44வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த கமல், கோவா திரைப்பட விழாவில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவர் மீடியாவை சந்தித்தபோது, அவர் கொடுத்த பேட்டியிலிருந்து சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ…
* ஏக் துஜே கேலியே(கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல், ரதி நடித்தது) படப்பிடிப்பிற்காக கோவா வந்திருந்தேன். அது தான் கோவாவிற்கு எனது முதல் விஸிட். அந்தப்படம் எனது 101-வது படம், அந்தப்படப்பிடிப்பின் போது ஷெட்டில் ஒர பையன் இருந்தான்.
என்னுடனே நாள் முழுவதும் இருப்பான். பலரிடம் நான் தான் அவனுடைய தந்தை என்று சொல்லுவான்(ஏன்? என தெரியவில்லை) சிரிக்கிறார். அவனுக்கு நீந்துவதற்கு நான் அப்போது சொல்லிக் கொடுத்தேன். கோவா உணவு எனக்கு ரொம்ப பிடிக்கும். பல விஷயங்களில் கோவா எனக்கு முக்கியமானது.
* இதுவரை ஐம்பது மலையாள படங்களில் நடித்திருக்கிறேன். அங்கு உள்ள திரைப்படத்துறையினர் நான் ஒரு மலையாளி என்றே கருதுகிறார்கள். அங்கிருந்து தமிழ் படங்களுக்கு சென்று விட்டதாக நினைக்கிறார்கள்.
விஸ்வரூபம்-2 படத்தை இந்தியில் விஸ்வரூபா-2 என்று அழைக்க போகிறோம். விஸ்வரூபம் அல்ல, விஸ்வரூபம் ரிலீஸானபோது, பெயரை பார்த்து இது டப்பிங் படம் என்று ஆடியன்ஸ் கருதிவிட்டார்கள். இந்தியில் உருவாக்கப்பட்ட படம் இது என்பதை தெளிவுப்படுத்தவே விஸ்வரூபா-2.
* என் மகள் ஸ்ருதியிடமிருந்து ஒரு நடிகையாக நிறையவே எதிர்பார்க்கிறேன். ரஜிகாந்த் போன்ற நடிகர்களை பார்த்து குழந்தையாக ஷெட்டுக்கு ஷெட் தாவி வளர்ந்த பெண். நிறைய சாதிக்க வேண்டும். இசையில் முறையாக ஸ்ருதி, பயிற்சி பெற்றவர்.
* இந்தி திரைப்பட ரசிகர்களிடம் நிறைய பாப்புலாரிட்டி இருக்கும் ஒரு சில தென்னிந்திய நடிகர்களில் கமல்ஹாசன் முக்கியமானவர். நிறைய புதிய சவால் உள்ள பாத்திரம் கிடைத்தால் தான் இந்தி படங்கள் பண்ணுவதில் அர்த்தம் இருக்கிறது.
அதிகப்பணம் கிடைப்பதற்காக மட்டும் அல்ல. புதிய எல்லைகளை உருவாக்க மேலும் அதிக ஆடியன்ஸ் பெறுவதற்கும் பொருத்தமாக இருக்கும் என்கிறார் கமல்.
* விஸ்வரூபம் படத்தின் ரிலீஸின் போது ஏற்பட்ட சர்ச்சைகள் பற்றி கேட்டபோது, சர்ச்சை மட்டும் ஒரு படத்திற்கு உதவி ஆகாது. சர்ச்சை எப்படி ஒரு பெண்ணின் திருமணத்திற்கு உதவும்? அது போலத்தான் இதுவும்! விஸ்வரூபம் வெற்றி பெற்றதால், இரண்டாவது பாகம் உருவாக்கப்படவில்லை. விஸ்வரூபம் படப்பிடிப்பு நடக்கும் போதே இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டோம்.
* இந்தியாவின் மிகவும் போற்றப்படும் திறமையுள்ள நடிகராக இருக்கும் பத்மஸ்ரீ விருது பெற்ற கமல், தான் சாதித்ததே போதும் என்று மகிழ்ச்சியாக திருப்தி அடைந்ததாக இருப்பார் என்று யாராவது நினைத்தால் அது தவறு, மேலும் மேலும் புதுமைகள் செய்ய விரும்பும் கமல், இதுவரை நான் பெற்றுள்ள விருதுகளுக்கு நான் இன்னும் தகுதி உடையவனாக இருந்திருக்க வேண்டும் என்று தன்னடக்கமாக கூறுகிறார்.
நடிகர், கதாசிரியர், பாடல் கவிஞர், தயாரிப்பாளர், டான்ஸ் மாஸ்டர், பாடகர் என்று பல துறைகளில் தன்னை தொடர்ந்து எப்போதும் தன் தரத்தை உயர்த்திக் கொள்ளுவது தான் கமலின் செயல்பாடு. இந்த குணம் தான் அவருக்கு 4 தேசிய விருதுகளையும், 19 பிலிம்பேர் விருதுகளையும் பெற்று கொடுத்திருக்கிறது. இந்த சாதனையை இதுவரை எந்த நடிகரும் செய்ததில்லை.
* கமல் தனது முதல் ஸ்கிரிப்ட்டை ”உணர்ச்சிகள்” என்ற படத்திற்காக தனது 18வது வயதில் எழுதியிருக்கிறார். தொடர்ந்து ராஜபார்வை, சத்யா, அபூர்வ சகோதரர்கள் போன்ற படங்களின் கதைகளை கமல் எழுதியிருக்கிறார்.
* எனக்கு 25 வயதாகும் போது 100 படங்களில் நடித்துவிட்டேன் என்கிறார் கமல். அவருடைய திரை உலக வயது 53. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிப்படங்களில் நடித்திருக்கிறார்.
* இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட படங்களிலேயே கமல் படங்கள் தான் அதிகம்.
* வேறு எந்த நடிகரும் நினைத்து பார்க்க முடியாத சோதனையை சாதனையாகச் செய்தவர் கமல். புஷ்பக விமானம், பேசும்படம் என்று ஒரு வசனம் கூட இல்லாமல் புதுமையான, நகைச்சுவையான படங்களை உருவாக்கி வெற்றி பெற்றவர் கமல். புதிய முயற்சிகள் என்பது ரசிகர்களுக்கு எவ்வளவு முக்கியமோ, அதேப்போன்று நடிகர்களுக்கும் முக்கியம் என்கிறார் கமல்.
* வேகமாக வளர்ந்து வரும் டெக்னாலஜி பற்றி கேட்டபோது, எவ்வளவு டெக்னிக்கல் முன்னேற்றம் வந்தாலும், கதை தான் எப்போதும் முக்கியம். சினிமாவிற்கு டெக்னாலஜியை கொடுத்து வரும் நிறுவனங்களுக்கு பயம் தான் முக்கியமாக இருக்கிறது என்றார்.
No comments:
Post a Comment