காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால், மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு நொடிக்கு 3 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் இரு நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால், டெல்டா பாசனப் பகுதிகளில் பாசனத்துக்கான நீர் தேவை குறைந்துள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு புதன்கிழமை காலை நொடிக்கு 3 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 85.54 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 3,577 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. நீர் இருப்பு 46.63. டி.எம்.சி.யாக இருந்தது.
No comments:
Post a Comment