13.12.13

Aarambam 2013 Untouched Lotus Tamil Full Movie

Watch Jannal Oram Tamil Drama Online Free Full Movie HD 2013

Naveena Saraswathi Sabatham 2013 Online Free Full Movie HD

Nimirnthu Nil Trailer | Official Trailer

குளிர்காலத்தில் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கணுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...

உடல் பருமன் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கும். உடல் பருமன் அடைந்துவிட்டால், நடந்தாலும் சரி, குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதாக இருந்தாலும் சரி, மிகவும் கஷ்டமாக இருக்கும். இது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அதுமட்டுமின்றி இந்த கட்டுரையின் தலைப்பை படித்ததும் அனைவருக்கும் நிச்சயம் மனதில் எழும் ஒரு கேள்வி தான் "அதென்ன குளிர்காலத்தில் உடல் எடை அதிகரிப்பதை தடுக்க வழி?" என்பது தான். ஆனால் உண்மையிலேயே மற்ற காலங்களை விட குளிர்காலத்தில் தான் நிறைய பேர் குண்டாவார்கள். ஏனெனில் குளிர்காலத்தில் காலநிலையானது அதிகப்படியான குளிர்ச்சியுடன் இருப்பதால், உடலில் சோம்பேறித்தனம் அதிகரிப்பதுடன், எண்ணெயில் பொரித்த உணவுப்பொருட்களை உட்கொள்ள நேரிடும். மேலும் சிலர் தண்ணீர் அதிகம் குடிப்பதை கூட நிறுத்திவிடுவார்கள். இப்படியெல்லாம் செய்வதால் தான், குளிர்காலத்தில் உடல் எடையானது அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே இந்த குளிர்காலத்தில் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க ஒருசில வழிகளை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதன் படி தவறாமல் நடந்தால், நிச்சயம் உடல் பருமனடைவதைத் தடுக்கலாம். குறிப்பாக இந்த செயலை குளிர்காலத்தில் மட்டுமின்றி, வாழ்நாள் முழுவதும் மேற்கொண்டால், நிச்சயம் நல்ல ஆரோக்கியமான மற்றம் ஃபிட்டான உடலைப் பெறலாம்.

 1. உடற்பயிற்சி



உடற்பயிற்சி குளிர்காலத்தில் காலையில் நன்கு இழுத்து போர்த்தி தூங்க வேண்டுமென்று தோன்றும். உடல் எடையின் மீது அக்கறை இருந்தால், காலையில் தவறாமல் உடற்பயிற்சி செய்து வாருங்கள்.



2. பசியுடன் சாப்பிட வெளியே செல்ல வேண்டாம்


இது உடல் எடை அதிகரிப்பதை தடுக்கும் மற்றொரு வழியாகும். மேலும் ஆய்வுகளில் கூட, வீட்டில் சாப்பிடுவதை தவிர்த்து வெளியே சாப்பிட்டால், உடலில் 40 சதவீத கலோரியானது அதிகரிக்கும் என்று கூறுகிறது. ஆகவே வெளியே சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

3. சூப்




குளிர்காலத்தில் சூடாக சாப்பிட வேண்டுமென்று தோன்றினால், சூப் சாப்பிடுங்கள். இதனால் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதை தடுப்பதோடு, உடலுக்கும் அது நன்கு இதமாக இருக்கும்.


4. ஜங்க் உணவைத் தவிர்க்கவும்




எவ்வளவு தான் பர்க்கர், பிங்கர் சிப்ஸை பார்த்ததும் நா ஊறினாலும், உடல் எடையின் மீது அக்கறை இருந்தால், அவற்றை சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.


5. ஆல்கஹாலை தவிர்க்கவும்



குளிர்காலத்தின் போது ஆல்கஹால் அடித்தால், உடலுக்கு நன்கு இதமாக இருக்கும் என்று நினைக்கலாம். ஆனால் ஆல்கஹாலில் கலோரிகள் அதிகம் உள்ளது என்பதை மறக்க வேண்டாம். ஒருவேளை அடிக்காமல் இருக்க முடியாவிட்டாலும், அதனை மெதுவாக குடிப்பதோடு, அத்துடன் அதிகப்படியான எண்ணெய் பலகாரங்களை எடுத்துக் கொள்ளாமலும், அளவுக்கு அதிகமாக உணவை உட்கொள்ளாமலும் இருக்க வேண்டும்.


6. தண்ணீர் குடிக்கவும்



தண்ணீர் குடித்தால், உடல் வறட்சி மட்டுமின்றி, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதையும் தடுக்கலாம். ஆகவே எப்போதும் உணவு சாப்பிடுவதற்கு 20 நிமிடத்திற்கு முன்பு தண்ணீரை குடியுங்கள். இதனை தினமும் பின்பற்றினால், நிச்சயம் உடல் எடை அதிகரிப்பதை தடுக்கலாம்.


7. கொழுப்பைக் கரைக்கும் உணவுகள்




8. ஆரோக்கியமான முறையில் சமைத்து சாப்பிடவும்




9. சைக்கிள் ஓட்டவும்



தினமும் சைக்கிள் ஓட்டும் பழக்கத்தைக் கொண்டால், நிச்சயம் உடல் நன்கு ஃபிட்டாக இருக்கும். ஆகவே எந்த காலமானாலும், நாள்தோறும் அதிகாலையில் சைக்கிள் ஓட்டும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இது நல்ல உடற்பயிற்சியும் கூட.





நல்ல அடர்த்தியான கண் இமைகள் வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க...

உங்கள் முகத்திலேயே அழகான பகுதி எதுவென்றால் கண்கள் என்று தான் அனைவரும் கூறுவோம். அதுவும் தடியான கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களுடன் பெரிய கண்களாக இருந்தால் அழகு மேன்மேலும் அதிகரிக்கும். அதனால் தான் கண்களுக்கான மேக்-அப் எப்போதும் புகழோடு திகழ்கிறது. அதன் மதிப்பையும் இழக்காமல் இருக்கிறது. புகழ் பெற்ற சினிமா நட்சத்திரங்கள் முதல் சாதரான கல்லூரி மாணவி வரை தங்களின் கண்களை அழகாக வெளிக்காட்டவே ஆசைப்படுகின்றனர். அழகான கண்களை பெறுவதற்கு கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களின் மீது கவனம் செலுத்த வேண்டும். இவையிரண்டும் கண்களுக்கான மேக்-அப்பில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. தடிமனாகவும் கருமையாகவும் இருந்தால் கண் இமை ரோமங்கள் அழகாக காட்சியளிக்கும். பெண்கள் தங்களின் கண் இமை ரோமங்களை தடிமனாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள சில அழகு டிப்ஸ்கள் இருக்கிறது. அழகு சாதனங்களை கொண்டு உங்கள் கண் இமை ரோமங்களை தடிமனாக மாற்றலாம். அதே போல் அதற்கு சில இயற்கையான வழி முறைகளும் இருக்கத் தான் செய்கிறது. கண் இமை ரோமங்களை தடிமனாக மாற்றுவதற்கு பல அழு டிப்ஸ்கள் இருக்கிறது. ஆனால் அவற்றில் சில சிறப்பாக செயல்படுவதில்லை. மேலும் அது உங்கள் சருமத்திற்கும் கூந்தல் வகைக்கும் ஒத்துப் போவதில்லை. ஆனால் அவற்றில் சிறப்பாக செயல்படும் டிப்ஸ்களை பின்பற்றினால் அழகான தடியான கண் இமை ரோமங்களை பெறலாம். அப்படிப்பட்ட சில டிப்ஸ்களை இப்போது பார்க்கலாமா?

நல்ல அடர்த்தியான கண் இமைகள் வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க...



மஸ்காரா பயன்படுத்துங்கள் வெளியே டேட்டிங் அல்லது ஏதாவது பார்ட்டிக்கு செல்வதால் உடனடியாக தடிமனான கண் இமை ரோமங்களை பெற வேண்டுமா? அப்படியானால் நல்ல மஸ்காராவை பயன்படுத்த வேண்டும். பெண்கள் தங்களின் கண் இமை ரோமங்களை தடியாக காட்ட பயன்படுத்தும் அழகு டிப்ஸ்களில் ஒன்றாக விளங்குகிறது மஸ்காரா. திறம்பட செயலாற்றும் இது புகழ்பெற்ற வழிமுறையாக விளங்குகிறது. நீளமான மற்றும் குட்டையான கண் இமை ரோமங்கள் என இரண்டு வகைகளுக்கும் பல வகையான மஸ்காராக்கள் கிடைக்கிறது. மேலும் அது பல வண்ணத்திலும் கிடைக்கிறது. ஆகவே கண் இமை ரோமங்களை உடனடியாக தடிமனாக்கி, அது நீண்ட நேரம் நிலைத்து நிற்க மஸ்காராவை பயன்படுத்துங்கள். செயற்கை இமை ரோமங்கள் நீளமான தடிமனான கண் இமை ரோமங்களின் மீது ஆவலாக உள்ளதா? அப்படியானால் கண்களுக்கு கொஞ்சம் நீட்சியை பயன்படுத்தலாம்; அது தான் செயற்கை இமை ரோமங்கள். இவைகள் பார்ப்பதற்கு செயற்கையானது தான் என்பதை சுலபமாக கண்டுபிடித்து விடலாம். ஆனால் நீண்ட தடிமனான கண் இமை ரோமங்களின் மீது அதீத காதல் கொண்டிருந்தால் இதனை நீங்கள் பயன்படுத்தலாம். கண் இமை ரோமங்களை உடனடியாக தடியாக்க இதுவும் சிறந்த வழியாக விளங்குகிறது. இந்த செயற்கை இமை ரோமங்கள் அனைத்து அழகு சாதன கடைகளில் கிடைக்கும். மேலும் பல வகைகளிலும் கிடைக்கும். பெண்கள் பரவலாக பயன்படுத்தும் முறை இது. மாய்ஸ்சுரைஸ் கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களை ஈரப்பதத்துடன் வைக்க வாஸ்லின் பயன்படுத்துங்கள். இதனால் அவைகள் இயற்கையாகவே தடிமனாகவும், கருமையாகவும் காட்சி அளிக்கும். ஆனால் மேக் அப் செய்து கண் இமை ரோமங்களை தடிமனாக்குவதை விட, இது அதிக காலம் எடுக்கும். ஆனால் இது நிரந்தர தீர்வாக அமைந்து, உங்கள் கண் இமை ரோமங்களை தடியாக்கும். எண்ணெய்கள் ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற பல எண்ணெய்களை பயன்படுத்தி கண் இமை ரோமன்களுக்கு மசாஜ் செய்து கொள்ளலாம். இந்த எண்ணெய்கள் உங்கள் கண் இமை ரோமங்களில் உள்ள மயிரடி நரம்பிழைகளை தூண்டி விடும் இந்த எண்ணெய்கள். அதனால் அதன் வளர்ச்சி மேம்படும். அதே போல் இந்த எண்ணெய்களை கொண்டு உங்கள் கண் இமைகளையும் சீரான முறையில் மசாஜ் செய்ய வேண்டும். உங்கள் கண் இமை ரோமங்களின் வேராக விளங்குவது உங்கள் கண் இமைகளே. அதனால் கண் இமை ரோமங்களின் வளர்ச்சி தானாகவே மேம்படும். கண் இமை ரோமங்களை தடியாக்க இதுவும் ஒரு இயற்கையான வழிமுறையாகும். இந்த வழிமுறை செயல்பட நீண்ட காலமாகும். அதனால் உங்களுக்கு பொறுமை தேவைப்படும். ஆனால் அழகு சாதனங்கள் இல்லாமல் இயற்கையாகவே தீர்வு கிடைக்கும் போது காத்திருப்பதில் ஒன்றும் தவறில்லையே. அழுத்துவதை (கசக்குவதை) நிறுத்துங்கள் நம் அனைவருக்கும் கண் இமைகளை கசக்கும் பழக்கம் இருக்குமல்லவா? அப்படி செய்யும் போது உங்கள் கண் இமை ரோமங்கள் உடைந்து உதிரவும் செய்யும். இது கண் இமை ரோமங்களின் தடிமானத்தை குறைத்து விடும். அதனால் எப்போதும் இருப்பதை விட இன்னமும் மெலிதாக போய் விடும். இதனை தவிர்க்க கண் இமைகளை அடிக்கடி கசக்காதீர்கள். தடியான கண் இமை ரோமங்களை பெறுவதற்கு நீங்கள் செய்ய கூடாத அழகு டிப்ஸ்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. தடிமனான அழகிய கண் இமை ரோமங்களை பெறுவதற்கு மேற்கூறியவைகள் தான் சில முக்கிய டிப்ஸ். இந்த அழகு டிப்ஸ் அனைத்தும் பெண்களுக்கு உபயோகமாக இருக்கும். கண்களுக்கான மேக் அப் மற்றும் கண்களின் அழகு என்பது நாளுக்கு நாள் முக்கியத்துவம் பெற்றுக் கொண்டே தான் வருகிறது. தடியான கண் இமை ரோமங்கள் உங்களின் ஒட்டு மொத்த தோற்றத்தையே மாற்றி விடும். மேலும் உங்கள் கண்களையும் முகத்தையும் ஜொலிக்க வைக்கும்.



'நான் இலவசமாக நடிக்க தயார். ஆனால் ரஜினி எப்படி என்று தெரியவில்லை!' - கமல்

நானும் ரஜினியும் இணைந்து நடிக்கும் படத்தை யாராவது ஒரு வசதியான தயாரிப்பாளர் எடுத்தால் நடிக்க தயார். நான் இலவசமாக நடிக்கவும் தயார், ரஜினி எப்படியென்று தெரியவில்லை, என்று கமல் கூறினார். 11-வது சர்வதேச படவிழாவை நடிகர்கள் கமல்ஹாசன், அமீர்கான் ஆகிய இருவரும் நேற்று குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள். விழாவையொட்டி நடிகைகள் ஷோபனா, சொர்ணமால்யா ஆகிய இருவரின் நாட்டிய நிகழ்ச்சிகளும், பின்னணி பாடகர் கார்த்திக்கின் இசைநிகழ்ச்சியும் நடைபெற்றன. விழாவில் கமல்ஹாசனிடம் நடிகர்கள் சூர்யா, பார்த்திபன், டைரக்டர் பாலுமகேந்திரா, இசையமைப்பாளர் இளையராஜா, பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் சில கேள்விகளை கேட்டு இருந்தார்கள். அந்த கேள்விகளை மேடையில் ஒருவர் படிக்க, அவற்றுக்கு கமல்ஹாசன் பதில் அளித்தார்.

'நான் இலவசமாக நடிக்க தயார். ஆனால் ரஜினி எப்படி என்று தெரியவில்லை!' - கமல்



அந்த கேள்வி பதில்கள்: கேள்வி: வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் ஆகிய படங்களை ‘ரீமேக்' செய்வதாக இருந்தால், எந்த படத்தில் நடிக்க விரும்புவீர்கள்? பதில்: என்ன வேடம் என்று கேட்கவில்லையே... கேள்வி: ஜாக்சன் துரை? பதில்: ஜாக்சன் துரையாக நடிக்கலாம். ஏனென்றால், ‘தசாவதாரம்' படத்தில் ஏற்கனவே ‘ப்லெட்சர்' ஆக நடித்திருக்கிறேன். ‘கப்பலோட்டிய தமிழன்' படத்தில், சுப்பிரமணிய சிவாவாக நடிக்க ஆசை. ஏனென்றால் அந்த வேடத்தில் எங்க சண்முகம் அண்ணாச்சி நடிச்சிருந்தார்.

'நான் இலவசமாக நடிக்க தயார். ஆனால் ரஜினி எப்படி என்று தெரியவில்லை!' - கமல்



கேள்வி: இந்திய சினிமா நூற்றாண்டின் பரிசாக ரஜினிகாந்தும், நீங்களும் இணைந்து நடிப்பீர்களா? பதில்: உங்களுக்கு பரிசு... எங்களுக்கு? முதலில் இரண்டு பேரையும் வைத்து படம் எடுக்கிற அளவுக்கு வசதியான தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும். நான் இலவசமாக நடிக்க தயார். ஆனால் ரஜினி எப்படி என்று தெரியவில்லை. கேள்வி: கிருஷ்-3, விஸ்வரூபம்-2 மாதிரி சச்சின்-2, கமல்ஹாசன்-2 வர முடியுமா? பதில்: அடுத்த தலைமுறை நிச்சயமாக வரும். எங்களை விட திறமையானவர்கள் நிச்சயமாக வருவார்கள். கேள்வி: தணிக்கை குழுவில் தகுதியானவர்கள் இருக்கிறார்களா? பதில்: தணிக்கை குழுவில் சினிமாவை ரசிப்பவர்களும் இருக்கிறார்கள். அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் தங்கள் ஆட்கள் அங்கே இருக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார்கள். முழுமையாக சினிமாவை தெரிந்தவர்கள் இருந்தால், தணிக்கை குழு இன்னும் நன்றாக இருக்கும்!''

நான் பாலிவுட்டின் ரஜினியா?: சல்மான் கான் விளக்கம்

மும்பை: நான் பாலிவுட்டின் ரஜினிகாந்த் எல்லாம் கிடையாது என்று நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார். சிரஞ்சீவி, த்ரிஷா, குஷ்பு நடித்த தெலுங்கு படமான ஸ்டாலினை இந்தியில் ஜெய் ஹோ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இதில் சல்மான் கான் தான் ஹீரோவாக நடித்துள்ளார். படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் அவர் ரஜினிகாந்த் பற்றி பேசினார்.



பாலிவுட்டின் ரஜினி

பாலிவுட்டின் ரஜினி நடிகர் சல்மான் கான் தான் பாலிவுட்டின் ரஜினிகாந்த் என்று கடந்த சில நாட்களாக பேச்சாக கிடக்கிறது. சல்மான் பெல்ட்டை ஆட்டி, கண்ணாடியை அசைத்தால் படம் ஹிட்டாகிவிடும் என்று ஆமீர் கான் கூட தெரிவித்திருந்தார்.

'தல' இப்போ மொட்டை!




ரசிகர்களால் தல என அழைக்கப்படும் அஜீத், அடுத்த படத்தில் இந்தத் தோற்றத்தில் வருகிறார், அந்தத் தோற்றத்தில் வருகிறார் என்றெல்லாம் மீடியா செய்தி போட்டுக் கொண்டிருக்க, அவரோ... மழு மழுவென மொட்டை போட்டுக் கொண்டு வந்து நிற்கிறார்! இணையதளங்களிலும், சமூக வலைத் தளங்களிலும் அஜீத்தின் இந்த மொட்டை லுக்தான் பரபரவென பரவி வருகிறது. தாடி மீசை மற்றும் தலைமுடியை வழித்துவிட்டு, தடித்த பிரேம் கண்ணாடியுடன் நண்பர்களுடன் அவர் காட்சி தருகிறார்.



ஏன் இந்த முடிவு

வீரம் படத்துக்குப் பிறகு கொஞ்ச நாள் வெளிநாடுகளில் ஜாலியாக சுற்றப் போகிறார் அஜீத். மேலும் கவுதம் மேனன் படம் தொடங்க எப்படியும் மூன்று மாதங்களுக்கு மேல் பிடிக்கப் போகிறது. அதற்குள் முடியும் வளர்ந்துவிடும் என்பதால் மொட்டை போட்டுவிட்டார் அஜீத் என்கிறார்கள்.


Thala In New Look




பிறந்த நாளை பெங்களூரில் நண்பர்களுடன் அமைதியாகக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார்!


சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளையொட்டி உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அதகளப்படுத்திக் கொண்டிருக்க, அவரோ அமைதியாக பெங்களூர் யாரும் அறியாத ஒரு இடத்தில் நண்பர்களுடன் அமைதியாகக் கொண்டாடி வருகிறார். ரஜினியின் 64-வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு தன் பிறந்த நாளன்று ரசிகர்களை வீட்டில் சந்தித்து உற்சாகமூட்டினார் ரஜினி. அடுத்த நாள் ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பெரிய விழா எடுத்து ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்த விழாவில் ரஜினியும் பங்கேற்றார். அப்போது பெற்றோரை பாதுகாக்க வேண்டும், சிகரெட் பழக்கத்தை கைவிட வேண்டும் என்றெல்லாம் ரசிகர்களுக்கு அறிவுரைகள் கூறினார். இதையடுத்து ஏராளமான ரசிகர்கள் சிகரெட் பழக்கத்தை கை விட்டனர். ஆனால் இந்த பிறந்த நாளில் அவர் சென்னையில் இல்லை. நேற்று முன்தினம் மாலை திடீர் என்று பெங்களூர் புறப்பட்டுச் சென்றார். இன்று நண்பர்களுடன் யாரும் அறியாத ஒரு இடத்தில் ரஜினி தனது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடுகிறார். ரஜினி இல்லை என்பது தெரிந்தும், ஏராளமான ரசிகர்கள், பெண்கள் ஆர்வத்துடன் ரஜினி வீட்டுக்குச் சென்று, வீட்டிலிருந்தவர்களிடம் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுக்கு ரஜினி வீட்டார் இனிப்பு கொடுத்து அனுப்பினர்.

என் படத்தை ரிலீஸ் அன்றே இன்டர்நெட், டிவிடியிலும் வெளியிடப் போகிறேன் - சேரன் அதிரடி

சென்னை: எனது ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை ரிலீஸ் நாளன்றே டிவிடி, இணையதளம், டிடிஎச்களில் வெளியிடப் போவதாக இயக்குநர் சேரன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள நிமிர்ந்து நில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் சினிமாஸில் நடந்தது.

என் படத்தை ரிலீஸ் அன்றே இன்டர்நெட், டிவிடியிலும் வெளியிடப் போகிறேன் - சேரன் அதிரடி

இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே ராஜன், 'திருட்டு விசிடி.காம் என்ற பெயரில் இன்டர்நெட்ல கோடிகோடியா சம்பாதிக்கிறான். ஆனால் தயாரிப்பாளர்களோ, தெருக்கோடில துண்டு போட்டுட்டு நிக்கிறாங்க. இதுக்கு ஒரு முடிவு கட்ட மாட்டீங்களா?" என்றார்.
அடுத்துப் பேச வந்த இயக்குநர் சேரன், "கேரளாவில், மும்பையில் இருக்கிற மாதிரி படம் ரிலீசாகிற அன்னைக்கே விசிடி, டிவிடியை வெளிட்டால் என்ன?," என்று கேள்வி எழுப்பியவர், "யாரோ திருட்டுப் பசங்க சம்பாதிச்சுட்டு போவதைத் தடுக்க, நம்ம பணம் கைக்கு வந்து சேர ஒரு புது முடிவு எடுத்திருக்கேன்.

யார் என்ன நினைச்சாலும் சரி. நான் தயாரிச்சு இயக்கும் ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை' படத்தின் டிவிடி ரைட்ஸை, ரிலீஸ் அன்னைக்கே கொடுக்கப் போறேன். அதே நாள்ல இன்டர்நெட், யூ ட்யூப், டிடிஎச் எல்லாத்துலேயும் வெளியிடப் போகிறேன்," என்றார்.
விஸ்வரூபத்தை டிடிஎச்சில் வெளியிட கமல் முடிவு செய்த போது கிளர்ச்சி பண்ணவர்கள், சேரன் விஷயத்தில் என்ன செய்யப் போகிறார்களோ!

கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் முகேஷ் - சட்ட விரோத திருமணம் குறித்து விசாரணை


சரிதாவை விவாகரத்து செய்த நடிகர் முகேஷுக்கு 2வது திருமணம்!

சென்னை: நடிகர் முகேஷ் சமீபத்தில் செய்த சட்ட விரோத இரண்டாவது திருமணம் குறித்து இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மலையாள நடிகர் முகேஷ், பிரபல தமிழ் நடிகை சரிதாவை காதல் திருமணம் செய்தார். ஆனால் இருவருக்கும் பெரும் தகராறு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள்.
இந்த நிலையில் முகேஷ் சமீபத்தில் 2-வது திருமணம் செய்து கொண்டார். இதற்கு நடிகை சரிதா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இன்னும் விவாகரத்து பெறாத நிலையில் முகேஷ் இரண்டாவது திருமணம் செய்திருப்பது சட்டவிரோதம் என்று புகார் தெரிவித்தார்.
இந்த பிரச்சினை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வரை பஞ்சாயத்துக்கு வந்து விட்டது. வழக்குத் தொடரவும் சரிதா முடிவு செய்துள்ளார்.
நேற்று பகலில் நடிகர் முகேஷ், ரகசியமாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். ஆனால் அவரை நிருபர்கள் பார்த்து விட்டனர். எதற்காக கமிஷனர் அலுவலகம் வந்தீர்கள்? என்று கேட்டபோது, சொந்த குடும்ப பிரச்சினை காரணமாக வந்திருப்பதாக சொல்லி விட்டு, அவர் வேகமாக கமிஷனர் அலுவலகத்திற்குள் நுழைந்து விட்டார்.
அவர் வரதட்சணை ஒழிப்பு பிரிவு கூடுதல் துணை கமிஷனர் சியாமளா தேவி முன்னிலையில் ஆஜர் ஆனார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை விவரம் எதையும் தெரிவிக்க, கூடுதல் துணை கமிஷனர் சியாமளாதேவி மறுத்து விட்டார்.

ரஜினியின் சிறந்த வசனங்கள்... இதெப்டி இருக்கு!




சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஒவ்வொரு படமும் ஏதோ ஒரு விதத்தில் தனித்துத் தெரிய வேண்டும் என்பதற்காக மெனக்கெடுவார்கள்.
ரசிகர்கள் மறக்க முடியாத அளவுக்கு ஒரு சிறப்பான விஷயம் அதில் இருக்க வேண்டும் என்று நினைக்கும் ரஜினி, அதற்காக தானே சிலவற்றைச் சேர்ப்பதும் உண்டு.
ஹவ்வீஸ் இட் தொடங்கி, அந்த கதம் கதம், லகலகலக வரை சொல்லிக் கொண்டே போகலாம்.
அவற்றில் சிலவற்றை இங்கே தொகுத்திருக்கிறோம்.
இதெப்டி இருக்கு!
ரஜினிக்கு அவரது முதல் படத்தில் அவ்வளவாக வசனங்களில்லை. ஆனால் இரண்டாவது படமான மூன்று முடிச்சு தொடங்கி வசனங்களில் பின்னியிருப்பார். ரஜினி நடித்த பதினாறு வயதினிலேவில் அவருக்கு வில்லன் வேடம். சில காட்சிகள்தான். ஆனால் பளிச்சென்று தெரிவது அவர்தான். குறிப்பாக அந்த வசனம் 'இதெப்டி இருக்கு!'
சீவிடுவேன்...
முரட்டுக்காளையில் ரஜினியின் புகழ்பெற்ற வசனம் 'சீவிடுவேன்!' பின்னாளில் எந்திரன் படத்தில் இதே வசனத்தை ரஜினி எதிரில் கலாபவண் மணி பேசிக் காட்டுவார்!
ஹவ்வீஸ் இட்...
இது வீராவில் ரஜினி பயன்படுத்திய முத்திரை வசனம். அதை அவர் உச்சரித்த அழகே தனி.
நான் ஒரு தடவ சொன்னா...
தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பெற்ற வசனம், 'நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி..'. பாட்ஷாவில் இடம்பெற்ற இந்த வசனம் கிட்டத்தட்ட ஆட்சி மாற்றத்துக்கே வழிவகுத்தது.
ஆண்டவன் சொல்றான்...
ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்... இது அருணாச்சலம் படத்தில் இடம்பெற்ற படு பாப்புலர் வசனம். நான்கு வார்த்தைகளுக்குள் ஏகப்பட்ட அர்த்தங்களை உள்ளடக்கிய வசனம் இது.
என்வழி தனீ வழி...
படையப்பாவில் இடம்பெற்ற இந்த வசனத்தை ஒவ்வொரு முறை சொல்லும்போதும், ஆங்கிலத்தில் ஒரு இணை வசனத்தைச் சொல்வார் ரஜினி. வெகு ஈர்ப்புடன் அமைந்த வசனம்.
நான் எப்போ வருவேன்...
முத்து படத்தில் காட்சியோடு இணைந்து வரும் 'நான் எப்ப வருவேன், எப்டி வருவேன்னு தெரியாது.. ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன்," என்று ரஜினி பேசியதற்கு பல அரசியல் அர்த்தஙக்கள் கற்பிக்கப்பட்டன. இன்னும் கூட இந்த வசனம் உயிர்ப்புடன்தான் உள்ளது!
கதம் கதம்
பாபா படத்தின் இந்த வசனத்தை, அந்தப் படம் வெளியானபோது பிறந்திருக்காத சின்னஞ்சிறுசுகளும்கூட இன்று பாபா முத்திரையுடன் சொல்லிக் காட்டுவதே இந்த வசனத்தின் சிறப்பு.
லகலகலக...
இது ஒரு வசனம்கூட இல்லை. தன் எள்ளலைக் காட்ட ரஜினி பயன்படுத்திய ஒருவித ஒலி. அதற்குக் கிடத்த வரவேற்பு வரலாறு காணாதது.
ச்சும்மா அதிருதில்ல...
சிவாஜியில் இடம்பெற்ற வசனம் இது. நிஜமாகவே சினிமாவை அதிரவைத்தது, அதன் வீச்சு.
அடேங்கப்பா...
பல படங்களில் ரஜினி இந்த சொல்லைப் பயன்படுத்தும் விதம், அதை உச்சரிக்கும் தொனி... அடேங்கப்பா!

மிக்-21 ரக விமானத்துக்கு பதிலாக "தேஜஸ்' விரைவில் இணைப்பு



மிக்-21 ரக போர் விமானத்துக்கு பதிலாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம் விமானப்படைப் பிரிவில் அதிகாரப்பூர்வமாக விரைவில் இணைக்கப்பட உள்ளது.
இந்தத் தகவலை விமானப்படைத் தலைமைத் தளபதி என்.ஏ.கே.பிரவுன் கிழக்கு விமானப்படைப் பிரிவு தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து பிரவுன் மேலும் கூறியதாவது:
தேஜாஸ் மார்க்-1 ரகத்தில் 40 விமானங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அடுத்த ஆண்டு இறுதியில் தேஜஸ் விமானம் போருக்குத் தயார் நிலையில் இருக்கும்.
தேஜஸின் பிறப்பிடமான பெங்களூருவில் டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெறும் விழாவில் ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோனி தேஜஸ் போர் விமானத்தை அதிகாரப்பூர்வமாக விமானப்படையிடம் ஒப்படைக்கிறார்.
தேஜஸ் மார்க்-2 ரக விமானத்தில் ரேடார் வசதி உள்ளிட்ட பல சிறப்பம்சங்களை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. காலப்போக்கில் இதுவும் விமானப்படையில் இணைக்கப்படும்.
50 ஆண்டுகளாக விமானப்படைப் பிரிவில் சேவை புரிந்த மிக்-21 ரக போர் விமானத்துக்கு மேற்கு வங்கத்தில் உள்ள கலாய்குன்டா விமானப்படைத் தளத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் விடை கொடுக்கப்பட்டது. இது விமானப் படையினருக்கு ஒரு மறக்க முடியாத நிகழ்வாகும். ஏனெனில், நான் உள்பட பல போர் விமான பைலட்டுகள் பயிற்சி எடுத்தது மிக்-21 ரக விமானங்களில்தான். எனவே, எங்கள் கண்கள் கலங்குகின்றன. இந்த ரக விமானங்கள் தங்களது பணியை செவ்வனே செய்தன என்று பிரவுன் கூறினார்.
வடகிழக்குப் பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "வடகிழக்குப் பகுதி பாதுகாப்பே எங்களுக்கு மிகவும் முக்கியம். மலைப்பாங்கான பகுதிகளில் ரேடார் கருவிகளை நிறுவத் திட்டமிட்டுள்ளோம்' என்றார் பிரவுன். மேலும், பஞ்சாப் மாநிலம் சிர்சாவில் தயாரிக்கப்பட்ட சுகோய் போர் விமானம் அசாமின் தீஸ்பூர் தளத்தில் அடுத்த ஆண்டு இணைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு விமானப்படைப் பிரிவுக்கு தனது மனைவி கிரணுடன் 2 நாள் பயணம் மேற்கொண்ட அவர், கமாண்டர்களின் மாநாட்டில் கலந்து கொண்டார்.

"ஜம்மு-காஷ்மீர் குடியரசு தினம்' கொண்டாட உத்தரவிடக்கோரி மனு

ஜம்மு-காஷ்மீரில் நவம்பர் 17ஆம் தேதி மாநில குடியரசு தினத்தை கொண்டாட அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் முன்னாள் வனத்துறை அதிகாரி அப்துல் கயூம் கான் சார்பில் அவரது வழக்குரைஞர் ஷா புதன்கிழமை தாக்கல் செய்த மனு கூறியிருப்பதாவது:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தனி அரசியலமைப்பைக் கொண்டுள்ளது. இந்த அரசியலமைப்பு 1956ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி சட்டப் பேரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மாநிலத்துக்காக தனி கொடியும் பெறப்பட்டுள்ளது.
எனவே, இந்த நாளை மாநிலத்தின் குடியரசு தினமாக அரசு கொண்டாட வேண்டும். அந்த நாளில் அரசியலமைப்பின் கீழ் அதிகாரம் படைத்த ஆளுநர், உயர் நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர்கள் ஆகியோர் அரசு அலுவலகங்களிலும், பிற இடங்களிலும் மாநிலக் கொடியை ஏற்ற வேண்டும்.
தற்போது மாநில குடியரசு நாளில், மாநில கொடி ஏற்றுவதில் அரசு அதிகாரிகள் அக்கறை காட்டாதது என்னைப் போன்றவர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாக உள்ளது. மேலும், இது அரசியலமைப்பு சட்ட விதியை மீறும் செயலாகும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவறான தகவல்-பாஜக.: ஜம்மு-காஷ்மீர் மாநில பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஜிதேந்திர சிங் கூறுகையில், ""மாநில குடியரசு தினம் கொண்டாட வேண்டும் என்று விஷமத்தனமாகவும், அபத்தமாகவும், உண்மைக்கு புறம்பாகவும், அரசியலமைப்பு விதிமுறையை மீறும் விதத்திலும் கோரப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பே 1957ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதியில் அங்கு குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. இதனையும் ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் நீதிமன்றத்தில் தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

ஓரினச் சேர்க்கை தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு: ஏமாற்றமளிக்கிறது - காங்கிரஸ்; நிலை பின்னர் அறிவிக்கப்படும் - பாஜக


இந்திய தண்டனைச் சட்டத்தின் படி ஓரினச் சேர்க்கை குற்றம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, துணத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

"இந்த விவகாரத்தில் தங்களது கட்சியின் நிலைப்பாடு பின்னர் அறிவிக்கப்படும்' என்று பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
சோனியா: இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிக்கை வெளியிட்டு தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். அதில், "உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. இந்தத் தீர்ப்பினால் பாதிக்கப்படுபவர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் உரிமையுடன் வாழ நாடாளுமன்றத்தின் மூலம் தீர்வு காணப்படும்.
சுதந்திரமாகவும், விருப்பத்துடனும் வாழ்வதற்கு இந்திய அரசமைப்பு சட்டம் வழிவகை செய்துள்ளது' என்று கூறியுள்ளார்.
ராகுல்: இது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "இது போன்ற விவகாரங்களை தனி மனித சுதந்திரத்துக்கு உட்பட்டவையாக நான் கருதுகிறேன். ஆகையால், அதை அவர்களிடமே விட்டுவிட வேண்டும்.
இது தொடர்பாக தில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பே சரியானது' என்று கூறினார்.
உடனடி நடவடிக்கை: "சட்டப்படி ஓரினச் சேர்க்கை குற்றம்' என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய சட்டத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறுகையில், "நாடாளுமன்றத்தின் மூலமோ அல்லது உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவதன் மூலமோ நடவடிக்கை எடுக்கப்படலாம். இந்த இரண்டு வழிமுறைகளில் உடனடி பலன்கிடைக்கும் வழியை மத்திய அரசு கையாளும்' என்று கூறினார்.
மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறுகையில், "ஓரினச் சேர்க்கை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. இது நாட்டை பல நூற்றாண்டுகளுக்கு பின்தள்ளிவிட்டது. இந்தத் தீர்ப்பு அளிக்கப்படும் முன்பு சமுதாயத்தின் தற்போதைய நிலைப்பாடு கருத்தில் எடுத்து கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மறுசீராய்வு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அதை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தில்லி உயர் நீதிமன்றம் ஆராய்ந்து தீர்ப்பு அளித்திருந்தது என்று அவர் கூறினார்.
சுஷ்மா ஸ்வராஜ்: இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாவது: இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க வேண்டும். அதில், அரசு தனது நிலையை தெரிவித்த பின்பே எங்கள் கட்சியின் நிலைப்பாடு தெரிவிக்கப்படும்.
இந்த விவகாரத்தில் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டியது அவசியம் என்று கூறினார்.
ஓரினச் சேர்க்கை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நாடாளுமன்றத்திலும் வியாழக்கிழமை எதிரொலித்தது.

நாடாளுமன்றத்தில் ஆப்கன் அதிபர் உரை திடீர் ரத்து

இந்தியாவில் நான்கு நாள்கள் அரசுமுறைப் பயணமாக வியாழக்கிழமை தில்லி வந்த ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்ஸாய் வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நிகழ்த்தவிருந்த சிறப்புரை திடீரென ரத்து செய்யப்பட்டது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த சில நாள்களாக பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில், நாடாளுமன்ற அலுவல் வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை மாலையில் இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவரும், கல்வியாளருமான ஹிரேன் முகர்ஜி நினைவுச் சொற்பொழிவுக்கு நாடாளுமன்றச் செயலகம் ஏற்பாடு செய்திருந்தது.
அதில் "அரசியலமைப்பு, ஜனநாயகத்தில் ஆப்கானிஸ்தானின் அனுபவங்கள்' என்ற தலைப்பில் ஆப்கன் அதிபர் ஹமீது கர்ஸாய் பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில், ஹமீது கர்ஸாயின் நிகழ்ச்சி திடீரென வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டது.
இது குறித்து நாடாளுமன்றச் செயலக வட்டாரங்களில் விசாரித்தபோது, "வாரத்தின் கடைசி நாளில் நடைபெறும் நிகழ்வில் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் வெளிநாட்டு அதிபருக்கு அது அவமரியாதை அளிப்பது போல இருக்கும். எனவே கர்ஸாயின் நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது' எனக் கூறப்பட்டது.
தில்லியில் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை வெள்ளிக்கிழமை சந்திக்கும் கர்ஸாய், மாலையில் புணே செல்கிறார். சனிக்கிழமை புணே நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு அங்கிருந்து நேரடியாக ஆப்கன் தலைநகர் காபூல் திரும்புகிறார்.
இதற்கிடையே, 2010, 2011, 2012-ஆம் ஆண்டுகளுக்கான சிறந்த நாடாளுமன்றவாதி விருதை முறையே அருண் ஜேட்லி, கரண் சிங், சரத் யாதவ் ஆகியோருக்கு வழங்கும் நிகழ்ச்சிக்கு இந்த வார இறுதியில் நாடாளுமன்றச் செயலகம் ஏற்பாடு செய்திருந்தது.
அந்த நிகழ்ச்சியும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தெலங்கானா, தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு விவகாரம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி



தெலங்கானா விவகாரம், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்த நடவடிக்கை உள்ளிட்ட பிரச்னைகளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வியாழக்கிழமை எழுப்பினர். இதையடுத்து, நீடித்த அமளியால் மக்களவை அலுவல் நண்பகலுக்குப் பிறகும், மாநிலங்களவை அலுவல் இரு முறை ஒத்திவைக்கப்பட்டு பிற்பகல் 2 மணிக்குப் பின் நாள் முழுவதுமாகவும் ஒத்திவைக்கப்பட்டன.
மக்களவை அதன் தலைவர் மீரா குமார் தலைமையில் தொடங்கியதும், ஆந்திரத்தைச் சேர்ந்த தெலங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவு உறுப்பினர்கள் வழக்கம் போல தெலங்கானா விவகாரத்தை மையப் பகுதிக்கு வந்து எழுப்பினர்.
ஷிண்டேவுக்கு எதிர்ப்பு: பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தள உறுப்பினர்கள் "மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே மன்னிப்புக் கேட்ட வேண்டும்' என்ற வாசகம் அடங்கிய பதாகைகளுடன் மையப் பகுதிக்கு வந்து குரல் எழுப்பினர். நக்ஸல்களை ஒடுக்க மாநில அரசு சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று பிகார் முதல்வருக்கு சுஷீல் குமார் ஷிண்டே அண்மையில் கடிதம் எழுதியிருந்தார். அதைக் கண்டிக்கும் வகையில், ஐக்கிய ஜனதா தள உறுப்பினர்கள் பிரச்னை எழுப்பினர். இந்த அமளியைத் தொடர்ந்து, மக்களவை அலுவலை நண்பகல் 12 மணி வரை மீரா குமார் ஒத்திவைத்தார். பின்னர் அவை கூடியதும் காலையில் எழுப்பிய அதே பிரச்னைகளை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர்.
துணை மானியக் கோரிக்கை நிறைவேற்றம்: இந்த அமளிக்கு இடையே, மீரா குமார் கேட்டுக் கொண்டபடி, 2013-14 நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட் மீதான துணை மானியக் கோரிக்கை அறிக்கையை ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் குமாரி செல்ஜா மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.
மக்களவை ஒத்திவைப்பு: அப்போது பேசிய மீரா குமார், "மையப் பகுதியில் கூச்சல் போடாமல் அவரவர் இருக்கைகளுக்கு உறுப்பினர்கள் திரும்பினால், அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்கிறேன்.
அந்த நோட்டீûஸ அனுமதிக்கத் தேவைப்படும் 50 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறதா என்பதைச் சரி பார்க்க வேண்டும்' என்றார். அதைப் பொருள்படுத்தாமல் உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சலிட்டபடி இருந்தனர். இதையடுத்து, மக்களவை அலுவலை நாள் முழுவதுமாக மீரா குமார் ஒத்திவைத்தார்.
மாநிலங்களவையில்...: மாநிலங்களவை அதன் தலைவர் ஹமீது அன்சாரி தலைமையில் தொடங்கியதும் தெலங்கானாவுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் "ஆந்திரத்தைக் காப்பாற்றுக' என்ற பதாகைகளுடன் மையப் பகுதிக்கு வந்து குரல் எழுப்பினர். இக் கூச்சல், குழப்பத்தால் அவை நடவடிக்கை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் துணைத் தலைவர் பி.ஜே. குரியன் தலைமையில் அவை கூடியதும் காலையில் எழுப்பிய அதே பிரச்னைகளை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர். இதையடுத்து, அவை நடவடிக்கையை பிற்பகல் 2 மணி வரை குரியன் ஒத்திவைத்தார்.
ஆளுநர் சம்பள மசோதா?: பிற்பகலில் அவை கூடியபோதும் அமளி நீடித்தது. அப்போது, ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே 2013-14 நிதியாண்டுக்கான ரயில்வே துணை மானியக் கோரிக்கை அறிக்கையைத் தாக்கல் செய்தார். பின்னர் ஆளுநர்களின் சம்பளம் தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே தாக்கல் செய்ய முற்பட்டார்.
அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மிகவும் உரத்த குரலில் கூச்சலிட்டதால், ஷிண்டே பேசியது பி.ஜே. குரியனுக்குக் கேட்கவில்லை. இதையடுத்து, மாநிலங்களவை அலுவலை நாள் முழுவதுமாக அவர் ஒத்திவைத்தார்.
இலங்கைக் கடற்படைச் செயல்: தமிழக எம்.பி.க்கள் கண்டனம்
தமிழக மீனவர்களைச் சிறைப்பிடித்த இலங்கைக் கடற்படைக்குக் கண்டனம் தெரிவித்து தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரு அவைகளிலும் வியாழக்கிழமை குரல் எழுப்பினர்.
மக்களவையில் டி.ஆர். பாலு தலைமையில் திமுக உறுப்பினர்கள் இந்த விவகாரத்தை எழுப்பினர். டி.கே.எஸ். இளங்கோவன், ஏ.கே.எஸ். விஜயன், ஹெலன் டேவிட்சன், ஜெயதுரை உள்ளிட்டோர் மையப் பகுதிக்கு வந்து குரல் கொடுத்தனர்.
அதிமுக உறுப்பினர்கள் தம்பிதுரை, செம்மலை ஆகியோர், "கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியத்தை நிறுத்துவது குறித்து விவாதிக்க வேண்டும்' என்று குரல் கொடுத்தனர். அவர்களுக்கு ஆதரவாக ஓ.எஸ். மணியன், சிவசாமி, டாக்டர் வேணுகோபால் உள்ளிட்டோர் அவையின் மையப் பகுதிக்கு வந்து குரல் எழுப்பினர். நண்பகலில் மக்களவை கூடியதும் தமிழக உறுப்பினர்கள் இலங்கைக் கடற்படைக்கு எதிராக மீண்டும் குரல் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
மாநிலங்களவையில்...:தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட விவகாரத்தை மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் வா. மைத்ரேயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா ஆகியோர் எழுப்பினர். "இலங்கை கடற்படை அத்துமீறிச் செயல்படுகிறது. அதனால், சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களைக் காக்க வேண்டும்' என்று அவர் குரல் கொடுத்தார். திமுக உறுப்பினர் கனிமொழி, "நீடித்துவரும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறலைத் தடுத்து நிறுத்த வேண்டும்' என்றார். அவருக்கு ஆதரவாக திமுக உறுப்பினர்கள் குரல் எழுப்பினர்.

6 லட்சம் மத்திய அரசு பணியிடங்கள் காலி



"மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 6 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன' என்று மத்திய இணையமைச்சர் வே. நாராயணசாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் அமைச்சர் நாராயணசாமி வியாழக்கிழமை கூறியதாவது: "மத்திய அரசின் பல்வேறு துறைகளில் கடந்த மார்ச் 1ஆம் தேதிவரை 36,84,543 நிரப்பப்பட்டிருக்க வேண்டும்.
அதில், 6,00,013 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதை விதிமுறைகளின்படி உரிய காலத்துக்குள் நிரப்ப வேண்டும் என்று மத்திய அமைச்சகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்று அவர் கூறினார்.

சூரியநெல்லி பாலியல் வழக்கு: மறு விசாரணை கோரும் மனு ஏற்பு

சூரியநெல்லி பாலியல் பலாத்கார விவகாரத்தில் மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, பாதிக்கப்பட்ட பெண் தாக்கல் செய்த மறு விசாரணை கோரும் மனுவை கேரள உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
சூரியநெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இருந்து மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் கடந்த 2007 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் மறுவிசாரணை கோரி பாதிக்கப்பட்ட பெண் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.ஸ்ரீஜெகன், கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் வியாழக்கிழமை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர். பின்னர் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
கேரள மாநிலத்தில், கடந்த 1996ஆம் ஆண்டு 16 வயது இளம்பெண் 40-க்கும் மேற்பட்ட முக்கியப் பிரமுகர்களால், பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கடந்த 2000-வது ஆண்டில் இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் 36 பேருக்கு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
இருப்பினும், இந்த வழக்கில் தண்டனை பெற்ற 36 பேரில் ,தர்மராஜன் என்பவருக்கு மட்டும் கேரள உயர் நீதிமன்றம் 5 ஆண்டு தண்டனை வழங்கியதுடன் மற்ற 35 பேரும் குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்தது. மேலும் மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் மீதான புகாருக்கு ஆதாரம் இல்லை என்று கூறி அவரையும் விடுவித்தது.
இதையடுத்து மறுவிசாரணை கோரி பாதிக்கப்பட்ட பெண் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது. இந்த வழக்கை மீண்டும் விசாரிக்குமாறும் உத்தரவிட்டது.

"ஜனநாயகத்தை வஞ்சிக்கிறது மத்திய அரசு'


ஜன லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வரும் சமூக சேவகர் அண்ணா ஹசாரே, மத்திய அரசு ஜனநாயகத்தை வஞ்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

உண்ணாவிரதத்தை கைவிடுமாறு மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை அண்ணா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:
லோக்பால் மசோதாவை நிறைவேற்றும் விவகாரத்தில் மத்திய அரசின் பொறுப்பற்ற அணுகுமுறை ஜனநாயகத்தை வஞ்சிப்பதாக உள்ளது.
லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்வரை நான் உண்ணாவிரதத்தை கைவிடப்போவதில்லை. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறேன்.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் ஆரம்பமாகிவிட்ட நிலையிலும் அதன் நிகழ்ச்சி நிரலில் லோக்பால் மசோதா இடம் பெறவில்லை.
இது என்னையும், இந்த நாட்டு மக்களையும் ஏமாற்றும் செயலாகும்.
இப்படி ஏமாற்றியதால்தான் சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸýக்கு மக்கள் பாடம் புகட்டினார்கள்.
தற்போது நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸýக்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என அண்ணா ஹசாரே தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி கூறுகையில், ""நாடாளுமன்றம் அமளியின்றி அமைதியாக நடைபெறும்வரை லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவது கடினம். அனுபவம் நிறைந்த அண்ணா ஹசாரேவுக்கு நாடாளுமன்ற நடைமுறைகள் நன்றாகவே தெரிந்திருக்கும். எனவே, அவர் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடவேண்டும் என்று அரசு சார்பாக கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹசாரேவுடன் ஆம் ஆத்மி தலைவர்கள் சந்திப்பு
வலிமையான ஜனலோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அண்ணா ஹசாரேயை ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ் உள்ளிட்ட 6 முக்கிய பிரமுகர்கள், ராலேகான் சித்தியில் வியாழக்கிழமை சந்தித்தனர்.
இந்தச் சந்திப்புக்கு பின்னர் பொது மக்களிடையே பேசிய விஸ்வாஸ், அண்ணா ஹசாரேயுடன் ஆம் ஆத்மி கட்சிக்கு கருத்து வேறுபாடு ஏதும் கிடையாதென்றும், தங்கள் கட்சிக்கு நிரந்தர ஊக்கமளிக்கும் சக்தியாக அவர் திகழ்கிறார் என்றும் தெரிவித்தார். முன்னதாக ஹசாரேவைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்த கேஜரிவால், உடல்நலக்குறைவு காரணமாக, ராலேகான் சித்தி பயணத்தை ரத்து செய்து விட்டார்.
திரிணமூல் காங்கிரஸ் ஆதரவு: இதனிடையே, லோக்பால் மசோதாவுக்கு திரிணமூல் காங்கிரஸ் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. கொல்கத்தாவில் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டெரக் ஓ பிரையன், இதனைத் தெரிவித்தார். அதேசமயம், லோக் ஆயுக்த நீதிமன்றங்களை அமைக்கவும், அதனைத் தொடர்ந்து செயல்படுத்தவும் மாநில அரசுகளுக்கு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தேவஸ்தான விடுதிகளில் ஜனவரி 11 முதல் அன்னதானம் தொடக்கம்

திருப்பதியில் உள்ள தேவஸ்தான தங்கும் விடுதிகளில் அன்னதானத்தை தேவஸ்தானம் விரைவில் தொடங்க உள்ளது.
திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு மதிய உணவு மற்றும் இரவு சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியற்றை தேவஸ்தான தங்கும் விடுதிகளான ஸ்ரீனிவாசம், விஷ்ணு நிவாசம், மாதவம் தங்கும் விடுதிகளில் விரைவில் வழங்க உள்ளது. இதை ஜனவரி மாதம் 11-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி முதல் தேவஸ்தானம் தொடங்க உள்ளது.  மேலும் திருமலையில் உள்ள சங்குமிட்டா வளைவில் ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் வரிசை சாலையில் நீள்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை தடுக்க தேவஸ்தானம் 45 லட்சம் செலவில் இரும்பு பாலம் அமைத்து வருகிறது.

தெலங்கானா மசோதா மீது முடிவெடுக்க ஆந்திர சட்டப் பேரவைக்கு 6 வார அவகாசம்


தனித் தெலங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பாக முடிவெடுக்க ஆந்திர சட்டப் பேரவைக்கு 6 வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வரைவு மசோதாவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து, ஆந்திர சட்டப் பேரவையில் ஒப்புதல் பெறுவதற்கான முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனித் தெலங்கானா வரைவு மசோதா ஆந்திர சட்டப் பேரவை மற்றும் பேரவைத் தலைவர் என்.மனோகரின் அலுவலகத்துக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தை பிரித்து தனித் தெலங்கானா உருவாக்குவதற்கான மசோதா சட்ட ரீதியாக வலுவாக இருக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருப்பம் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரான முதல்வர் கிரண்குமார் ரெட்டி, அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ஆந்திரத்தைப் பிரிக்க அனுமதிக்க மாட்டோம் என்று உறுதிபடத் தெரிவித்தார். இவ்விவகாரத்தில் கட்சி மேலிடத்தின் முடிவையே அவர் எதிர்ப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆந்திர சட்டப் பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடர் வியாழக்கிழமை தொடங்கியது.
இந்த மசோதா தொடர்பாக சட்டப் பேரவையில் எடுக்கப்படும் முடிவு எதுவாக இருந்தாலும், புதிய மாநிலத்தை உருவாக்குவதற்கான சட்ட நடவடிக்கையை நாடாளுமன்றம் முன்னெடுத்துச் செல்லும் என்பதே சட்ட நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
திக்விஜய் சிங் ஆலோசனை: இதனிடையே, ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர்களை சமரசப்படுத்தும் முயற்சியாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் இரண்டு நாள் பயணமாக ஆந்திரத்துக்கு வந்துள்ளார்.
ஆந்திரப் பிரிவினைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் முதல்வர் கிரண்குமார் ரெட்டி மற்றும் கட்சியின் மாநிலப் பொறுப்பாளர்களை அவர் சந்தித்து வருகிறார்.

லோக்பால் மசோதா: மாநிலங்களவையில் திங்கள்கிழமை தாக்கல்


ஊழல் ஒழிப்புக்கான லோக்பால் மசோதா, மாநிலங்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளது.

மத்திய அமைச்சர் ஹரீஷ் ராவத் நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை வியாழக்கிழமை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து அவர் கூறியதாவது:
மாநிலங்களவையில் லோக்பால் மசோதாவை திங்கள்கிழமை தாக்கல் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற வேண்டும் என்பது எங்களின் இதயப்பூர்வமான விருப்பமாகும். இந்தக் கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரலில் அந்த மசோதாவை நாங்கள் பட்டியலிட்டிருப்பதே அதை உணர்த்தும்.
லோக்பால் உள்ளிட்ட முக்கிய மதோதாக்களை நிறைவேற்றுவதில் அரசு ஆர்வம் காட்டவில்லை என்று பாஜகவின் மூத்த தலைவர் அருண் ஜேட்லி கூறுவது சரியல்ல.
மாற்றுக் கட்சிகளில் முக்கியமான தலைவர்களாக விளங்கும் இதுபோன்ற சில நண்பர்கள், மசோதாக்களை நிறைவேற்ற அரசு ஆர்வம் காட்டவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்த விரும்புகின்றனர். அதை நான் அடியோடு மறுக்கிறேன். உண்மை வேறு மாதிரியாக உள்ளது. எங்களுக்குப் போதிய ஆதரவு கிடைப்பதில்லை.
நாடாளுமன்றத்தில் சுமுகமான சூழ்நிலையை உருவாக்குவதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று இரு தரப்புக்கும் முக்கியப் பங்கு உள்ளது. ஆனால், இந்த விஷயத்தில் ஆளுங்கட்சிக்கு மட்டுமே பொறுப்பு இருப்பதாகக் காட்ட அவர்கள் (எதிர்க்கட்சியினர்) முயற்சிக்கின்றனர் என்றார் ஹரீஷ் ராவத்.
லோக்பால் மசோதாவை விரைவில் நிறைவேற்ற வலியுறுத்தி சமூக சேவகர் அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் தொடங்கியுள்ளதால், மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மசோதாவில் திருத்தம் வேண்டும்- பாஜக: இதனிடையே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லியும் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, லோக்பால், தெலங்கானா தனிமாநிலம் போன்ற முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு விரும்பவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.
அவர்கள் மேலும் கூறுகையில், ""நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் கால அளவைத் குறைத்து அதன் மூலம் லோக்பால் மசோதா கொண்டுவரப்படாமல் தடுக்க அரசு முயற்சிக்கிறது.
ஆனால் இந்த மசோதா தாமதமின்றி அவையில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று எங்கள் கட்சி (பாஜக) ஆர்வமாக உள்ளது. லோக்பால் மசோதா தொடர்பாக மாநிலங்களவைத் தேர்வுக்குழு சில திருத்தங்களைப் பரிந்துரைத்தது. இந்தத் திருத்தங்களுடன் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மசோதாவை பாஜக ஆதரிக்கும்'' என்று தெரிவித்தனர்.

தில்லியில் ஆட்சி அமைக்க பா.ஜ.க மறுப்பு


தில்லியில் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கை சந்தித்த பிறகு, ராஜ்பவனில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளிக்கிறார் ஹர்ஷ வர்தன்.

இதையடுத்து, ஆட்சி அமைப்பது குறித்து, பாஜகவுக்கு அடுத்தபடியாக 28 இடங்கள் பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலை வரும் சனிக்கிழமை (டிசம்பர் 14) ஆலோசிக்க வரும்படி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தில்லியில் ஆட்சி அமைக்க வருமாறு துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் விடுத்த அழைப்பை ஏற்க பா.ஜ.க. மறுத்துவிட்டது. ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து மக்கள் பணியாற்றவோ அல்லது மறுதேர்தலைச் சந்திக்கவோ தயாராக இருக்கிறோம்' என்று நஜீப் ஜங்கிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதாக முதல்வர் வேட்பாளரான ஹர்ஷ வர்தன் கூறியுள்ளார்.
70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு கடந்த 4-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட முடிவில், பாஜகவுக்கு 31 இடங்கள் கிடைத்தன. இந் நிலையில், ஆட்சி அமைக்க 36 இடங்கள் இருந்தால் மட்டுமே ஆளுங்கட்சியால் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும்.
இதையடுத்து, எம்எல்ஏக்களை ஈர்க்க குதிரை பேரத்தில் ஈடுபட மாட்டோம் என பாஜகவும் ஆம் ஆத்மி கட்சியும் பகிரங்கமாக அறிவித்தன. ஆட்சி அமைப்பதற்காக ஐக்கிய ஜனதா தளம், சுயேச்சை உறுப்பினர் ஆதரவு தர முன்வந்தாலும் பாஜகவுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. இதனால், தேர்தல் முடிந்து ஒரு வாரம் கடந்த பிறகும், தில்லியில் தொங்கு சட்டப்பேரவை நிலை நீடித்து வருகிறது.
இந் நிலையில், "ஆட்சி அமைக்க பாஜகவோ, ஆம் ஆத்மி கட்சியோ முன்வந்தால் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்' என்று எட்டு உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் சார்பில் அதன் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது கூறினார். ஆனால், "எந்தக் கட்சியை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிட்டோமோ, அதன் ஆதரவுடன் ஆட்சி அமைக்க விரும்பவில்லை' என்று பாஜக, ஆம் ஆத்மி ஆகிய இரண்டு கட்சிகளின் தலைமைகளும் தெளிவுபடுத்தின.
தில்லி சட்டப்பேரவையின் ஆயுள் காலம் வரும் 17-ஆம் தேதியுடன் முடிவடைவதால், அதற்குள் புதிய அரசு அமைப்பதற்கான நடைமுறைகளை துணைநிலை ஆளுநர் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த விவகாரத்தில் விரைவில் முடிவு எடுக்கும்படி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் தில்லி பிரதேச துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கை கடந்த செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொண்டிருந்தார்.
இந் நிலையில், பாஜக முதல்வர் வேட்பாளரான ஹர்ஷ வர்தனை அரசு அமைப்பது தொடர்பாக ஆலோசிக்க வரும்படி நஜீப் ஜங் புதன்கிழமை இரவு அழைப்பு விடுத்தார். ஆனால், "சத்தீஸ்கர் மாநில முதல்வராக ரமண் சிங் பதவி ஏற்கும் விழாவையொட்டி ராய்ப்பூர் வந்து விட்டதால் வியாழக்கிழமை மாலையில் தில்லி வருகிறேன்' என்று ஹர்ஷ வர்தன் நஜீப் ஜங்கிடம் கூறினார்.
அதன்படி, தில்லி வந்த ஹர்ஷ வர்தன் நஜீப் ஜங்கை அவரது மாளிகையில் வியாழக்கிழமை இரவு 7 மணிக்குச் சந்தித்துப் பேசினார். சுமார் 45 நிமிடங்கள் இச் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, தில்லியில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து ஹர்ஷ வர்தனிடம் விளக்கிய நஜீப் ஜங், "எக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லாத போது முதலில் ஆட்சி அமைத்து விட்டு பெரும்பான்மைக்குத் தேவையான பலத்தை அடைய முயற்சி மேற்கொள்ளுங்கள். மற்ற கட்சிகளின் ஆதரவையும் கோருங்கள்' என்று யோசனை தெரிவித்தார்.
ஆனால், "பெரும்பான்மை பலத்துக்குத் தேவையான 36 இடங்கள் பாஜகவிடம் கிடையாது. கூட்டணிக் கட்சியின் ஒரு உறுப்பினர், சுயேச்சை உறுப்பினரைச் சேர்த்தாலும் 33 இடங்கள் பலம்தான் பாஜகவுக்கு இருக்கும். இதுபோன்ற நிலையில், ஆட்சி அமைத்து விட்டுப் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாமல் சட்டப்பேரவையில் ஒரு தர்மசங்கடமான நிலைமையை எதிர்கொள்ள பாஜக தயாராக இல்லை' என்று ஹர்ஷ வர்தன், நஜீப் ஜங்கிடம் கூறினார்.
இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் ஹர்ஷ வர்தன் கூறியது:
"தில்லியில் அரசு அமைப்பது குறித்து துணைநிலை ஆளுநர் என்னுடன் விரிவாக ஆலோசனை நடத்தினார். ஆட்சி அமைக்க வரும்படி எழுத்துப்பூர்வமாக அவர் கடிதம் அளித்தார். இத்தகைய சூழ்நிலையில் பாஜக மீது நம்பிக்கை வைத்து தேர்தலில் வெற்றி பெறச் செய்த தில்லி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தில்லியில் அரசு அமைத்து விட்டு சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும்படி துணைநிலை ஆளுநர் கூறினார்.
ஆனால், நடைமுறையில் அதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக பிற கட்சிகளைக் கலைத்து அதன் உறுப்பினர்களை ஈர்க்கவோ, கொள்கைக்கு விரோதமாக மாற்று சிந்தனை கொண்ட கட்சியிடம் (காங்கிரஸ்) ஆதரவு கேட்கவோ பாஜக விரும்பவில்லை. எனவே, அடுத்த நிலையில் உள்ள ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க முன்வந்தால்கூட எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து மக்கள் சேவை செய்ய பாஜக தயாராக இருக்கிறது. பிற கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்க விருப்பமில்லை என்பதை ஆம் ஆத்மியும் தெளிவுபடுத்தி விட்டதாக அறிகிறேன். எனவே, அக் கட்சிக்கு பாஜக ஆதரவு தருவது தொடர்பான கேள்வியே எழவில்லை. இந்த விவகாரத்தில் மிகவும் விரிவாகவும், தெளிவாகவும் கட்சி மேலிடத்துடன் ஆலோசித்த பிறகே பாஜக ஒரு முடிவுக்கு வந்துள்ளது' என்றார் ஹர்ஷ வர்தன்.