எகிப்தில் செயல்பட்டு வந்த முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை தீவிரவாத இயக்கம் என்று அந்நாட்டு ராணுவ ஒத்துழைப்புடன் நடைபெற்று வரும் இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
"இந்த அமைப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் பொருளாதார ரீதியாக இந்த அமைப்புக்கு ஆதரவு அளிப்பவர்கள் தண்டனைக்கு உள்ளாவார்கள் என்றும் எகிப்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக அந்நாட்டு உயர் கல்வித்துறை அமைச்சர் ஹோசாம் எய்லொ தெரிவித்தார்.
கடந்த சில நாள்களாக எகிப்தில் அரசு கட்டங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புதான் காரணம் என்று கருதப்படுகிறது.
அந்த நாட்டின் முன்னாள் அதிபர் முகமது மோர்ஸி இந்த அமைப்பைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment