31.12.13

"கங்கை கொண்ட சோழபுரம்"


இது தான் சோழர்களின் தலைநகரம் "கங்கை கொண்ட சோழபுரம்". கிட்டத்தட்ட 250 ஆண்டுகளுக்கு(1025 - 1279) மேல் சோழர்களின் தலைநகராக விளங்கியது. சோழர்கள் தென்கிழக்கு ஆசியா முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது இதைதான் தலைநகராக வைத்து ஆட்சி செய்தனர். 

இந்நகரம் இராசேந்திர சோழனால் கங்கையை வெற்றி கொண்டதைக் கொண்டாடுவதற்காகக் கட்டப்பட்டது. 1022-ல் இராசேந்திர சோழன் இந்தியாவின் கிழக்குக் கடற்கரை முழுவதையும் வென்று கங்கையையும் வென்றான். அந்த வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழன் என்ற பட்டப்பெயர் கொண்டான். இவனுக்குப் பிறகு வந்த சோழர்கள் இந்நகரத்தையே தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர்.

கங்கை வரை பெற்ற வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழப் பேரேரி அமைக்கப்பட்டது. இதற்கு சோழகங்கம் என்றும் பெயர் உண்டு.

இன்று அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சிறு கிராமமாக உள்ளது இந்த ஊர்.

No comments:

Post a Comment