண்டு மட்டும் ரூ.245 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. இதில் லாபம் மட்டுமே ரூபாய் ரெண்டே கால் கோடி கிடைத்தது. அதில் ஒரு கோடியை கைத்தறி நெசவாளர்களுக்கே ஊக்கத் தொகையாக வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தினார் சகாயம். அடுத்த கட்டமாக, கைத்தறித் தயாரிப்புகளோடு விலைப் பட்டியலுடன் சேர்ந்து அந்தத் துணியை நெய்த நெசவாளியின் புகைப்படம், பெயர், அந்தத் துணியை நெய்வதற்கு அவர் எடுத்துக் கொண்ட நாட்கள், உடல் உழைப்பு பற்றிய விவரங்களையும் தனி அட்டையில் அச்சிட வைத்தார். முதல் கட்டமாக, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த நெசவாளிகள் 100 பேர் நெய்து கொடுத்த சேலைகள் அவர்களைப் பற்றிய விவர அட்டையுடன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் 2013-ல், அதிக கைத்தறித் துணிகளை உற்பத்தி செய்ததற்காகவும் கைத்தறித் துணிகளை உற்பத்தி செய்வதில் மகத்தான பங்களிப்பை தந்ததற்காகவும் மத்திய அரசின் இரண்டு தேசிய விருதுகளை பெற்றிருக்கிறது கோ-ஆப்டெக்ஸ். இந்த விருதுகளை, டெல்லியில் நடந்த விழாவில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சாம்பசிவ ராவ். தமிழக கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் சகாயத்திடம் வழங்கினார்.

No comments:

Post a Comment