1.12.13

காமன்வெல்த் பளுதூக்குதல் நிறைவு: இந்தியாவுக்கு 117 பதக்கங்கள்

காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணிக்கு 117 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
மலேசியாவின் பினாங்கு நகரில் நடந்து முடிந்த இத்தொடரில் இந்தியாவில் இருந்து இளையோர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். சனிக்கிழமையுடன் போட்டிகள் நிறைவடைந்தன. இறுதிநாளில் இந்தியா வீரர்கள் 6 பதக்கங்கள் பெற்றுத் தந்தனர். இதன்மூலம் இத்தொடரில் இந்தியா 57 தங்கம், 39 வெள்ளி, 21 வெண்கலம் என 117 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஆடவருக்கான இளையோர் பிரிவில் 16 தங்கம் உள்பட 24 பதக்கங்களும், மகளிருக்கான இளையோர் பிரிவில் 12 தங்கம் உள்பட 21 பதக்கங்களும் கிடைத்தன. ஜூனியர் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவினர் தலா 21 பதக்கங்களை வென்று தந்தனர். சீனியர் ஆடவர் பிரிவில் 12 பதக்கங்களும், சீனியர் மகளிர் பிரிவில் 18 பதக்கங்களும் கிடைத்தன.இளையோருக்கான ஆடவர் மற்றும் மகளிர், ஜூனியருக்கான ஆடவர் மற்றும் மகளிர், சீனியருக்கான ஆடவர் பிரிவினருக்கு, அணியின் செயல்பாட்டுக்கான வெற்றிக் கோப்பை கிடைத்தது. சீனியர் மகளிர் பிரிவு 2-வது இடத்துடன் திருப்தியடைந்தது.

No comments:

Post a Comment