28.11.13

செல்வராகவனின் ஆக்ஷன் படத்தில் தனுஷ்?


தம்பி தனுஷை துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகம் செய்த செல்வராகவன், அதன்பிறகு அவரை வைத்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை இயக்கினார். இதில் காதல் கொண்டேன் மட்டுமே வெற்றி பெற்றது.
அதனால் அதன்பிறகு அண்ணன் காம்பினேஷனில் இருந்து விலகி மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கினார் தனுஷ். அதேபோல் செல்வராகவனும் வேறு நடிகர்களை இயக்குவதில் கவனம் செலுத்தினார்.
இதில் கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன், ஆர்யா நடித்த இரண்டாம் உலகம் படங்களை மெகா பட்ஜெட்டில் இயக்கிய செல்வராகவன், அடுத்து மினிமம் பட்ஜெட்டில் ஒரு படம் தயாரிக்கப்போகிறாராம். அதுவும் அதிரடி ஆக்சன் படமாம். இந்த படத்தில் நடிக்கும் ஹீரோ யார் என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லையாம்.
ஆனால், தனுஷ் நடிக்க வாய்ப்பிருப்பதாக செல்வராகவன் வட்டாரத்தகவல் கூறுகிறது. தற்போது அநேகன், வேலையில்லா பட்டதாரி படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் தனுஷ், அதையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்துக்கொண்டே அண்ணனின் படத்தில் நடிப்பார் என்கிறார்கள். ஆக, சுள்ளான், பொல்லாதவன், வேங்கை படங்களுக்குப்பிறகு மீண்டும் சூடுகாட்ட வருகிறார் தனுஷ்.

No comments:

Post a Comment