23.11.13

எனக்கு பெண்கள் உடம்பு மட்டும்தான் பிடிக்கும்: ராம்கோபால் வர்மா அடுத்த அதிரடி



ராம்கோபால் வர்மாவின் படங்கள் மட்டுமல்ல அவர் உதிர்க்கும் சொற்கள்கூட அதிரடியாகத்தான் இருக்கும். சமீபத்தில் சென்னையில் நடந்த அவரது நான்தாண்டா படத்தின் பிரஸ் மீட்டில் "ஐ லைக் தாதா. தாதாக்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்" என்று ஸ்டேட்மெண்ட் விட்டு அதிர வைத்தார். அடுத்து இப்போது "எனக்கு பெண்களின் உடம்பு மட்டும்தான் பிடிக்கும், மூளையை பிடிக்காது" என்று அதிரடியை வெளியிட்டிருக்கிறார். ராம்கோபால் வர்மா டைரக்ட் செய்த மை ஒய்ப் மர்டர், ரான் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி, பாடகியாகவும் இருக்கிறார். இவர் எழுதியுள்ள தனது சுயசரிதத்தில்தான் இதனை குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் ராம்கோபால் வர்மாவை திருணம் செய்து கொள்ள விரும்பியதாகவும் அப்போது அவர் சுசித்ராவை அழைத்து "நீ என்னை தவறாக புரிந்து கொண்டிருக்கிறாய். இரண்டு பேருக்கும் ஒத்துவராது. நான் பெண்களை உறவுக்கு மட்டும்தான் பயன்படுத்திக் கொள்வேன். திருமணத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு பெண்களின் உடல் மட்டும்தான் பிடிக்கும், அவர்களின் மூளையை பிடிக்காது" என்று அவர் சொன்னதாக சுசித்ரா எழுதியுள்ளார். இதை கேள்விப்பட்ட ராம்கோபால் வர்மா அப்படி சொல்லவே இல்லைனு மறுப்பார் என்று நினைக்க வேண்டாம். அவர் அனுமதியுடன்தான் இதனை எழுதியிருப்பதாக அதே புத்தகத்தில் சுசித்ரா குறிப்பிட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment