தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என மாநில ஜமாத்துல் உலமா சபை செயற்குழுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தப்பட்டது.
அம்பாசமுத்திரத்தில் முகைதீன் கீழபள்ளிவாசலில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு அமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.இ.எம். அப்துல்ரகுமான் தலைமை வகித்தார்.
திருநெல்வேலி மாவட்டத் தலைவர் டி.ஜெ.எம். ஸலாஹூதீன், மாவட்டச் செயலர் எம்.எச். ஷம்சுத்தீன், மாவட்டப் பொருளாளர் ஏ.ஒய். முகைதீன், அம்பாசமுத்திரம் வட்டார கெளரவத் தலைவர் எம். பீர்முகம்மது முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சேலம் மாவட்ட நிர்வாகிகள் கலிலூர்ரஹ்மான், அபுதாஹீர், கோவை மாவட்ட நிர்வாகி சுல்தான், கவிஞர் தேங்கை ஷரிபுதீன், சென்னை மாவட்ட நிர்வாகி இல்யாஸ், திருச்சி மாவட்ட நிர்வாகி முகம்மதுமீரான், மேலப்பாளையம் அரபிக் கல்லூரி முதல்வர் எஸ்.எஸ். ஹைதர்அலி, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட அரசு கஸ்சாலி, மேலப்பாளையம் பி.ஏ. காஜாமுகைதீன், புளியங்குடி ஜெ. கலீல்ரஹ்மான், தி. மீராசாஆலிம், பி. அப்துல்ரஹீம் உள்பட 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அமைப்பின் மாநில பொதுச்செயலர் எம்.ஓ. அப்துல்காதிர்தாவூதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அம்பாசமுத்திரம் வட்டாரத் தலைவர் பி. ஷேக்மன்சூர் வரவேற்றார். வட்டாரச் செயலர் எம். முகம்மதுஇஸ்மாயில் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment