4.12.13

மன்மோகன் சிங் யோசனை சந்தை விலையில் எரிசக்தி பொருள்களை விற்க



புதுடெல்லி: எரி சக்தி பொருட்களுக்கான தேவை பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில் அவற்றின் விலையை சந்தை அடிப்படையில் நிச்சயிக்க வேண்டிய அவசியம் ஏற்ப்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆசிய இயற்கை எரிவாயு கூட்டு வணிகம் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட பிரதமர் அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் எரி சக்தி தேவை மூன்று முதல் நான்கு மடங்கு அதிகரிக்கும் என்றார். தற்போது உற்பத்திக்கும் தேவைக்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பதாக மன்மோகன் சிங் கூறினார். இதை
சரி செய்ய கூடுதல் எண்ணெய் அகழ்வு பணியை மேற்கொள்ள சர்வதேச நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்து உள்ளதாக அவர் தெரிவித்தார். எரி சக்தி துறையில் நவீன தொழில் நுட்பத்தையும் சந்தை விலையை கொண்டுவந்தால் மட்டுமே தன்னிறைவு எட்ட முடியும் என்று மன்மோகன் சிங் கூறினார். எரி சக்தி தன்னிறைவு திட்டங்களுக்காக வெளிநாடுகளில் எண்ணெய் கிணறுகளை விலைக்கு வாங்குவதை பற்றியும் அரசு ஆலோசித்து வருவதாக அவர் தெரிவித்தார். 80% எண்ணெய் தேவைகளுக்கு இறக்குமதியை மட்டுமே நம்பியுள்ள இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலைகள் ஓரளவுக்கு உற்பத்தி விலையில் விற்கப்பட்டாலும் சமையல் எரி வாயுக்கு அபரிதமான மானியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment