19.11.13
விலைமாது பாத்திரத்தில் ஹரிப்ரியா
"கனகவேல் காக்க', "முரண்' உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும் தமிழில் சரிவர வாய்ப்பு இல்லாததால், தன் தாய் மொழியான கன்னடப் படங்களில் நடித்து வந்தார் ஹரிப்ரியா. தற்போது மீண்டும் தமிழில் "அட்டகத்தி' தினேஷுடன் நடித்துவரும் அவர், தெலுங்கில் நடித்த "அப்பய் கிளாஸ் அம்மாயி மாஸ்' என்ற படம் சூப்பர் ஹிட்டானதால், அந்தப் படத்தை தன் தென்னிந்திய நாயக, தயாரிப்பாள நண்பர்களுக்குப் போட்டுக் காட்ட ஏற்பாடு செய்தார். படத்தைப் பார்த்த பிரபலங்கள் வாயடைத்துப் போனார்களாம். "ஹரிப்ரியாவா இப்படி...' என்று அவரை மேலும் கீழும் பார்த்தார்களாம். விலைமாது பாத்திரத்தில், படுக்கையறை காட்சிகளில் அத்தனை கவர்ச்சியாக நடித்திருந்தாராம். இதைப் பார்த்த சில தயாரிப்பாளர்கள் அங்கேயே அடுத்த படத்தில் நடிக்க அட்வான்ஸ் கொடுத்துவிட்டார்களாம்.
ரஜினியுடன் மோத முண்டா தட்டும் அஜீத் விஜய்!
பொதுவாக ரஜினி படங்கள் ரிலீசாகும்போது, அதற்கு ஒரு வாரம் முன்பும் இரண்டு மூன்று வாரங்கள் கழித்தும் வேறு படங்களை யாரும் வெளியிடுவதில்லை. இது கடந்த சில ஆண்டுகளாகவே தொடரும் வழக்கம். கடைசியாக ரஜினி படம் வந்தபோது, அதனுடன் மோதியவை கமலின் மும்பை எக்ஸ்பிரசும் விஜய்யின் சச்சினும். இரண்டுமே தோல்வியைத் தழுவின. சந்திரமுகி சரித்திரம் படைத்தது. அதன் பிறகு அவரது எந்தப் படத்தோடும் மோத வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் வரவில்லை. காரணம், ரஜினியின் சிவாஜியிலிருந்துதான் ஒரே நேரத்தில் அதிக அரங்குகளில் படத்தை வெளியிட்டு, தயாரிப்பாளர் போட்ட பணத்தை குறுகிய காலத்தில் எடுக்கும் முறை அறிமுகமானது. ரஜினி போன்ற உலகளாவிய ரசிகர்களைக் கொண்ட ஹீரோக்களின் படங்கள் சோலோவாகக் களமிறங்குவதுதான் திருட்டு விசிடி பிரச்சினையிலிருந்து படத்தைக் காக்கும் என தயாரிப்பாளர்களும் இந்த சிஸ்டத்தை ஆதரித்தனர். இந்த நிலையில், ரஜினியின் புதுப் படம் கோச்சடையான் பொங்கலுக்கு வெளியாவதாக அதன் தயாரிப்பாளர் முரளி மனோகர் அறிவிதச்தார். எனவே வீரம், ஜில்லா போன்ற படங்கள் சில வாரங்கள் கழித்து வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ரஜினியின் படம் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட பிறகும், தனது வீரம் படத்தை அதே நாளில் களமிறக்கப் போவதாக அஜீத்தும் அவரது தயாரிப்பாளரும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஜில்லா படத்தையும் பொங்கல் அன்றே, அதுவும் கோச்சடையான் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட ஜனவரி 10-ம் தேதியே வெளியிடப் போவதாக அதன் தயாரிப்பாளர் மகன் ரமேஷ் அறிவித்துள்ளார். சந்திரமுகி செய்த சாதனையை கோச்சடையான் படைக்குமா... பார்க்கலாம்! உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
காதலர் தினத்திற்கு மறுநாள் அஜீத்-கௌதம் மேனன் படம் ஆரம்பம்
பிப்ரவரி 15ம் தேதி துவங்கும் அஜீத்-கௌதம் மேனன் படம்

சென்னை: அஜீத் குமாரை வைத்து கௌதம் மேனன் எடுக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் 15ம் தேதி துவங்குகிறது.
