25.11.13

தாய்ப்பால் கொடுத்தால் பெண்களுக்கு புற்றுநோய் வராது

ht1483



குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் புற்றுநோய் வராது என்று சென்னை அரசு பொது மருத்துவமனை டீன் கனகசபை தெரிவித்தார். உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7ம் தேதி வரை ‘உலக தாய்ப்பால் ஊட்டும் வாரம்’ கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்த கருத்தரங்கம் எழும்பூர் அரசு மகப்பேறு தாய்சேய் நல மருத்துவமனையில் நேற்று நடந்தது. ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் கனகசபை, கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகையில், “தாய்ப்பால் கொடுப்பதினால், குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆஸ்துமா, அலர்ஜி ஏற்படாது. தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களின் அழகு அதிகரிக்கும். மார்பக, கர்ப்பப்பை மற்றும் வாய் புற்றுநோய் வராது. 3 வயது வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம். இந்தியாவில் பிறந்த குழந்தைக்கு முதல் 6 மாதம் வரை தாய்ப்பால் கொடுப்பதில் சட்டீஸ்கர் மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. இதில், தமிழகம் 33.3 சதவீதம் பெற்று 20வது இடத்தில்தான் இருக்கிறது’’ என்றார். மருத்துவமனை டீன் தகவல்

No comments:

Post a Comment