28.11.13

படாதிபதிகளை மயக்கம் போட வைக்கும் நயன்தாரா!



இரண்டாவது இன்னிங்சில் நயன்தாரா நடித்த ராஜா ராணி, ஆரம்பம் என்ற இரண்டு படங்களுமே ஹிட் என்பதால், எதிர்பாராதவிதமாக அவரது மார்க்கெட் எகிறி நிற்கிறது. இந்தியில் வித்யாபாலன் நடித்த கஹானியின் ரீமேக் படமான அனாமிகா தெலுங்கில் மீண்டும் நயன்தாராவின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியுள்ளது.
இதன்காரணமாக, முதல் இன்னிங்சில் இருந்த அதே பரபரப்பு இப்போதும் நயன்தாராவை தொற்றிக்கொண்டுள்ளது. அதனால் தனது மாஜி கதாநாயகர்களுடன் அடுத்தடுத்து நடிப்பதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டிருந்த நேரம்தான், இனி யாருடன் நயன்தாரா இணைந்து நடிக்கவே மாட்டார் என்று கோடம்பாக்கம் நினைத்திருந்ததோ அதே சிம்புவுடன் மீண்டும் இணைந்து விட்டார் நயன்தாரா.
இதனால் இதுவரை இருந்ததை விடவும் அவரது மார்க்கெட் இப்போது இன்னும் சூடு பிடித்திருக்கிறது. அதற்கு முன்புவரை பெரிய அளவில் டாக் இல்லாமல் இருந்த அந்த படம் பற்றிய செய்திகள் தற்போது பற்றி எரியத் தொடங்கியிருக்கிறது.
இதன்காரணமாக, அவரை புக் பண்ணுவதற்காக மேலும் சில மெகா பட நிறுவனங்கள் தொடர்பு கொண்டன. ஆனால், சிம்புவுடன் நடிக்கும் படத்துக்கு பேசியிருக்கிற சம்பளத்தை நயன்தாரா சொல்லக்கேட்டதுமே சில படாதிபதிகளுக்கு மயக்கமே வந்து விட்டதாம். அந்த அளவுக்கு பல கோடிகளை சொடக் போட்டு சொல்லி அடிக்கிறாராம் நயன்.

No comments:

Post a Comment