30.11.13

சிவாஜி சிலை: எல்லார் கண்ணிலும் படும்படி வேற இடத்துல வச்சிடலாம்! - ராதாரவி

சென்னை: சிவாஜி சிலை விவகாரத்தில் நாங்கள் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டோம். இனி நீதிமன்றம்தான் பதில் சொல்லணும்.. வேண்டுமென்றால் இப்போது உள்ளது போல அனைவருக்கும் தெரியும் வகையில் புதிய இடம் தேர்வு செய்து அந்த சிலையை வைக்கலாம் என நடிகர் சங்க செயலாளர் ராதா ரவி தெரிவித்துள்ளார்.  நடிகர் திலகத்தின் சிலையை அகற்ற வேண்டுமென்று அ.தி.மு.க. அரசின் காவல் துறை நீதிமன்றத்தில் தெரிவித்ததற்கு, திரை உலகைச் சேர்ந்தவர்களோ, நடிகர் சங்கத்தினரோ இதுவரை எதிர்ப்பே தெரிவிக்கவில்லையே என்று திமுக தலைவர் கலைஞர் வியாழக்கிழமை தனது கேள்வி பதில் அறிக்கையில் கேள்வி எழுப்பியிருந்தார்.



இதேபோல், இந்த விவகாரத்தில் நடிகர் சங்கத்தினர் மவுனமாக இருப்பது சிவாஜி பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த நிலையை போக்க காங்கிரஸ் தொண்டர்களையும், சிவாஜி ரசிகர்களையும், சிவாஜி மன்றத்தினரையும் ஒன்று திரட்டி மிக விரைவில் நடிகர் சங்கத்தின் கண்டுகொள்ளாத போக்கினை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திடுவோம் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து வாய் திறந்துள்ளார் நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி.
அவர் கூறியுள்ளதாவது:
சிவாஜி கணேசனின் சிலையை அகற்ற வேண்டாம் என்று நாங்களும் கமிஷனர் அலுவலத்தில் மனு கொடுத்திருக்கிறோம். அப்போது இதுகுறித்து அவர்கள் தெளிவாகக் கேட்டுக் கொண்டனர்.
தமிழத் திரை உலகத்தின் முக்கியமான, தவிர்க்க முடியாத நடிகர் சிவாஜி கணேசன். இப்போது அவரது சிலை அமைந்திருக்கும் இருக்கும் இடமே முக்கியத்துவம் வாய்ந்த இடம்.
அப்படி அந்த சிலையை அகற்றியே ஆக வேண்டும் என்றால் தற்போதைய இடத்தைப்போல எல்லோர் கண்ணிலும் படும் வகையிலான நல்ல ஒரு இடத்தைத் தேர்வு செய்து அங்கே இந்த சிலையை வைக்க வேண்டும்.
போக்குவரத்து காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு குறித்து நீதிமன்றம்தான் பதில் சொல்ல வேண்டும்," என்றார்.
- See more at: http://www.tamil.thecinemanews.com/2013/11/blog-post_9850.html#sthash.zsLYGiDx.dpuf

No comments:

Post a Comment