10.12.13

Ajith's intro with heavy stunts and dance moves in Veeram

Ajith's intro with heavy stunts and dance moves in Veeram

In Kollywood, introduction songs of heroes have always been loved and cheered by the audience. Keeping this in mind, director Siva has filmed the intro song of Ajith in Veeram in an interesting way. 
We hear that the song will feature the actor and his onscreen brothers doing heavy movements, along with action stunts!

"We wanted to film the intro song of Ajith in a special way. So, we decided to incorporate both action stunts and dance movements in it. Choreographer Prem Rakshit and stunt director Selvam put their heads together and came up with very interesting and challenging steps for this song.

I think this is probably the first time that both a dance master and a stunt master are working on a song. We have filmed this one on Ajith and his brothers (played by Vitharth, Bala, Munish and Suhail Chandhok), and this number will introduce the characters they play to the audience," says Siva, quickly adding, "This number won't be like the background songs that play during action sequences in other films."

Jilla Audio Track with 5 songs, 2 Karoake and a theme

Jilla Audio Track with 5 songs, 2 Karoake and a theme

Jilla directed by Neason has Vijay and Mohanlal in the lead with Kajal Agarwal as the heroine. The film is slated to be a Pongal 2014 release.

Imman who has been basking in the success of his recent films like Pandianadu, Varuthapadatha Vaalibar Sangam has scored the music for Jilla also.

The music director recently took to his microblogging site to announce that there would be a total of 8 tracks in the film comprising of five songs, one theme and two Karaoke tracks. It is also to be noted that Vijay has sung a song with Shreya Ghoshal that goes like this – Kandangi Kandangi.

The legendary S P Balasubramaniam and Shankar Mahadevan have also lent their voices to Vijay's intro song in Jilla. Now the fans are eagerly waiting for the release of Jilla’s music, which is expected to be out on 15th or 16th of December.

Trisha sad as her pet dog Cadbury is dead

​Trisha sad as her pet dog Cadbury is dead
Trisha is left ‘devastated’ over the tragic death of her beloved pet dog Cadbury, a mongrel who she picked up nine years back while shooting in Hyderabad.

She flew the abused, dying dog down to Chennai, healed and cured him and ever since was like a mother to the little one.

The actress who is extremely fond of her pets was emotional on Twitter page after her precious pet Cadu as she calls him passed away after a surgery at a vetenary hospital in the city. The pet had a tumour in its stomach and was operated on doctor's advice but did not survive the procedure and breathe his last in the hospital.

The star tweeted her sadness over the passing of the family pet. "Dont know how 2 function without u Cadu. I buried a part of me wit u.RIP my life".

Trisha told kollyinsider.com: " Cadu's loss was the very worst kind of grief for me. I am slowly trying to come out of it".

Why Arrambam doesn't feature ‘Hare Rama..’ song?

Why Arrambam doesn't feature ‘Hare Rama..’ song?

Arrambam, which left the theaters storming with people this Diwali, has been accepted by the ardent fans of Ajith with wide arms. The movie has been having a successful run entering into its 6th week now.

However, many people were wondering why the movie did not feature the ‘Hare Rama Hare Krishna’ song.

Vishnuvardhan, the director of the movie took to social media recently to clarify the same.

“Here we go guys, Hare Rama song was not shot at all. It was to be the third song pre interval. Reason why I didn’t have Hare Rama song was that we felt it would drop the pace towards the interval. It was hard but felt good. It’s a nice song though.”

Director Ram’s next 'Taramani' on 'yo yo' boys and girls

Director Ram’s next 'Taramani'

The shoots of Director Ram’s next movie, Taramani, starring Andrea and newcomer Vasanth Ravi, kickstarted today. An interesting video book of the movie was released on the net and earned good response from fans of the director.

The film promises to be a passionate love story set in the world of the current generation’s youth living in Chennai city. In the video book, Ram refers to Chennai as a city inhabited by ‘yo yo boys’ and ‘yo yo girls’

JSK Film Corporation will be presenting this movie, which has Yuvan Shankar Raja’s music and Theni Eswar’s cinematography. Na. Muthukumar will be penning the lyrics, Sreekar Prasad would be editing and Pavel Kumar would be in charge of art direction.

Arya-Vijay Sethupathy's film why called ‘Purampokku’?



Arya and Vijay Sethupathy1Arya and Vijay Sethupathy play the lead roles in ‘Purampokku’ to be directed by S.P.Jhananathan of ‘E’ and ‘Peranmai’ fame.

The film deals with illegal acquisition of ‘Purampokku’ lands by people with power. The film is produced by UTV Motion Pictures.

But why such a demeaning title? The director clarifies, going back to actual meaning behind the coinage.

"The word Purampokku was actually coined to refer to that which does not belong to any particular entity, but is helpful to all in common. This is why the common land, which does not belong to anyone is called Purampokku land. This is used up by the government for developmental activities for the public. In this film, Arya and Vijay Sethupathi are common men, who help everyone at large" says the director, suggesting a new meaning to the word henceforth, overriding its usage so far.


AR Rahman tunes for Gautham Menon from LA over Skype


Gautham Menon has roped in AR Rahman for the film he is doing now with Simbu. And, the Mozart of Madras has already delivered a song for the film, which the team has started shooting for.

Confirming the news, Gautham says, "Yes, Rahman is onboard the film. He heard the narration in Chennai and agreed to compose the tunes for the film. He then took off to LA as he had other commitments. After three weeks, I called him up in the middle of a busy schedule, and asked him if he could send me a song immediately as I had started shooting for the film. He got to work right away, and sent a tune from there. We sat for over three hours on Skype, and worked on it with the lyrics, which has been penned by Madhan Karky. He then recorded the number in studios in Chennai and LA, and sent me the mix. We are shooting the song in this schedule."

We hear this song sets the tone for the romance between the film's lead actors, with the hero setting his eyes on the heroine for the very first time.

Biriyani with the special effect of Dolby Atmos

Biriyani
Over the years, Tamil film industry has been marking some special things in the history of showbiz. It was Kamal Haasan, who was the first to introduce Dolby Digital in Indian Cinema followed by AURO 3D in Vishwaroopam.

Apparently, Dolby Atmos - the new technology was used by many films in the industry including 'Pizza II - Villa'. Now, Karthi's Biriyani becomes the latest one to come up with such a design. Yes, the film will be released with the special effect of Dolby Atmos in both Tamil and Telugu.

The film is directed by Venkat Prabhu and is produced by KE Gnanavel Raja of Studio Green Films. The film stars Hansika Motwani in female lead and is touted to be a comedy thriller. The film has musical score by Yuvan Shankar Raja and cinematography by Sakthi Saravanan will be an additional attraction. The film is scheduled for release on December 20 along with Jiiva-Trisha starrer 'Endrendrum Punnagai'.

முதல்வர் பாதுகாப்பு கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு பாதுகாப்பபடை பாதுகப்பு கோரி வழக்குரைஞர் பாலாஜி தாக்கல் செய்த மனு தொடர்பாக உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதனையடுத்து உள்துறை செயலாளர்  நிரஞ்சன் மார்டி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.அப்போது அவர் கூறியபோது, முதல்வருக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பு குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்யவேண்டும் என்று கூறினார்.இதனை அடுத்து பாலாஜி தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நடிகர் மயில்சாமிக்கு பாலியல் கும்பல் பணம் கேட்டு மிரட்டல்: போலீஸார் விசாரணை



நகைச்சுவை நடிகர் மயில்சாமிக்கு செல்போனில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் விருகம்பாக்கம் போலீஸில் புகார் செய்தார்.
நேற்று மாலை போன் அழைப்பு ஒன்று அவருக்கு வந்துள்ளது. அவரது செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், "நான் ஒரு போலீஸ்காரர், நாங்கள் ஒரு பாலியல் தொழிலாளியை கைது செய்தோம்; அவரின் செல்போன் எண்ணில் உங்கள் செல்போன் எண் இருக்கிறது. அவர் உங்களிடம் தொடர்பு கொண்டுள்ளார். நீங்கள் ரூ. 50 ஆயிரம் தந்தால் இந்த விவகாரத்தை முடித்துவிடுவோம். இல்லை என்றால் வழக்கம்போல் உங்களுக்கான தொடர்புள்ள செய்தியை பத்திரிகைகளுக்கு அனுப்பி விடுவோம். இன்று மாலைக்குள் ரூ.50 ஆயிரத்தைக் கொண்டு வந்து கொடுத்தால் இதை தவிர்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார். அவர் சொன்ன செய்தியை ஆமோதிப்பது போல், ஒரு பெண் போலீசார் பேசுவதுபோல் ஒரு பெண் இதே தகவலைக் கூறியுள்ளார்.
இதை அடுத்து விருகம்பாக்கம் போலீஸில் புகார் செய்தார் மயில்சாமி. இது தொடர்பாக முதல் கட்ட விசாரணை மேற்கொண்ட போலீஸார், அந்த மிரட்டல் நபரின் செல் எண்ணுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டனர். ஆனால், செல்போன் எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் கூறினர்.

கேஜ்ரிவால் என்னைவிட புத்திசாலி: ஷீலா தீட்சித்

ஆம் ஆத்மி கட்சி தலைவர் கேஜ்ரிவாலுக்கு என்னுடைய அறிவுரை எதுவும் தேவைப்படாது. அவர் என்னை விட அதிக புத்திசாலி என்று கூறியுள்ளார் தில்லி முதல்வர் ஷீலா தீட்சித். தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேஜ்ரிவாலுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.

தே.ஜ.கூட்டணியின் ஓர் அங்கமாக இருக்கவே விரும்புகிறேன்: எடியூரப்பா



நான் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஓர் அங்கமாக இருக்கவே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் கர்நாடக ஜனதா கட்சித் தலைவர் பி.எஸ்.எடியூரப்பா.
இதுகுறித்து, பாஜக தலைவர் அத்வானிக்கு கடிதம் எழுதியதாகவும், தே.ஜ.கூட்டணியில் ஓர் அங்கமாக க.ஜ.கட்சி இருக்க தான் விரும்புவதாகவும் ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றும் எடியூரப்பா கூறியுள்ளார்.
மாநில பாஜக தலைவர்கள் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், மத்தியில் உள்ள தலைவர்கள் இது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. அவர்களிடம் இருந்து ஏதாவது தகவல் வந்தால், நான் எங்கள் கட்சித் தலைவர்களுடன் கலந்து பேசி தெரிவிப்பேன் என்றார் எடியூரப்பா.
எடியூரப்பாவை பாஜகவில் மீண்டும் சேர்க்க முறையாக அழைப்பு அனுப்பப்படும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், எடியூரப்பா இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், அரவிந்த் கேஜ்ரிவால் குறித்து கருத்து தெரிவித்த எடியூரப்பா, அவர் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகவும், காங்கிரஸ் ஆதரவுக் கரம் நீட்டியும் மறுத்தது ஆச்சரியப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.

மிசோரமில் காங்கிரஸ் ஆட்சி



மிசோரமில் ஆட்சி அமைக்க தேவையான அறுதி பெரும்பான்மையை காங்கிரஸ் பெற்றுள்ளது. முடிவுகள் அறிவிக்கப்பட்ட 25 இடங்களில் 23 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 7 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
 மிசோரமில் உள்ள 40 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றுவருகிறது. ஆட்சிஅமைக்க 21 இடங்கள் தேவை என்ற நிலையில் 23 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதால் அங்கு ஆட்சி அமைக்கிறது. மாநில முதல்வர் லால் தன்ஹவ்லா போட்டியிட்ட  இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளார்.
 இனையடுத்து அவர்  நான்காவது முறையாக முதல்வராக பொறுப்பேற்கிறார். எதிர்கட்சியான மிசோரம் முன்னனி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் நான்கு தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக ஒரு இடத்தில்  முன்னிலையில் உள்ளது.

இந்தோனேசியாவில் டிரக் மீது ரயில் மோதி விபத்து: 7 பேர் சாவு

இந்தோனேசியாவில் திங்கள்கிழமை எரிபொருள் ஏற்றி வந்த டிரக் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில், 7 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து போலீஸார் தெரிவித்ததாவது:-
இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவின் வடக்குப்பகுதியில் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக எரிபொருள் ஏற்றி வந்த டிரக் மீது ரயில் மோதியதில், டிரக் வெடித்து சிதறியது. அதையடுத்து அந்த பகுதி புகை மண்டலமாக மாறியது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன. ரயிலில் இருந்த பயணிகள் அபாயக்குரல் எழுப்பினர். விபந்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 உடல்களை மீட்டதுடன், காயமடைந்த மற்றவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

காவிரி விவகாரம்: புதுதில்லியில் சட்ட வல்லுநர்களுடன் டிச.16-இல் ஆலோசனை: டி.பி.ஜெயசந்திரா

காவிரி விவகாரம் தொடர்பாக புதுதில்லியில் டிச.16-ஆம் தேதி சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று கர்நாடக சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா தெரிவித்தார்.
இது குறித்து பெங்களூருவில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு அடுத்தாண்டு ஜன.15-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அப்போது கர்நாடக அரசின் வாதங்களை திறமையாக முன்வைப்பது குறித்து புதுதில்லியில் டிச.16-ஆம் தேதி சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை நடத்துவோம். காவிரி வழக்கில் கர்நாடக அரசு சார்பில் வாதிட்டுவரும் மூத்தவழக்குரைஞர் ஃபாலி நாரிமான் மற்றும் அவரது வழக்குரைஞர் குழுவினர் இக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். இந்தகூட்டத்தில் அரசு சார்பில் நானும், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலும் கலந்து கொள்ளவிருக்கிறோம். இந்த விவகாரம் குறித்து முன்கூட்டியே முதல்வர் சித்தராமையாவுடன் கலந்தாலோசிக்கப்படும்.
காவிரி நதியில் இருந்துகர்நாடகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நீரை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்வது, சிம்ஷா, மேக்கேதாட்டு அருகே நீர்த்தேக்கம் அமைப்பது, நீர்மின் உற்பத்தி செய்வது உள்ளிட்ட விவகாரங்களில் உச்சநீதிமன்றத்தில் முன்வைக்க வேண்டிய வாதங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். சிம்ஷா, மேக்கேதாட்டு உள்பட 3 இடங்களில்நீர்மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க திட்டமிட்டிருப்பதால், இதற்காக 30-80 டிஎம்சி தண்ணீரை சேமித்துவைக்க வேண்டியிருக்கும்.
அதேபோல, கிருஷ்ணா நடுவர்மன்றம் அளித்துள்ள தீர்ப்பின் சாதகபாதகங்கள் குறித்தும் சட்டவல்லுநர்களுடன் ஆலோசிக்கப்படும். காவிரி மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டுவிவகாரங்கள் மிகவும் சவாலானவை. எனவே, மிகுந்த எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை எடுப்போம். சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்தபிறகு, சட்டப்பேரவை, சட்டமேலவை கட்சித்தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தப்படும் என்றார் அவர்.

டிச.17-ல் ஏற்காட்டில் திமுக பொதுக்கூட்டம்: வாக்காளர்களுக்கு நன்றி கூறுகிறார் மு.க.ஸ்டாலின்

ஏற்காடு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, திமுக சார்பில் டிசம்பர் 17-ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் வாழப்பாடியில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.ஏற்காடு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மாறன் 64,655 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் சேலம் மாவட்டப் பொறுப்பார் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாறன், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் திங்கள்கிழமை அறிவாலயத்துக்கு வந்தனர்.மு.க.ஸ்டாலினைச் சந்தித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.ஏற்காடு தேர்தல் தோல்வி தொடர்பாக அதில் ஆராயப்பட்டது.அதன் பிறகு எஸ்.ஆர்.சிவலிங்கம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஏற்காடு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் திமுக பொதுக்குழு தீர்மான விளக்க மாபெரும் பொதுக் கூட்டம் டிச.17-ஆம் தேதி வாழப்பாடி பஸ்நிலையம் அருகில் மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது.மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார்.கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் உரையாற்ற உள்ளனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக்கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள், அனத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சியினர் பெருந்திரளாக கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

விஜயகாந்தின் இளையமகன் நடிக்கும் சகாப்தம் - வரும் டிச.12ல் தொடக்கம்



 விஜயகாந்தின் இளையமகன் சண்முகப் பாண்டியன் ஹீரோவாகக் களமிறங்குகிறார். அவர் நடிக்கும் முதல் படம் "சகாப்தம்" என்று பெயரிடப்பட்டுள்ளது.  படத்தின் பூஜை வரும் டிசம்பர் 12-ம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சாலிகிரமாத்தில் உள்ள ஆண்டள் ஆழகர் இல்லத்தில் நடைபெறுகிறது.
 இப்படத்தை கேப்டன் சினி கிரியேஷன் நிறு‌வனத்தின் சார்பில் எல்கே சுதிஷ் தயாரிக்கிறார். நவீன் கேபிபி கதை எழுதியுள்ளார்  வேலுமணி வசனம் எழுதியிள்ளார்., டி இ சந்தோஷ் ராஜன் இப்படத்தை இயக்குகிறார். பட பூஜையில் விஜயகாந்த், பிரேமலதா மற்றும் திரையுலகினர், கட்சிப் பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். ஹீரோயின் உள்ளிட்ட மற்ற விவரங்கள் அன்று அறிவிக்கப்படுகிறது.

ஜாபர் சேட் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி மறுப்பு



முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி எம்.எஸ்.ஜாபர் சேட் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. இது தொடர்பான அரசு ஆணையை மத்திய அரசு வழக்குரைஞர் பவானி சுப்புராவ் சென்னை உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.
கடந்த திமுக ஆட்சியின்போது, தமிழக காவல்துறையின் உளவுப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் ஜாபர் சேட் இருந்தார். இவர் பதவியிலிருந்தபோது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்தன.
அதில், ஜாபர் சேட் உண்மைகளை மறைத்து வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீட்டை பெற்று, பல கோடி ரூபாய் ஏமாற்றியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் பெயரில் லஞ்ச ஒழிப்பு போலீஸôர் ஜாபர் சேட் உள்பட பலர் மீது வழக்கு பதிவு செய்தனர். புகாரின் அடிப்படையில் அவரை தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்தது.
இந்த நிலையில், ஊழல் வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றத்தில்,  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் 750 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக ஜாபர் சேட் மற்றும் அவரது மனைவிக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. நீதிமன்றத்தில் ஆஜராக அனுப்பிய சம்மனை ரத்து செய்ய வேண்டும் என ஜாபர் சேட் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கோரினார். .
இந்த மனு நீதிபதி வி.தனபாலன் முன்பு திங்கள்கிழமை (டிச.9) விôசரணைக்கு வந்தது. விசாரணையின் போது மத்திய அரசு வழக்குரைஞர் பவானி சுப்புராவ் ஆஜராகி மத்திய அரசின் ஆணை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய வீட்டு மனை வாங்கியதில் ரூ. 1.49 கோடி ஏமாற்றியதாக ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் உள்பட பலர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதில், ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட்டு மீது ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய அனுமதி கேட்டு தமிழக அரசு கடிதம் அனுப்பியிருந்தது. அதில், ஜாபர் சேட்டுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லை. அதனால், அவர் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்க முடியாது என அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி இதற்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு ஜனவரி 7-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்

வேளாண் காப்பீட்டு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவு: உழவர் முன்னணி கண்டனம்

வேளாண் காப்பீடு திட்டத்தை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ள மத்திய அரசை வன்மையாக கண்டிப்பது என தமிழக உழவர் முன்னணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழக உழவர் முன்னளி கடலூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் சிதம்பரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அ.க.சிவராமன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம், துணைச் செயலாளர் ரா.சரவணன், ஒன்றியச் செயலாளர்கள் சாக்காங்குடி என்.ஜெயபாலன், தங்க.கென்னடி, செயற்குழு உறுப்பினர்கள் வே.பொன்னுசாமி, சி.ராஜேந்திரன், வி.ராஜா, கோ.நாராயணசாமி, மு.சம்பந்தம், அ.மதிவாணன், மா.கோ.தேவராசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அக்ரிகல்சர் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட் என்ற மத்தியஅரசு நிறுவனத்திடம் உள்ள உழவர்களுக்கான பயிர் காப்பீடு திட்டத்தை மாற்றி அமைத்து தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கு மத்தியஅரசு எடுத்துள்ள முடிவை வன்மையாக கண்டிப்பது; புதுச்சேரி அரசு செய்தது போல் உழவர்களின் பயிர் காப்பீடு கட்டணம் முழுவதையும் தமிழகஅரசே செலுத்த வேண்டும்; கடலூர் மாவட்டம் வீராணம்அரியின் பராமரிப்பு, நீர் நிர்வாகம் ஆகிய அனைத்தையும் பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்; வேளாண் காப்பீடு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிடக்கோரி கையெழுத்து இயக்கம் நடத்தி மத்தியஅரசுக்கு அனுப்புவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

2ஜி ஜேபிசி அறிக்கை விவாதமின்றித் தாக்கல் எதிர்க்கட்சிகள் அதிருப்தி: திமுக வெளிநடப்பு


2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் (ஜே.பி.சி.) விசாரணை அறிக்கை விவாதமின்றி மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு பாஜக, இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்தனர். திமுக உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

 தெலங்கானா, முசாபர்நகர் நிவாரண முகாம் விவகாரம், இலங்கை விவகாரம் ஆகியவற்றை மக்களவையில் பல்வேறு அரசியல் கட்சி உறுப்பினர்களும் திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு துறைகளின் நிலைக் குழு அறிக்கைகளை அவற்றின் தலைவர்கள் தாக்கல் செய்தனர்.
 அப்போது பேசிய மீரா குமார், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, விலை நிர்ணயம் ஆகியவை தொடர்பான அறிக்கையின் சில அம்சங்களுக்கு ஆட்சேபம் தெரிவித்து பாஜக உறுப்பினர் யஷ்வந்த் சின்ஹா, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் குருதாஸ்தாஸ் குப்தா, கல்யாண் பானர்ஜி ஆகிய உறுப்பினர்களிடம் இருந்து எனக்குக் கடிதம் வந்துள்ளது. ஆனால், ஜேபிசி குழுவின் நோக்கம் அதன் விசாரணை அறிக்கையை அவையில் தாக்கல் செய்ய வேண்டும் என்பதாகும். அதனால், விதிகளின்படி அறிக்கை மீது எவ்வித விவாதமுமின்றி தாக்கல் செய்ய ஜேபிசி தலைவரை அனுமதிக்கிறேன் என்றார்.
 இதையடுத்து, ஜேபிசி தலைவர் சாக்கோ தனது அறிக்கையை முறைப்படி தாக்கல் செய்தார்.
 இந்த நடவடிக்கைக்கு நாடாளுமன்றத் திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் ஆட்சேபம் தெரிவித்தனர். ஒருதலைப்பட்சமான அறிக்கையை தாக்கல் செய்ய அனுமதிக்கக் கூடாது என அவர்கள் குரல் கொடுத்தனர். ஆனால், அதற்குள்ளாக அறிக்கையை தாக்கல் செய்து விட்ட சாக்கோவின் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, ஆ. ராசா, ஏ.கே.எஸ். விஜயன், அப்துல் ரகுமான், ஆதிசங்கர், டி.கே.எஸ். இளங்கோவன், எஸ். காந்தி செல்வன், ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், இ.ஜி. சுகவனம், ஆர். தாமரைச்செல்வன் உள்ளிட்டோர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
  ஜேபிசி அறிக்கை மோசடியானது என்று பாஜக, திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர். பின்னர் சில நிமிடங்கள் கழித்து மீண்டும் அவைக்கு உள்ளே வந்த திமுக உறுப்பினர்கள், ஜேபிசி அறிக்கை மீது விவாதம் நடத்த வேண்டும் என கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். அப்போது திமுக உறுப்பினர்கள் சில காகிதங்களைக் கிழித்து அவையின் மையப் பகுதியில் வீசினர். மறுமுனையில் தெலங்கானா விவகாரத்தை ஆந்திர உறுப்பினர்கள் எழுப்பியபடி இருந்தனர். இதனால், அவையில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து, மக்களவை அலுவலை பிற்பகல் 2 மணி வரை மீரா குமார் ஒத்திவைத்தார்.
  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரி குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான வழக்கை சிபிஐ நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் அலைக்கற்றை ஒதுக்கீடு, விலை நிர்ணயம் ஆகியவை தொடர்பாக விசாரிக்க காங்கிரஸ் மூத்த உறுப்பினர் பி.சி. சாக்கோ தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக் குழுவை மக்களவைத் தலைவர் மீரா குமார் 2011, மார்ச் 4-ஆம் தேதி நியமித்தார். இக் குழு 19 மாதங்கள் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை இறுதி செய்தது. இதையடுத்து, மக்களவைத் தலைவர் மீரா குமாரிடம் ஜேபிசி அறிக்கையை அதன் தலைவர் சாக்கோ கடந்த அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி நேரில் அளித்தார். இதைத் தொடர்ந்து, அந்த அறிக்கை மக்களவையில் முறைப்படி திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாராவது தொடர்பு கொண்டால் உடனே சொல்லுங்கள்: கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கேஜ்ரிவால் கட்டளை



தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்பாராத விதத்தில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளார். யாராவது உங்களை தொடர்பு கொண்டு, தங்களுக்கு ஆதரவு தரும்படி கோரிக்கை விடுத்தால், உடனே எனக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
பாஜக ஆட்சி அமைக்க 3 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுவதால், குதிரைபேரங்கள் நடக்க வாய்ப்புள்ளதாக கேஜ்ரிவால் கருதுகிறாராம். எனவே, ஏதாவது கட்சிகள் உங்களை அணுகினால் உடனே தெரியப்படுத்துங்கள் என்று கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி எக்காரணம் கொண்டும் காங்கிரஸுடனோ, பாஜகவுடனோ கூட்டணி சேராது என்று மீண்டும் தெளிவுபடக் கூறியுள்ளார் கேஜ்ரிவால்.
இன்று கட்சியின் கூட்டத்தில் இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.