28.11.13

ரஜினியின் அட்வைசுக்கு பிறகு உஷாரான கோலிவுட் ஹீரோக்கள்!


ஒரு படத்தில் நடித்து அப்படம் வெளியான பிறகுதான் அடுத்த படத்தில் நடிப்பதை கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் கடந்த ஆண்டு வரை கடைபிடித்து வந்தனர். ஆனால், கும்கி படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினி, ஒரே நேரத்தில் இரண்டு மூன்று படங்களில் நடிப்பதுதான் சரியானது.
காரணம், மூன்று படங்களில் நடிக்கிறபோது அதில் இரண்டு தோல்வியடைந்தாலும் ஒரு படம் வெற்றி பெற்று மார்க்கெட்டை காப்பாற்றி விடும் என்று இன்றைய இளவட்ட ஹீரோக்களுக்கு தனது சார்பில் அனுபவரீதியான அறிவுரையை வழங்கினார்.
அதையடுத்துதான், ஒரு படத்தில் நடித்து அதன் ரிசல்ட்டை பார்த்து விட்டு அடுத்த படத்தில் கமிட்டான விஜய், அஜீத் போன்ற ஹீரோக்கள், ஒரு படத்தில் நடித்து முடித்ததும் அந்த படம் ரிலீசாவதற்கு முன்பே அதற்கடுத்த படத்தில் நடிக்கத் தொடங்கி விட்டனர்.
அதேபோல், பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகின்றனர். இவர்களில் விக்ரம் பிரபு நடிப்பில் கும்கி மட்டுமே வெளிவந்திருக்கிறது. ஆனால் இப்போது இவன் வேற மாதிரி, சிகரம் தொடு, அரிமா நம்பி, தலப்பாகட்டி, எழில் இயக்கும் படம் என 5 படங்களில் நடித்து வருகிறார்.
மணிரத்னத்தின் கடல் படத்தில் அறிமுகமான கெளதம் கார்த்திக, வை ராஜா வை, சிப்பாய், நானும் ரவுடிதான், என்னமோ ஏதோ என நான்கு படங்களில் நடித்து வருகிறார். இவர்களைப்பார்த்து இப்போது ஜெய் போன்ற நடிகர்களும் அதிகப்படியான படங்களை கைப்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment