1.12.13

தோழியை மணந்தார் பியூஷ் சாவ்லா


மணக்கோலத்தில் பியூஷ் சாவ்லா, அனுபூதி.

இந்திய சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா தன் நீண்டநாள் தோழி அனுபூதியைத் திருமணம் செய்தார். அவர்களது திருமணம் வெள்ளிக்கிழமை நடந்தது.
மொராதாபாத் நகரில் நடந்த இத்திருமணத்தில் உத்தரப் பிரதேச கிரிக்கெட் அணி வீரர்கள், பியூஷ் சாவ்லாவின் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் பங்கேற்றனர்.
இர்ஃபான் பதான், புவனேஷ்வர் குமார், ஜெயேந்திர பாண்டே உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் திருமணத்தில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த முன்னாள் இந்திய அணிக் கேப்டனான மொராதாபாத் எம்.பி அசாருதீன் திருமணத்துக்கு வரவில்லை.
எம்பிஏ படித்துள்ள அனுபூதி, மீரட் நகரைச் சேர்ந்த மருத்துவர் அமீர் சிங் செüகான் என்பவரது மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
"சாவ்லா - அனுபுதி இருவரும் சிறுவயது முதலே நண்பர்கள். அனுபுதி எங்கள் குடும்பத்துக்கு நெருக்கமானவர். இருவரும் முதலில் நண்பர்களாக இருந்தனர். நன்கு பழகி இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்ட பின் திருமணம் செய்ய முடிவுசெய்தனர்' என்று பியூஷ் சாவ்லாவின் தந்தை பிரமோத் குமார் தெரிவித்தார்.
பியூஷ் சாவ்லா இதுவரை இந்திய அணிக்காக 3 டெஸ்ட் போட்டி (7 விக்கெட்) மற்றும் 25 ஒருநாள் ஆட்டங்களில் (32 விக்கெட்) பங்கேற்றுள்ளார்.

No comments:

Post a Comment