எதிர்காலத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது எச்சரிக்கையுடன் பேச வேண்டும் எனவும், வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட வேண்டாம் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.
ஏற்காடு தொகுதி தேர்தல் பிரசாரத்தின் போது விதிகளை மீறவில்லை என ஜெயலலிதா அண்மையில் அளித்த விளக்கத்தையும் தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலர் தபஸ் குமார் வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு வருமாறு:
"தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் நடைபெறும் மாநிலத்தில் உள்ள அமைச்சர்களோ, அதிகாரிகளோ நிதியுதவி தொடர்பான எவ்வித வாக்குறுதியையும் வாக்காளர்களுக்கு அளிக்கக் கூடாது; சாலை, குடிநீர் வசதி போன்ற வாக்காளர்களை ஈர்க்கும் திட்டங்களை நிறைவேற்றுவோம் என்பது தொடர்பான வாக்குறுதிகளை அளிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் ஒவ்வொரு கால கட்டத்திலும் கூறி வருகிறது.
தேர்தலில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் போட்டியிட சமமான வாய்ப்பையும், சூழலையும் உருவாக்கித் தர வேண்டும். தேர்தலின் புனிதத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. அந்த அடிப்படையில், அனைத்து அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், முக்கியத் தலைவர்கள் உள்ளிட்டோர் தேர்தல் நடத்தை விதிகளை முழு மனதுடன் பின்பற்ற வேண்டும்.
எனவே, விதிகளை மீறியதாக விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீஸýக்கு நீங்கள் அனுப்பிய விளக்கத்தை தேர்தல் ஆணையம் நிராகரிக்கிறது. எதிர்காலத்தில் எச்சரிக்கையுடன் இருந்து, வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட வேண்டாம் எனத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்துகிறது' என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
புகாரும் பின்னணியும்: ஏற்காடு சட்டப்பேரவை தேர்தலையொட்டி கடந்த மாதம் 28-ஆம் தேதி ஏற்காடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் சரோஜாவை ஆதரித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்தார். அப்போது அவர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதைப் பரிசீலித்த ஆணையம், ஜெயலலிதாவிடம் புகாருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
ஜெயலலிதா விளக்கம்: அதற்கு ஜெயலலிதா அனுப்பிய பதிலில், "தேர்தல் ஆணையத்துக்குப் புகார் அளித்த கட்சி திமுக. அது அதிமுகவின் போட்டிக் கட்சி. பிரசாரத்தின் போது புதிய திட்டங்களை அறிவிக்கவில்லை; ஏற்கெனவே நிறைவேற்றிய திட்டங்கள், நிறைவேற்ற உள்ள திட்டங்களைப் பற்றியே குறிப்பிட்டேன். மக்களின் தேûவைத்தான் பொதுவான அறிவிப்பாக வெளியிட்டேன். தேர்தல் விதிகளை மீறவில்லை. அதனால், புகார் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.
No comments:
Post a Comment