1.12.13

மதக் கலவர தடுப்பு மசோதாவுக்கு மம்தா கடும் எதிர்ப்பு

மதக் கலவரத் தடுப்பு மசோதாவை நிறைவேற்ற முயற்சிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாகச் சாடியுள்ளார்.
இது குறித்து ஃபேஸ்புக் இணையத்தில் அவர் வெளியிட்ட கருத்து:
மதக் கலவரத் தடுப்பு மசோதாவை மத்திய அரசு மீண்டும் கொண்டு வந்துள்ளது. இது, சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்தும் மாநில அரசுகளின் உரிமையை பாதிக்கும். மாநில அரசுகளின் உரிமைகளில் மத்திய அரசு தொடர்ந்து தலையிட்டு வருகிறது. இது, கூட்டாட்சித் தத்துவம் மற்றும் அரசியல் சாசன அமைப்புக்கு எதிரானது. மதக் கலவரத்தைக் கட்டுப்படுத்தும் பெயரில் மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கக் கூடாது. மத்திய அரசின் மதக் கலவரத் தடுப்பு மசோதா யோசனையை நான் கடுமையாக எதிர்க்கிறேன் என்று மம்தா குறிப்பிட்டிருந்தார்.

No comments:

Post a Comment