கௌதம் மேனன் அஜீத் குமாரை வைத்து படம் எடுக்கப் போவதாக அறிவித்தார்.
அந்த படப்பிடிப்பு எப்பொழுது துவங்கும் என்று அஜீத் ரசிகர்கள் ஆவலாக இருந்தனர்.
சென்னை: அஜீத் குமாரை வைத்து கௌதம் மேனன் எடுக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் 15ம் தேதி துவங்குகிறது.
கௌதம் மேனன் அஜீத் குமாரை வைத்து படம் எடுக்கப் போவதாக அறிவித்தார்.
அந்த படப்பிடிப்பு எப்பொழுது துவங்கும் என்று அஜீத் ரசிகர்கள் ஆவலாக இருந்தனர்.
பகல் கொள்ளைன்னு பேர் வச்சிருந்தா எங்க குடும்பத்தையே கலாய்ச்சிருப்பீங்க - அருள்நிதி
சென்னை: பகல் கொள்ளை என்றுதான் என் படத்துக்கு முதல் தலைப்பு வைத்தேன். ஆனா அப்படி வச்சிருந்தா நீங்க எப்படியெல்லாம் கலாய்ப்பீங்கன்னு எனக்கு தெரியும், அதான் தகராறுன்னு வச்சிட்டோம், என்றார் கருணாநிதியின் பேரனும் நடிகருமான அருள்நிதி. வம்சம் படத்தில் ஹீரோவாக அறிமுகமான அருள்நிதி, மவுன குரு படத்துக்குப பிறகு நடித்து வெளிவரும் படம் தகராறு. இதில் அவருக்கு ஜோடி பூர்ணா. இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடந்தது. நிகழ்ச்சியில் நடிகை பூர்ணா, இயக்குநர் கணேசன், இசையமைப்பாளர் தரண் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்தது அருள்நிதியின் பேச்சு. மவுனகுரு படத்தின் பிரஸ்மீட்டில் பேசவே மறுத்து, பின் கொஞ்சம் முரட்டுத்தனமாகப் பேசி, திமிர் பிடித்தவர் போலிருக்கே என்ற கமெண்டுக்கு ஆளான அருள்நிதியா இந்தப் போடு போடுகிறார் என ஆச்சர்யமாக இருந்தது. அவரது பேச்சு: முதல் முறை, ஒரு முழுமையான ஹீரோவா நான் பண்ற படம் இந்த தகராறு. இதுக்கு முந்தைய படங்கள்ல வெகுளித்தனமா அல்லது ரொம்ப சீரியஸான கேர்கடர்கள்ல நடிச்சேன். ஆனால் இந்தப் படத்தில்தான் ஒரு ஹீரோவுக்குரிய அத்தனை விஷயங்களையும் செஞ்சிருக்கேன். அட, டான்ஸ் கூட போட்டிருக்கேங்க.. தயாரிப்பாளர் துரை (தயாநிதி அழகிரி) என் அண்ணன் என்பதை விட, நல்ல நண்பன்னு சொல்லலாம். நான் நல்லா இருக்கணும்னு நினைக்கிற உண்மையான நண்பன் அவன். இப்போல்லாம் கூடப் பிறந்தவங்க கூட அடுத்தவன் நல்லாருக்கணும்னு நினைக்கிறதில்லை. குடும்பத்துக்குள்ளேயே அடிச்சிக்கிறாஹ்க, சண்டைன்னு நீங்களே எழுதறீங்க... அதான் இப்போ தகராறுன்னு தலை்பபே வச்சிட்டோம். நான் எல்லாரையும் சொல்லல, சிலர் அப்படித்தான் இருக்காங்க. ஆனா எங்க குடும்பத்துல யாரும் அப்படி இல்ல. அதுக்கு பெரிய உதாரணம் துரை. இந்தப் படத்துக்கு முதலில் பகல் கொள்ளை என்றுதான் பேர் வச்சோம். அப்புறம் இந்தத் தலைப்பை வச்சி நீங்க எப்படியெல்லாம் கலாய்ப்பீங்க என்று நினைச்சிப் பார்த்துதான் வேற தலைப்பு வச்சோம்," என்றார்.
ரகசிய திருமணம்... தனிக்குடித்தனம்... மெய்யாலுமா விஷால்?
பரபர கிசுகிசுவாக ஓடிக் கொண்டிருக்கிறது, உடன் நடித்த நடிகையுடன் ரகசியத் திருமணம் முடித்து தனிக்குடித்தனம் செய்து கொண்டிருக்கிறார் நடிகர் விஷால் என்ற மேட்டர். தமிழ் இளைஞர்கள் வேண்டுமானால் என்னைக் காதலித்துக் கொள்ளட்டும். ஆனால் மணந்தால் மலையாளிதான் என்று கூறிக்கொண்டிருந்த அந்த களையான நடிகையைத்தான் மனைவியாக்கிக் கொண்டார் என சிலரும், இல்லையில்லை இவர் வேறு என்று சிலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எதுக்கு இந்த சஸ்பென்ஸ், இழுவை சமாச்சாரமெல்லாம்... நேரடியாகவே கேட்டுவிட்டால் போகிறது என்று விஷாலையே விசாரித்தோம்.
'நான் எந்த விஷயத்தையும் பெரும்பாலும் மறைத்ததில்லை. அதுவும் மீடியாவிடம் உண்மையைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு ஹிட் கிடைச்சிருக்கு. இன்னும் இப்படி நிறைய சந்தோஷங்களைப் பார்க்கணும் நான். அப்புறம் திருமணம் எனும் பெரிய சந்தோஷத்தை அனுபவிச்சிக்கிறேன். இது வெறும் கிசுகிசுதான்.. எனக்கு அதில் வருத்தமும் இல்லே," என்றார்.
18.11.13
Ennachu 2013 Tamil Movie Songs Free Download
Ennachu 2013 Tamil Movie MP3 Songs Free Download
*****Songs are for promotional purpose only. Please buy original CD*****
Azhagu Magan 2013 Tamil Movie MP3 Songs Free Download
Azhagu Magan 2013 Tamil Movie MP3 Songs Free Download
*****Songs are for promotional purpose only. Please buy original CD*****

Azhagu Magan 2013 Tamil Movie Info:
Azhagu Magan – 2013
Music : James Vasanthan
Cast: Udhay, Malavika Wales, Ilavarasu, Pavan
Year 2013
1.Koothadikudhu Koothadikudhu - Shankar Mahadevan, Chorus Download
Sankarapuram 2013 Tamil MP3 Songs Download Free
Sankarapuram 2013 Tamil MP3 Songs Download Free
*****Songs are for promotional purpose only. Please buy original CD*****
Director: P.V.Nambi Rajen
Producer: G.R.Vijay Sukumaran
Cast: Harikumar, Suhana, Radharavi, and others
Music: Sabesh – Murali
Producer: G.R.Vijay Sukumaran
Cast: Harikumar, Suhana, Radharavi, and others
Music: Sabesh – Murali
குழந்தைகள் சீக்கிரம் பேச
குழந்தைகள் சீக்கிரம் பேச வேண்டுமா?
குழந்தைகள் பிறந்த பின்னர் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பேசுவது. ஏனெனில் அனைத்து குழந்தைகளும் சீக்கிரம் பேசிவிடமாட்டார்கள். சில குழந்தைகள் பேசுவதற்கு கொஞ்சம் தாமதம் ஆகும். சொல்லப்போனால் தாமதமான பேச்சு என்றால், எப்போது குழந்தை ஒரு வார்த்தை கூட பேசாமல், ஒரு சில வார்த்தைகள் மட்டும் பேசுகிறதோ, அதைத் தான் சொல்வார்கள்.
மேலும் சில குழந்தைகள் 2 வயதாகியும் பேசமாட்டார்கள். அப்போது உடனே குழந்தைகளை குழந்தை நல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். அடுமட்டுமின்றி அத்தகைய குழந்தைகளை விரைவில் பேச வைப்பதற்கான முறைகளையும் தெரிந்து கொண்டு, அதனை குழந்தைகளில் நடைமுறைப்படுத்தி, விரைவில் பேச வைக்க வேண்டும். இப்போது அந்த மாதிரியான குழந்தைகளை விரைவில் பேச வைப்பதற்கான சில வழிகளைப் பார்ப்போமா!!!
* குழந்தை 2 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதாகியும் பேசவில்லையெனில் அதற்கு காரணம் அவர்களுக்கு சரியாக எழுத்துக்கள் புரியவில்லை என்று அர்த்தம். ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு எதுவும் சரியாக பேசத் தெரியாது. அதனால் சில குழந்தைகள் பேசுவதற்கு பயந்து பேசாமல் இருப்பார்கள். ஆனால் அவர்கள் பெற்றோர் சொல்வதை அப்படியே நினைவில் வைத்து பேசும் திறன் கொண்டவர்கள். எனவே அவர்களின் பேச்சுத்திறனை அதிகரிக்க, அவர்களிடம் பெற்றோர் நன்கு பேச வேண்டும். அவ்வாறு அவர்கள் பேசும் போது, அவர்களை உற்சாகப்படும் படியாகவும், அவர்களை அதிகமாக பேச வைப்பது போலும் பேச வேண்டும்.
* ஏதாவது ஒரு புதிய சொல்லை சொல்லித் தரும் போது, அவர்களுக்கு அதை போட்டோவில் காண்பிக்காமல், முடிந்த வரையில் அந்த பொருட்களை அவர்களுக்கு நேரில் காண்பிப்பது நல்லது. அதே நேரம் அந்த பொருள் எதற்கு உதவுகிறது என்றும் அவர்களுக்கு புரியும் வகையிலும் சொல்ல வேண்டும். முக்கியமாக எந்த ஒரு பொருளை பார்க்கும் போதும், அதை அவர்களிடம் திரும்ப திரும்ப சொன்னாலும், அவர்கள் மனதில் பதிந்துவிடும். அவர்களும் எந்த பயமுமின்றி பேசுவார்கள்.
* குழந்தைகளுக்கு படங்களுடன் கூடிய புத்தகங்களை காண்பித்து, அதை அவர்களுக்கு அடிக்கடி காலை அல்லது மாலை நேரங்களில் சொல்லிக் கொடுக்க வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், அவர்கள் மனதில் எந்த ஒரு விஷயமும் எளிதில் பதிந்துவிடும். அதுமட்டுமின்றி, அந்த சொற்களை திரும்ப திரும்ப சொல்லும் போது, அவர்கள் அதை எப்போதும் மறக்காமல் இருப்பார்கள்.
* குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக் கொடுப்பதன் மூலமும் அவர்களை விரைவில் பேச வைக்கலாம். அதையும் ராகத்துடனும், அசைவுடனும் சொல்லிக் கொடுத்தால், அவர்களுக்கு ஆர்வம் அதிகரிப்பதோடு, மனதில் உற்சாகம் அதிகரித்து, அவர்களை எளிதில் பேச வைக்கலாம்.
* சில குழந்தைகள் விரைவில் பேசாமல் இருப்பதற்கு, அவர்களது வெட்கமும் காரணம் என்று சொல்லலாம். ஆகவே அவர்களின் வெட்கத்தை போக்குவதற்கு அவர்களை வெளியே அழைத்துச் சென்று, மற்ற குழந்தைகளுடன் விளையாட வைப்பதன் மூலமும், அவர்கள் வெட்கத்தை விட்டு, மற்றவர்கள் எப்படி பேசுகின்றனர் என்பதைப் புரிந்து பேச ஆரம்பித்துவிடுவார்கள்.
மழலை மொழி என்பது ஒரு இனிமையான ஒரு மொழி. அந்த இனிமையான மொழியை உங்கள் குழந்தைகளிடம் விரைவில் கேட்க வேண்டுமென்று ஆசைப்பட்டால், அவர்களை விரைவில் பேச வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு, பேச வைக்க வேண்டும். ஆகவே மேற்கூறிய ஒரு சிலவற்றை பின்பற்றுவதன் மூலம் அவர்களை விரைவில் பேச வைக்கலாம். வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்குத் தெரிந்தால், அதை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
Subscribe to:
Posts (Atom)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)


















