16.11.13

அண்ணன் செய்யாததை நண்பன் செய்தான்


நடிகர் விக்ராந்த் ஆர்.வி.உதயகுமாரின் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ரஜினி காந்த் தோற்றத்தில் விஜயகாந்த் அறிமுகமானதைப்போல, கமல் தோற்றத்தில் மோகன் அறிமுகமானதைப்போல, விஜய் தோற்றத்தில் அறிமுகமானர் விக்ராந்த் அறிமுகமானார். விஜய்யின் சித்தி மகன்தான் விக்ராந்த்.
விஜய் இடத்தை பிடிக்காவிட்டாலும், விஜய் கால்ஷீட் கிடைக்காத இயக்குனர்களுக்கு, தயாரிப்பாளர்களுக்கு அவர் ஒரு வரப்பிரசாதமாக இருப்பார் என்று எதிர் பார்க்கப்பட்டது. அப்படி எந்த மாற்றமும் நடக்கவில்லை.
சில சிறிய படங்களில் ஹீரோவாக நடித்தார். சில படங்களில் நான்கைந்து ஹீரோக்களில் ஒருவராக நடித்தார். அதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. விக்ராந்திற்கு விஷால் நண்பன். செலிபிரிட்டி கிரிக்கெட்டின் போது விஷால் கேப்டனாக இருந்த அணியில் சிறப்பாக விளையாடி அவருக்கு வெற்றி தேடிக் கொடுத்தார். இதனால் அவர்கள் நட்பு ஆழமானது.
விக்ராந்திற்கு ஒரு திருப்பம் தரவேண்டும் என்று நினைத்த விஷால் தான் சொந்த கம்பெனி தொடங்கி தயாரித்த முதல் படமான பாண்டியநாட்டில் முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்தார்.
இந்தப் படத்தின் வெற்றியின் மூலம் விஷாலுக்கு வெளிச்சம் கிடைத்திருக்கிறது. இப்போது பல வாய்ப்புகள் அவரைத் தேடி வருகின்றன. விஷாலும் விக்ராந்தை ஹீரோவாக வைத்து ஒரு படம் எடுக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
இளைய தளபதி உங்கள் அண்ணனாக இருந்து செய்யாததை புரட்சித் தளபதி விஷால் உங்களுக்கு செய்த உதவி பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது “விஷால் எனக்கு 15 ஆண்டுகால நண்பன். அவன் எனக்கு செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்கள். இளைய தளபதி பற்றியெல்லாம எனக்குத் தெரியாது” என்று விக்ராந்த் பதில் சொன்னபோது கண்களில் கண்ணீர்.

No comments:

Post a Comment