5.12.13

தபால் நிலையங்களில் வி.ஐ.டி. பி.டெக். நுழைவுத் தேர்வு விண்ணப்பம் விநியோகம்


விஐடி பி.டெக். நுழைவுத் தேர்வுக்கான முதல் விண்ணப்பத்தை வேலூர் தலைமை தபால் நிலையத்தில் மாணவி ஒருவருக்கு வழங்குகிறார் அதன் வேந்தர் ஜி.விசுவநாதன். உடன் விஐடி துணைவேந்தர் வி.ராஜு, துணைத் தலைவர்கள் சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், சங்கர் விசுவநாதன், இணை துணைவேந்தர் எஸ்.நாராயணன் உள்ளிட்டோர்.

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பி.டெக். பொறியியல் பட்டப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள் நாட்டில் உள்ள அனைத்து தலைமை தபால் நிலையங்களிலும் புதன்கிழமை முதல் விற்பனை செய்யப்படுகின்றன.

வேலூர் தலைமை தபால் நிலையத்தில் இதன் முதல் விற்பனையை விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

பல்கலைக்கழகத்தில் (வேலூர் வளாகம்) 2014-ல் பி.டெக். பயோ மெடிக்கல் என்ஜினீயரிங், பயோ-டெக்னாலஜி, கணினி அறிவியல் தொழில்நுட்பம், சிவில், மெக்கானிக்கல், தகவல் தொழில்நுட்பம், மெக்கானிக்கல்-கெமிக்கல் என்ஜினீயரிங், மெக்கானிக்கல்-ஆட்டோமோடிவ் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் என்ஜினீயரிங், எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேஷன் என்ஜினீயரிங், புரொடக்ஷன் அண்டு இன்டஸ்டிரியல் என்ஜினீயரிங் மற்றும் விஐடி சென்னை வளாகத்தில் பி.டெக். சிவில், மெக்கானிக்கல், கணினி அறிவியல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் என்ஜினீயரிங், எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் பட்டப் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு 2014 ஏப்ரல் 9 முதல் 20 வரை நாட்டில் உள்ள 112 முக்கிய நகரங்களிலும், துபை மற்றும் குவைத்திலும் நடைபெறுகிறது.

நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்கள் நாட்டில் உள்ள 267 முக்கிய தபால் நிலையங்கள் மூலமும், ஆன்-லைன் மூலமும் புதன்கிழமை முதல் விற்பனை செய்யப்படுகின்றன.

நுழைவுத்தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர் தபால் நிலையங்களில் ரூ.975 செலுத்தி விண்ணப்பங்களை நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

ரூ.975-க்கு விஐடி பல்கலைக்கழகம், வேலூர் முகவரி பெயரில் கேட்பு வரைவோலை மூலம் விஐடி பல்கலைக்கழக வேலூர் வளாகத்திலும், சென்னை வளாகத்திலும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவங்களை ஜ்ஜ்ஜ்.ஸ்ண்ற்.ஹஸ்ரீ.ண்ய் இணையதளத்தின் மூலமும் பெற்று விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெற ரூ.925 செலுத்த வேண்டும். இந்த விழாவில் வேலூர் தலைமை தபால் நிலைய முதுநிலைக் கண்காணிப்பாளர் ஏ.சரவணன், முதுநிலை அஞ்சலக அலுவலர் ஏ.துரை, விஐடி துணைவேந்தர் வி.ராஜு, துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், இணை துணைவேந்தர் எஸ்.நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பூர்த்தி செய்யப்பட்ட நுழைவுத்தேர்வு விண்ணப்பங்களை 2014 பிப்ரவரி 28-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment