27.11.13

சின்ன கலைவாணர் பட்டத்தை விவேக் பயன்படுத்தக் கூடாது: நடிகர் சங்கத்தில் புகார்



நகைச்சுவை நடிகர் விவேக் சின்ன கலைவாணர் என்ற பட்டத்தை பயன்படுத்துவதை எதிர்த்து அவர் மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
நகைச்சுவை நடிகர் விவேக் சின்ன கலைவாணர் என்ற பட்டத்தை பயன்படுத்தி வருகிறார். விவேக் அந்த பட்டத்தை பயன்படுத்துவற்கு மறைந்த நகைச்சுவை நடிகர் குல தெய்வம் ராஜ கோபாலின் மகன் சௌந்திர பாண்டியன் எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்கத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
நடிகர்களுக்கு அவர்களின் நடிப்பு திறமையை மையமாக வைத்து ரசிகர்கள் சார்பில் பட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1962-ல் மதுரையில் நடந்த விழாவில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மனைவி மதுரம் மற்றும் எழுத்தாளர் தமிழ்வாணன் ஆகியோரால் என் தந்தை குல தெய்வம் ராஜகோபாலுக்கு சின்ன கலைவாணர் பட்டம் அளிக்கப்பட்டது. எங்கள் குடும்பத்தின் மரியாதைக்குரிய பொக்கிஷமாக அந்த பட்டத்தை போற்றி வருகிறோம்.
ஆனால் நடிகர் விவேக்கும் இந்த பட்டத்தை பயன்படுத்தி வருகிறார். இதனால் எங்கள் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எங்கள் தந்தை வாங்கிய பட்டத்தை காப்பாற்றுவதற்காக போராட வேண்டிய சூழ்நிலைக்கு எங்களை தள்ள வேண்டாம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment