19.11.13

பகல் கொள்ளைன்னு பேர் வச்சிருந்தா எங்க குடும்பத்தையே கலாய்ச்சிருப்பீங்க - அருள்நிதி



சென்னை: பகல் கொள்ளை என்றுதான் என் படத்துக்கு முதல் தலைப்பு வைத்தேன். ஆனா அப்படி வச்சிருந்தா நீங்க எப்படியெல்லாம் கலாய்ப்பீங்கன்னு எனக்கு தெரியும், அதான் தகராறுன்னு வச்சிட்டோம், என்றார் கருணாநிதியின் பேரனும் நடிகருமான அருள்நிதி. வம்சம் படத்தில் ஹீரோவாக அறிமுகமான அருள்நிதி, மவுன குரு படத்துக்குப பிறகு நடித்து வெளிவரும் படம் தகராறு. இதில் அவருக்கு ஜோடி பூர்ணா. இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடந்தது. நிகழ்ச்சியில் நடிகை பூர்ணா, இயக்குநர் கணேசன், இசையமைப்பாளர் தரண் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்தது அருள்நிதியின் பேச்சு. மவுனகுரு படத்தின் பிரஸ்மீட்டில் பேசவே மறுத்து, பின் கொஞ்சம் முரட்டுத்தனமாகப் பேசி, திமிர் பிடித்தவர் போலிருக்கே என்ற கமெண்டுக்கு ஆளான அருள்நிதியா இந்தப் போடு போடுகிறார் என ஆச்சர்யமாக இருந்தது. அவரது பேச்சு: முதல் முறை, ஒரு முழுமையான ஹீரோவா நான் பண்ற படம் இந்த தகராறு. இதுக்கு முந்தைய படங்கள்ல வெகுளித்தனமா அல்லது ரொம்ப சீரியஸான கேர்கடர்கள்ல நடிச்சேன். ஆனால் இந்தப் படத்தில்தான் ஒரு ஹீரோவுக்குரிய அத்தனை விஷயங்களையும் செஞ்சிருக்கேன். அட, டான்ஸ் கூட போட்டிருக்கேங்க.. தயாரிப்பாளர் துரை (தயாநிதி அழகிரி) என் அண்ணன் என்பதை விட, நல்ல நண்பன்னு சொல்லலாம். நான் நல்லா இருக்கணும்னு நினைக்கிற உண்மையான நண்பன் அவன். இப்போல்லாம் கூடப் பிறந்தவங்க கூட அடுத்தவன் நல்லாருக்கணும்னு நினைக்கிறதில்லை. குடும்பத்துக்குள்ளேயே அடிச்சிக்கிறாஹ்க, சண்டைன்னு நீங்களே எழுதறீங்க... அதான் இப்போ தகராறுன்னு தலை்பபே வச்சிட்டோம். நான் எல்லாரையும் சொல்லல, சிலர் அப்படித்தான் இருக்காங்க. ஆனா எங்க குடும்பத்துல யாரும் அப்படி இல்ல. அதுக்கு பெரிய உதாரணம் துரை. இந்தப் படத்துக்கு முதலில் பகல் கொள்ளை என்றுதான் பேர் வச்சோம். அப்புறம் இந்தத் தலைப்பை வச்சி நீங்க எப்படியெல்லாம் கலாய்ப்பீங்க என்று நினைச்சிப் பார்த்துதான் வேற தலைப்பு வச்சோம்," என்றார்.

No comments:

Post a Comment