23.11.13

'கோச்சடையான்' பட இசை வெளியீட்டு விழாவை, டிச., 12ம் தேதி

சென்னை : நடிகர் ரஜினிகாந்த்தின், 'கோச்சடையான்' பட இசை வெளியீட்டு விழாவை, டிச., 12ம் தேதி, சென்னை, நேரு ஸ்டேடியத்தில் நடத்தப்படலாம் என, தெரிய வந்துள்ளது.நடிகர் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிப்பில், ரஜினிகாந்த்தின் இளையமகள் சவுந்தர்யா இயக்கத்தில், கோச்சடையான் படம், "மோஷன் கேப்சரிங், 3டி' தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம், உலகம் முழுவதும், ஜன., 10ம் தேதி, திரையிடப்பட உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, டிச., 12ம் தேதி, ரஜினிகாந்த்தின் பிறந்த நாளில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், விழா நடக்கும் இடம் அறிவிக்கப்படவில்லை.எனினும், இசை வெளியீடு, சென்னை, நேரு ஸ்டேடியத்தில் நடக்கலாம் என, தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment