பணியின்போது உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை உத்தரவிட்டார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிவிப்பு:
மதுரை மாவட்டம் வி.சத்திரப்பட்டி காவல் நிலைய காவலர் முத்துக்குமார், திருப்பூர் மாவட்டம் உடுமலை தலைமைக் காவலர் ஆர்.மணிவாசகம் ஆகியோர் சாலை விபத்திலும், நீலகிரி மாவட்டம் கூடலூர் காவல் நிலைய காவலர் பண்டன், சென்னை கீழ்ப்பாக்கம் தலைமைக் காவலர் எஸ்.பிரான்சிஸ், பெரம்பலூர் மாவட்ட ஆயுதப் படை பிரிவு காவலர் என்.பாபு, சென்னை வடபழனி காவல் நிலைய காவலர் ஜி.வெங்கடேசன், ஸ்டான்லி மருத்துவமனை காவல் நிலைய எஸ்.ஐ. ஜி.நேசய்யன், வேளச்சேரி காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ., அந்தோனிராஜ், திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி சிறப்பு எஸ்.ஐ., என்.ரவீந்திரன், மதுரை மாநகர் சமூக நீதி-மனித உரிமைகள் பிரிவில் காவலர் பி.சுரேஷ் ஆகியோர் உடல் நலக் குறைவாலும் உயிரிழந்தனர்.
உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment