தன் வீட்டுக்கு வந்து தன்னை தாக்கியவரை கைது செய்த போலீசாருக்கு ஸ்ருதி ஹாஸன் நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த 19ம் தேதி காலை மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள ஸ்ருதி ஹாஸன் வீட்டுக்கு சென்ற நபர் ஒருவர் அவரின் கழுத்தை நெறித்து தாக்கினார். இந்த சம்பவம் குறித்து ஸ்ருதி கடந்த 21ம் தேதி இரவு போலீசில் புகார் கொடுத்தார்.
அவர் புகார் கொடுத்த 48 மணிநேரத்திற்குள் விரைந்து செயல்பட்ட போலீசார் நேற்று அந்த நபரை கைது செய்தனர். அசோக் த்ரிமுகே(32) என்னும் அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கூறுகையில்,
நான் ஸ்ருதி தங்கியிருக்கும் வீட்டில் உள்ள காவலாளிகள் வைத்திருக்கும் பதிவேட்டில் எனது பெயரை எழுதிவிட்டு தான் அவரது வீட்டுக்கு சென்றேன். எனது சகோதரருக்கு வேலை கேட்டு சென்றேன். அவரை தாக்கும் எண்ணத்தில் செல்லவில்லை. அவர் என்னைப் பார்த்து பயந்து கதவை சாத்திவிட்டார் என்றார்.
அசோக் பிலிம் சிட்டியில் ஸ்பாட் பாயாக வேலை பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அசோக்கை கைது செய்த மும்பை போலீசாருக்கு ஸ்ருதி ஹாஸன் ட்விட்டரில் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment