26.12.13

மகிழ்ச்சியில் மதன் கார்க்கி!



ரஜினியின் ‘எந்திரன்’ படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி. தொடர்ந்து பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்து வருகிறார்.
இந்த வருடம் 45 படங்களில் 102 பாடல்கள் எழுதி உள்ளார். அதில், 33 பாடல்கள் வெளியாகி வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றின் தரவரிசையில் இடம்பிடித்துள்ளன.
‘கடல்’ படத்தில் இடம்பெற்ற ‘ஏலே கீச்சான்’, ‘அடியே’, ‘சேட்டை’ படத்தில் இடம்பெற்ற ‘அகலாதே’, ‘வணக்கம் சென்னை’யில் இடம்பெற்ற ‘ஐலசா’, ‘ஒசக்க’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் இடம்பெற்ற பிரேயர் பாடல், ‘பாண்டிய நாடு’ படத்தில் இடம்பெற்ற ‘ஃபை ஃபை ஃபை’, ‘என்றென்றும் புன்னகை’ படத்தில் இடம்பெற்ற ‘வான் எங்கும் நீ மின்ன’ ஆகிய பாடல்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளன.
இவைதவிர, ‘விரட்டு’ படத்தில் இடம்பெற்ற ‘போதும் போதும்’, ‘கெளரவம்’ படத்தில் இடம்பெற்ற ‘மண்ணடச்ச பந்து’, ‘பிரியாணி’யில் இடம்பெற்ற ‘பாம் பாம் பெண்ணே’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் இடம்பெற்ற ‘ஏன் என்றால் பிறந்தநாள்’ ஆகிய பாடல்களும் தரவரிசையில் இடம்பிடித்துள்ளன.
இந்தப் பாடல்களை எழுதும் வாய்ப்பைத் தந்த இயக்குநர்கள், இசை அமைப்பாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் மதன் கார்க்கி. இன்னும் தரமான, ஆழமான பாடல்களோடு 2014-ஆம் ஆண்டில் சந்திப்பதாகத் தெரிவித்துள்ள அவர், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்திருக்கிறார்.

No comments:

Post a Comment