10.12.13

வேளாண் காப்பீட்டு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவு: உழவர் முன்னணி கண்டனம்

வேளாண் காப்பீடு திட்டத்தை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ள மத்திய அரசை வன்மையாக கண்டிப்பது என தமிழக உழவர் முன்னணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழக உழவர் முன்னளி கடலூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் சிதம்பரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அ.க.சிவராமன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம், துணைச் செயலாளர் ரா.சரவணன், ஒன்றியச் செயலாளர்கள் சாக்காங்குடி என்.ஜெயபாலன், தங்க.கென்னடி, செயற்குழு உறுப்பினர்கள் வே.பொன்னுசாமி, சி.ராஜேந்திரன், வி.ராஜா, கோ.நாராயணசாமி, மு.சம்பந்தம், அ.மதிவாணன், மா.கோ.தேவராசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அக்ரிகல்சர் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட் என்ற மத்தியஅரசு நிறுவனத்திடம் உள்ள உழவர்களுக்கான பயிர் காப்பீடு திட்டத்தை மாற்றி அமைத்து தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கு மத்தியஅரசு எடுத்துள்ள முடிவை வன்மையாக கண்டிப்பது; புதுச்சேரி அரசு செய்தது போல் உழவர்களின் பயிர் காப்பீடு கட்டணம் முழுவதையும் தமிழகஅரசே செலுத்த வேண்டும்; கடலூர் மாவட்டம் வீராணம்அரியின் பராமரிப்பு, நீர் நிர்வாகம் ஆகிய அனைத்தையும் பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்; வேளாண் காப்பீடு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிடக்கோரி கையெழுத்து இயக்கம் நடத்தி மத்தியஅரசுக்கு அனுப்புவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment