9.12.13

அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு எதிரான மனநிலை: ராமதாஸ்



அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு எதிரான மனநிலையே காணப்படுகிறது என்பதை இந்தத் தேர்தல் காட்டுகிறது என்று கூறியுள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ்.
4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தவாறே அமைந்துள்ளன. ஏற்காடு இடைத்தேர்தல் முடிவும் அப்படியே அமைந்துள்ளன.
மத்தியில் 2-ஆம் முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு காங்கிரஸ் கட்சி மக்களை மதிக்காமல் நடந்துகொண்டது.
நாட்டைப் பாதிக்கும் வகையில் அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல் ஆகியவற்றைச் செய்த காங்கிரஸ் அரசு, மக்களைப் பாதிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு என்று புதுப்புது பெயர்களில் வரிகளை விதித்து மக்களைப் பிழிந்தெடுத்தது.
பெரு நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டு விலைவாசியைக் கட்டுப்படுத்த தவறியதன் காரணமாகவே காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது.
காங்கிரஸுக்கு எதிரான இந்த அலை இந்தத் தேர்தலுடன் நின்றுவிடும் என்று தோன்றவில்லை. அனைத்து மாநிலங்களிலும் மக்களின் மனப்போக்கு காங்கிரஸுக்கு எதிராகவே உள்ளது. இலங்கையைப் பிரச்னையால் தமிழகத்திலும் காங்கிரஸுக்கு எதிரான அலை வீசுகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல மக்களவைத் தேர்தலில் எத்தகைய மாற்றம் ஏற்படும் என்பதை கட்டியம் கூறும் வகையில்தான் 4 மாநிலத் தேர்தல் முடிவுகள் உள்ளன.

No comments:

Post a Comment