1.12.13

ரஞ்சிக் கோப்பை: தமிழக போட்டி டிராவில் முடிய வாய்ப்பு

தமிழகத்துக்கு எதிரான ரஞ்சிப் போட்டியில் புஜாரா மற்றும் ஜெய்தேவ் ஷா ஆகியோர் சதம் அடித்ததன் மூலம் செüராஷ்டிர அணி சரிவில் இருந்து மீண்டது. இருப்பினும் இந்தப் போட்டி டிராவில் முடிய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி தொடரின் லீக் போட்டியில், குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழகம், செüராஷ்டிர அணியை எதிர்த்து ஆடி வருகிறது. அபினவ் முகுந்த் இரட்டை சதம், தினேஷ் கார்த்திக் சதம் அடித்ததன் மூலம் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 565 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
2-ம் நாள் ஆட்டநேர முடிவில் செüராஷ்டிர அணி 1 விக்கெட் இழப்புக்கு 12 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 8 ரன்கள், செüகான் 3 ரன்களுடன் சனிக்கிழமை 3-ம் நாள் ஆட்டத்தைத் தொடங்கினர். செüகான் கூடுதலாக ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
புஜாரா, ஜாக்சன் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருப்பினும் ஜாக்சன் (28) நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அதன்பின்னர் களமிறங்கிய ஜெய்தேவ் ஷா, புஜாராவுடன் இணைந்து ஆட்டத்தின் போக்கை மாற்றினர். இருவரும் அவ்வப்போது பவுண்டரி விளாசி ரன் ரேட்டை கணிசமாக உயர்த்தினர்.
பின் இருவரும் சதம் அடித்து அசத்தினர். கடைசிவரை தமிழக பவுலர்களால் இந்த ஜோடியைப் பிரிக்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் செüராஷ்டிர அணி 3 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 152 ரன்கள், ஜெய்தேவ் ஷா 133 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
முதல் இன்னிங்ஸில் செüராஷ்டிர அணி 239 ரன்கள் பின்தங்கி உள்ளது. இன்னும் ஒருநாள் மட்டுமே மீதம் இருப்பதால் போட்டி அநேகமாக டிராவில் முடிய வாய்ப்பு உள்ளது. இருப்பினும், முதல் இன்னிங்ஸில் பெற்ற முன்னிலை அடிப்படையில் தமிழகத்துக்கு 3 புள்ளிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இமாசல பிரதேசம் அசத்தல்: குரூப் சி பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில் அஸாம் மற்றும் இமாசல பிரதேச அணிகள் மோதின. முதல் இன்னிங்ஸில் இமாசல பிரதேச அணி 463 ரன்களில் டிக்ளேர் செய்தது. அஸாம் அணி முதல் இன்னிங்ஸில் 81 ரன்களில் சுருண்டு ஃபாலே ஆன் பெற்றது. 2-வது இன்னிங்ஸில் இமாசல பிரதேச பவுலர்களை சமாளிக்க முடியாமல் அஸாம் அணி 161 ரன்களில் சுருண்டது. இதனால், ஒருநாள் மீதமுள்ள நிலையில், இமாசல பிரதேச அணி இன்னிங்ஸ் மற்றும் 221 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் வெற்றி: குரூப் பி பிரிவில் பஞ்சாப், ஹரியாணா அணிகள் மோதிய போட்டி ரோடக் நகரில் நடந்தது. ஹரியாணா முதல் இன்னிங்ஸில் 163 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 155 ரன்களும் எடுத்தது. முதல் இன்னிங்ஸில் 184 ரன்கள் எடுத்த பஞ்சாப், 2-வது இன்னிங்ஸில் 135 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இதன் மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது.
மும்பைக்கு வெற்றி வாய்ப்பு: மும்பையில் நடந்து வரும் மற்றொரு லீக் போட்டியில் மும்பை, விதர்பா அணிகள் விளையாடி வருகின்றன. மும்பை முதல் இன்னிங்ஸில் 261ரன்கள் எடுத்தது. 2-வது இன்னிங்ஸில் 381 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.
முதல் இன்னிங்ஸில் விதர்பா 113 ரன்களில் சுருண்டது. 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் விதர்பா அணி 2-வது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்துள்ளது. விதர்பா அணி வெற்றிபெற இன்னும் 353 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதால், மும்பை எளிதில் வெற்றிபெற வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment