2.12.13

தமிழகத்தில் தேர்தல் கூட்டணிக்கு பா.ஜ.க அவசரப்படவில்லை: பொன்ராதாகிருஷ்ணன் பேட்டி

pon.rathakrishana



நரேந்திர மோடியை பிரதமராக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தாமரை பாதயாத்திரை நடத்துவதாக தமிழக பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்திருந்தார். இதையடுத்து  "வீடு தோறும் மோடி; உள்ளம் தோறும் தாமரை' என, பெயரிடப்பட்டுள்ள, அந்த பிரசார பாத யாத்திரை இன்று மதுரை அருகே உள்ள கருப்பாயூரணியில் இருந்து தொடங்கியது.  அங்கு முனீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு யாத்திரையை தொடங்கிய பொன்.ராதாகிருஷ்ணனன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நரேந்திரமோடையை மக்கள் தங்கள் பிரதமர் வேட்பாளராகவே நினைக்கின்றனர். தமிழக மக்கள் அவரை பிரதமராகவே ஏற்றுக்கொண்டுவிட்டனர். தமிழகத்தில் வரும் 22ம்தேதிவரை நடைபெறும் இந்த "வீடு தோறும் மோடி; உள்ளம் தோறும் தாமரை' என்ற பாதயாத்திரை பிரச்சாரம் நடைபெற உள்ளது. இதில்  12,618 கிராம பஞ்சாயத்துக்களில், பா.ஜ.,வை சேர்ந்த தலைவர்கள், பாதயாத்திரையாக சென்று, வீடு வீடாக, மக்களை சந்திப்பர். பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை பற்றியும், அவரது நிர்வாக திறன், நேர்மை, அவரது ஆட்சிக் காலத்தில் குஜராத் மாநிலம் அடைந்துள்ள வளர்ச்சி ஆகியவற்றை, கிராம மக்களுக்கு புரியும் விதத்தில் எளிமையாக விளக்க, முடிவு செய்துள்ளனர். இதனால் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும்.
 ஜாதி, மொழி, இனம், கடந்து மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். நாட்டு நலனையும் தமிழக மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு நடைபெறும் இந்த புனித யாத்திரையின் போது மக்களிடம் தேசத்தின் தற்போதைய நிலை, ஏன் பாரதிய ஜனதாகட்சியையும் மோடியையும் ஆதரிக்க வேண்டும். என்பது போன்ற விஷயங்களை  நேரடியாக சொல்வதோடு, மக்களின் தற்போதைய  நிலை, அவர்களின் அன்றாட வாழ்வியல் சிக்கல்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகளை  நேருக்கு நேர் சந்தித்து  அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினா.
மேலும் மோடி பிரதமராக தமிழத்தில் அனைத்துக்கட்சிகளும் ஆதரிக்க வேண்டும். தற்போது தமிழத்தில் கூட்டணி நாடி பா.ஜ.கவுடன் பிற கட்சிகள் பேசி வருகின்றனர். நாங்கள் தற்போது கூட்டணிக்கு அவரப்படவில்லை. வரும் ஜனவரி மாதம் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். அதன் பிறகு கூட்டணி பற்றி முடிவு செய்யப்படலாம்.என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment