26.11.13

‘ஜன்னல் ஓரம்’ – 29ஆம் தேதி ஒரு ‘ஜாலி ட்ரிப்’புக்கு தயராகுங்கள்



மலையாளத்தில் இருந்து அழகியல் நிறைந்த கதைகளை தமிழுக்கு கொண்டுவரும் நிகழ்வுகளை சில இயக்குனர்கள் செய்து வருகிறார்கள். அந்த வகையில் கரு.பழனியப்பன் இயக்கத்தில் வரும் 29ஆம் தேதி வெளியாக உள்ள ‘ஜன்னல் ஓரம்’ படம் ரசிகர்களின் ஆவலை அதிகப்படுத்தியுள்ளது.
கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் தான் ‘ஆர்டினரி’. மலைகிராமம் ஒன்றுக்கு சென்றுவரும் ஒரு பேருந்து ஒன்றையும் அதன் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோரின் அழகான, யதார்த்த வாழ்வியலையும் அற்புதமாக படமாக்கி இருந்தார்கள். இந்தப்படத்தைத்தான் தற்போது ‘ஜன்னல் ஓரம்’ படமாக இயக்கியிருக்கிறார் கரு.பழனியப்பன்.
இந்தப்படத்தில் பார்த்திபன், விமல், விதார்த் என முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள். பேருந்து ஓட்டுனராக பார்த்திபனும் நடத்துனராக விமலும் நடித்திருக்கிறார்கள். மலையாளத்தில் இந்தப்படம் ஏற்படுத்திய அதே உணர்வை தமிழிலும் சுவை குறையாமல் கரு.பழனியப்பன் தந்திருப்பார் என்று தாராளமாக நம்பலாம்.

சன்னி லியோனுடன் ஆட்டம் – ‘வடகறி’ ஜெய்க்கு வழங்கிய அதிர்ஷ்டம்



பாலிவுட்டில் தனது அதிரடி கவர்ச்சியால் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகை சன்னி லியோன். குறிப்பாக ஐட்டம் டான்ஸுக்கு பெயர்போனவர். இவரை முதல் முதலாக தான் இயக்கிவரும் ‘வடகறி’ படத்துக்காக தமிழில் இறக்குமதி செய்கிறார் இயக்குனர் சரவணராஜன். இவர் வெங்கட்பிரபுவிடன் துணை இயக்குனராக வேலை பார்த்தவர்.
ஏற்கனவே ‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் இணைந்து நடித்த ஜெய்-சுவாதி ஜோடி, மீண்டும் இந்தப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். க்ளவுட் நைன் சார்பில் தயாநிதி அழகிரி தயாரிக்கும் இந்தப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
“இந்தப்படத்தில் ஜெய்க்கு கனவுப்பாடல் ஒன்று வருகிறது. அதற்காக யுவன் போட்ட ஒரு வெஸ்டர்ன் டைப் பாடலைக்கேட்டபோது அதற்கு சன்னி லியோனை ஆடவைத்தால் செம ஃபிட்டாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் இது வழக்கமான ஐட்டம் டான்ஸாக இருக்காது” என்கிறார் சரவணராஜன்.
இந்தப்பாடலின் கான்செப்ட் குறித்து சன்னி லியோனிடம் விளக்கியபோது அவர் ஆச்சர்யப்பட்டு போனாராம். காராணம் வழக்கமாக அவரை ஒப்பந்தம் செய்ய வருபவர்கள் ஐட்டம் டான்ஸ் ஆடத்தான் அழைப்பார்களாம். அப்படித்தான் ஆடியும் வருகிறார்.
ஆனால் இந்தப்படத்தின் இயக்குனர் சன்னி லியோனை பாடல்காட்சியில் வித்தியாசமாக காட்டப்போவதாக சொன்னது தான் அவரின் இந்த ஆச்சர்யத்துக்கு காரணமாம். அப்படி என்ன வித்தியாசம் என்கிறீர்களா? சன்னி லியோனுக்கு புடவைகட்டி ஆடவிடபோகிறார்களாம்.
வரும் டிசம்பர் மாதத்தில் இந்தப்பாடலை படமாக்க இருக்கிறார்கள். ஆனால் எந்த லொக்கேஷன் என்பது மட்டும் இன்னும் முடிவு செய்யப்படவிலை. அனேகமாக இயக்குனர் சரவணராஜன், இதற்காக சன்னி லியோனின் ரசிகர்களின் சாபத்திற்கு ஆளானாலும் ஆகலாம்.

Making Of Ivan Vera Mathiri

Sigaram Thodu movie

Unseen God Gallery









































பொங்கலுக்கு ஜில்லா! மீண்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!


ஆர்.பி.செளத்ரியின் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள படம் ஜில்லா. தலைவா கொடுத்த இழப்பை சரி செய்து விட வேண்டும் என்பதற்காக இப்படத்தில் அதிக கவனத்துடன் நடித்துள்ளார் விஜய்.
அதோடு, 7 ஆண்டுகளுக்கு முன்பு அஜீத்தின் ஆழ்வார் படத்துடன் போக்கிரியாக மோதிய விஜய், இந்த முறை அஜீத்தின் வீரத்துடன் ஜில்லா மூலம் பலப்பரீட்சை பார்க்கவும் வரிந்து கட்டி விட்டார்.
அதனால் இந்த பொங்கல் அதிரடி பொங்கலாக இருக்கும் என்று ரசிகர்கள் கொண்டாடித் தொடங்கிய அதே நேரத்தில் ரஜினியின் கோச்சடையானும் பொங்கலுக்கு வெளியாவதாக இன்னொரு இன்ப அதிர்ச்சியை கொடுத்தனர். ஆனால், இதற்கிடையே, தியேட்டர் பிரச்சினையால் ஏதாவது ஒரு படம் பின்வாங்கும் என்ற சூழ்நிலையும் உருவாகியது.
அது எந்த படமாக இருக்கும் என்பது இன்னும் தெரியாத நிலையில், விஜய்யின் ஜில்லா படத்தின் ஆடியோ வெளியீடு டிசம்பர் 15-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, பொங்கல் அன்று ஜில்லா வெளியாவது உறுதி என்று மீண்டும் அப்பட நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் விஜய் ரசிகர்கள் பொங்கலை கோலாகலமாக கொண்டாட இப்போதே தயாராகி விட்டனர்.

நட்புக்கு கைகொடுத்த ஜி.வி.பிரகாஷ்குமார்!



ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் மழலை குரல் இன்றைய இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ்குமாரின் குரலாகும். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மாமா என்பதால் சிறுவயதிலிருந்தே இசையோடு உறவாடி வந்த பிரகாஷ்குமார், வெயில் படத்தில் இசையமைப்பாளரானார்.
மதராசப்பட்டினம், பரதேசி, அன்னக்கொடி, தலைவா என பல முன்னணி நடிகர்கள், டைரக்டர்களின் படங்களுக்கு இசையமைத்து இப்போது இளவட்ட இசையமைப்பாளர்களில் முன்னணி வகித்து வருகிறார். இசைத்துறையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்பதை மட்டுமே மனதளவில் கொண்டிருந்த ஜி.வி.பிரகாஷ், தற்போது மதயானைக்கூட்டம் என்ற படத்தை தயாரித்திருப்பவர், பென்சில் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.
ஒரு இசையமைப்பாளருக்குள் இத்தனை முகங்களா? என்று அவரைக்கேட்டால், சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது எனக்கு விருப்பமாக இருந்ததில்லை. தற்போது பென்சில் படத்தை இயக்கியிருக்கும் மணி நாகராஜின் விளம்பர படங்களுக்கு ஆரம்ப காலத்தில் இசையமைத்திருக்கிறேன்.
ஆனால் அப்போதிலிருந்தே படம் இயக்குவதற்கான முயற்சிகளை ஈடுபட்டிருந்தார் அவர். ஆனால், அவர் இயக்கும் ஒவ்வொரு படங்களும் ஏதாவது பிரச்னையில் கிடப்பில் போடப்பட்டு வந்தது. இருப்பினும் ஒரு படமாவது இயக்கி விட வேண்டும் என்று தொடர்ந்து அவர் கடுமையாக போராடிக்கொண்டிருந்தார்.
நீண்டகால நண்பர் என்பதால், அவரது போராட்டத்தைப்பார்த்துதான், அவரை இயக்குனராக்க வேண்டும் என்பதற்காகவே பென்சில் படத்தில் நடிக்க சம்மதித்தேன்.
இப்போது அவர் இயக்குனராகி விட்டதில் அவரைப்போலவே எனக்கும் ரொம்ப சந்தோசமாக உள்ளது என்று சொல்லும் ஜி.வி.பிரகாஷ், இப்போது படம் நன்றாக வந்திருக்கிறதைப்பார்க்கையில், ஒரு திறமையான கலைஞனுக்கு கைகொடுத்த திருப்தி எனக்கு கிடைத்திருக்கிறது என்கிறார்.

மீண்டும் ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் அஜீத்!


பில்லா-2வை முடித்த பிறகு ஆரம்பம் படத்துக்காக தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் அஜீத். அதற்காக டயட்ஸ், உடற்பயிற்சி என்று சில மாதங்களாக ஈடுபட்டு உடல் எடையை குறைத்துக்கொண்ட பின்னரே ஆரம்பம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
ஆனால், அதன்பிறகு நடிக்க கமிட்டான வீரம் படத்தில் வில்லேஜ் கெட்டப் என்பதால் உடல் எடையை குறைக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. வேஷ்டி சட்டை காஸ்டியூமே அப்படம் முழுக்க பயன்படுத்தியிருப்பதால், சில மாதங்களாக உடற்பயிற்சியில் அதிகமாக ஈடுபடவில்லையாம் அஜீத். இதனால் தற்போது கணிசமான அளவு உடல் எடை அதிகரித்துள்ளதாம்.
அதனால், அடுத்து கெளதம்மேனன் படத்தில் நடிக்கயிருக்கும் அஜீத், அப்படத்துக்காக மீண்டும் தனது உடம்பை பழைய நிலைக்கு கொண்டு வருகிறாராம்.
பிப்ரவரியில் அப்படம் தொடங்கயிருப்பதால், அதற்குள்ளாக தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தினமும் அதிகபட்சம் 4 மணி நேரத்தை ஜிம்மிலேயே கழித்து வருகிறாராம் அஜீத். நகரத்து கதையில் உருவாகும் அப்படத்தில் டீசர்ட் அணிந்தே படம் முழுக்க நடிக்கயிருக்கிறாராம் தல.

விஜயசேதுபதியின் நன்றிக்கடன்!



சினிமாவில் தலைகாட்டுவதற்கு முன்பு கூத்துப்பட்டறையில் கணக்காளராக வேலை பார்த்து வந்தவர்தான் விஜயசேதுபதி. அப்போது நண்பர் ஒருவர் எடுத்த குறும் படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடிக்க ஆள் இல்லாமல், விஜயசேதுபதியை நடிக்கச்சொன்னாராம். ஆனால் அந்த குறும் படத்தில் நடித்து முடித்தபோது, பலரும் பாராட்டினார்களாம். அங்கிருந்துதான் விஜயசேதுபதியின் நடிப்பு பயணம் ஸ்டார்ட் ஆகியிருக்கிறது.
அதன்பிறகு விஜய், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நடித்து வந்திருக்கிறார். அப்போதுதான் தனது தென்மேற்கு பருவக்காற்று படத்துக்கு புதுமுக நடிகர் தேடி வந்த சீனுராமசாமி, ஏற்கனவே சினிமாவில் முகம் காட்டியவராக இருந்தால் வேலை வாங்குவது எளிது என்று விஜயசேதுபதிக்கு சான்ஸ் கொடுத்திருக்கிறார். அப்படி ஹீரோவானவர்தான் விஜயசேதுபதி. ஆனால், இப்போது இளவட்ட நடிகர்களின் முன்னணியில் இருக்கிறார். அவர் தொட்டதெல்லாம் ஹிட் என்கிற நிலையாகி விட்டது.
இந்த நேரத்தில் நீர்ப்பறவை படத்தின் தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்காக, அப்படத்தில் நடித்த விஷ்ணுவைக்கொண்டே இடம் பொருள் ஏவல் என்றொரு படத்தை தற்போது இயக்கி வருகிறார் சீனுராமசாமி. இந்த படத்தில் விஜயசேதுபதி ஒரு கேரக்டரில் நடித்தால் தனது படத்துக்கு பலமாக இருக்குமே என்று அவரிடம் தயங்கியபடியே கேட்டாராம் சீனு.
அடுத்த நிமிசமே, நீங்கள் என்னிடம் தயங்கி கேட்க வேண்டுமா. நடி என்று சொன்னால் நடித்து விட்டுப்போகிறேன் என்று உடனே சம்மதம் சொன்னாராம் விஜயசேதுபதி. ஹீரோவாக நடிக்கவே கைநிறைய படங்கள் இருந்தபோதும், தனக்கு ஹீரோ என்கிற அங்கீகாரத்தை முதலில் கொடுத்த சீனுராமசாமிக்காக இப்படி நன்றிக்கடன் செய்கிறாராம் விஜயசேதுபதி.

ஜெய் ஹோ – ஏ.ஆர்.ரஹ்மானை பற்றிய படம்!!



கோலிவுட்டிலிருந்து ஹாலிவுட் வரை சாதை படைத்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை பற்றி உமேஷ் அகர்வால் ஒரு படம் உருவாக்கியிருக்கிறார்.
ஆஸ்கர் நாயகனை பற்றிய இந்தப்படம் பொருத்தமாக ”ஜெய்ஹோ” (அவருக்கு ஆஸ்கர் விருது பெற்ற ஸ்லம்டாக் மலினியர் படத்தில் வரும் பாட்டு) என்று பெயரிடப்பட்டிருக்கிறது. கோவா திரைப்பட விழாவை ஒட்டி நடக்கும் பிலிம் பஜாரில் இது காட்டப்பட்டது.
ரஹ்மானுடன் ஐந்து கண்டங்களுக்கும் பயணம் செய்து அவரது இசை நிகழ்ச்சிகள், இங்கிலாந்தில் ஸ்டுடியோவில் பணி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அவரது வீட்டில் அவர் இசை அமைப்பது, இயக்குனர் டோனி போயெல், சேகர் கபூர், தயிஷ் கெய் போன்ற பிரபலங்கள் ரஹ்மானைப்பற்றி பேசுவது எல்லாம் இடம் பெறுகின்றன. ரஹ்மானும், இதில் மனம் திறந்து பேசியிருக்கிறார். அனிர்பன் பட்டாச்சார்யா எழுத்தில், ராஜீவ் மெஹோத்ரா இசையில் இந்தப்படம் உருவாகியிருக்கிறது.
எல்லாம் சரி, திரைப்பட உலகிற்கு ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகப்படுத்திய இயக்குனர் மணிரத்தினத்தினை இதில் பேச வைத்திருக்க வேண்டாமா.?

தமிழ் படத்தில் சன்னி லியோன்: இந்து மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு!



பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்திப் படத்தில் பரத்துடன் நடித்து வருகிறார். அவரை இப்போது தமிழ் படத்துக்கும் கொண்டு வருகிறார்கள்.
தயாநிதி அழகிரி தயாரிக்கும் வடகறி படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடுவதற்கு சன்னி புக் செய்யப்பட்டிருக்கிறார். அப்படியே தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க சன்னி திட்டமிட்டிருக்கிறார். நீலப்பட நடிகையின் தமிழ் வருகைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் “சன்னி லியோன் போன்ற நீலப்பட நடிகைகளை அனுமதித்தால் தமிழ்நாடு நீலப்பட நடிகைகள் சுதந்திரமாக நடமாட வசதியாகிவிடும்.
நீலப்படங்கள் தவறானதல்ல என்ற கருத்து உருவாகிவிடும். இது தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, தமிழ் கலாச்சாரத்துக்கே முரணாகிவிடும். ஒரு போதும் சன்னி லியோன் தமிழ் படத்தில் நடிப்பதை அனுமதிக்க மாட்டோம். அதை உரிய வகையில் தடுத்து நிறுத்துவோம்” என்று கூறியிருக்கிறார்.

எய்ட்ஸ் விழிப்புணர்வு அனிமேஷன் படத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாஸன்!




உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரச்சார அனிமேஷன் படத்தில் முன்னணி நடிகர்கள் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி மற்றும் சித்தார்த் நடித்துள்ளனர்.
டீச் எயிட்ஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் எச்ஐவி, எயிட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், தடுப்பு முறைகள் குறித்தும் உலக மக்களிடையே பல ஆண்டுகளாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இந்திய அளவில் எயிட்ஸ் பாதிப்பு அதிகம் ஏற்பட்டள்ள மாநிலம் தமிழகம் என்கிறது ஒரு புள்ளி விவரம். உலக எயிட்ஸ் தினமாக அனுசரிக்கப்படும் டிசம்பர் முதல் தேதியில் உலகம் முழுவதும் எயிட்ஸ் விழிப்புணர்வு குறித்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்த அமைப்பு தமிழ் அனிமேஷன் என்ற பெயரில் உருவாக்கியுள்ள எயிட்ஸ் விழிப்புணர்வு தமிழ் அனிமேஷன் படத்தின் காட்சிகளில் எயிட்ஸ் விழிப்புணர்வு குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன.