17.11.13

சூர்யா, லிங்கு படத்தின் போட்டோஷுட் முடிந்தது

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் போட்டோஷுட் சென்னையில் நடந்து முடிந்தது.




யானை வருமுன் வருகிற மணியோசை மாதிரிதான் இந்த போட்டோஷுட் சமாச்சாரமும். படப்பிடிப்பு தொடங்கும் போது பத்திரிகைகளுக்கு விளம்பரம் தருவதற்கு உதவும். சூர்யா லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கும் படத்துக்காக சென்னையில் போட்டோஷுட் நடத்தப்பட்டது. பிரபல போட்டோகிராஃபர் வெங்கட்ராம் இந்த போட்டோசெஷனை நடத்தினார்.

முறைத்த பார்வையுமாக சூர்யாவின் போஸ்களை சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள். 20 ஆம் தேதி மும்பையில் படப்பிடிப்பு தொடங்கும் போது பத்திரிகைகளில் இந்தப் படங்களை - அதிர்ஷ்டமிருந்தால் பார்க்கலாம்.

திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், கதையும் கேரக்டரும் நன்றாக இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்று சூளுரைத்த சமந்தா சூர்யா ஜோடியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசை. துப்பாக்கியை சீராகவும் சிறப்பாகவும் படமாக்கிய சந்தோஷ் சிவன் கேமரா.

No comments:

Post a Comment