1.12.13

நரேந்திர மோடி பொதுக்கூட்டத்துக்கு தடையில்லை



ஸ்ரீநகரில் பா.ஜ.க. பிரதமர் பதவி வேட்பாளர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு தடை விதிக்கும் கேள்விக்கே இடமில்லை என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா சனிக்கிழமை தெரிவித்தார்.
இது தொடர்பாக ஸ்ரீநகரில் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் இவ்வாறு பதிலளித்தார்.
மேலும், ""ஜம்மு-காஷ்மீரில் பா.ஜ.க நடத்தும் பொதுக்கூட்டங்களுக்கு மோடி தாராளமாக வரலாம். அவரது அரசியல் பணிகளை யாரும் தடுத்து நிறுத்தப் போவதில்லை. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கிஷ்த்வார் கலவரத்திற்குப் பின் அவர்கள் கொண்டுள்ள மன நிலையை குறித்து எச்சரிக்கையுடன் இருக்கிறோம்'' என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment